Jump to content

யார்? என்ன? எங்கே?


Recommended Posts

விடை சரி இவரைப் பற்றி மேலும் தகவல்கள்,

இவர் தான் மலேசியாவிலேயே முதல் பணக்காரர் ஆக வகைப் படுத்த பட்டுள்ளார்.இவர் மலேசிய முன்னாள் அதிபர் மகதீரின் நெருங்கிய நண்பர்.வெளியில் அதிகம் தன்னை இனங்காட்டிக் கொள்ளாதவர்.இதற்கு இவர் தமிழர் என்பதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.இவரின் வர்த்தக நிறுவனங்கள் தொலைத்தொடர்பு,செய்மதித் தொலைக்காட்சி,எண்ணை,கப்பல் போக்குவரத்து,சக்தி வளம் ,கேமிங் என்று பல் துறைப்பட்டது.இவரின் அடி இலங்கை.

http://www.namasthenri.com/nrioftheweek/ananda.htm

http://www.lycos.com/info/ananda-krishnan.html

http://www.asiaweek.com/asiaweek/features/...0.2001/p29.html

Link to comment
Share on other sites

  • Replies 360
  • Created
  • Last Reply

இங்கே முக்கியமாகச் சொல்ல வேண்டிய விடயம் இவரும் ஒரு வகையில் புலம் பெயர் தமிழரே.புலம்பெயர் இளயவர்கள் முன் நோக்கிப் பார்க்க வேண்டிய ஒரு ரோல் மொடல்.அமெரிக்காவிலோ மேற்குலகிலோ புலம் பெயர்ந்தவர்கள் தமது செயற்பாட்டுத் திறனால் ,திட்டமிடலால் ,விடாமுயற்சியினால் ,வசதி வாய்ப்புக்களை சரியான முறையில் பயன் படுத்துவதினால் அல்லது வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதனால் எவ்வாறு முன்னேறினர் என்பதைப் பார்க்க வேண்டும்.

தனி நபர்களின் முன்னேற்றம் பல துறைகளில் குறிப்பாக தொழில் நுட்பம் மற்றும் வியாபாராம் சார்ந்த வருங்காலத்திற்குத் தேவயான அறிவு சார் பொருளாதாரத்தை நோக்கியதாகவே இருக்கிறது.எல்லோரும் போல் வளக்கமான துறைகளில் மட்டுமே செல்வது எம்மை எமது திறமைகளை மட்டுப் படுத்தும் செயலாகவே இருக்கும்.புலம் பெயர் அடுத்த தலை முறை நிமிர வேண்டுமாயின் எமக்கு நம்பிக்கை தரக் கூடிய முன்மாதிரிகள் அவசியம். நாம் இவற்றைப் பற்றி அதிகம் பேசாமால் ,எமது கதை,கவிதை,தமிழ் சினிமா என்று ஒரு வட்டதுக்குள்ளயே உளன்று கொன்றிருந்தால் எங்கனம் முன்னேறுவது.அதற்காக இவை தேவை என்றில்லை, நாம் இவற்றிற்கும் அப்பால் முன் நோக்கி நகர வேண்டும்.

Link to comment
Share on other sites

முதல் குளு,இவரும் ஒரு மலேசியத் தமிழர்,ஆனால் அமெரிக்காவில் தற்போது புலம்பெயர்ந்து சாதனை படைத்து வருகிறார்.

Link to comment
Share on other sites

மேலே நாரதரால் குறிப்பிடப்பட்டவரின் பெயர் ஆனாந்தா கிருஷ்ணன். இவர் ஒரு இந்திய வம்சாவழி என்று தான் நானும் அறிந்தேன்

Link to comment
Share on other sites

வசம்பு,

விகிபிடியாவில் அவரது பெயர் தற்பரானந்தம் அனந்த கிருஸ்ணன் என்றே இருக்கிறது.அத்துடன் அவரின் முதாதயர் இலங்கைத் தமிழர் என்றே இருக்கிறது.அவரின் தந்தையார் மலேசியாவில் எண்ணெய் வியாபாரம் செய்தவர் என்று கேள்விப் பட்டுள்ளேன்.மேலும் தகவல்கள் வேறு யாராவது மலேசிய நண்பர்கள் சொன்னால் தான் தெரியும்.

Tatparanandam Ananda Krishnan, or TAK, is currently Malaysia's second (and the world's 138th) richest person, having a net worth estimated at $4 billion.[1] He was born in 1938 in Brickfields, Kuala Lumpur's "Little India" to a Tamil immigrant family from Sri Lanka and is of Sri Lankan Tamil decent.

Link to comment
Share on other sites

கிழட்டு அனுபவங்கள் - மலேசியா ராஜசேகரன்

இதுவரை படிக்காதவர்களுக்காக - முதல் பகுதி

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் தான் இந்தியாவிலிருந்து தமிழ் பேசும் மக்கள் மலாயாவிற்கு பிரிட்டீஷ்காரர்களால் இங்கு உள்ள ரப்பர் எஸ்டேட்டுகளில் வேலை செய்வற்காக கொத்தடிமைகளாக கொண்டுவரப் பட்டனர். ஒரு மேஜயை போட்டு 'விருப்ப பட்டவர்கள் மலாயா போவதற்கு பதிந்து கொள்ளலாம்' என்று பிரிட்டீஷ்காரர்கள் தங்களின் முதல் ஆள்சேர்ப்பு வேலையை மேற்கொண்டதே மதராஸ் துறைமுகத்தில்தான்

இப்படி வந்தவர்கள் எத்தகைய மக்களாக இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் ? பொருளாதாரம் என்று எதுவுமே இல்லாதவர்களும், தாழ்த்தப் பட்டவர்கள் என்று ஒதுக்கப் பட்டவர்களும், குடும்பம் குட்டி என்று பாரம்பரியம் எதையும் சுட்டி காட்ட முடியாதவர்களும் தான் வந்தவர்களில் பெரும்பாலோர். அதனால்தான் இன்றளவிலும் இந்தியர்கள் உலகம் முழுவதிலும் 96 நாடுகளில் குடியேறி நல்ல பொருளாதார நிலைகளில் இருந்தாலும், மலேசியாவில் உள்ள இந்தியர்கள் மட்டும் நலிந்து போய் கிடக்கிறார்கள். காரணம் அடிப்படையிலேயே இங்கு வந்து சேர்ந்த தமிழ் இனத்தின் தரம் சிறிது கம்மியானதாகப் போனதனால் தான்.

மலேசியாவில் சிறையில் உள்ளவர்களில் 45% இந்தியர்கள், டொமெஸ்டிக் வயலன்ஸ் கேஸ்களில் 20% இந்தியர்கள், போதைப் பித்தர்களில் சுமார் 20% இந்தியர்கள், பிச்சைக்காரர்களில் 45% இந்தியர்கள், கொடுர குற்றங்கள் புரிபவர்களில் 40% இந்தியர்கள், கேங்க்ஸ்டர்களில் 55% இந்தியர்கள், விகிதாச்சாரப் படி அதிகமான தற்கொலைகளும் இந்திய சமூகத்தில்தான் நடக்கின்றது.

ஆனால் மலேசியப் ஜனத்தொகையில் இந்தியர்கள் எத்தனை விகிதம் என்று நினைக்கின்றீர்கள் ? வெறும் 7.7 % மட்டும்தான். மலேசியப் பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்குரிமை எத்தனை விகிதம் என்று நினைக்கின்றீர்கள் ? வெறும் 1.5 % மட்டும்தான். அதிலும் Twin Tower கட்டிய ஆனந்த கிருஷ்ணன் ஒருவரை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், இந்தியரின் பங்குரிமை இங்கு 1.0 % குறைவாகத்தான் இருக்கும்.

இங்கு சராசரியாக இந்தியன் என்பவனை மற்ற இனத்தவர் யாருமே மதிப்பதுமில்லை, சட்டை செய்வதுமில்லை. நான்கு அல்லது ஐந்து இந்திய இளஞர்கள் ஒன்றாக ஒரு பொது இடத்திற்குச் சென்றால், மற்ற இனத்தவர்கள் அவர்களைப் பார்த்து ஒதுங்கி விடுவார்கள். இதுதான் தமிழர்களின் நிலை. இதுவரை நான் சொன்னதெல்லாம் தமிழ் இனத்தவருக்கே பெரும்பாலும் பொருந்தும். இந்தியர்களில் இவர்கள் 80% விழுக்காடு இருக்கிறார்கள்.

தமிழர்களைப் போலவே மலையாளிகலும், தமிழ் பேசும் சிலோன் காரர்களும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில், பிரிட்டீஷ்காரர்களால் கொண்டு வரப்பட்டார்கள். ஆனால் இவர்கள் கொத்தடிமைகளாக வரவில்லை. கொத்தடிமைகளாகக் கொண்டு வரப்பட்ட தமிழர்களை மேய்த்து மேற்ப்பார்வை செய்வதற்காக, இயல்பான சம்பளத்திற்கு வேலை செய்யும் வேலைக்காரர்களாக கொண்டு வரப்பட்டார்கள். இப்படி கொண்டு வரப்பட்டவர்கள் படித்தவர்களாகவும், ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்களாகவும், மேல் ஜாதிக் காரர்களாகவும் இருந்தார்கள். இதனால் இந்த நாட்டில் இருக்கும் மலையாளிகளுக்கும், தமிழ் பேசும் சிலோன் காரர்களுக்கும் இன்றளவிலும் ஒரு 'சுப்பிரியோரிட்டி காம்ப்ளெக்ஸ்' இருந்து கொண்டே இருக்கிறது. மேலும் தமிழர்களை விட இந்த இரண்டு பிரிவினர்களும் எல்லா வகையிலும் சிறப்பாகவே இருக்கின்றனர். (TWIN TOWERS கட்டிய ஆனந்த கிருஸ்ணன் ஒரு சிலோன் காரர்).இந்தக் கோஷ்டிகளெல்லாம் போக பஞ்சாபி இனத்தவர்கள் போலீஸ்காரர்களாகவும், நாட்டுக் கோட்டை செட்டியார்கள், குஜராத்திகள், சிந்திக்கள், தமிழ் முஸ்லீம் இனத்தினர் ஆகியோர் வியாபாரிகளாகவும் இந்த நாட்டுக்கு வந்தார்கள். இவர்கள் எப்படி உள்ளார்கள் என்பதை பிறிதொரு நாள் கூறுகிறேன்.

அடுத்த கிழட்டு அநுபவங்கள் தொடரில் மலேசியாவில் தமிழ் இனத்தவர் இவ்வளவு பின் தங்கி இருக்க பூர்வாங்க காரணங்களை அலசி பார்க்க முயலுகிறேன்.

ஏதோ சொல்லத் தொடங்கி ராஜசேகரன் வேறு ஏதோ சொல்லிக் கொண்டு போகிறார் என்று நினைக்காதீர்கள். நான் எங்கிருந்து வருகிறேன் என்பதை அறிந்தால்தான், எங்கு இட்டுச் செல்கிறேன் என்பது உங்களுக்குப் புரியும். ஆதலால் பொருத்திருங்கள் ..... நான் முன்பு சொன்னதுபோல் உங்களின் 'அமெரிக்காவா..இந்தியாவா' என்ற டிலைமாவை வேறொரு கண்ணோட்டத்திலிருந்து ஆராய என் அநுபங்கள் நிச்சயம் உங்களுக்கு ஒரு பாடமாக அமையும்.

// posted by Mookku Sundar @ 9:33 AM

BLOG COMMENTS:

//ஏதோ சொல்லத் தொடங்கி ராஜசேகரன் வேறு ஏதோ சொல்லிக் கொண்டு போகிறார் என்று நினைக்காதீர்கள். நான் எங்கிருந்து வருகிறேன் என்பதை அறிந்தால்தான், எங்கு இட்டுச் செல்கிறேன் என்பது உங்களுக்குப் புரியும். ஆதலால் பொருத்திருங்கள் ..... நான் முன்பு சொன்னதுபோல் உங்களின் 'அமெரிக்காவா..இந்தியாவா' என்ற டிலைமாவை வேறொரு கண்ணோட்டத்திலிருந்து ஆராய என் அநுபங்கள் நிச்சயம் உங்களுக்கு ஒரு பாடமாக அமையும். //

அப்படியெல்லாம் நினைக்கவில்லை ராஜசேகரன்.

நன்றாகத் தொடங்கி இருக்கிறீர்கள். இப்போதுதான் உங்களுடைய முதலாவது பதிவைப் படித்தேன். பல கேள்விகள் மனதில். ஒவ்வொன்றாக எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையும் மனதில் வந்தது.

தொடர்ந்து எழுதுங்கள் - விரிவாக இப்போது எழுதுவதைப்போலவே!

-மதி

# posted by மதி கந்தசாமி (Mathy) : 10:10 AM

ராஜசேகரன் ஸார்,

உங்களுக்கு நன்றி.

பெர்ய பெர்ய மன்சாள்லாம் நம்ம பேட்டைக்கு வர வச்சிட்டீங்களே..:-)

மதி..just kidding. தொடர்ந்து வாங்கிப் போடுகிறேன். அவர் எழுதி பழக்கப்பட்டவுடன் தனிப் பதிவே ஆரம்பித்துக் கொடுத்து விடுகிறேன். நீங்கள் எனக்குப் பண்ணியதை நான் அவருக்கு பண்ண வேண்டாமா..?? :-)

# posted by Mookku Sundar : 10:29 AM

சுந்தர்,

இவுங்களையாவது'மலேயா போக விருப்பம் இருந்தா பதிந்து கொள்ள' சொல்லியிருக்காங்க.

ஆனா ஃபிஜி இந்தியர்களை ஒண்ணுமே சொல்லாம வேலை வேணுமான்னு மட்டும்( எங்கேன்னு கூடச் சொல்லாம)கேட்டுக் கூட்டிட்டு வந்துட்டாங்களாம்.

எத்தனை பேரு குடும்பம், குழந்தைன்னு பிரிஞ்சு வந்தவுங்க. பாவம் இல்லையா?்

# posted by துளசி கோபால் : 1:07 PM

துளசியக்கா,

"பசி வந்திடப் பத்தும் பறந்து போம்"

# posted by Mookku Sundar : 1:17 PM

http://mynose.blogspot.com/2005/09/blog-post_20.html

Link to comment
Share on other sites

கிழட்டு அனுபவங்கள் - மலேசியத் தொடர்

பெற்றோர்கள் ஊருக்குப் போன அலுப்பில் இருந்த நான், அமெரிக்க வாழ்க்கை ஏற்படுத்தும் தம்னிமை உணர்வையும், ஊருக்குப் போய் விடலாமா என்று தோன்றுவது பற்றியும் எழுதி இருந்தேன். கடந்த நூறு வருடங்களாக மலேசிய மண்ணில் செட்டில் ஆகி இருக்கும் என் நண்பர் அதற்கு எழுதிய பதில், அவர் வார்த்தைகளிலேயே "கிழட்டு அனுபவங்கள்" என்ற தொடராக உருப்பெற்று விட்டது.

இனி " மலேசியா" ராஜசேகரன் பேசுகிறார் .....

நீங்கள் நினைப்பதுபோல் நாங்கள் (நானும் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த, மலேசியாவில் உள்ள 500 உறவினர்களில், 90 விழுக்காட்டினரும்) இங்கு NRI ஆக இருப்பதில் ஒன்றும் பெரிதாய் பெருமிதம் கொள்ளவில்லை.

மலேசியாவில் இன்னமும் நாங்கள் second class citizens தான். இங்கு முதல் சலுகை bumiputra என்று அழைக்கப் படும் மலாய் இனத்தவருக்குத் தான். ஆனால் சமீப காலமாக அவர்களுக்கு கொடுக்கப் படும் சலுகை அளவு கடந்து போய்க் கொண்டிருக்கிறது. யுனிவர்சிட்டி நுழைவுத்தேர்வில் துவங்கி , கல்லூரி பரிட்சை வரை, அவர்களுக்கு வேறு படிப்பு முறை வேறு பரிட்சை, மற்ற இனத்தவருக்கு வேறு பரிட்சை. இரண்டு பரிட்சையின் தரங்களிலும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம். எங்களது மலை, அவர்களது மடு.

அதேபோல் அரசாங்க உத்தியோகம். அரசாங்க உத்தியோகத்தில் 90 விழுக்காட்டினர் மலாய் இனத்தவர். அப்படியே மற்ற இனத்தவர் அரசாங்க ஊழியராக இருந்தால், அவர் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், அவருக்கு் பதவி உயர்வு ஒர் அளவுவரைதான். போலீஸ் ஆபிசராக இருந்தால் மிஞ்சி மிஞ்சிப் போனால் Deputy Commissioner of Police வரை செல்லலாம். நீங்கள் முட்டி மோதி, வருடக்கணக்கில் அலைந்து திரிந்து, ஒரு கம்பெனியை நிறுவி, கஷ்டப்பட்டு்் பப்ளிக் லிஸ்ட்டிங் வரை கொண்டு வந்து விட்டீர்கள் என்று வைத்து கொள்வோம். உங்கள் கம்பெனி பப்ளிக் லிஸ்ட்டிங் ஆகவேண்டுமேயானால், உங்கள் கம்பெனியில் ஒரு bumiputra பங்குதாரரை் 30% ்ஸ்டாக் ஷேர்ஹோல்டராக முதலில் நீங்கள் சேர்த்துக் கொண்டு இருக்க வேண்டும். இது சட்டம்.

வீடுகள் வாங்கையில்் bumiputra க்களுக்கு 5% லிருந்து 7% வரை டிஸ்கவுண்ட் வீட்டுப் ப்ரமோட்டர் கொடுத்து ஆக வேண்டும். இதுவும் சட்டம். உங்கள் லிஸ்டட் கம்பனியில், தலைமைத்துவத்திலிருந்து, பியூன் வேளை வரை 30% ஸ்டாஃப் bumiputra க்களாக இருக்க வேண்டும். இல்லையேல் லேபர் டிபார்ட்மெண்டிலிருந்து உங்களுக்குத் தொல்லை வரும். யுனிவர்சிட்டியில் 75% ம், அரசாங்க ஸ்காலர்சிப்களில் 95% bumiputra க்களுக்கு கொடுக்கப் படுகிறது. திறமைக்குத்தான் யுனிவர்சிட்டியில் இடம் என்ற நிலை இருந்தால், bumiputra ்க் க்களுக்கு 20% ் இடம்கூட கிட்டாது. இதன் காரணமாகத்தான் எங்களைப் போன்றோர், சொந்த செலவில் (சில சமயங்களில் வீடு வாசலை விற்று) பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைக்கிறோம்.

ஆனால் இவ்வளவிலும், மலேசியாவில் உள்ள சீன இனத்தவர்களோடு ஒப்பிடுகையில், நாங்கள் (மலேசியாவில் உள்ள இந்திய இனத்தவர்கள்) எவ்வளவோ கொடுத்து வைத்தவர்கள். இங்குள்ள இந்தியரைவிட , சீனர்கள் எல்லா விதத்திலும் சிறந்தவர்கள் (ஏன் என்பத்ற்கு ஒரு புத்தகமே எழுதலாம். வேறோரு நாள் இதனை விவாதிக்கிறேன்). நம்மில் 10ல் இருவர் தகுதியானவராக இருந்து bumiputra பாலிஸியால் பாதிக்கப் படுவோம். ஆனால் சீன இனத்தவரில் 10ல் எட்டுப் பேர் தகுதியானவர்களாக இருப்பார்கள். பாதிக்கப் படுவார்கள்.

என்ன இந்த மனுஷன், சம்மந்தமில்லாத எதை எதையோ எழுதுகிறாரே என்று நினைக்காதீர்கள். இதுவும், இனி நான் எழுதப் போகும் பல விசயங்களும்், நீங்கள் கூறினீர்களே "கடைசியாக அமெரிக்காவிலேயே இருப்பதா, இந்தியா திரும்புவதா என்ற டிலைமாவில் மாட்டிக் கொண்டு இருப்பதாக". அது குறித்தவைதான். 100 வருடங்களாக வெளிநாட்டில் வசித்து வந்துள்ள ஒரு சிந்திக்கக் கூடிய இந்திய குடும்பத்து அங்கத்தினன் என்ன கூறுகிறான் என்பதை நீங்கள் தெரிந்துகொள்வது் ் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சிறந்த முடிவுகள் எடுக்க உறுதுணையாக இருக்கும்

// posted by Mookku Sundar @ 10:15 PM

http://mynose.blogspot.com/2005/09/blog-po...3944155788.html

Link to comment
Share on other sites

சரி போட்டிக்கு வருவோம்,முன்னர் போட்ட பெண்மணி அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் நிவுஸ் மார்கெட் என்னும் நிறுவனத்தை உருவாக்கி அதன் தலமை நிறைவேற்று அதிகாரியாக (சி இ ஒ) இருக்கிறார்.

நிவுஸ் மார்க்கட் நிறுவனம் உலகளாவிய ரீதியில் செய்தி நிறுவனங்களுக்கு டிஜிடல் ஒளிபரப்பும் தரமுடய செய்திப் படங்களை ப்ர்ரொட்பான்ட் இணயம் மூலம் வழங்குகிறது.இதனை பிபிசி,சீ என் என் முதற் கொண்டு உலகின் அனைத்து செய்தி நிறுவனங்களும் உபயோகிக்கின்றன.இந்த நிறுவனம் தனியார் நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க அரசு நிறுவனங்கள் தமது செய்திகளை வினியோகிப்பதற்கு கட்டணம் அறவிடுகிறது.ஆனால் செய்தி நிறுவனங்கள் டவுன்லோட் செய்யும் படங்களுக்கு கட்டணம் அறவிடுவதில்லை.

உலகிலேயே இம்மாதிரியான சேவயை இந்த நிறுவனம் மட்டுமே வழங்கி வருகிறது.மேலும் தகவல்கள்.

http://www.lostremote.com/story/newsmarket.htm

http://www.thenewsmarket.com/

Link to comment
Share on other sites

இந்த சாதனயாளர், மலேசிய புலம் பெயர் தமிழ்ப் பெண்மணி,

சோபா புருசோத்தமன்.அண்மையில் இவருக்கு இன்ச்.கொம் என்னும் தன்னார்வ நிறுவனர்களுக்கான அமெரிக்க இதழால் கொவுரவ விருது வழங்கப்பட்டது.(இந்த விருதை இவர் மெல் ஜிப்சனுடன் பகிர்ந்து கொண்டார்)

Honorable Mention: Shoba Purushothaman

From: Inc. Magazine, January 2005 | Page: 69 By: Nadine Heintz

2004's Top Entrepreneurs

Burt Rutan

Bob Baron

Shoba Purushothaman

Mel Gibson

Peter Provenzano

Frank Altman

The Ceja Family

Newsrooms across the world turn to this dot-com survivor to get their hands on the latest television footage.

If you've seen images of the war in Iraq or long lines for the flu vaccine on television this year, chances are good that Shoba Purushothaman had a hand in getting them in front of your eyes. Her New York City company, the NewsMarket, enables broadcasters to transmit, watch, and download high-quality video footage over the Web. This year alone, the firm delivered thousands of video clips from dozens of clients to more than 3,000 newsrooms around the world.

Purushothaman came up with the idea while she was running a public relations firm specializing in supplying corporate news to the networks. The Malaysian-born CEO -- who had also worked as a reporter for The Wall Street Journal -- knew that journalists needed information on a moment's notice. She also knew that there were only two ways to deliver broadcast-quality video footage to TV newsrooms -- by tape or by satellite, neither of which are quick or easy. Why not make the footage available on the Internet? Purushothaman would offer her service free to the press, instead charging corporate and government clients about $100,000 each to have their news footage distributed to the broadcast media.

As is often the case with new ideas, the NewsMarket took a while to catch on. Purushothaman founded the company in the midst of the dot-com crash, when capital was scarce and potential clients were slashing budgets. To make matters worse, many newsrooms weren't equipped with the broadband access necessary to download broadcast-quality videos from the Web.

Purushothaman never lost faith in her idea, and managed to raise money and hire good workers even during the rough economy. "She's been through difficult times and maintained her cool and confidence," says venture capitalist Alan Patricof, whose firm, Apax Partners, also backed America Online.

This year, her hard work paid off. She landed several blue-chip customers, including General Motors, Yahoo, and Google. That last account was such a coup that, after the ink was dry on the contract, the CEO toasted her success with a glass of champagne. Then in April, she raised $4 million in financing from Apax, as well as Hearst Interactive Media, and Boldcap Ventures. She spent some of the cash on new headquarters in midtown Manhattan and some of it to hire four seasoned executives to beef up her 26-person staff.

Purushothaman's unwavering optimism and magnetic personality surely rank among the NewsMarket's many competitive advantages. "Shoba lights up a room when she walks into it," explains co-founder Anthony Hayward. "Even in tough times, people saw the vision that she was communicating, and that kept our team steady."

http://www.inc.com/magazine/20050101/eoty-...ushothaman.html

Link to comment
Share on other sites

இவவை எங்கயோ கண்ட மாதிரி இருக்கே? :roll: :roll:

என்ன உங்க நாட்டவரே உங்களுக்குத் தெரியேல்லயா?வடிவா யோசிச்சுப் பாருங்க,இவ ஒரு விளயாட்டு நட்சத்திரம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொன்யா ஜெயசீலன் என்ற கனடியத் தமிழ் ரென்னிஸ் விளையாட்டுக்காரர் மாதிரி இருக்கே.. :lol:

Link to comment
Share on other sites

சொன்யா ஜெயசீலன் என்ற கனடியத் தமிழ் ரென்னிஸ் விளையாட்டுக்காரர் மாதிரி இருக்கே.. :lol:

அவரே தான் கிருபன்,விடை சரி,ம்... கனேடியருக்குத் தெரியாமல் போனது ஏனோ?

:roll:

http://www.wtatour.com/players/playerprofi...PlayerID=100049

Residence Toronto, Ontario, Canada

Date of Birth April 24, 1976

Birthplace Newestminster, British Columbia, Canada

Height 5' 2'' (1.57 m)

Weight 119 lbs. (54 kg)

Plays Right-handed (two-handed forehand and backhand)

Status Pro

SINGLES

Winner: 1997 - ITF/Rockford-USA; 1995 - ITF/Ft. Lauderdale-USA; 1994 - ITF/Vancouver-CAN.

Finalist (1): 1998 - Bogota.

Quarterfinalist (1): 2000 - Quebec City.

DOUBLES

Winner (2): 2003 - Strasbourg (w/Matevzic); 2000 - Strasbourg (w/Labat).

Finalist (1): 1999 - Palermo (w/Carlsson).

Semifinalist (8): 2001 - Nice (w/Habsudova), Quebec City (w/Osterloh); 2000 - Antwerp (w/Carlsson), Zurich (w/Habsudova); 1999 - Portschach (w/Carlsson); 1997 - Prague, Quebec City (both w/Simpson); 1996 - Cardiff (w/Simpson).

ADDITIONAL

Canadian Fed Cup Team 1997, 2000-01. Canadian Olympic Team 2000.

Link to comment
Share on other sites

இது எங்க ஸ்டெனி பிச்பேர்க் கோயிலுக்குப் போனபோது எடுத்ததா?

Link to comment
Share on other sites

இது எங்க ஸ்டெனி பிச்பேர்க் கோயிலுக்குப் போனபோது எடுத்ததா?

யாருங்க அது ஸ்டெனி பிச்பேர்க்,இது பிரபல பொப் பாடகி பிரிடனி ஸ்பியர்ஸ் மகனுடன் கலிபோனியாவில்,மலிபுவில் உள்ள கோவிலுக்குச் சென்ற போது எடுத்த படங்கள்.மேலும் செய்திகள் இங்கே....

http://nripulse.com/CityNews_CA_Britney06.html

Britney Spears Visits Malibu Temple

Call it cosmopolitan faith or crossover loyalty, Britney Spear paid a visit to the Hindu temple in Malibu recently – all the way from Kabblah order. With her four-month-old son Sean Preston tucked in her arms, she silently took part in the lengthy temple rituals.

Temple President Nadadur Varadhan, is said to have appraised her of the important aspects of Hinduism, considered the oldest religion on earth.

Apart from darshan of the deity, the other things that impressed the popstar were the regular food offerings in the temple – Puligere and Sadam.

Varadan said the pop star would visit the temple again in the near future, and would perform longer pujas. She sought blessings of the priest for her little son, her forehead smeared with vermillion.

The artiste was raised a Baptist but was initiated into the mystical Jewish, the religion of Kabbalah by her music mentor Madonna. Britney is reportedly also visiting Hindu mystics for a peek into the past and the future.

Husband Kevin Federline was not present.

Link to comment
Share on other sites

இவர் ஈழத்தின் மதிற்பிற்குரிய இலக்கிய விமர்சகர்,பேராசிரியர்.

Link to comment
Share on other sites

ம் இல்லை, யாருடய பட்டப் பெயர் அது?(சாந்தி அக்காவின் கட்டுரை தான் நாபகம் வருகுது)

இவரின் படம் மேல போட்டது தான் இணயத்தில கிடைத்தது.

இவர் வேறு யாரும் அல்ல அமரர் பேராசிரியர் கைலாசபதி.

மேலும் தகவல்கள் விகிபிடியாவில் இருந்து.......

க. கைலாசபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இலங்கையைச் சேர்ந்த க.கைலாசபதி, ஒரு தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர். இவர் 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி, அக்காலத்தில் மலேயா என்று அழைக்கப்பட்ட, இன்றைய மலேஷியாவின் தலைநகரமான கோலாலம்பூரில் பிறந்தார். சிறுபராயத்திலேயே யாழ்ப்பாணம் வந்த இவர், வண்ணார்பண்ணையில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். இவரது தாய் மாமனும் தமிழறிஞரும், அரசாங்க அதிகாரியுமான மாணிக்க இடைக்காடர் என்பவருடைய கவனிப்பில் இவருக்கௌத் தமிழில் ஆர்வம் ஏற்பட்டது. கொழும்பு சென்று அங்கே ரோயல் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்து, பல்கலைக் கழகம் புகுந்தார்.

இலங்கையின் கண்டி நகருக்கு அருகிலுள்ள பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்றுப் பட்டம் பெற்றார். அக்காலத்தில் பெயர் பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களான க. கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம், சு. வித்தியானந்தன் ஆகியோருடைய வழிகாட்டல் இவருக்குக் கிடைத்தது.

பொருளடக்கம்

1 தொழில்

2 இலக்கியப் பணி

3 இவரது ஆக்கங்கள்

4 வெளியிணைப்புக்கள்

தொழில்

பட்டம் பெற்றபின் கொழும்பில் புகழ் பெற்ற "லேக் ஹவுஸ்" பத்திரிகை நிறுவனத்தில் இணைந்து பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டார். இந் நிறுவனம் வெளியிட்டுவந்த தமிழ் நாளேடான தினகரனிலேயே இவர் பணிபுரிந்தார். இவரது திறமை இவருக்கு அப் பத்திரிகையின் ஆசிரியர் பதவியைப் பெற்றுக் கொடுத்தது.

பின்னர் அங்கிருந்து விலகிய அவர் கல்வித்துறையில் புகுந்தார். கலாநிதிப் (முனைவர்) பட்டம் பெறுவதற்காக பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, "Tamil Heroic Poetry" என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து பட்டம் பெற்றார். 1974 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் ஆரம்பிக்கப்பட்டது. அவ்வேளை இலங்கை பல்கலைக் கழகத்தின் வித்தியலங்கார வளாகத்தில் தமிழ் மற்றும் இந்து சமயப் பீடத்துக்குத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் அதன் முதல் தலைவராக 19 ஜூலை 1974ல் நியமனம் பெற்றார். 31 ஜூலை 1977 வரை இப்பதவியில் இருந்து திறம்படப் பணியாற்றினார்.

இலக்கியப் பணி

ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறைக்கு இவர் ஆற்றிய பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையிலே இவராற்றிய பணி ஈழத்துக்கு மட்டுமன்றித் தமிழுலகம் முழுவதற்குமே முன்னோடியாகக் கருதப்படுகின்றது. இடதுசாரிச் சிந்தனைப் போக்குக் கொண்ட இவர், அக்காலத்தில் ஈழத்து இலக்கிய உலகில் பெரும் தாக்கம் கொண்டிருந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

இவரது ஆக்கங்கள்

இவர் பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் கலாநிதிப் பட்டத்துக்காகச் செய்த ஆய்வும் நூலாக வெளியிடப்பட்டது. இவரது ஆக்கங்கள், தமிழ் இலக்கியத் துறையை மட்டுமன்றி, சமயம், பண்பாடு, சமுதாயம், அரசியல் போன்ற பல துறைகளையும் சார்ந்திருந்தது. 1982ல், "ஈழத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டு மற்றும் இன உணர்வுகள்" என்னும் தலைப்பில் இவராற்றிய, புனிதவதி திருச்செல்வம் நினைவுப் பேருரை, ஈழத்தமிழர்களுக்கான ஒரு முக்கிய பங்களிப்பாகும். "அடியும் முடியும்", "பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும்", "தமிழ் நாவல் இலக்கியம்", "இலக்கியச் சிந்தனைகள்" என்பனவும் அவரியற்றிய நூல்களிற் சில.

மிக இளம் வயதிலேயே மாணவர்கள், அறிஞர்கள் மத்தியில் மட்டுமன்றிப் பொதுமக்கள் மத்தியிலும் புகழ் பெற்ற இவர், இளம் வயதிலேயே இவ்வுலக வாழ்வை நீத்தார். 1982 டிசம்பர் மாதம் ஆறாம் திகதி, அவரது நாற்பத்தொன்பதாவது வயதில் காலமானார்.

வெளியிணைப்புக்கள்

ஒப்பியல் இலக்கியம் - கலாநிதி கைலாசபதி (TSC II வடிவில்)

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95._%E...%AE%A4%E0%AE%BF

Link to comment
Share on other sites

சமூக சார்பற்ற புலமைத்துவத்தை அடியோடு வெறுத்தவர் பேராசிரியர் கைலாசபதி

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இன்று மாலை கைலாசபதி நினைவு சொற்பொழிவு இடம்பெறுவதை முன்னிட்டு இக் கட்டுரை பிரசுரமாகிறது

க.நடேசமூர்த்தி

கடந்த நூற்றாண்டு, இலங்கை உருவாக்கிய குறிப்பிடத்தக்க அறிஞர்களில் பேராசிரியர் க.கைலாசபதி தலைசிறந்த ஒருவராக விளங்கினார். அவரது வாழ்வும் பணியும் பங்களிப்பும் அதிக காலத்தைக் கொண்டதாக இருக்கவில்லை. நாற்பத்தியொன்பது (1933 - 1982) வயதில் அவரது வாழ்வு கடுமையான நோயினால் முடிவுக்கு வந்தது.இருப்பினும் அவரது வாழ்வு பெறுமதியும் பயனும் உடையதாக அமைந்திருந்தமை மனம் கொள்ளத்தக்கதாகும்.

பேராசிரியர் கைலாசபதி தமிழ் இலக்கியப் பரப்பில் கல்வித் தளத்தில் சமூக, அரசியல் களத்தில் தனது ஆற்றலை ஆளுமையுடன் வெளிப்படுத்தியவர். தமிழர் பாரம்பரியத்தில் அறிஞர்கள் எனப்பட்டவர்களுக்கு வகுக்கப்பட்டிருந்ததும் வழிவழியாகப் பின்பற்றப்பட்டும் வந்ததான பழைமைவாதச் சட்டங்களை உடைத்துக் கொண்டு புதிய செல்நெறியை தோற்றுவிப்பதில் கைலாசபதி ஒரு முன்னோடிப் பாத்திரத்தை வகித்து நின்றார்.அத்தகைய பாத்திரம் அவரை மாக்ஸிச உலக நோக்கு நிலை கொண்ட ஒரு அறிஞராக நிலை நிறுத்திக் கொண்டது. கைலாசபதியின் கால கட்டம் என்று வரலாற்றில் சுட்டிக்காட்டப்படும் ஒரு காலப் பகுதியை அவரது சிந்தனையும் கருத்துகளும் ஆட்கொண்டிருந்தமையை அவரை எதிர்த்து நின்றவர்களும் ஒப்புக் கொள்ளவே செய்கிறார்கள். பழைமைவாதத்தின் பகைப்புலத்தின் ஊடே சமூகத்தளத்தில் உருவாக்கம் பெறும் எந்தவொரு கல்வியாளனும் அது விதித்துள்ள எல்லைக் கோடுகளை தாண்டிச் சென்று புறநிலை யதார்த்தங்களை காண்பதும் அவற்றின் மூலம் விடயங்களை நுண்ணார்ந்து நோக்கி நிற்பதும் தமிழ்ச் சூழலில் கடினமான ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. அவ்வாறான நிலையைத் தாண்டுவதற்கு ஆரம்ப முயற்சி எடுத்து வித்தியாசமான பாதையில் பயணங்களை ஆரம்பித்தவர்கள் கூட இடை நடுவில் தமிழர் பழைமைவாதத்தின் வேகமான அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு அரைகுறையானவர்களாகவும் சீரழிந்தவர்களாகவும் ஆகிக் கொண்ட அனுபவங்களை நமது சூழலிலே காண முடிந்திருக்கிறது.

ஆனால், பேராசிரியர் கைலாசபதியும் அவரைப் போன்றவர்களும் தாம் பெற்றுக் கொண்ட மாக்ஸிச உலக நோக்கு என்ற சமூக விஞ்ஞானக் கோட்பாட்டை முழுமையாக விளங்கிக் கொண்டிருந்தனர். அந்த வகையிலே கைலாசபதி பழைமையும் செழுமையும் கொண்ட தமிழ் இலக்கியப் பரப்பினுள் மாக்ஸிச உலக நோக்கு என்ற ஒளி பாய்ச்சியின் ஊடே புகுந்து கொண்டார். இதற்கான பயிற்சியை அவர் தனது மாணவப் பருவத்திலிருந்தே பெறும் வாய்ப்பைக் கொண்டிருந்தார். இடைநிலைக் கல்விக் காலத்தில் கையேற்ற மாக்ஸிசக் கோட்பாட்டை தனது பல்கலைக்கழக காலத்தில் மேலும் இறுகப்பற்றிக் கொண்ட அதேவேளை, வெறுமனே அறிவியல் அடிப்படை கொண்ட ஒன்று என்ற மேலோட்டமான அணுகு முறைக்கும் அப்பால் சமூக நடைமுறைக்குப் பயன்படுத்தும் தத்துவார்த்தக் கோட்பாடாக முன்னெடுப்பதில் கைலாசபதி அதிக அக்கறையும் ஆர்வமும் காட்டி நின்றார். "இதுவரை தத்துவஞானிகள் உலகை வியாக்கியானம் செய்தே வந்திருக்கிறார்கள். நமது பணியோ உலகை மாற்றியமைப்பதாகும்" என்ற மாக்ஸிசப் பிரகடனத்தின் சாராம்சத்தை மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் பின்பற்றிக் கொள்வதில் கைலாசபதி வெற்றி பெற்றிருந்தார்.

வரலாற்றுத் தொன்மையானது, வன்மையானது, செழுமை மிக்கது, உலகத்திலேயே ஒப்புயர் பெற்றது, ஈடுஇணையற்றது என்று வழிவழியாகப் புகழ் பாடப்பட்டு வந்து தமிழ் இலக்கியப் பரப்பினுள் துணிவுடன் புகுந்து, விடயங்கள் ஒவ்வொன்றையும் நுணுகி ஆராய்ந்தவர் கைலாசபதி. இது முற்று முழுதான ஒரு எதிர் நீச்சலாகவும் இருந்தது. ஏனெனில், தமிழர் பழைமைவாதத் தளத்திலிருந்து எழுந்த ஒவ்வொரு குரலுக்கும் எழுத்திற்கும் அவர் ஆதாரபூர்வமாகப் பதிலிறுக்க வேண்டிய கட்டாயத்திலும் இருந்தார். அதற்கு அவர் கடைப்பிடித்த வழிமுறை வரலாற்றுப் பொருள் முதல் வாத நோக்கில் அமைந்த வர்க்கப் போராட்ட அணுகு முறையைப் பிரயோகித்தமை தான். அதன் மூலமே தமிழ் இலக்கியத்தின் கூறுகள் ஒவ்வொன்றையும் வரலாற்று அடிப்படையில் வைத்து அவற்றின் சாதக பாதகங்களை அடையாளம் காணவும் முடிந்தமையாகும். இங்கே தான் கைலாசபதி வரலாற்றுணர்வின் நோக்கையும் போக்கையும் வற்புறுத்திக் காட்டி நின்றார். அதன் அடிப்படையிலேயே அவரது தமிழ் இலக்கியத் திறனாய்வுகளும் ஒப்பீடுகளும் மதிப்பீடுகளும் விமர்சனங்களும் அமைந்திருந்தன.

இவ்வாறு தமிழ் இலக்கியத்தின் பழைமை, செழுமை அவற்றின் வரலாற்றுச் சிறப்பு என்பனவற்றை கைலாசபதி மாக்ஸிச உலக நோக்கின் ஊடே அணுகி ஆராய்ந்து அவற்றுக்கு அறிவியல் சார்ந்த அடிப்படைகளை வழங்கி நின்ற அதேவேளை, நவீன இலக்கியத்தின் திசை மார்க்கம் பற்றியும் எடுத்துக் காட்டினார். முன்னையவற்றின் அனுபவத்தின் ஊடாகப் பின்னையவற்றுக்கான வழி காட்டலையும் நெறிப்படுத்தி வந்தார். தமிழ் இலக்கியப் பரப்பின் வரலாற்றுத் தொடர்ச்சியை மேலை நாடுகளின் இலக்கிய வளர்ச்சிகளோடு ஒப்பிட்டு நோக்குவதிலும் கைலாசபதி தடம் பதித்தவரானார். இத்தகைய ஆய்வும் ஒப்புநோக்கும் என்பது வெறுமனே பல்கலைக்கழக மேற்படிப்பு பட்டங்கள் பெறுவது என்ற எல்லைக்கும் அப்பால் சென்று நமது சமூகச் சூழலை அறிவியல் நோக்கில் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் இளந்தலைமுறையினருக்கு திசை காட்டியாகவும் நின்றார் என்பது முக்கியமானதாகும்.

அதன் அடிப்படையிலேயே கைலாசபதி தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு பகுதியாக இருந்து வந்த ஈழத்து இலக்கியத்தின் தனித்துவத்தை நிலை நாட்டுவதில் தனது ஆற்றலைப் பயன்படுத்திக் கொண்டார். அதன் வழியில் ஈழத்து இலக்கியத்தின் வேர்களைத் தேடிச் செல்வதில் முழு அக்கறை காட்டினார். அவ்வாறு அவர் சென்றதன் மூலம் ஈழத்து இலக்கியத்தின் வரலாற்று வளர்ச்சியையும் தனித்துவத்தையும் நிலைநிறுத்தி அதனை தமிழ் இலக்கியப் பரப்பில் அங்கீகாரம் பெற வைத்ததில் தனது பங்களிப்பை வழங்கினார். ஏனெனில் தமிழகத்தையும் இந்தியாவையும் வழிபாட்டுத் தலங்களாகக் கொண்ட இலக்கிய உச்சாடனங்கள் செய்யப்பட்டு பழைமை போற்றித் தொழுது நின்ற நிலை செல்வாக்குடையதாக இருந்து வந்த சூழலைத் தகர்ப்பதில் கைலாசபதி முன்னணிப் பாத்திரம் வகித்தார். அதனை பகைமை உணர்வின் அடிப்படையிலோ வெறுத்தொதுக்கும் மனப்பான்மையிலோ அன்றி, மாக்ஸிச உலக நோக்கின் ஊடான வர்க்கப் போராட்ட அணுகுமுறை கொண்டே தமிழகத்தின் இலக்கியங்களை நோக்கினார். இத்தகைய நோக்குமுறை இந்தியாவினதும் தமிழகத்தினதும் மாக்ஸிச வழிவந்த அறிஞர்களின் நோக்குடனும் போக்குகளுடனும் இணைந்து செல்லும் ஒன்றாகவும் அமைந்திருந்தது. கைலாசபதியின் இத்தகைய நோக்கு நிலை தமிழகத்தின் இலக்கியப் பரப்பிலே பல அதிர்வுகளை ஏற்படுத்தி நின்றன. அதன் காரணமாக புதிய புதிய ஆய்வுத்துறையாளர்கள் கைலாசபதியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டனர். அதேவேளை, கைலாசபதியின் அணுகுமுறையை எதிர்க்கும் ஒரு பழைமைவாதக் கூட்டம் தமிழகத்தில் மாத்திரமன்றி ஈழத்திலும் தமது குரலை மேலுயர்த்தி நின்றது. இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தோரது கைலாசபதி எதிர்ப்பு குரல், அவர் மறைந்து இருபத்தி மூன்று ஆண்டுகளின் பின்பும் ஆங்காங்கே ஒலிக்க வைக்கப்படுகின்றது. வரலாற்றுணர்வோ தர்க்க அடிப்படைகளோ இன்றி அவ்வப்போது மேலெழுந்த இக் குரல்களின் பின்புலம் தமிழர் பழைமைவாதத்தினதும் முதலாளித்துவத்தினது கருவறைகளில் இருந்து பிறப்பனவையாகவே காணப்படுகின்றன. அவற்றுக்கு, கைலாசபதி தனது வாழ் நாளில் உறுதியாக நின்று முகம் கொடுத்து வந்தவர். வரலாற்று மோசடிகளையும் புரட்டல்களையும் திரிபுகளையும் சமாசம் இன்றி எதிர்த்து நின்றவர்.

அவரிடம் உறுதியான சிந்தனைத் தளமும் செயலூக்கம் மிக்க தெளிவான கருத்தியல் முன் வைப்பும் இருந்து வந்தது. ஊசலாட்டமோ சிந்தனைக் குழப்பமோ தெளிவற்ற அணுகுமுறையோ கைலாசபதியிடம் இருந்ததில்லை. வரலாற்றுணர்வும் வர்க்கப் பார்வையும் சமூகச் சார்பும் தூர நோக்கும் ஆழ்ந்த மனித நேயமும் அவரின் அடிப்படைகளாக அமைந்திருந்தன. சமூக மாற்றத்திற்கான அவாவும் அக்கறையும் அவ் அடிப்படைகளில் இழையோடி நின்றன. இவற்றுடன் கூடியதான சிறப்பம்சமாக அவரது வாழ்வும் பணியும் இரட்டைத்தனம் அற்றதாக அமைந்திருந்தமை நோக்குதற்குரியதாகும்.

சமூக சார்பற்ற புலமைத்துவத்தை அறிவு ஜீவித்தனத்தை அடியோடு வெறுத்தவர் கைலாசபதி. அதன் காரணமாகவே அவர் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் சமூகப் பயன்பாடுமிக்கதாக நிலை நிறுத்த முயன்றுழைத்தார். அந்த வழியில் புதிய தலைமுறை ஒன்றை உருவாக்கவும் முன்னின்று வழி காட்டினார். "தேடிச் சோறு நிதம் தின்று" வாழும் சராசரி அறிவு ஜீவியாகவோ கல்வியாளராகவோ வாழ்வதை கைலாசபதி நிராகரித்து வாழ்ந்தவர். "கைலாசபதி இன்றிருந்தால் எவ்வாறு செயல்பட்டிருப்பார்" என்று எழுப்பப்படும் கேள்விக்குரிய பதிலை மேற்கூறியவற்றின் அடிப்படைகளில் இருந்து பெறுவதே தர்க்க ரீதியிலானதாகும்.

தமிழ் இலக்கியப் பரப்பிலும் கல்வி தளத்திலும் சமூக அரசியல் களத்திலும் தனது மேதாவிலாசத்தை தனித்துவ முத்திரையாகப் பதித்துச் சென்ற பேராசிரியரின் சிந்தனை, கருத்தியல், செயற்பாடு என்பனவற்றை புதிய தலைமுறையினர் ஆழ்ந்து கற்றறிவது அவசியமானதாகும். அவரது நூல்களில் இருந்து படித்தறிவதற்கு ஆழமான கருவூலங்கள் படிந்து காணப்படுகின்றன.அவை சமகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் வழிகாட்டக் கூடிய இலக்கியச் செல் நெறி ஒன்றை உள்ளடக்கி இருப்பதை கண்டுகொள்ள முடியும். கைலாசபதியின் காலகட்டம் என்று சுட்டப்படுவதன் முழு அர்த்தத்தையும் ஒருவர் புரிந்து கொள்வதற்கு கைலாசபதியின் எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் பழைமைவாத கருத்துகளில் இருந்தோ அல்லது வக்கிரநிலை கொண்ட கொச்சைப்படுத்தல்களில் இருந்தோ அன்றி, பின் நவீனத்துவவாதிகளின் பிதற்றல்களில் இருந்தோ புரிந்து கொள்ள முடியாது. சமூக அக்கறையும் சமூக மாற்றமும் வேண்டி நின்று செயல்பட முனையும் ஒவ்வொருவருக்கும் கைலாசபதி வழங்கிச் சென்ற பங்களிப்பானது பயனும் வலுவும் கொண்ட சமூக அறிவியல் சார்ந்த கருத்தியல் ஆயுதமாகவே விளங்கும். அவரது நூல்கள் அனைத்தும் பயன்தரும் வகையில் படிக்கப்படவும் பயன்படுத்தப்படவும் வேண்டும்.பேராசிரியர் க.கைலாசபதியின் மறைவு தினம் 1982 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் திகதியாகும்.

http://www.thinakural.com/New%20web%20site...9/Article-2.htm

Link to comment
Share on other sites

நூல் பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் (பகுதி 1, பகுதி 2)

ஆசிரியர் க. கைலாசபதி

மின்னூலாக்கம் இ. பத்மநாப ஐயர்

மின்பதிப்பு ஈழநூல்

http://noolaham.net/library/books/01/97/97.htm

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இவர் யார்?

35455gm.jpg

இவரது புகழ்பெற்ற கூற்று:

Control your destiny or somebody else will.

இவரது கொஞ்சம் சர்ச்சையை கிளப்பிய தரப்படுத்தல் முறை சுருக்கமாக 20-70-10 என்றழைக்கப்படும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.