Jump to content

மாரடைப்பை தடுக்கும் தயிர்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாரடைப்பை தடுக்கும் தயிர்

பால், மனிதனின் இன்றியமையாத உணவு. பச்சிளங்குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு சமச்சீர் உணவு. பாலிலிருந்து நேரடி யாகவும், மறைமுகமாக வும் பல பொருட்கள் கிடைக்கின்றன. பால் தாகம் தீர்ப்பதுடன் புரதம் மற்றும் ஏனைய விட்டமின்களைப் பெறுவதற்கும் வழி வகுக் கிறது.

பால் சாப்பிடுவது நல்லதா... கெட்டதா? என்ற சந்தேகம் பலருக்கு உண்டு.பால் ஜீரணம் ஆகாமல் இருப்பதே இதற் குக் காரணம். திரவப்பால், வெண் ணெய், தயிர், நெய், பால்கோவா, பால் பவுடர், நெய், பாலாடைக் கட்டி, ஐஸ்கிரீம் ஆகிய வடிவங்களில் பாலை உணவுப் பொருட்களாக சாப் பிடுகின்றனர். பாலை உறைய வைத்து உண்பதன் மூலம் எளிதில் செரிக்கக் கூடிய பொருளாக மாற்றி விடலாம். இது யோகர்ட் என்று கூறப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு வயிற்றுப் போக்கு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து பாதுகாப்பளிக் கிறது. அதேபோல் பாலில் தயாரிக் கப்படும் ஐஸ்கிரீமில் உள்ள அஸி டோபிஸஸ் மற்றும் பைபிடஸ் நுண்ணுயிர்கள் உடம்புக்கு மிகவும் நல்லது. இது குடல் சம் பந்தமான நோய்களை கட்டுப்படுத்துகின்றன.

பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர் எளி தாக செரிக்கக் கூடிய உணவாகும். தையாமின் உயிர்ச்சத்து தயிரில் அதிகமாக உள்ளது. கல்சியம் மற்றும் பொஸ்பரஸ் தாதுக்களை தயிர் அதிகமாக வழங்குவது மட்டுமின்றி, குடல்களிலிருந்து இரத்தத்தில் உணவை கிரகிக்கவும் உதவுகிறது. மேலும் வயிற்றுப் போக்கு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய் களிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.

இனிப்புத் தயிரிலுள்ள நுண்ணுயிர்கள் அபாயகரமான நோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வாய்ந் தவை. இதனால் வயிற்றுப் போக்கு மலச்சிக்கல் போன்றவைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும். இரத்தத்தில் கொழுப்பு உயர்வதையும், அதனால் ஏற்படும் மாரடைப் பையும் தடுக்கின்றது. பாலில் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீமில் கொழுப்புச்சத்து, புரோட்டீன், கார்போஹை தரேட், கல்சியம், மங்கனீசியம், பொஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், சல்பர், சிட்ரிக் அமிலம் ஆகியவை உள்ளன.

தகவல்...............வீரகேசரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்கு நன்றி நிலாமதி அக்கா

அனால் இப்படியான ஒரு மருத்துவ குறிப்புகள் வரும் போது இதுபற்றி research செய்வார்கள், பொதுவாக மருத்துவ பல்கலைகழகங்கள் இவற்றை செய்கின்றன.

பல ஆண்டுகள் கூட செல்லலாம். அதுபத்தி ஒன்றும் குறிப்பிடவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.