Jump to content

25.04.09 ஏ சர்வதேச சமூகமே! - கவிப்பேரரசு வைரமுத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தநாய்களுக்குச்

சொத்தெழுதிவைக்கும் தேசங்களே!

ஓர் இனமே

நிலமிழந்து நிற்கிறதே

நெஞ்சிரங்க மாட்டீரா?

பூனையொன்று காய்ச்சல் கண்டால்

மெர்சிடீஸ் கார் ஏற்றி

மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!

ஈழத்து உப்பங்கழியில்

மரணத்தின் வட்டத்தில்

மனித குலம் நிற்கிறதே!

மனம் அருள மாட்டீரா?

வற்றியகுளத்தில் செத்துக்கிடக்கும்

வாளை மீனைப்போல்

உமிழ்நீர் வற்றிய வாயில்

ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு

ரொட்டி ரொட்டி ரொட்டியென்று

கைநீட்டும் விரல்கள்

கண்குத்தவில்லையோ அமெரிக்க அதிபரே!

தமிழச்சிகளின் மானக்குழிகளில்

துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்

சிங்களவெறிக் கூத்துகளை

அறிந்தும் அறியாயோ ஐ.நாவே?

வாய்வழி புகட்டிய தாய்ப்பால்

காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு

கண்வழி உகுக்கக் கண்ணீரின்றிக்

கதறும் தாய்மார் மறந்தொழிந்தாயோ

அழத்தெரியாத ஐரோப்பாவே!

அடுக்கிவைத்த உடல்களில்

எந்த உடல் தகப்பன் உடல் என்று தேடி

அடையாளம் தெரியாத ஒரு பிணத்துக்கு

அழுது தொலைக்கும் பிள்ளைகளின்

பெருங்குரல் கேட்டிலையோ பிரிட்டிஷ் அரசே!

எனக்குள்ள கவலையெல்லாம்

இனம் தின்னும்

ராட்சசபக்ஷே மீதல்ல

ஈழப்போர் முடிவதற்குள்

தலைவர்கள் ஆகத்துடிக்கும்

தலையில்லாப் பேர்வழிகள் மீதல்ல

எம்மைக்

குறையாண்மை செய்திருக்கும்

இறையாண்மை மீதுதான்

குரங்குகள் கூடிக்

கட்டமுடிந்த பாலத்தை

மனிதர்கள் கூடிக்

கட்ட முடியவில்லையே

ஆனாலும்

போரின் முடிவென்பது

இனத்தின் முடிவல்ல

எந்த இரவுக்குள்ளும்

பகல் புதைக்கப்படுவதில்லை

எந்த தோல்விக்குள்ளும்

இனம் புதைக்கப்படுவதில்லை

அங்கே

சிந்திய துளிகள்

சிவப்பு விதைகள்

ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்

பீரங்கி ஓசையில்

தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்

ஈழப்பனைமரத்தில்

என்றேனும் கூடுகட்டும்

couresy: kumudam

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கே

சிந்திய துளிகள்

சிவப்பு விதைகள்

ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்

பீரங்கி ஓசையில்

தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்

ஈழப்பனைமரத்தில்

என்றேனும் கூடுகட்டும்

couresy: kumudam

என்னை மிகவும் கவர்ந்த ஓர் கவிஞனின் கவிதை வரிகள்...... அற்புதம்

எங்களின் சோகத்தையும் சொல்லி, அதற்காய் உலக நாடுகளிடம் நீதியும் கோரி இறுதியில் நம்பிக்கையும் ஊட்டிய மந்திர வரிகள்.

இளங்கவி

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் கட்டாயம் கருதி இடை புகுத்தும் என் செயலை மன்னிப்பீர்களாக! கடும் குளிரிலும் குழந்தைகளையும் முதியோர்களையும் 360 யூனிவர்சிட்டி அவன்யூ டொரொண்டோ - விற்கு ஆயிரக்கணக்கில் கூட்டி வந்த குடும்பத்தினரின் வேண்டுகோள் இதுதான். போராட வாருங்கள்!

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.