• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

தராக்கி

தமிழர்களின் “முட்டாள்கள் தினம்” என்பது ஏப்ரல் பதின்மூன்று‏--- வி.சபேசன்

Recommended Posts

நான் அடிக்கடி எனது குருதி அழுத்தத்தை சோதனை செய்வம். அது 120/80 ஆகவே இருக்குது. அதுவும் இலட்சிய அளவில் இருக்குது. கூடுறதும் இல்ல குறையிறதும் இல்ல. ஏப்பா நமக்குள் தோன்றிர நம்ம கருத்தைச் சொல்ல கொதிப்படையனும்.நாம சொல்லுற எல்லாத்தையும் செய்யனும் என்றில்லை. எமக்கு தோணுற நியாயத்தை.. கருத்தைச் சொல்ல ஏன் தயங்கனும். எனது நியாயம் இன்னொருவருக்கு அநியாயமாக் கூட இருக்கலாம். அதற்காக தோன்றிற கருத்தை நாகரிகத்தோட சொல்லப்படாது என்றில்லை. எல்லாரும் எல்லாத்தையும் ஏற்றுக் கொண்டா.. உலகத்தில மாற்றம் என்பதே இருக்காது. எதையும் மாத்தி யோசிச்சும் பார்க்கனும்.

கொஞ்சம் மாத்தி யோசி..! :lol:

நெடுக்ஸ் கூல்டவுண்!கூல்டவுண்!!கூல்டவுண்!!! :wub:

நாம ஒரு காமெடிக்கு தாம்பா அப்படி சொன்னோம்.

மாத்தி என்ன பிரண்டு பிரண்டு யோசித்தால் கூட ஒரே மாதிரிதான் இருக்கு :lol:

எங்கையோ இடிக்குதே...

சரி சரி... நீங்க ஆரம்பியுங்கப்பா(யோசிக்க)

Share this post


Link to post
Share on other sites

மேற்கண்ட பதில் நெடுக்கால்புலவனுக்கு மட்டுமே..

Share this post


Link to post
Share on other sites

ரதி,

தைத்திருநாள் தமிழர்களின் புத்தாண்டாக இருந்தது என்பதற்கு ஆதரமாக அது கொண்டாடப்படும் முறையையே எடுத்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு மனிதனும் அடுத்த ஆண்டு நன்மையாக அமைய வேண்டும் என்று விரும்புவான். நடப்பு ஆண்டில் நன்மையை பெற்றவனும் அடுத்த ஆண்டு மேலும் சிறப்பாக அமைய வேண்டும் என்று விரும்புவான்.

இதை தமிழர்கள் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று சொல்வார்கள்.

தமிழ்நாட்டில் தைப்பொங்கலுக்கு முதன் நாள் "போகி" கொண்டாடுவார்கள். அன்றைக்கு பழைய தேவையற்ற பொருட்களை எரிப்பார்கள். இதனுடைய பொருள் பழைய ஆண்டு கழிந்து புதிய ஆண்டு உருவாகிறது என்பதாகும். ஒரு ஆண்டை போக்கி விட்டோம் என்பதை "போகி" என்று சொல்வார்கள்.

சூரியனை பூமி ஒரு ஆண்டு சுற்றி வந்ததும் அடுத்த ஆண்டு பிறக்கின்றது. வானத்தில் இருக்கும் சூரியனுக்கு பொங்கல் செய்து புதிய ஆண்டை வரவேற்பார்கள்.

புதிய ஆண்டில் உறவினர்கள் வீட்டிற்கு சென்று "காணும் பொங்கலையும்" கொண்டாடுவார்கள். தமது வாழ்க்கைத் தரத்திற்கு உறுதுணையாக இருந்த மாட்டிற்கும் விழா எடுப்பார்கள்.

இவைகள் தைத்திருநாள் தமிழர்களின் புத்தாண்டு என்பதற்கான அகச் சான்றுகளாக அமைகின்றன.

ரதி!

நீங்கள் இன்னும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எம்மிடம் இருந்த எத்தனையோ நூல்களும் வரலாற்றுச் சான்றுகளும் ஆரியர்களால் அழிக்கப்பட்டு விட்டன. தமிழில் இருந்த காரணத்திற்காக ஆயிரக் கணக்கான தேவரங்களையே அவர்கள் அழித்து விட்டார்கள்.

நாம்தான் எமது பண்பாடுகளை ஆய்வுகளின் மூலம் மீட்டெடுக்க வேண்டும். சித்திரைப் புத்தாண்டு தமிழ் பண்பாட்டிற்கு ஒவ்வாதது. நீங்கள் சித்திரைப் புத்தாண்டை கொண்டாட விரும்பினால் கொண்டாடுங்கள். அதற்கு யாரும் தடை இல்லை. அதை தமிழ் புத்தாண்டு என்று சொல்வதையே நாம் எதிர்க்கின்றோம்.

"விரோதி வருஷம்" எப்படி தமிழ் புத்தாண்டாக இருக்க முடியும்? இதற்கு என்ன ஆதாரம்?

Share this post


Link to post
Share on other sites

ரதி,

இன்னும் ஒரு விடயம். உங்களுடைய பார்வையில் யார் தமிழறிஞர்? அவுஸ்ரேலியா சபேசன் தமிழறிஞர் இல்லை என்று எதை வைத்துக் கூறுகிறீர்கள்?

தமிழறிஞர்கள் பலர் உண்டு. அதில் பெரும்பான்மையினர் பாடல்கள் உருவாக்குவதிலேயே காலத்தை முடித்து விட்டார்கள். தமிழர்களின் பண்பாட்டு மீட்பிற்கு எதுவுமே செய்யவில்லை. மறைமலை அடிகள் போன்ற சிலர்தான் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்கள். ஆகவே இவர்களிற்கு முன்பு தமிழறிஞர்கள் இருக்கவில்லையா என்ற கேள்வி அர்த்தமற்றது. இருந்தார்கள், ஆனால் பாடல்கள் இயற்றுவதோடு நின்று விட்டார்கள் என்பதுதான் சோகமான உண்மை.

Share this post


Link to post
Share on other sites

(என்னை கேட்டால் புதுவருடம் கொண்டாடுவதே வீண் விரயம் எண்டு சொல்லுவன்... அதுதான் பகுத்தறிவுக்கு ஒப்பானதாகவும் இருக்கு...)

இதுக்கை தையிலை புதுவருடமா.? , சித்திரயிலை புதுவருடமா எண்டு கொண்டு... இரண்டுமே வன்னியிலை கஸ்ரப்படும் சனத்துக்கு ஒரு பருக்கை சோறு போடவும் இல்லை போடப்போவதும் இல்லை...

எனக்கு தெரிந்தது எல்லாம் சிறுபாண்மையாக (பணம்) இருப்பவன் எதை வேண்டுமானாலும் கொண்டாடலாம்... பெருண்பாண்மையாக (எதுவுமே) இல்லாதவன் அதை வேடிக்கை பாக்கலாம்... புது வருடத்தை இருப்பவன் கொண்டாடலாம் , இல்லாதவர்கள் அப்படியா எண்று வேடிக்கை பாக்கலாம்... இருப்பவர்கள்( மகிழ்ச்சி, இன்னும் பலவும்) புலம்பெயந்தும் இருக்கிறார்கள் இல்லாதவர்கள் தாயகத்திலையும் இருக்கிறார்கள்... இங்கை இல்லாமை போய் சமத்துவம் வந்து எப்ப எல்லாரும் புதுவருடம் கொண்டாடும் நிலை வரும் எண்டது யாருக்கு தெரியும்...?

இப்படி இரண்டு கூட்டம் மட்டுமே இருக்கும் உலகத்திலை மூண்டாவதாய் ஒரு கூட்டமும் இருக்கு... அது புதுவருடத்தை எப்ப கொண்டாடலாம் எண்டு விவாதம் செய்யும்.... எல்லாம் புளிச்ச ஏப்பம் செய்யும் வேலை...

தமிழீழத்திலை தையிலோ, சித்திரையிலோ சனம் மகிழ்ச்சியாக புதுவருடம் கொண்டாடி எவ்வளவு காலமாச்சு....?? எங்கட மக்களின் நிலையை மாத்தி புதுவருடத்தை மகிழ்ச்சியாக கொண்டாட செய்யுங்கோ எண்டு கேட்டால் அதை எப்ப கொண்டாட வேணும் எண்டு விவாதம் போடுகினம்..

திருந்த மாட்டாங்கள்... மற்றவனை திருந்த விடவும் மாட்டாங்கள்...

Share this post


Link to post
Share on other sites

ரதி,

இன்னும் ஒரு விடயம். உங்களுடைய பார்வையில் யார் தமிழறிஞர்? அவுஸ்ரேலியா சபேசன் தமிழறிஞர் இல்லை என்று எதை வைத்துக் கூறுகிறீர்கள்?

தமிழறிஞர்கள் பலர் உண்டு. அதில் பெரும்பான்மையினர் பாடல்கள் உருவாக்குவதிலேயே காலத்தை முடித்து விட்டார்கள். தமிழர்களின் பண்பாட்டு மீட்பிற்கு எதுவுமே செய்யவில்லை. மறைமலை அடிகள் போன்ற சிலர்தான் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்கள். ஆகவே இவர்களிற்கு முன்பு தமிழறிஞர்கள் இருக்கவில்லையா என்ற கேள்வி அர்த்தமற்றது. இருந்தார்கள், ஆனால் பாடல்கள் இயற்றுவதோடு நின்று விட்டார்கள் என்பதுதான் சோகமான உண்மை.

மன்னிக்கவும் சபேசன் இதை எழுவதற்கு தற்போதைய காலத்தில் நிறைய பேர் இணையத்தினூடாக எழுதுகிறார்கள்.எனக்கு நல்ல கட்டுரை எழுத தெரிந்திருந்தால் பல்கலைகளகத்தில் தமிழ் படித்துப் போட்டு, 4,5 தமிழ் இலக்கண,வரலாற்று புத்தகங்களை வாசித்துப் போட்டு இரண்டு,மூன்று கட்டுரைகள் எழுதினால் என்னை தமிழறிஞர் எனச் சொல்வீர்களா? மற்றும் படி அவரை பற்றி தனிப்பட்ட ரீதியில் தாக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் சொல்லவில்லை.

தயா நானும் புதுவருடம் கொண்டாடி 5,6 வருடத்திற்கு மேல் இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

ஆரிய அப்பட்டமான வழித்தோன்றல்களான சிங்களவர்கள் கொண்டாடுகின்றனர். திராவிட பரம்பரையில் வந்த தமிழனும், ஆரிய பரம்பரையில் வந்த சிங்களவனுக்கும் பொதுவாக ஒரு புத்தாண்டு அல்லது பொது திருநாள் வருவது என்பதே அடிப்படைத் தவறு.

எம் தேசிய விடுதலைப் போர், 30 ஆண்டுகள் அல்ல 3000 ஆண்டுகளாக நடக்கும் ஆரிய - திராவிட போர் என்று அண்மையில் வெளியான புலிகளின் பாடல் ஒன்றின் ஆரம்பத்தில் இருந்த உரையாடலில் மேற்கொள் காட்டி இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்களவர் ஆரியர்களின் வழித்தொன்றல்கள் என்பதற்கான ஆதாரம் எங்கே மகாவம்சத்தில் இருந்தா எடுத்தீர்கள்? :wub: சிங்களவர்கள் தம்மை ஆரியர்களின் வழித்தோன்றல்கள் என்பதே ஒரு புரட்டு என ஒரு பக்கத்தார் சொல்லும் போது? :lol:

இது நிழலிக்கு சொல்லவில்லை. என்னை பற்றி நானே சொல்லி கொள்வது.

எனக்கு செத்த வீட்டில் பிணமாகவும், கலியாணவீட்டில் மணமகனாகவும் இருக்க மட்டுமே விருப்பம். :lol:

Share this post


Link to post
Share on other sites

தாங்கள் என்ன கூற முனைகின்றீர்கள் என்று புரியவில்லை..ஆனால் மிகவும் உணர்ச்சி வசப்படுபவர் என்று மட்டும் தெரிகின்றது. உங்கள் கேள்விகளுக்கு என் விளக்கம் இது தான். நாம் செய்வது மூட நம்பிக்கையான செயல் என்று நாம் அறிய எல்லோருக்கும் ஒரு காலம் வரும். அது 16 இலும் வரலாம் 56இலும் வரலாம். நம்பிக்கைகள் - அது என்ன வகையாயினும், அவற்றை உய்த்துணர பக்குவம் வர வேண்டும். புத்தன் கூட துறவறம் சென்றது திருமணம் புரிந்த பின்னர் தான். நம்பிக்கைகளை திணிக்க முடியாது. எமது கலாச்சாரமானது எம்மை நாம் பக்குவப்படும் வரை வளர்க்கின்றது. அந்த வளர்ப்பினிலே நாம் இருக்கும் போது அக்கலாச்சாரம் எமக்கு புகட்டும் சில மூட நம்பிக்கைகளுடன் நாமும் ஒத்து போகின்றோம். அதற்காக நாம் பக்குவப்பட்ட பின்னரும் அதனையே பின்பற்ற வேண்டும் என்பதில்லை. பக்குவப்பட்ட பின்னரும் பாவம் செய்பவர்கள் தாம் அறிவுறுத்தப்பட வேண்டியவர்கள்.

நான் எதுவும் புதுசாச் சொல்லேல்ல.. தமிழர்களை இரண்டு பேர் முட்டாள் ஆக்கினம்.

1. அடிப்படை வரலாற்று ஆதார அறிவியல் ஆராய்வின்றி விடயங்களை சந்ததிக்கு கடத்திறவை.

2. ஆராய்வின்றி.. விடயங்களை மாத்திறம் புரட்சி பண்ணுறம் என்று தங்கள் தங்கள் அறியாமைகளுக்கு புரட்சி வடிவம் கொடுத்து திணிக்கிறவை. இவை அதிகம் விரும்புவது தாங்கள் புரட்சிவாதிகள்.. பகுத்தறிவாளர்கள் என்று இனங்காட்டப்பட வேண்டும்.. அதனூடு புகழ் தேட வேண்டும் என்பதே..!

இந்த இரு தரப்பும் எமக்கு ஆபத்தானது. இந்தக் கட்டுரையாளர் வகை 2 ஐ சார்ந்தவர். இதைவிட உங்களுக்கு தெளிவாச் சொல்ல எனக்குத் தெரியல்ல. எதுக்கும் தமிழ்நெட் கட்டுரையையும் ஒருக்கா வாசியுங்கோ. ஆங்கிலம் வாசிக்க பஞ்சி இல்லை என்றால்..! :wub:

Share this post


Link to post
Share on other sites