Jump to content

அடுத்த திட்டம் என்ன?


Recommended Posts

அடுத்த திட்டம் என்ன?

தாயகத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கும் இன சுத்திகரிப்பு ஒரு இடைவேளையை அடையும்போது, அதாவது எவ்வளவு அதிகமாக அழிக்க முடியுமோ அவ்வளவுக்கு அதிகமாக தமிழினத்தை அழித்துவிட்டு, அதன் பின்பு நிறைவேறவுள்ள அரங்கேற்றம் என்ன என்பதையும் அதைச்சார்ந்தோர் சிந்திக்க தொடங்கிவிட்டார்கள்.

இதற்கு முதல் உதாரனமாக, வன்னியில் எமது மக்களை பூண்டோடு ஒழித்துக்கட்டுவதிற்கு மறைமுகவாக முழு ஆதரவையும் வழங்கிக்கொண்டிருக்கும், உலகத்தமிழர்களின் தலைவர் என்று தன்னை, தானே கூறிக்கொண்டு பெருமைப்படுபவரும், கவிதை வடிப்பதில் தானே மன்னன் என்று பெருமைப்படுபவரும், கற்பனை கதைகள் எழுதுவதில் தானே விண்ணன் என்று கற்பனையில் மிதப்பவருமாகிய கலைஞர் ஜயாவின் இன்றைய இந்த புலம்பலை பாருங்கள்!

"போரின் முடிவு எப்படியிருந்தாலும், ராஜபக்சே எண்ணுவதைப்போல இருந்தாலும், நான் தமிழ் மக்கள் சார்பாக சொல்லுகிறேன் போரின் முடிவில் பிரபாகரனின் படைக்கு அழிவு ஏற்பட்டாலும், பிரபாகரன் தோல்வியுறுத்தாலும், போரஸ் மன்னனை அலெக்சாண்டர் வீரனாக நடத்தியதைப்போல் நடத்த முன்வருக என்று ராஜபக்சேவுக்கு நான் எங்கள் தமிழர்களின் நலன் கருதி சொல்லி கொள்கிறேன்."

இதிலிருந்தே இவர்கள் என்ன முடிவை எதிர்பார்க்கின்றார்கள் என்பதை புரிந்துகொள்ளக் கூடியதாகவுள்ளது.

இதைப்போலவே தான் பல சர்வதேச நாடுகளின் எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றன என்பதை அவர்களின் மெத்தனப்போக்கில் இருந்து புரியக்கூடியதாக உள்ளது.

அதாவது இவர்களின் எதிர்பார்ப்பும், அரசபயங்கரவாத அமைப்பின் தலைவரான ராஜபக்சாவினால் இவர்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவாதமும் ஒத்த கருத்துள்ளதாகவே இருக்கின்றன என்பதை நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

எவ்வளவு மக்கள் கொள்ளப்படுகின்றார்கள் என்பதில் எந்தவிதமான அக்கறையும் இவர்களுக்கு கிடையாது, தாயகத்தில் நிமிடத்திற்கு நிமிடம் இடம்பெறும் ஒவ்வொரு அவலத்தின்போதும் எத்தனை விடுதலைப்புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற கணக்கு விபரங்களையே இவர்கள் அதாவது சர்வதேச ரீதியாக பகிர்ந்துகொள்வதாக அறிய முடிகின்றது.

இதன்பிரகாரம் இவர்களின் அடுத்த திட்டம் என்ன என்பதை நாங்கள் இலகுவாக புரியக்கூடியதாக இருக்கின்றது.

அதாவது அழிக்கவேண்டிய மக்களை அழித்த பின்பு எஞ்சியிருக்கும் மக்களுக்கு சர்வதேச நாடுகளின் உதவியோடு இயன்ற வசதிகளை செய்துகொடுத்துவிட்டு, விடுதலைப்புலிகளை அடியோடு செயலிழக்கப்பண்ணுவதே இவர்களின் திட்டம்.

அதன்பின்பு இந்த சர்வதேச நாடுகளும், தங்களது நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களையும் சட்டத்தினால் அதாவது பிரிவினைவாதம் பேசமுடியாதவாறு இறுக்க சந்தர்ப்பம் உள்ளது.

இதனால் சர்வதேச நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்களினால் இன்று மேற்கொள்ளப்பட்டுவரும், தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவான குரல்களும் ஓயவும் சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன.

இன்று புலம்பெயர்ந்த நாடுகளிலை எந்தெந்த நாடுகளிலையெல்லாம் அறவழிப்போராட்டங்கள் நடத்துகின்றமோ, அந்த நாடுகள் எல்லாம் அப்போதே நினைத்திருந்தால் அதாவது பல வருடங்களிற்கு முன்பு ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகள் யுத்த நிறுத்தத்தை முறித்துக்கொண்டு, கொலைவெறியை ஆரம்பித்தபோது செயலில் இறங்கியிருந்தால் எவ்வளவு பேரழிவை தவிர்த்திருக்கலாம் அல்லவா?

அடுத்ததாக விடுதலைப்புலிகளை சம பங்காளியாக ஏற்றுக்கொண்டு இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போதும், விடுதலைப்புலிகளை எவ்வளவுக்கு பலவீனம் அடையப்பண்ணலாம் என்ற கண்ணும், கருத்துமாகவுமே இந்த சர்வதேச நாடுகள் இருந்து வந்துள்ளன.

இதற்கு உதாரனமாக அமெரிக்காவில் இடம்பெற்ற உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தின் போது விடுதலைப்புலிகளை புறக்கணித்ததில் இருந்தே நாம் அறிந்துகொள்ளலாம்.

சமகாலத்தில் அதாவது உச்சக்கட்டமாக இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இந்த பேரவலத்தின்போதும் கூட யுத்தத்தை நிறுத்து என்று சொல்வதிற்கு பதிலாக, மக்களை பாதுகாப்பான இடங்களிற்கு செல்ல அனுமதிக்குமாறு விடுதலைப் புலிகளைத்தான் அதிகமாக குற்றஞ்சொல்கின்றார்கள்.

இதில் என்னய்யா நியாயம்? பரம்பரை, பரம்பரையாக மக்கள் வாழ்ந்த இடத்திலிருந்து விலகிசென்று, அரச பயங்கரவாதிகளுக்கு இடத்தை விட்டுக்கொடுக்குமாறு கூறுகின்றீர்களே, நீங்கள் எல்லாம் ஒரு ஜனநாயக வாதிகளா?

உங்களிட்டை எல்லாம் நியாயம் கேட்கின்றோம் இதெல்லாம் எங்கள் விதி.

இதிலிருந்து நாங்கள் அதாவது பாதிக்கப்பட்ட இனமாகிய தமிழர்கள் சுயமாக ஒரு முடிவுக்கு வரவேண்டிய காலகட்டம் வந்துவிட்டது

எங்கள் பிரச்சினையை நாங்கள்தான் கையாளவேண்டும், யாரையும் நம்பக்கூடாது, இனிமேல் தியாக மனப்பான்மையோடும், பல விட்டுக்கொடுப்போடும், பல நெருக்கடிகளை முறியடித்து, விடுதலைப்புலிகளை தலைமையாகக்கொண்டு மூர்க்த்தனமாக போராடவேண்டிய காலம் வந்துவிட்டது, சிங்களவனா? தமிழனா என்று சிந்திக்கவேண்டிய காலம் வந்துவிட்டது.

சிந்திப்போம், செயல்படுவோம், வெற்றி எங்களுக்கே!

Link to comment
Share on other sites

"தனது முழுப் படைப்பலத்தையும் ஆயுதபலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து, சிங்களத்தேசம் எமது மண்மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்திவருகிறது. சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத்தோடு போராடிவருகின்றனர். உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இனஅழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.

இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம். எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம்.

வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களையெல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம். பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களையெல்லாம் தனித்துநின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.

இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்."

மாவீரர்தின உரையிலிருந்து.

Link to comment
Share on other sites

எங்களுக்கு யாரும் உதவப்போவதில்லை. மாறாக எம்மை நசுக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் உலக நாடுகள் துணைபோய்க்கொண்டிருக்கும்.

எம்மை நாங்கள் பலப்படுத்துவதன் மூலம் (அது அரசியல் ரீதியாக இருக்கட்டும், ஆயுத ரீதியாக இருக்கட்டும்) தான் உலக நாடுகளின் பார்வையை எம்பக்கம் திருப்பலாம். 30 நாடுகளை ஒரே தரத்தில் இஸ்ரேல் எதிர்கொண்டு வென்றது எனில் ஏன் எம்மால் முடியாது.?

Link to comment
Share on other sites

எமது தலைவர் எம்மக்களுக்காக எம்மக்களை நம்பித்தான் போராட்டத்தை ஆரம்பித்தார். மற்ற இயக்கங்களை போல் யாரையாவது நம்பியிருந்தால் எப்போதோ அழிந்து போயிருப்போம். இப்போ நாம் எல்லோரும் எமக்குள் தர்க்கம் புரியாமல் தலைவர் எதிர் பார்க்கும்

ஆதரவை புலத்தில் நாம் செய்யக்கூடியளவு செய்ய வேண்டும். ஈழத்தில் நடக்க வேண்டியதை அவர்கள் பார்துக்கொள்வார்கள். தமிழராய் ஒன்றினைவோம் ,தலைவருக்கு தேவையான பலத்தை கொடுப்போம்,வெல்வோம் தமிழ் ஈழம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.