Jump to content

எங்களுடன் இன்னும் இரண்டு இலட்சம் மக்கள் உள்ளனர்.சி.இளம்பருதி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுடன் இன்னும் இரண்டு இலட்சம் மக்கள் உள்ளனர்.சி.இளம்பருதி

இலங்கை போர் பகுதியில் இருந்து கடந்த 4 நாட்களில் 1 லட்சம் தமிழர்கள் வெளியேறி இருப்பதாகவும், வேறு அப்பாவி தமிழர்கள் யாரும் இல்லை என்று இலங்கை அரசு கூறியுள்ளது.

ஆனால் இதை விடுதலைப்புலிகள் மறுத்துள்ளனர். விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு பிராந்திய அதிகாரி இளம்பரிதி இது பற்றி கூறியதாவது:-

போர் பகுதியில் தங்கி இருக்கும் தமிழர்களை சிங்கள ராணுவம் பிடித்து செல்ல முயற்சித்ததும் அவர்களில் ஏராளமான தமிழர்கள் தப்பி விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள வளைஞர் மடம், முள்ளி வாய்க்கால் பகுதிக்குள் வந்துள்ளனர். எங்கள் பகுதிக்குள் இன்னும் 2 லட்சம் தமிழர்கள் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குண்டு போட்டு கொல்லவா இந்த எண்ணிக்கை விபரம் .

Link to comment
Share on other sites

தமிழ்சிறி..

இது சிறீலங்காவுக்கு தெரியாதா? சிங்களவனுக்கு தெரியும் 2 லட்சம் தமிழர்கள் புலிகளுடன் இருக்கிறார்கள் என்று...

இளம்பருதி அண்ணா சொல்வது.. சிங்கள அரசு தமிழர்கள் இல்லை என்று சொல்லி குண்டுகள் போட்டு கொல்லத்திட்டம் போட்டுள்ளனர் என்பதே... சர்வதேசத்துக்கு அதை வெளிப்படுத்தவேணும் அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் போர்ச்சுழலில் இருக்கும் மக்களை புலிகள் வலுக்கட்டாயமாக பிடித்து வைத்துள்ளதாகவும் இவர்களில் சிலர் தப்பி இராணுவத்திடம் செல்லமுற்பட்டபோது புலிகளால் சுடப்பட்டனர் எனவும் பல வதந்திகள் பரப்பப்பட்டு அதை ஐ.நா அமெரிக்கா உட்பட இணைத்தலைமை நாடுகளும் தமது அறிக்கைகளில் அதைப் பற்றி குறிப்பிட்டு அதையே ஊடகங்கள் பலவற்றிலும் முக்கியப்படுத்துகிறார்கள். போரில் இந்திய இராணுவம் நேரடியாக இறங்கியிருக்கிறது என்பதையோ சர்வதேசத்தினால் தடைசெய்யப்பட்ட கொத்தணிக்குண்டுகளாலும் இரசாயன ஆயுதங்களின் பயன்பாட்டினாலும் தான் வன்னியில் மக்கள் இறந்தும் காயப்பட்டும் உள்ளனர் என்ற உண்மைகள் வெளி நாட்டுச் செய்திகள் எதிலும் வருவதே இல்லை. இந்த உண்மைகள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. பான் கி மூன் ஐநா பிரதிநிதிகளை வன்னிக்கு உடனடியாக அனுப்பவிருக்கும் இத்தருணத்தில் இந்த உண்மைகள் வெளியுலகிற்கு தெரிவதற்கான சகல முயற்சிகளையும் விடுதலைப் புலிகள் செய்வார்கள் என எதிர்பார்ப்போம்.

Link to comment
Share on other sites

நண்பர்களே, கீழே உள்ள தகவலைப் படியுங்கள். அனுப்பியவரின் பாதுகாப்புக் கருதி இதன் மூலத்தையும் தொடர்புகளையும் தர முடியாது. இது ஏறத்தாள இரண்டு மாதங்களுக்கு முன் கிடைத்த ஒரு செய்தி, சிங்களப் பேரினவாதம் மீண்டும் அதே தந்திரத்தைப் பாவிக்கிறது.

One evening the sun was at the horizon, half light and half dark the people from the war zone were about to cross over to the army control boundary lines with their hands on their heads. Three paramilitary personals who were brought from Vavuniya, North of Sri Lanka which is under the control of the Sri Lankan armed forces, wearing LTTE’s uniforms hiding behind the bushes ready to shoot the innocent displaced Tamil people. The corporal of the Sri Lankan armed force ordered the dummy tigers to shoot the people. Two paramilitaries changed their mind and refused to shoot the innocents Tamils. The corporal got mad and shot the two paramilitaries on point blank range and warned the third one to face the same fate. There was no other way to escape, he pulled the trigger and drained the bullets on the misfortune innocents. There were 7 of them shot dead, the rest of them were running with bullet wounds shouting “Tigers are shooting”.

Next day the frustrated paramilitary personal accidentally stepped on an antipersonnel mine and he was admitted at Vavuniya hospital missing one leg. He asked the nurse beside him to kill him by injecting poison and said, “I killed 7 innocent people, wearing the LTTE’s uniform when they were crossing into the army control line. I feel guilty. Now I lost one of my legs and I don’t want to live no more. Somehow please pass this message to any reliable person”. The nurse told this incident to one of his relative and finally this news reached one of their relatives in Canada. The unfortunate Tamil people fell from the pan into the fire. There are too many mind breaking real stories that are staging daily in North East of Sri Lanka without any witnesses.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.