Jump to content

சமாதானத்தை நோக்கி ஓபாராவை சந்திக்க அமெரிக்க எல்லையைக் கடந்த தமிழ் இளையோர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானத்தை நோக்கி ஓபாராவை சந்திக்க அமெரிக்க எல்லையைக் கடந்த தமிழ் இளையோர்

[திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2009, 06:22 பி.ப ஈழம்] [கி.தவசீலன்]

அமெரிக்க சிக்காக்கோ மாநகரில் உள்ள ஹார்போ கலையகம் நோக்கித் 60 நாட்கள் பயணத்தை தொடங்கிய மாணவர்கள் வின்சர் டெற்ரோய்ட் எல்லையனைக் கடந்து அமெரிக்காவுக்குள் கடந்த வெள்ளிக்கிழமை (03.04.09) பிற்பகல் 1:00 மணிக்கு சென்றுள்ளனர்.

இலங்கைத் தீவில் சிறிலங்கா அரசினால் முன்னெடுக்கப்படும் மனித அவலத்தை ஒபரா வின்ப்ரேயின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி அந்நிகழ்ச்சியில் வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மாணவர்கள் சிலர் இந்த நடைப்பயணத்தினை கடந்த மாதம் 4 ஆம் நாள் தொடங்கியிருந்தனர்.

"ஒபரா வின்ப்ரேயின் நிகழ்ச்சியில் நான் நிச்சயமாக பங்கெடுப்பேன். 1,000 கிலோ மீற்றருக்கு மேல் நடந்து வந்த எம்மைச் சந்தித்துக் கதைக்க முடியாது என்று நிச்சயமாகச் சொல்லமாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் ஒரு மனிதாபிமானத்தை மிகவும் நேசிக்கும் சிறந்த பெண்மணி. நாம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பார் என்பதில் எமக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு" இவ்வாறு சிக்காக்கோவிற்கான நடைபயணத்தில் ஈடுபட்டிருக்கும் கண்ணன் சிறீகாந்தா தெரிவித்தார்.

கடந்த மாதம் 4 ஆம் நாள் ரொறன்ரோவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னாள் ஐந்து மாணவர்களால் தொடங்கப்பட்ட இப் பயணம், ஒன்ராறியோ மாகாணத்தில் கடுங் குளிரையும் தாங்கிக்கொண்டு 33 நாட்களாகத் தொடர்ந்து நடைபெறுகின்றது.

நடைபயணத்தின் போது பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் உள்ளுர் முக்கிய பிரமுகர்கள் ஆகியோரைச் சந்தித்து அவர்களிற்கு இலங்கைத் தீவின் தற்போதைய நிலை தொடர்பாக தகவல்களை வழங்குகின்றனர். தங்களது பயணம் தொடர்பாக மர்லன் ராஜா விபரிக்கையில்,

நாங்கள் நடக்காது தூங்காது இருக்கும் போதும் பலதரப்பட்ட வேலைகளைச் செய்யவேண்டியுள்ளது. எமது இணையத்தளத்தைத் தொடர்ந்து தகல்களை தரவேற்றிப் பராமரிப்பது, ஊடகங்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து வரும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பது, அத்துடன் ஹார்ப்போ கலையகத்தில் உள்ள தனிப்பட்டவர்களுடன் தொடர்புகொள்வது போன்று பலவற்றைச் செய்கிறோம் என்று தெரிவித்தார்.

இதுவரை 600 கிலோ மீற்றர்களுக்கு மேல் நடந்துள்ளோம். எமது இலக்கை அடைய இன்னும் கிட்டத்தட்ட 450 கிலோ மீற்றரளவில் நடக்க வேண்டியுள்ளது.

எனினும் இன்றைய ஈழத்தின் சூழ்நிலையை கவனத்திற்கொண்டு எவ்வளவு விரைவாகச் செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாக சிக்காக்கோ நகரிற்குச் செல்ல எண்ணியுள்ளோம். தேவையேற்படும் போது 24 மணிநேரமும் நடப்பதற்குத் தயாராகவுள்ளோம் என்று நடைபயணத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவரான கிரிஸ் பாலசிங்கம் தெரிவித்தார்.

ஒரு நாளில் 16 மணித்தியாலங்கள் நடப்பதற்குத் திட்டமிட்டுள்ள இம் மாணவர்கள் இதன் மூலம் 60 தொடக்கம் 80 கிலோ மீற்றர்கள் நடப்பதற்கு எண்ணியுள்ளார்கள். ஏற்கனவே அரைவாசிக்கு மேற்பட்ட தூரத்தைக் கடந்துள்ள இவர்கள், மற்றையவர்களைச் சந்தித்துக் கருத்துச் சொல்வதை விடுத்துத் தனியே நடப்பதில் மட்டும் கவனமெடுப்பின் 10 நாட்களில் இலக்கை அடையமுடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இப்பயணத்தில் உள்ள கண்ணன் சிறீகாந்தா கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் சமாதானம் பற்றிப் பேசும் போது அது செவிடன் காதில் ஊதிய சங்குபோல் அனைத்துலக சமூகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் ஒபரா வின்ப்ரேயின் நிகழ்வினூக நாம் விடுக்கவுள்ள வேண்டுகோளினை அடிவானில் தெரிவும் நம்பிக்கை நட்சத்திர ஒளியாகக் காண்கின்றனர் என்றார்.

இப் பயணம் வெற்றிபெற உலகெல்லாம் பரந்துவாழும் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட ஆதரவினை இம் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கீழே உள்ள இணைப்பின் ஊடாக உலகு எங்கும் வாழும் தமிழர்கள் மற்றும் தமிழர்களல்லாத அனைவரையும் ஒபரா வின்ப்ரேயிற்கு மின்னஞ்சல் அனுப்புமாறு இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்களிடமிருந்து இதுவரை எவ்வித உறுதி மொழியும் கிடைக்காத இந்நிலையில், அனைவரும் மின்னஞ்சல் மூலம் இவர்களது குரல்களின் ஊடாக இலங்கைத் தீவில் நிலவும் மனித அவலத்தை உலகிற்கு கொண்டுவர சந்தர்ப்பம் வழங்க வேண்டும் ஒன்று ஒபரா வின்ப்ரேயிற்கு மின்னஞ்சல் அனுப்புமாறு அனைவரையும் வேண்டுகின்றனர்.

மின்னஞ்சலில் நடைப்பயணம் மேற்கொள்ளும் பின்வரும் மாணவர்களின் பெயர்களையும் இணைக்கவும்:

கண்ணன் சிறீகாந்தா (Kannan Sreekantha)

கிறிஸ் பாலசிங்கம் (Kris Balasingam)

மார்லன் இராஜா (Marlan Raja)

இறமணன் திருக்கேதீஸ்வரநாதன் (Ramanan Thirukketheeswaranathan)

விஜய் சிவநேஸ்வரன் (Vijay Sivaneswaran)

மின்னஞ்சல் இணைய இணைப்பு: https://www.oprah.com/ord/plugform.jsp?plugId=216

நன்றி ..........புதினம்

Link to comment
Share on other sites

இன்று குறிப்பிட்ட இளைஞர்களின் நேர்காணல் ஒன்றை கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் இன்றைய நிலவரம் சம்மந்தமாக அவர்கள் பாடிய அழகான ஓர் பாடலையும் ஒளிபரப்பினார்கள்.

இன்னும் சுமார் 35 நாட்கள் நடைபயணம் இருப்பதாய் அவர்கள் சொல்லி இருந்தார்கள். தங்களது நோக்கம் ஒபராவின் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மட்டும் இல்லை என்றும், வீதிவழியாக செல்லும்போது ஒவ்வொரு ஊரிலும் உள்ள முக்கியஸ்தர்கள், நிறுவனங்களிடம் தாயக அவலம் பற்றி சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி செல்வதாகவும் சொன்னார்கள்.

அவர்கள் எம்மிடம் கேட்கும் உதவி. நாம் ஒவ்வொருவரும் கீழ் உள்ள இணைப்பிற்கு சென்று எம்மால் முடியுமான அளவு மின்னஞ்சல்களை ஒபராவுக்கு அனுப்பவேண்டும். அதாவது இந்த இளைஞர்களிற்கு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டு. அதற்கான காரணத்தையும் சொல்லி!

ஒபராவுக்கு கிழமைக்கு சுமார் 20,000 மின்னஞ்சல்களிற்கு மேல் சென்றால் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று சொன்னர்கள். எனவே, ஒருசிலர் மட்டும் அனுப்பாது எல்லோரும் அனுப்ப வேண்டும்.

https://www.oprah.com/ord/plugform.jsp?plugId=216

Spam messages கூடாது. உண்மையான பெயர், முகவரி, தொலைபேசி இலக்கங்களை கொடுக்கவேண்டும். இந்தவிசயத்தில் உண்மை பேசுதல் முக்கியம்.

Link to comment
Share on other sites

மின் அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. இவ் இளைஞர்களின் பாதுகாப்பு பற்றி யாரும் சொல்லவில்லை. சிங்களம் எதையும் செய்ய துணிந்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்கின்ற விசயமும் கவனிக்கப்படவேண்டியது நுணாவிலான். கனயீர்ப்புக்கள் செய்பவர்கள் தங்கள் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். சிங்கள காடையர்கள் உண்மைகள் வெளியில் வருவதை மறைக்க எதுவும் செய்யக்கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு சென்று எல்லோரும் yes என்று வாக்களியுங்கள். நாம் முன்னர் 93 % இருந்தோம் இப்போது 53 க்கு வந்துவிட்டோம். எல்லோரும் இதை செய்யுங்கள்

http://www.oprahgiveusavoice.com/

Link to comment
Share on other sites

சிங்களவன் ஏற்கனவே இதற்கு எதிரான பரப்புரையை செய்ய துவங்கிட்டான்...இந்த http://www.petitiononline.com/slp2opra/petition.html இல் இதுவரை 3500+ சிங்கள நாய்கள் கையெழுத்து போட்டு இருக்குதுகள்...இதையும் நாங்கள் முறியடிக்க வெண்டும்....எமக்கு சார்பான Online petition உண்டா என்று நண்பர்கள் யாருக்காவது தெரியுமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சென்று எல்லோரும் yes என்று வாக்களியுங்கள். நாம் முன்னர் 93 % இருந்தோம் இப்போது 53 க்கு வந்துவிட்டோம். எல்லோரும் இதை செய்யுங்கள்

http://www.oprahgiveusavoice.com/

என்னால் இங்கு வாக்களிக்க இயலவில்லை. இத்தளத்தின் வாக்களிக்கும்பகுதி மட்டும் வேலை செய்யவில்லை.எனவே எனது கருத்தை மட்டும் பதிவு செய்துள்ளேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நீண்ட தூரத்தை 60 நாட்களில் கடக்கும் இளையோரின் துணிந்த முயற்சி நிச்சயம் பலனளிக்கும் .

தற்போதைய கருத்து கணிப்பு நிலவரம் .......

Current Results

Yes - 85%

No - 13%

Maybe - 1%

I don't know - 1%

Total Votes: 5894

தயவு செய்து இங்கு Yes என்று வாக்களியுங்கள் உறவுகளே .........

http://www.oprahgiveusavoice.com/

Link to comment
Share on other sites

elakiri.com இல் சிங்களவன் இதற்கு எதிராக வாக்களிக்கவும் ஓப்பராவை நேரடியாக தொடர்பு கொண்டு பயங்கரவாதிகளோடு பேசாதீர்கள் என்று சொல்லவும் பரப்புரை செய்கிறான்....பலர் எதிராகவும் வாக்களித்துள்ளார்கள்

தற்போதய நிலவரம்

Current Results

Yes - 72%

No - 26%

Maybe - 1%

I don't know - 1%

Total Votes: 8567

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னால் இங்கு வாக்களிக்க இயலவில்லை. இத்தளத்தின் வாக்களிக்கும்பகுதி மட்டும் வேலை செய்யவில்லை.எனவே எனது கருத்தை மட்டும் பதிவு செய்துள்ளேன்.

நன்றி.

வாக்களிக்கும் பகுதி முழுவதுமாக வர வெகுநேரம் பிடிக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள். உங்கள் கணினியில் ஒருமுறை வாக்களிதுவிட்டால் மறுமுறை அந்த பகுதி வருவதில்லை

Link to comment
Share on other sites

உங்கள் கணனியில் குக்கியை அழித்து, அழித்து, திரும்பவும் வாக்களிக்கவும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.  
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.