Jump to content

ஒஸ்திரேலியாவில் உண்ணாநிலை இருப்பவர்களுக்கு நீங்க ஏதும் சொல்ல விரும்புகின்றீர்களா?


Recommended Posts

ஆம் எனில் இங்கு மறுமொழியாக விட்டு செல்லுங்கள். அவர்களிடம் பிரிண்ட் எடுத்து கொடுத்துவிடுகின்றோம். நீர் கூட அருந்தாமல் இருப்பவர்களுக்கு உங்கள் வார்த்தைகள் நிச்சயம் ஊக்கம் தரும்...

அவர்களின் பெயர்கள்:

மெல்பேர் சகோதரர்கள்: ரமணா, சந்திரன், பானு, தெய்வீகன்

சிட்னி சகோதர்கள்: சுதா தனபாலசிங்கம், மதிவண்ணன் சின்னதுரை, பிரதீபன் இராஜதுரை

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே! உங்களைப் பார்த்து பெருமைப் படுகின்றோம். உங்கள் எண்ணம் நிச்சயமாக நிறைவேறும். நிறைவேற வாழ்த்துக்கள்.

"மக்கள் புரட்சி வெடிக்கட்டும்

சுதந்திர தமிழீழம் மலரட்டும்"

என்று சொன்ன நம் தியாக சீலன் திலீபனை உங்களில் காண்கிறோம்.

கோடி நன்றிகள் சொன்னாலும் தகாது.

உங்களுடன் போராட நாங்கள் இருக்கின்றோம்.

உறுதியாய் தொடர்ந்து போராடுவோம்!

-பருத்தியன்-

Link to comment
Share on other sites

அவுஸ்திரெலியா உறவுகளுக்கு, உங்களை நினைக்கப் பெருமையாக இருக்கிறது. சிட்னியில் நான் இருந்தால் தற்பொழுது கட்டாயம் கன்பராவுக்கு வந்து ஆதரவு தருவேன். ஆனால் தற்பொழுது நான் இருப்பது அமெரிக்காவில். நியூயோர்க்கில் நடைபெறும் கவனயீர்ப்பில் கலந்து கொள்ளவுள்ளேன். பல தமிழ் நாட்டு உறவுகளும் இதில் கலந்து கொள்கிறார்கள். எங்கிருந்தாலும் உங்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகிறேன்.

-கந்தப்பு

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் போராட்டம் வெல்லட்டும்!

தமிழ் நாட்டில் காங்கிரஷ்சை தோற்கடிப்போம்!

தமிழ் நாட்டில் ஈழ விடுதலை வென்றெடுக்க தொடர்ந்து போராடுவோம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உங்களை நினைக்க பெருமையாக இருக்கிறது. உங்கள் எல்லோரையும் தியாகதீபம் திலீபனின் மறுபிறவிகளாக பார்க்கின்றோம். நீங்கள் தொடரும் உண்ணாவிரத போராட்டங்கள் வீண்போகாது. நாளை கன்பராவில் தமிழ் உறவுகள் அனைவரும் அணிதிரண்டு ஆதரவு தருவார்கள்.

"மக்கள் புரட்சி வெடிக்கட்டும்

சுதந்திர தமிழீழம் மலரட்டும்"... என்ற திலீபனீன் கனவு நனவாகிறது.

உலகமெங்கும் மக்கள் புரட்சி வெடித்திருக்கின்றது, இந்த தியாகங்கள் எல்லாவற்றுக்கும் உலகம் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருக்கும் உறவுகளே .......

உங்கள் அன்றாட அலுவல்களான வேலை , பாடசாலை போன்றவற்றில் இருந்து விடுப்பு எடுத்து ........

ஈழத்திற்கு விடிவு கிடைக்க வேண்டும் , அதற்கு உலகமே பதில் என்கின்ற வேட்கையுடன் உங்களை வருத்தி இருந்து வரும் உண்ணாநிலைப் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அன்புச்சகோதரர்களே, எம் மக்களுக்காக நீங்கள் நடத்தும் தியாகப்போராட்டம் எமது மக்களின் விடிவுக்கு வழிசமைப்பதாக அமையட்டும். இங்கு லண்டனில் போராட்டம் நடத்தும் சகோதரர்களுக்கும் உங்களுக்கும் மற்றும் எல்லோரது தியாகங்களூக்கும் தலை வணங்குகிறேன்.

Link to comment
Share on other sites

அன்பு தமிழ் உள்ளங்களே உங்களது போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உலகம் முழுதும் உண்ண நோன்பு இருக்கும் உறவுகளே .......உணவை ஒறுத்து உடலை வருத்தி ..தியாகி களாக இருக்கிறீர்கள். உங்கள் மன உறுதி முன் நாங்கள் எம் மாத்திரம் . உங்கள் தியாகம் மேலானது .......அதி விட உங்களை நம்பி இருப்பவர்களின் உணர்வை புரிந்து கொள்ளுங்கள். உயிர் மேலானது அது காக்க படவேண்டும் . உலகம் உங்கள் தியாகத்தை மதித்து ஆவன செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • அட, சுமந்திரனை தலைவர் என்று பிள்ளையான் ஏற்றுக்கொண்டுவிட்டார..? சொல்லவேயில..🤪
  • ஏன் சைவசமயத்தை பின்பற்றியவர்களில் படித்தவர்கள் யாருமே இல்லையா??
  • ஆர்.ஜெயஸ்ரீராம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, புளியங்கண்டலடி வாகரையைச் சேர்ந்த குடும்பஸ்தரான கு.விஜயதாஸ (வயது 30)  பிணையில் இன்று (27) விடுவிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.எம்.பசில்  முன்னிலையில், வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கு நேற்றுக்காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே,   நிபந்தனை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவரின்  உருவம் அடங்கிய புகைப்படத்தை தன்னுடைய பேஸ்புக்கில்  பதிவிட்டதாக குற்றஞ்சாட்டி, 2020.11.27 அன்று வாகரை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.  கடந்த ஒருவருடமும் 2 மாதங்களாக தடுப்புக்காலில் இருந்துள்ளார். இந்நிலையில், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான  சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் வாகரை பொலிஸ் நிலையத்துக்கு காலை 9 மணிமுதல் 12 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் சென்று கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சட்டத்தரணிகளான எம்.எச்.எம்.றம்சீன் ,ஹாலிப் றிபான் அகியோர் பிரதிவாதி தரப்பில் தொடர்ச்சியாக ஆஜராகி வாதாடிவந்தனர்.   இவர்களுடன், சட்டத்தரணி ரி.ஜெயசிங்கம் இணைந்துகொண்டார். Tamilmirror Online || பிரபாகரனின் படத்தை ஏற்றிவருக்கு பிணை
  • கதையோட கதையாக ஒரு முக்கியமான விடையம் இப்போது கிரிப்டோ நாணயத்தில் Shibnobi, (shinja) எனும் நாணையம் Shib inu க்கு ஈடாக முன்னேறும் வாய்ப்புள்ளது அதிக பட்சமாக மூன்று பூசியங்களைத் தாண்டினாலே போட்ட பணத்துக்கு பலமடங்கு காசைப்பார்க்கலாம் அதாவது இப்போ பதின்மூன்று பூச்சியங்களுக்கு அப்பால் நிற்கிறது (0.000000000000015) வாங்கிப்போட்டால் ஓரளவு இலாபம் பார்க்கலாம்.
  • Published by T Yuwaraj on 2022-01-27 18:38:39       (எம்.எம்.சில்வெஸ்டர்) நாளொன்றுக்கு 4 மணித்தியால மின் துண்டிப்பை நாட்டு மக்கள் எதிர்கொள்வதை தவிர்ப்பதற்கு தற்போது முதற் கொண்டே  நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலம் அல்லது இரண்டு மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். அவ்வாறு செய்யாவிட்டால் முழு நாடும் இருளில் மூழ்கும் நிலை ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.   நீர் மூலமான மின்சார உற்பத்தி தற்போது 25 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.  மின்சாரத்தை தொடர்சியாக விநியோகித்து வருவதால் மின் உற்பத்தி நிலையங்களின் அருகிலுள்ள நீர்த்தேக்கங்களில் குறைவடைந்து, நாட்டில் மின்சார விநியோகம்  பாரியளவில் தடைபடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது.    இது குறித்து இலங்கை மின்சார பொறியிலாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளதாவது, "மின்சார உற்பத்தி நிலையங்களின் அருகாமையிலுள்ள நீர்த் தேங்கங்களிலுள்ள நீர் மட்டம் தற்போது 60 வீதமாக காணப்படுகிறது. இந்த நீர் மட்டத்தின் அளவு 40 வீதத்திற்கு  சென்றதன் பின்னர், மின்சார உற்பத்தியை நிறுத்தும் நிலை ஏற்படும். எரிபொருள்களை கொள்வனவு செய்வதற்கு டொலர் இல்லாததன் காரணமாக , அவசர கொள்வனவின் அடிப்படையில் தனியார் டீசல் நிலையங்களிலிருந்து கூடிய விலைக்கு மின்சார விநியோகத்தை பெற்றுக்கொள்வதற்கும் முடியாத நிலைமை தோன்றியுள்ளதனால் நாளொன்றுக்கு  ஒரு மணித்தியாலம் அல்லது இரண்டு மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு நடவடிக்கையை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் தான்தோன்றித்தனமாக   தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால், எதிர்வரும் 3 அல்லது 4 வாரங்களின் பின்னர் 4 அல்லது 5 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை மேற்கொள்ள நேரிடம். இதனால் முழு நாடும்  இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படும் " என குறிப்பிடப்பட்டுள்ளது. நாடே இருளில் மூழ்கும் - மின்சார பொறியியலாளர்கள் சங்கம்  எச்சரிக்கை | Virakesari.lk
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.