Jump to content

தமிழீழத்தில் இடம்பெற்றுக்கொண்டிருப்பது என்ன?


Recommended Posts

தமிழீழத்தில் இடம்பெற்றுக்கொண்டிருப்பது என்ன?

வணக்கம் தமிழ்நெஞ்சங்களே!

"தமிழீழத்தில் இடம்பெற்றுக்கொண்டிருப்பது என்ன? " என்ற தலைப்பில் மறைக்கப்பட்ட, மறுக்கப்படுகின்ற உண்மைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளுக்கும், இந்தியா உட்பட சர்வதேச நாடுகளிற்குமிடையில் மறைமுகமாக செய்யப்பட்ட ஒப்பந்தங்களும், ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளினால் மேல் குறிப்பிடப்பட்ட நாடுகளுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவாதங்களும், அந்த நாடுகளினால் ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட விடயமும் என்ன என்பதையும், உண்மையில் தாயகத்தில் இப்போது இடம்பெற்றுக்கொண்டிருப்பது என்ன? என்பதையும் ஒவ்வொரு தமிழ்மகனும் அறிந்திருக்கவேண்டிய அவசியம் இருப்பதினால், காலத்தின் தேவை கருதி இந்த ஆக்கத்தை பதிவு செய்கின்றேன்.

தாயகத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தமிழின அழிப்பை நிறுத்தும்படி புலம்பெயர் தமிழர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கவனயீர்ப்பு போராட்டம் தீவிரம் அடைய, அடைய ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளின் கொலை வெறியாட்டமும் தீவிரமடைந்து கொண்டே போகின்றது. அப்படியென்றால் இந்த வெறியாட்டம் அதாவது இனச்சுத்திகரிப்பு ஸ்ரீலங்காவினால் தன்னிச்சையாக செயல்படுத்தப்படுகின்றனவா என்றால் இல்லை என்ற பதில் இலகுவாகவே கிடைத்துவிடும்.

நாங்கள் புலம்பெயர் நாடுகளில் மேற்கொண்டுவரும் இந்த கவனயீர்ப்பு போராட்டங்களை, அந்தந்த நாடுகள் உதாசீனப்படுத்துவதாகவே தோன்றுகின்றன.

இருந்தும் சில நாடுகள் எங்களை சாந்தப்படுத்தும் நோக்கத்துடன், எங்கள் கோரிக்கைகளை உள் வாங்குவது போல் பாசாங்கு காட்டுவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

ஆகவேதான் இன்று தாயகத்தில் அதி உச்சமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இனவழிப்பு நிகழ்வுக்கும், சர்வதேசத்திற்கும் இடையில் நிறையவே தொடர்பு இருப்பதாக புலப்படுகின்றது.

அப்படியென்றால் இவர்களது நோக்கம் என்ன? எதை எதிர்பார்க்கின்றார்கள்?

இவர்களது நோக்கம் என்ன என்று ஆராய்ந்தோமானால், பூமிப்பந்தில் இன்னுமொரு நாடு உருவாகுவதை இவர்கள் விரும்பவில்லை, அதிலும் முக்கியமாக போராட்டத்தின் மூலம் ஒரு நாடு உருவாகுவதை எல்லா நாடுகளுமே எதிர்க்கின்றன.

இந்தவிடயத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளையும், தமிழீழ மக்களையும் அதிகமாக வெறுப்பதிற்கு பல காரனங்களை கூறலாம்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் எந்தவொரு நாட்டினதும் உதவிகளின்றி, சுயமாகவே சொந்த மக்களினது ஆதரவுடன் மட்டுமே இயங்குவதை அவர்களினால் அதாவது சர்வதேச நாடுகளினால் சகிர்த்துக்கொள்ள முடியவில்லை.

ஒரு விடுதலை இயக்கம் சுயமாக முப்படைகளையும், ஒரு தொகை மக்களையும் பல வருடங்களாக தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருப்பதை இந்த நாடுகள் விருப்பவில்லை.

தெரிந்தோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ தமிழீழ விடுதலையிற்கு ஆதரவு தெரிவித்தால், இதையே காரனமாக வைத்து தங்கள் நாடுகளிலும் விடுதலைப்போராட்டங்கள் ஆரம்பித்துவிடும் என்ற ஏக்கமும் இவர்களுக்கு உள்ளது.

ஆகவேதான் இன்று தமிழீழத்தில் எவ்வளவு மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை, விடுதலைப்புலிகளை ஒழித்தால் போதும் என்ற நோக்கில் பல நாடுகள் தங்களிற்குள் உள்ள பகமைகளை மறந்து இந்த விடயத்தில் ஒன்றிணைந்து செயல்படுகின்றார்கள்.

அப்படியென்றால் இன்றுவரை இடம்பெற்ற செயல்களில் யாருக்கு வெற்றி?

இந்தியா உட்பட சர்வதேச நாடுகளுக்கு கிடைக்கப்பெற்ற பயங்கர தோல்வியாகவே இதை கருதமுடியும். இந்த நாடுகள் ஸ்ரீலங்காவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தமும், ஸ்ரீலங்காவினால் இந்த நாடுகளுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவாதமும் விடுதலைப்புலிகளை ஒழிப்பது பற்றியது தான்.

ஆனால் இடம்பெறும் நிகழ்வுகள் தலைகீழாகவே உள்ளன அதாவது ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளின் திட்டத்தை அனுபவரீதியாக புரிந்துகொண்ட விடுதலைப்புலிகள் தங்களது தாக்குதல்களை மட்டுப்படுத்தி. போராளிகளையும், ஆயுத தளபாடங்களையும் பாதுகாப்பதிலையே தங்களது கவனத்தை செலுத்தியுள்ளனர் என்பது தான் உண்மை.

ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளோ, விடுதலைப்புலிகளின் இந்த தந்திரோபாயமான நகர்வை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான ராணுவத்தினரை பலிகொடுத்ததையும் பொருட்படுத்தாது தங்களால் அபகரிக்கப்பட்ட நிலங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெற்றி கொண்டாடுகின்றார்கள் என்பது தான் உண்மை.

அதாவது விடுதலைப்புலிகளை ஒழிப்பதாக சர்வதேச நாடுகளுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவாதத்தை ஸ்ரீலங்காவினால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது என்பதுதான் உண்மை.

இதனால் தான் சர்வதேச நாடுகள் இன்று ததம்ப ஆரம்பித்துள்ளன.

இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உள்ள கேள்வி என்னவென்றால்!தமிழர்களின் நிலங்கள் பெரும்பகுதி சிங்களவனால் அபகரிக்கப்பட்டுள்ளது.

அப்படியென்றால் இத்தனை ஆயிரம் போராளிகள் எங்கே? அவர்களது பலகோடி பெறுமதியான ராணுவ தளபாடங்கள் எங்கே?

இதற்குரிய பதிலை எதிர்வரும் நாட்கள் புலப்படுத்தும், ஆகவே விடுதலைப்புலிகளின் பலத்திலையோ அல்லது அவர்களின் திட்டத்திலையோ நாம் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்காது எங்களது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம், வெற்றி நிச்சியம் எங்களுக்கே.

இணைவோம் தமிழராய்!

உங்கள் கருத்துக்களுக்கு,

valvaimainthan@gmail.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலவாறான வதந்திகளாலும் , பேச்சுக்களாலும் கலங்கி நிற்கும் தமிழ் உணர்வுள்ள ஈழத்து மக்கள். தாயகத்தில்லுள்ள உறவுகளை நினைத்து வேதனையில் வாடுகின்றனர். தங்களின் கருது பகிர்வால் ஒரு தேற்று கின்ற உணர்வு கிடைக்கிறது. இனி வரும் காலங்கள் போராளிகளினதும் படை பலதினதும் உண்மை நிலை தெரியவரலாம் எனும் வார்த்தைகள்நம்பிக்கை தருகின்றன .தலைவர் என்றும் மக்களுடன் , உறுதியான நம்பிக்கையுடன் காத்திருப்போம். தங்கள் பதிவுக்கு மிக நன்றி .......

Link to comment
Share on other sites

U N பாதுகாப்புச்சபை நிகழ்ச்சி நிரலின் பின்பு அகோர தாக்குதல் வன்னிமண்ணில் மீண்டும் இடம்பெறும்..... இந்தியாவின் ஆலோசனையும் அதுவே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை நீங்கள் எழுதிய எல்லாம் சரி வல்வை மைந்தன் ஆனால் கடைசி பந்தியை தவிர ஆயிரம் போராளிகள் இருந்தார்களா? பல கோடி பெறுமதியான ஆயுதங்கள் புலிகள் வைத்திருந்தார்களா? அப்படியாயின் ஏன் அவர்கள் மன்னார்,முல்லைத்தீவு,கிளிநொச

்சி என தொடர்ச்சியாக பின் வாங்கினார்? இதற்கு இரு காரணங்கள் உண்டு.1)புலிகள் அரசியல் ரீதியாக ஏதோ ஒன்றை எதிர் பார்த்து நிற்பது.2)உண்மையாகவே அவர்களுக்கு ஆட்பற்றாக்குறை,ஆயுதப்பற்றாக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் பகிர்வுக்கு நன்றி என்ன தீர்வாக இருந்தாலும் அது புலிகளைவிட்டு விட்டு நடைபெற்றால் அது விபரீதத்தில் தான் முடியும் என்பது உண்மை. மீண்டும் அரசாங்கள் தானாகவே பேச்சுக்கு அழைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லையென்பதும் உண்மை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.