-
Tell a friend
-
Topics
-
Posts
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்பஸ்டியாம்பிள்ளையின் கொலை தலைவருடன் செல்லக்கிளி அம்மான் கனகரட்ணம் மீதான தாக்குதல் ஜெயவர்த்தனாவை ஆத்திரப்பட வைத்திருந்ததுடன் பொலிஸாரை அவமானத்திற்குள்ளும் ஆழ்த்தியிருந்தது. ஆகவே, யாழ்ப்பாணத்திலேயே முகாமிட்டு தங்கத்துரை அமைப்பையும், பிரபாகரனின் அமைப்பையும் அழித்துவிடவேண்டும் என்று பொலீஸ் பரிசோதகர் பஸ்டியாம்பிள்ளைக்கு அறிவுருத்தல் வழங்கப்பட்டது. பஸ்டியாம்பிள்ளைக்கு உதவியாக பரிசோதகர் பத்மநாதனும், உதவிப் பரிசோதகர் பேரம்பலமும் அமர்த்தப்பட்டார்கள். இந்தத் தமிழ் பொலீஸ் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றிய சிங்கள அதிகாரிகளின் கருத்துப்படி இவர்கள் விசாரணைகளை மேற்கொள்வதில் சிறந்து விளங்கியவர்கள் என்றும், கடுமையான சித்திரவதைகளும், குரூரமான தண்டனைகளும் இவர்களுக்கு மிகவும் பரீட்சயமாக இருந்ததாகவும் கூறுகிறார்கள். அப்படியிருந்தபோதும்கூட பஸ்டியாம்பிள்ளைக்கும் பதம்நாதனுக்கும் இடையே போட்டி மனப்பான்மை இருந்துவந்ததையும் அவர்கள் சொல்லத் தவறவில்லை. தனது ரகசிய உளவு வலையமைப்பூட்டாக, பிரபாகரனும் அவரது தோழர்களும் மன்னார் மாவட்டத்தின் வட மேற்குப் பதியான மடுக் காட்டுப்பகுதியில் ரகசிய பயிற்சிமுகாம் ஒன்றினை நடத்தி வருவதை பஸ்டியாம்பிள்ளை அறிந்துகொண்டார். இந்த ரகசியத் தகவலை தன்னிடமே வைத்திருந்த பஸ்டியாம்பிள்ளை சித்திரை 4 ஆம் திகதி நள்ளிரவு தனது உதவியாளர்களான கொன்ஸ்டபிள் பேரம்பலம், கொன்ஸ்டபில் பாலசிங்கம் மற்றும் சாரதி சிறிவர்த்தனா ஆகியோரை திடீர் சோதனை ஒன்றிற்குத் தயாராகுமாறு உத்தரவிட்டார். ஆனால், எங்கு செல்லாப்போகிறார்கள் என்பதை அவர் கூறவில்லை. பஸ்டியாம்பிள்ளையின் உத்தியோகபூர்வ வாகனமான பேஜோ 404 காரில் இந்த நால்வரும் ஆ 9 வீதியூடாக வவுனியா நோக்கிப் பயணமானார்கள். தம்முடன் ஒரு துணை இயந்திரத் துப்பாக்கி, இரண்டு ரைபிள்கள், மற்றும் கைத்துப்பாக்கிகள் சுழற்துப்பாக்கிகள் என்று ஒரு தொகை ஆயுதங்களையும் கொண்டு சென்றனர்.சித்திரை 7 ஆம் அதிகதி, காலை புளரும் வேளை புலிகளின் முகாமினை அண்மித்த பகுதியை அவர்களின் கார் அடைந்தது. முருங்கன் - மடு வீதியிலிருந்து காட்டினுள் செல்லும் ஒற்றையடிப் பாதையினைப் பார்த்தவுடன் அவர்கள் காரை நிறுத்திக்கொண்டார்கள். அங்கிருந்துகொண்டே தடயங்கள் ஏதாவது தென்படுகின்றனவா என்று தேடத் தொடங்கினார்கள். அவர்கள் இறங்கி நின்றுகொண்டு தேடிய இடம் புலிகளின் முகாமிலிருந்து சில நூறு மீட்டர்கள் தூரத்திலேயே இருந்தது. புலிகளின் மத்திய குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் அன்று அங்கிருந்திருக்கிறார்கள். அங்கிருந்தவர்களில் உமா மகேஸ்வரன், நாகராஜா, செல்லக்கிளி, சிவகுமார், ரவி, கணேச ஐய்யர் ஆகியோரும் உள்ளடக்கம். பிரபாகரன் மட்டுமே அங்கிருக்கவில்லை. முகாமிற்கருகிலிருந்த உயரமான மரத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு நிலையில் உமா மகேஸ்வரனும், நாகராஜாவும் மறைந்திருந்தார்கள். ஏனையவர்கள், அருகிலிருந்த கொட்டகையினுள் இருந்தார்கள். 1987 ஆம் ஆண்டு நடைபெற்றுவந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களின் இடைக்கால நிர்வாகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்த காலப்பகுதியில் கொழும்பில் உமா மகேஸ்வரனைச் சந்தித்த நான், பஸ்டியாம்பிள்ளையின் கொலை தொடர்பாக டெயிலி நியூஸ் பத்திரிகைக்காகப் பேட்டி கண்டேன். "நானும் நாகராஜாவும் கண்காணிப்பு நிலைக்குப் போனோம். காலை 6 மணியளவில் ஒரு காரின் விளக்கு வெளிச்சம் கண்களுக்குத் தெரிந்தது. அக்கார் மிக மெதுவாக ஊர்ந்து வந்துகொண்டிருந்தது. ஆள் நடமாட்டம் எதுவுமற்ற அந்த வீதியில் இப்படி ஒரு வாகனம் மெதுவாக ஊர்ந்து வருவது மிகவும் அசாதாரணமாக எமக்குத் தெரிந்தது. எமக்குச் சந்தேகம் வந்துவிட்டது. எமது முகாமுக்கு வரும் நடைபாதையின் அருகில் அக்கார் நிறுத்தப்பட்டது. நாம் கீழே முகாமினுள் இருந்தவர்களுக்கு உடனே தகவல் அனுப்பினோம். செல்லக்கிளி நிலைமையினைப் பொறுப்பெடுத்தார்" என்று உமா கூறினார் காரிலிருந்து பஸ்டியாம்பிள்ளையும், பேரம்பலமும் இறங்கியபோது அவர்களது சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டது. "நாம் அதிர்ச்சியில் உறைந்துபோனோம். இந்த ராஸ்கல்கள் இங்குவரை எம்மைத் தேடி வந்துவிட்டார்களே என்று நாகராஜாவிடம் ரகசியமாகக் கூறினேன். நாம் காரில் வந்தவர்கள் பற்றி செல்லக்கிளியிடம் தகவல் சொன்னோம்" என்றும் உமா கூறினார். பொலீஸாரால் தேடப்படாத தனது இரு உதவியாளர்களை நடைபாதையூடாக செல்லக்கிளி அனுப்பினார். அவர்களில் ஒருவர் கட்டைக் காற்சட்டையும், மற்றையவர் சரம் ஒன்றினையும் அணிந்திருந்தனர். அவர்கள் இருவரும் பொலீஸாரைக் கடந்து செல்ல முற்பட்டவேளை, பொலீஸார் அவர்களை மறித்தனர். அவர்கள் யாரென்பதை பஸ்டியாம்பிள்ளை அறிய விரும்பினார். "நாங்கள் பண்ணையில் வேலை செய்யும் கூலித் தொழிலாளிகள்" என்று அவர்கள் கூறினார்கள். "நீங்கள் சட்டவிரோதமான மரத் தறிப்பில் ஈடுபட்டு வருகிறீர்களா?" என்று அவர்களைப்பார்த்து பஸ்டியாம்பிள்ளை கேட்கவும், அவர்கள் இருவரும் "இல்லை" என்று பதிலளித்தார்கள். "அப்படியானால் எதற்காகக் காட்டிற்குள் கொட்டகை அமைத்திருக்கிறீர்கள்?" என்று மீண்டும் அவர்களைப் பார்த்துக் கேட்டார் பஸ்டியாம்பிள்ளை. "ஏனென்றால், அங்கே நல்லதண்ணிக் கிணறு ஒன்று இருக்கிறது. அதனாலேயே அங்கு கொட்டகை அமைத்தோம்" என்று இளைஞர்கள் பதிலளித்தார்கள். தாம் முருங்கன் பொலீஸ் நிலையத்திலிருந்து வருவதாகக் கூறிய பஸ்டியாம்பிள்ளை, தமக்கு இப்பகுதியில் சட்டவிரோதமாக மரம் தறிக்கும் வேலைகளில் சிலர் ஈடுபட்டிருப்பதாகத் தகவல் கிடைத்ததாகக் கூறினார். மேலும், அவர்களது கொட்டகையினைப் பார்க்க வேண்டும் என்று பஸ்டியாம்பிள்ளை கேட்டபோது, அந்த இளைஞர்கள் இருவரும் அவர்களைக் கூட்டிக்கொண்டு கொட்டகை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். கொட்டகை வாயிலில் செல்லக்கிளி பொலீஸாரை வரவேற்றார். பஸ்டியாம்பிள்ளை செல்லக்கிளியை உடனடியாக அடையாளம் தெரிந்துகொண்டாலும், அவர் அதனைக் காட்டிக்கொள்ளவில்லை. கையில் உப இயந்திரத் துப்பாக்கியுடன் பஸ்டியாம்பிள்ளை கொட்டகையினுள் தேடுதல் நடத்த, பேரம்பலமோ கைத்துப்பாக்கியுடன் கொட்டகையின் சுற்று வட்டாரத்தை அலசிக்கொண்டிருந்தார். கையில் ரைபிளுடன், பஸ்டியாம்பிள்ளைக்குப் பாதுகாப்பாக அருகிலேயே நடந்து கொண்டிருந்தார் பாலசிங்கம். நடைபாதையினை மறித்து சாரதியான சிறிவர்த்தனா நின்றிருந்தார். "சரி, சரி, நாங்கள் எங்கள் கடமையினைச் செய்ய வேண்டும். நீங்கள் எங்களுடன் பொலீஸ் நிலையத்திற்கு வந்து ஒரு அறிக்கையொன்றினைத் தாருங்கள். கடமைக்காக இதனைச் செய்யவேண்டியிருக்கிறது. அது முடிந்தவுடன் நாங்கள் உங்களை இங்கே கொண்டுவந்து இறக்கிவிடுகிறோம்" என்று பஸ்டியாம்பிள்ளை செல்லக்கிளியிடமும், அங்கிருந்த ஏனைய இளைஞர்களையும் பார்த்துக் கூறினார். செல்லக்கிளியும் அதற்கு ஒத்துக்கொண்டார். "அவர்கள் தேநீர் போட்டுவிட்டார்கள், குடித்துவிட்டே போகலாம்" என்று செல்லக்கிளி தனது தோழர்களை சிலரைக் காட்டி பஸ்டியாம்பிள்ளையிடம் கூறினார். இளைஞர்களில் ஒருவர் தேனீர்க் குவளையை பஸ்டியாம்பிள்ளையிடம் கொடுக்கவும், பஸ்டியாம்பிள்ளை தனது இயந்திரத் துப்பாக்கியை அருகில் வைத்துவிட்டு தேனீர்க் குவளையினைப் பெற்றுக்கொள்ள தனது கையை நீட்டினார். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய செல்லக்கிளி பாய்ந்து பஸ்டியாம்பிள்ளையின் இயந்திரத் துப்பாக்கியைக் கைப்பற்றி அதனைக் கொண்டு பஸ்டியாம்பிள்ளையின் தலையில் ஓங்கி அடித்தார். பிரபாகரனின் மெய்க்காப்பாளராக பணியாற்றி வந்த செல்லக்கிளிக்கு இயந்திரத் துப்பாக்கியை இயக்குவது கடிணமானதாக இருக்கவில்லை, நிலைகுலைந்து கீழே சரிந்த பஸ்டியாம்பிள்ளை மீது அவரது இயந்திரத் துப்பாக்கியினாலேயே சரமாரியாகச் சுடத் தொடங்கினார் செல்லக்கிளி. அவ்விடத்திலேயெ விழுந்து உயிர் விட்டார் பொலீஸ் பரிசோதகர் பஸ்டியாம்பிள்ளை. மீண்டும் தனது இயந்திரத் துப்பாக்கியை பொலீஸ் கொன்ஸ்டபிள் பாலசிங்கம் நின்றிருந்த திசை நோக்கிச் சுழற்றிய செல்லக்கிளி அவரையும் கண்ணிமைக்கும் நேரத்தில் சுட்டு வீழ்த்தினார். கொன்ஸ்டபிள் பேரம்பலத்தை ஏனைய இளைஞர்கள் மடக்கிப் பிடித்துச் சுட்டுக் கொன்றனர். நடைபாதையில் நின்றபடியே நடப்பதை அவதானித்த சாரதி சிறிவர்த்தனா தப்பியோட எத்தனிக்க, அவரைத் துரத்திச் சென்ற இளைஞர்கள் வழியிலேயே சுட்டுக் கொன்றனர். "எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது. தமிழர்கள் தமது ஆயுதப் போராட்டத்தினை இன்னொரு நிலைக்கு உயர்த்தியிருந்தார்கள்" என்று சிரித்துக்கொண்டே கூறினார் உமா. ஆனால், அவர் கூறத் தவறிய இன்னொரு விடயம் இந்தத் தாக்குதலில் புலிகள் ஒரு தானியங்கித் துப்பாக்கியையும் கைப்பற்றிக்கொண்டதுதான். இவை நடந்து முடிந்ததும், மரத்திலிருந்து இறங்கிவந்த உமாவும், நாகராஜாவும் பேரம்பலத்தின் உடலை கிணற்றில் வீசிவிட்டு, ஏனைய மூவரின் உடல்களையும் காட்டிற்குள் எறிந்தார்கள். பின்னர் கொட்டகையை தீமூட்டிவிட்டு பஸ்டியாம்பிள்ளையின் பேஜோ 404 இல் அங்கிருந்து கிளம்பினார்கள். சில நாட்களுக்குப் பின்னர் அந்தக் கார் எரிந்த நிலையில் கிளிநொச்சிக் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பின் மடுக் காட்டுப்பகுதியில் விறகுவெட்டச் சென்ற ஒருவர் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்து தேடியபோது உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட மூன்று உடல்கள் பற்றி பொலீஸுக்கு அறியத் தந்திருந்தார். விசாரணைகளின்போது அந்த மூவரும் பஸ்டியாம்பிள்ளை, பாலசிங்கம், சிறிவர்த்தனா என்பதைக் கண்டுகொண்ட பொலீஸார், கிணற்றுக்குள் இருந்து தாம் மீட்ட சடலத்தின் சட்டைப்பையிலிருந்த அடையாள அட்டையினைக்கொண்டு அவர் பேரம்பலம் தான் என்று உறுதிப்படுத்திக்கொண்டனர். புலிகளின் முகாமைச் சல்லடை போட்டுத் தேடிய பொலீஸார், அங்கிருந்த 300 வெற்றுத் தோட்டாக்கள், குறிபார்த்துச் சுடும் பயிற்சிக்காகப் பாவிக்கப்பட்ட மனித தலையின் உருவப்படம், தகர டப்பாக்களின் அடைக்கப்பட்ட உணவு மற்றும் சமையல்ப் பாத்திரங்கள் என்பவற்றைக் கண்டுபிடித்தனர். மேலும் அப்பகுதிக்கு அருகாமையில் இயங்கிவந்த ஈரோஸ் அமைப்பின் பயிற்சி முகாமையும் அவதானித்த பொலீஸார், அங்கே சில இளைஞர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததையும் கண்டனர். அந்த இளைஞர்கள் ஆயுதங்கள் எவையுமின்றி தடிகளை வைத்துப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களைக் கைதுசெய்து கடுமையாகத் தாக்கிய பொலீஸார், ஆயுதங்களை எங்கே மறைத்து வைத்திருக்கிறீர்கள் என்று விசாரிக்கத் தொடங்கினர். பஸ்டியாம்பிள்ளையின் கொலை அரசாங்கத்திற்கு கடுமையான அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. 1963 ஆம் ஆண்டு உப பரிசோதகராக கடமையேற்ற பஸ்டியாம்பிள்ளை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும், அவர்களோடு தொடர்புபட்ட ஆயுத அமைப்புக்களின் இளைஞர்களையும் கண்காணிக்கும் உளவுப் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்தார். பஸ்டியாம்பிள்ளையின் கொலை நடந்து சரியாக மூன்று வாரங்களின் பின்னர், சித்திரை 25 ஆம் திகதி புலிகள் முதன்முதலாக வெளியே வந்தனர். புலிகளின் உத்தியோகபூர்வ இலட்சினையைக் கொண்ட கடிதத் தலைப்பில் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் அல்பிரெட் துரையப்பா, பொலீஸ் உளவாளி நடராஜா (உரும்பிராய் எரிபொருள் விற்பனையாளர்) மற்றும் பஸ்டியாம்பிள்ளை உட்பட ஒன்பது பொலீஸ் அதிகாரிகளின் கொலைக்கு தாமே பொறுப்பேற்பதாக அறிவித்தனர். புலிகள் இனிமேலும் புறக்கணிக்கக் கூடிய சக்தியல்ல என்பதை அரசாங்கம் புரிந்துகொண்டது. பஸ்டியாம்பிள்ளை தலைமையிலான பொலீஸ் அணியினரை அழித்ததன் மூலமும் பின்னர் தாமே அதற்கான பொறுப்பினை வெளிப்படையாக உரிமை கோரியதன் மூலமும் சிங்கள ஆதிக்க அரசாங்கத்திற்கு புலிகள் கடுமையானா சவால் ஒன்றினை ஏற்படுத்தியிருந்தார்கள். தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களை மட்டுமே நடத்திக்கொண்டிருக்கமாட்டார்கள், தமது உரிமைக்காக ஆயுதமேந்திப் போராடவும் தயாராகி விட்டார்கள் என்பதனை இந்த நிகழ்வு அப்பட்டமாகக் காட்டியிருந்தது.
-
நீங்கள் ஒரு முறைக்கு மேல் ஒரு படத்தை மீண்டும் பார்ப்பீர்களா? அப்படி திரும்ப திரும்ப பார்த்த தமிழ் படங்களின் பட்டியலை தந்தால் நங்களும் பார்க்கலாமே
-
By goshan_che · Posted
ஏகேடி க்கு தெரியுமா? திசைகாட்டி வந்திடும் எண்டு பயந்துதான் பாதி பணக்காரான் ஓடுறான் எண்டது🤣 -
By goshan_che · Posted
அதானே, ஆடு, கோழி எண்டு இல்லாட்டிலும், ஒரு மீன் அட்லிஸ்ட் முட்டையாவது வேணும் 🤣.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.