Jump to content

முகத்தார் பகிடி


Recommended Posts

நகைச்சுவையுள் வந்து சிரிக்காமலா இருப்பது.. சிரிக்க தனே வேணும் ஆ.. சரி நீங்கள் நலமா?

முகத்தார் நலம் என்று தெரியுது... :wink:

அப்ப சரி நல்லா சிரியுங்க அண்ணா :wink:

ம் நான் நலம் அண்ணா.. நீங்களும் நலம் தானே.. :P

Link to comment
Share on other sites

  • Replies 634
  • Created
  • Last Reply

ஒருநாள் சாத்திரி வந்து என்னட்டைக் கேட்டான்

சாத்திரி : முகத்தார் உனக்கு உந்த பேய் பிசாசுகளிலை நம்பிக்கையிருக்கோ?

முகத்தார் : கலியாணம் கட்டமுன்னம் இல்லை இப்ப . :roll: . . . .

சாத்திரி : பேய் பக்கத்திலை நிக்குது எண்டு எப்பிடி அறியுறது?

முகத்தார் : எனக்கு தெரியலையடா. . . .

சாத்திரி : நாய் குரைத்தால் அதை வைச்சு அறியலாம் எண்டு ஒரு கூட்டாளி சொன்னான் உண்மையோ?

முகத்தார் : இருக்கலாம் . . ஏன் இப்ப திடீரெனக் கேக்கிறாய்?

சாத்திரி

:lol: :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப சரி நல்லா சிரியுங்க அண்ணா :wink:

ம் நான் நலம் அண்ணா.. நீங்களும் நலம் தானே.. :P

நன்றி நான் நலம்...

முகத்தார் பொன்னம்மாக்க எப்படி..? சாத்திரியை சாட்டி அவவை தான் சொல்லுறியளோ.. :wink: :lol:

Link to comment
Share on other sites

.இது உண்மையா நடந்ததுங்கோ . .

உங்களுக்குத் தெரியுமா அனேகமான சிங்களப் பெட்டைகளின் பெயர்கள் கா வில்தான் முடியும் உதாணைத்திற்கு இன்டிகா . ரூபிகா . பிரிதிக்கா . சாந்திரிக்கா எண்டு ஒருமுறை நானும் பொண்ணம்மாக்காவும் கொழும்பிலை ஆர்பிகோ சோ ரூமுக்கு போனம் சுத்திப் பாத்துக் கொண்டு வரேக்கை பொண்ணம்மாக்கா ஒரு கிண்ணத்தை எடுத்து பிளாஸ்ரிக்கா எண்டு கேட்டா இதை கேட்ட அங்கு வேலை செய்யிற சிங்களப்பிள்ளை சொல்லச்சு. . ஏயா அத நிவாடு மொனவத ஓன .(அவ இண்டைக்கு லீவு என்ன வேணும்) எண்டு

Link to comment
Share on other sites

அதற்கு நான் என்னசொல்லியிருப்பன் எண்டால் பிளாஸ்ரிக்கா லீவு எண்டால் அவாண்ட அக்கா அண்டா (பெரிய பாத்திரம்) இல்லையோ எண்டு... (என்ன முகம் இதக்கேட்காமல் விட்டுட்டு வந்திட்டீங்களா?? ஓ பொண்ணம்மாக்காள் பக்கத்தில நிண்டவா இல்லை??)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதற்கு நான் என்னசொல்லியிருப்பன் எண்டால் பிளாஸ்ரிக்கா லீவு எண்டால் அவாண்ட அக்கா அண்டா (பெரிய பாத்திரம்) இல்லையோ எண்டு... (என்ன முகம் இதக்கேட்காமல் விட்டுட்டு வந்திட்டீங்களா?? ஓ பொண்ணம்மாக்காள் பக்கத்தில நிண்டவா இல்லை??)

:lol:

Link to comment
Share on other sites

முகத்தான் பேய்க்கு காலும் நிலத்திலை முட்டுறேல்லையாம் மனிசி முனியம்மா எனக்கு அடிக்கேக்கையும் கால் நிலத்திலை முட்டுறேல்லை பறந்து பறந்து அடிப்பாள்

Link to comment
Share on other sites

சாத்திரியார் என்ரை மனிசி முனியம்மாவை எப்ப கூடி மனிசியாக்கினீர் .பக்கத்து வூட்டு குப்பனும் உம்மடை கதையை கேட்டு நித்திரையி்ல்லாமல் திரியறான்......

Link to comment
Share on other sites

யோவ் மதராசி 30வருசமா முனியம்மா எனக்கு மனிசி நீரென்ன புச்சா கதை சொல்லுறீர்

Link to comment
Share on other sites

(என்ன முகம் இதக்கேட்காமல் விட்டுட்டு வந்திட்டீங்களா?? ஓ பொண்ணம்மாக்காள் பக்கத்தில நிண்டவா இல்லை??)

வோய் கம். . .டி. முகத்தான் ஒரு அப்பாவி சும்மா அவனிட்டைபோய் நொய். . நொய் எண்டு கேள்விமேலை கேள்வி கேட்டுக்கிட்டு உனக்கு தில் இருந்தா எங்கிட்டை கேள்.. கும்பகர்ண சப்தே இதுக்கென்ன அர்த்தம் தெரியுமா? லோகத்திலை தப்பு செய்யிறவாளுக்கு நரகத்திலை கொடுக்கிற தண்டனையின் பேரு. கும்பகர்ண சப்தே எண்டால் 4 வயசுபோண கிழவிகளுக்கு மத்திலை உக்கார வைச்சு ஊர்கதை பேசியே கொல்லுறது இத்தோடை கேள்வி கேக்கிறதை நிறுத்திடு இல்லை. .

முகத்தார் : ஏங்க யாருங்க இப்ப பேசினது இங்கு வந்தவுடனை தலை எதோ மாதிரி சுத்திச்சுங்க அப்புறம் என்ன நடந்ததெண்டே தெரியலை

( ஆகா. . .முகத்தானை அந்நியன் பாக்க விட்டது பெரிய தப்பாப் போச்சே. . . )

Link to comment
Share on other sites

அவனவன் கொலை செய்திட்டு எனக்கு அ ந் நியன் வியாதி எண்டப்போறாங்கள்,ம் ... ம் உலகத்தில இருக்கிற பிரச்சனைகளுக்குச் சன்கருண்ட தீர்வு சிரிப்புக்கிடமானது,இதல்லாம் ஒரு படம் எண்டு ....முகத்தான்

Link to comment
Share on other sites

ஓருநாள் சந்திலை நிக்கிறன் புதுச்சோடி ஒண்டு சைக்கிலை போச்சுதுகள் அந்த பெம்பிளை பஞ்சாபி உடுப்புப் போட்டு இருந்தா சைக்கிலைபோகேக்கை காத்துக்கு அந்த பெண்ணோடை துப்பட்டா பறந்து சைக்கில் சில்லுக்கை போகப்பாத்திச்சு முகத்தானுக்கு தானே பெண்ணுங்க கஸ்டப்பட்டா சும்மா இருக்க மாட்டான் உடனே நான் பிள்ளை துப்பட்டா. . பிள்ளை துப்பட்டா எண்டு சொன்னன். எனக்கு பக்கத்திலை நிண்ட பெடியொண்டு என்னை ஒரு மாதிரியா பாத்துப் போட்டு சொல்லுது வோய் பெரிசு துப்பல் வந்தா சைட்டிலை துப்பிறதுதானே இதை விட்டுப் போட்டு துப்பட்டா. . துப்பட்டா எண்டு றோட்டாலை போற சனத்தைக் கேட்டுக் கொண்டு நிக்கிறாய் ......ம்...ம்....நல்லதுக்கு காலமில்லை

Link to comment
Share on other sites

முகத்தார் : சாத்திரி வெளிநாட்டிலை இருந்து விடுமுறைக்கு வாற எங்கட பெண்டுகள் இஞ்சை தங்கட சொந்தங்களை கண்டால் கை எடுத்து கும்பிட்டு அதோட கை குலுக்கிதான் வரவேற்கினம். பாத்தியோ நீ

சாத்திரி : அது வேறையொண்டுமில்லை மச்சான் தமிழ்கலாச்சாரமும் ஐரோப்பிய கலாச்சாரத்தையும் மிக்ஸ்பண்ணிக் குடுக்கினம் அதுதான்

முகத்தார் : நீ வேறை கலாச்சாரம் கிலாச்சாரம் மிக்ஸ்பண்ணேலை. கையெடுத்து கும்பிட்டால் இரண்டு கையிலும் எத்தினை தங்க காப்பு இருக்கு எண்டு தெரியும் கைகுலுக்கினால் எவ்வளவு வெயிற் எண்டு கைகுடுக்கிறவருக்கு புரியும். இது தான் கும்பிட்டு குலுக்கிற சமாச்சாரம்

சாத்திரி: :roll: :lol::lol:

Link to comment
Share on other sites

கொழும்பில ஒரு பெரும் பணக்காரர் அவரது ஐம்பதாவது பிறந்த நாளுக்காக பெரிய பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதுக்கு VIP முகத்தாரும் போயிருந்தார் அவரது மாளிகையில் இருக்கும் பெரிய நீச்சல் குளத்தில் இரண்டு பெரிய சுறாமீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. வந்திருந்த விருந்தினர்களைப் பார்த்து அவர் அறிவித்தார்.

"இந்த நீச்சல் குளத்தில் தைரியமாகக் குதித்தது நீந்தி அந்தப் பக்கம் கரையேறும் ஒருவனுக்கு அவன் என்ன கேட்டாலும் தருவேன்"

கொஞ்ச நேர அமைதிக்குப் பின்னர் திடீரென யாரோ தண்ணீரில் குதிக்கும் சப்தம். பார்த்தால் எங்கட முகத்தார் தான். சுறாமீன்களுக்கு போக்கு காட்டி வேகம் வேகமாய் நீந்தி அந்தபபக்கம் கரை ஏறினார். அனைவரும் முதலில் அதிர்ச்சியில் நின்றாலும் பிறகு ஒரே கரகோசம்.

பணக்காரர் சொன்னார். "வாவ். உங்கட தைரியத்தை பெரிதும் பாராட்டுகிறேன். என்ன வேண்டுமோ கேளூங்கள்"

முகத்தார் சொன்னார் "முதல்ல என்னை உள்ள தள்ளி விட்ட நாய் யாருன்னு தெரியனும்"

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.