Jump to content

முகத்தார் பகிடி


Recommended Posts

முகத்தார்:- (சுன்னாகம் சந்தையில்)"கடைக்காரரே! பத்துக் கிலோ வெங்காயம் வேண்டும். பொடியா சின்ன சின்னதாகப் பார்த்துப் போடுங்கோ. பெரிசாப் போட்டால் அதிக கனமா இருக்கும். என்னால் தூக்கிகொண்டு போக முடியாது."

:lol::lol: :P

Link to comment
Share on other sites

  • Replies 634
  • Created
  • Last Reply

முகத்தார்:- (சுன்னாகம் சந்தையில்)"கடைக்காரரே! பத்துக் கிலோ வெங்காயம் வேண்டும். பொடியா சின்ன சின்னதாகப் பார்த்துப் போடுங்கோ. பெரிசாப் போட்டால் அதிக கனமா இருக்கும். என்னால் தூக்கிகொண்டு போக முடியாது."

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

முன்னமொருக்கா நானும் சாத்திரியும் ஒரு வேலைக்குப் போவமெண்டு அப்பிளிகேசனைப் போட்டோம் எனக்கெண்டால் உந்த சிங்களப் பாஷை சுட்டுப் போட்டாலும் வராது சாத்திரிதான் சொன்னான் மச்சான் பயப்பிடாதை இன்ரவியுவிலை எல்லாருக்கும் ஒரே மாதிரியான கேள்விதான் கேக்பான்கள் நான் முன்னுக்கு போயிட்டு வந்து உனக்கு விடையை சொல்லித்தாரன் பிறகு நீ போய் சொன்னி எண்டால் பாஸ்பண்ணி விடுவாய் எண்டு அதன் படி இன்ரவியு வந்தது இரண்டு பேரும் போனம் முதலில் சாத்திரிதான் போனான் அவனிடம் கேட்கப்பட்ட கேள்விகள் (தமிழில்)

மனேஜர் : இலங்கைக்கு எப்போ சுதந்திரம் பிறந்தது?

சாத்திரி : கன காலமா நிறையப் பேர் போராடி 1948ல் பிறந்தது

மனேஜர் : குட். . இலங்கையின் பிரதம மந்திரி யார்?

சாத்திரி : அடிக்கடி ஆட்கள் மாறுவதால் சரியாக சொல்லமுடியாது இப்போதைக்கு . பிரேமதாச .

மனேஜர் ; வெரி குட். . இலங்கையின் சனத்தொகையென்ன?

சாத்திரி : ஆராச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன சரியான தகவல் . . கூடிய விரைவில் தெரியவரும்

மனேஜர் : ரொம்ப நல்லம் நீங்;க போகலாம்

வெளியிலை வந்த சாத்திரி என்னைக் கூப்பிட்டு வெரி சிம்பிள் கேள்விகள் மச்சான் எண்டு

கேள்வியையும் விடையையும் சொல்லித் தந்தான் நானும் ரெடியாக பாடமாக்கி யிருந்தேன் என்னைக் கூப்பிட்டார்கள் உள்ளை போனதும் அந்த ஏ.சி குளிரிலை பாடமாக்கின கேள்வியெல்லாம் மறந்துபோச்சு ஆன பதில்கள் ஞாபகத்திலை இருநதிச்சு கேள்வியா முக்கியம் பதில் சொன்ன காணும்தானே எண்டுபோட்டு மனேஜர் கேட்ட கேள்விக்கெல்லாம் டக்….டக் என பதிலைச் சொன்னன் ஆன என்னவோ தெரியலை அடிக்காத குறையா வெளியிலை தள்ளிட்டாங்க இதுதாங்க அவங்க கேள்வியாம் பிறகுதான் தெரிய வந்திச்சு

மனேஜர் : நீPங்கள் எப்போது பிறநதது?

முகத்தார் : கன காலமா நிறையப் பேர் போராடி 1948ல் பிறந்தது

மனேஜர் : உங்களின் அப்பா பெயர் என்ன?

முகத்தார் : அடிக்கடி ஆட்கள் மாறுவதால் சரியாக சொல்லமுடியாது இப்போதைக்கு . பிரேமதாச

மனேஜர் : உமக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?

முகத்தார் : ஆராச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன சரியான தகவல் . . கூடிய விரைவில் தெரியவரும்

Link to comment
Share on other sites

முகத்தாரின் சொந்தக்காரரொருவர் சுண்ணாகம் சந்தையில் முகத்தாரைக் கண்டு கதைத்தார். அப்போ

சொந்தக்காரர்: அட தம்பி இப்ப நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

முகத்தார் : ஊரிலே அப்பாவிற்கு உதவி செய்து கொண்டிருக்கின்றேன்.

சொந்தக்காரர் : ஓ நல்லவிடயம். அப்பா என்ன வேலை தம்பி செய்கிறார்?

முகத்தார் : சும்மாதான் இருக்கின்றார்

சொந்தக்காரர் : :roll: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

மனேஜர் : உமக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?

முகத்தார் : ஆராச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன சரியான தகவல் . . கூடிய விரைவில் தெரியவரும்

:lol::lol::lol::D:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட பாவிகளா.. :lol::lol::lol::D:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதன் முதலாக விமானத்தில் பயணம் செய்த ஒருவர் பக்கத்தில் இருந்த முகத்தாரை பார்த்து பறந்து கொண்டிருக்கும் இந்த விமானத்தில் திடீரென்று பெட்ரோல் தீர்ந்து விட்டால் என்ன ஆகும்? என்று கேட்டார்

முகத்தார்:- காரைப் போலத்தான். நாம் எல்லோரும் இறங்கி இந்த விமானத்தைத் தள்ள வேண்டி இருக்கும்

Link to comment
Share on other sites

முகத்தார்:- எனக்கு ஞாபகமறதி எண்டு கத்துவா... இப்பபார் நான் வெளியில கொண்டுபோன குடையை பத்திரமா கொண்டந்திட்டன்..

பொன்னம்மா:- மண்ணங்கட்டி நீங்கள்தான் வெளில போகேக்க குடை கொண்டுபோகவே இல்லையே..

முகத்தார்:- :roll: :roll:

Link to comment
Share on other sites

தம்பி இந்த குடைப் பகிடி வரேக்கைத் தான் எனக்கு ஒண்டு ஞாபகத்துக்கு வருகுது...ஒருமுறை நானும் பொண்ணம்மாவும் குடையொண்டு வாங்க கடைக்குப் போணோம் குடையை வாங்கி பொண்ணம்மா விரிச்சுக் கொண்டு வரேக்கைதான் எனக்கொரு யோசனை வந்தது இப்ப மழைவந்தால் எப்பிடித் தெரியும்எண்டு போட்டு டக் கெண்டு குடையை வாங்கி நடுவிரல் பெரிய ஓட்டையொண்டை போட்டுட்டு பொண்ணம்மாட்டைக் குடுத்தன் இனி மழை வந்தால் இதுக்குலாலை பார் உண்டு (கடைக்காரங்களுக்கு இல்லாத மூளை முகத்தாருக்கு இருக்கு பாத்தியலோ)

Link to comment
Share on other sites

தம்பி இந்த குடைப் பகிடி வரேக்கைத் தான் எனக்கு ஒண்டு ஞாபகத்துக்கு வருகுது...ஒருமுறை நானும் பொண்ணம்மாவும் குடையொண்டு வாங்க கடைக்குப் போணோம் குடையை வாங்கி பொண்ணம்மா விரிச்சுக் கொண்டு வரேக்கைதான் எனக்கொரு யோசனை வந்தது இப்ப மழைவந்தால் எப்பிடித் தெரியும்எண்டு போட்டு டக் கெண்டு குடையை வாங்கி நடுவிரல் பெரிய ஓட்டையொண்டை போட்டுட்டு பொண்ணம்மாட்டைக் குடுத்தன் இனி மழை வந்தால் இதுக்குலாலை பார் உண்டு (கடைக்காரங்களுக்கு இல்லாத மூளை முகத்தாருக்கு இருக்கு பாத்தியலோ)

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

முகத்தார் சின்னபிள்ளையா இருக்கேக்க படிக்கபோனபோது..

ஆசிரியர் : எனது நாய் பற்றி கட்டுரை எழுதிட்டு வரச் சொன்னா, நீ உன்ர அண்ணன் எழுதின அதே கட்டுரைய கொப்பியா அடிச்சிட்டு வந்திருக்கிறாய்?

முகத்தார் : இல்ல சேர். நானும் அதே நாயை பத்தி தான் எழுதி இருக்கிறன். அதால தான் உங்களுக்கு அப்படி தெரியுது.

Link to comment
Share on other sites

ஆசிரியர்: கண்ணகி மதுரையை எரித்ததில் இருந்து நமக்கெல்லாம் என்ன தெரியுது?

முகத்தார்: அந்த காலத்தில தீயணைப்பு படை இல்லயெண்டு தெரியுது.....

Link to comment
Share on other sites

தணிக்கை.

முகத்தார் உங்களுடைய நகைச்சுவை துணுக்குகள் சில நன்றாக இருக்கின்றன. அதே நேரம் இரட்டை அர்த்தம் தொனிக்கும் அல்லது அது போன்ற நகைச்சுவையை தவிர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே?

- மதன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.