Jump to content

நாளை முதல் பிரித்தானிய பாராளுமன்றை முற்றுகைப் போராட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் இனவழிப்பு உச்சநிலையை அடைந்திருக்கும் இந்நேரத்தில், வரும்நாட்களில் பாரிய இனவழிப்பிற்கு சிங்களம் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதை தடுத்து நிறுத்துவதற்கான பொறுப்பும், சர்வதேசத்தின் மனசாட்சிகளை திறக்கும்படி செய்ய வேண்டிய பொறுப்பும் புலம்பெயர் மக்களாகிய எங்கள் கைகளிலேயே உள்ளது.

நாம் தவறும் ஒவ்வொரு நிமிடமும் நூற்றுக்கணக்கான எம்மக்கள் இலங்கை/இந்திய படைகளினால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டும், பாரிய காயங்களுக்கும் உட்பட்டுக் கொண்டும் உள்ளார்கள்.

இந்நிலையில் சர்வதேச நாடுகளின் தலைநகரங்கள் முழுக்க பாரிய போராட்டங்கள் நாளை முதல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒருபடியாக பிரித்தானிய பாராளுமன்றை முற்றுகைப் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. நாளை மதியம் 12.00 மணிக்கு ஆரம்பிக்கும் இம்முற்றுகைப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்காக அணி திரள்வோம்.

பிரித்தானியாவிற்கு எம்மக்களை காப்பாற்றும் பாரிய பொறுப்புள்ளது. எம் நாட்டை சிங்களவன் கைகளில் ஒப்படைத்து, இனவழிப்பிற்கு பாதையமைத்ததே பிரித்தானியாதான்.

இப்போராட்டத்தில் எம் அடையாளங்களான தமிழீழ தேசிய கொடிகளுடன் பல்லாயிரக்கணக்காக அணி திரள்வோம்.

எம்மக்களை காப்பாற்றும் வரலாற்றுக் கடமையில், எம் சுக, துக்கங்களை சற்று ஒதுக்கி வைத்து விட்டு கை கோர்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று எல்லாத்தமிழ் பிரித்தானிய மக்களும் போராட்டத்தில் பங்குபற்றவேண்டும்..

இதன் மூலம் பாரிய மாற்றம் ஒன்று செய்யவேண்டும்.. இலட்சக்கணக்கில் திரளுங்கள்..

முழு இனப்படுகொலையை தொடங்கிவிட்டது இந்தியாவுடன் சேர்ந்து.. இந்திய யுத்தக்கப்பல்களும் சேர்ந்து நடத்துகின்றன...

அமெரிக்கா, பிரித்தானிய அரசுகளை உடன் தலை இட வலியுருத்த வேண்டும்..

பலன் கிடைக்கும் வரை தொடர்வேண்டும்..

எமது எதிர்காலம் இதில் தான் தங்கி இருக்கிறது..

உலக, இந்திய இரகசிய கூட்டு சதிகளின் கடைசி நிகழ்வு அரங்கேறுகிறது...

இன்று செய்யாவிட்டால் என்றும் இல்லை...

உடன் இறங்கி முற்றுகை இடுங்கள்...

சித்திரை 14 இடையில் புதுவருடத்திற்கு முன், இந்திய தேர்தல் இலக்கு வைத்து தமிழினத்தையும் அழிக்கும் யுத்தம் இறுதியாக நடக்கிறது..

உங்கள் செயல்கள் மூலம் பாரிய மாற்றங்களை செய்யுங்கள்...உடன் செயல்படுங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது இப்பொழுது வீதி மறியல் போராட்டமாக மாறியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது இப்பொழுது வீதி மறியல் போராட்டமாக மாறியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தொடங்கி விட்டது. ஒளிபதிவுகள் எடுப்பதற்கு முயற்சி செய்கிறோம். கிடைத்தவுடன் வக்த்தாவில் பார்வையிடலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.