Jump to content

முதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழ்மகள் எழுதும் கடிதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழ்மகள் எழுதும் கடிதம்

Posted by Renu on Tuesday, April 28, 2009, 5:14 | 399 Views |

.

வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் கூட நாற்காலி கூடவே இருக்க ஏங்கும் குறளோவியம் தந்த தானைத் தலைவா, இராஜதந்திரம் என்னும் பாழாய்ப்போன இடியப்பத்துக்குள் சிக்கி சிறுத்துப் போகும் சிங்கமே,

தனக்குத் தானே தந்தி அடிக்கும் அறிவுடை முதல்வா,

வார்த்தை ஜாலங்களால் மட்டுமே படை நடாத்தி உலகெல்லாம் வென்ற உலகத் தமிழினத்தின் தலைவா,

அந்தப் பட்டத்தை தங்களுக்குத் தந்தவரை அச்சிடப்படமுடியாத வார்த்தைகளாலும், தங்களை அச்சிடப்படக்கூடிய வார்த்தைகளாலும் வணங்குகின்றேன்.

“ஐயோ இரத்தம் பாயுதக்கா. நோவு தாங்க முடியேல்லை அக்கா” என்று வன்னியில் இருந்து கதறும் ஒரு பிஞ்சுக் குழந்தையொன்றின் கதறலை கேட்டு மனமுடைந்துபோய் எழுதும் மடல் இது. நான் ஈழத்திலிருந்து அகதியாகி அந்நிய தேசமொன்றில் வசிக்கும் பாவப்பட்ட தமிழிச்சி. தங்களை அவமானப்படுத்துவது எனது நோக்கமில்லை… புண்ணைச் சொறிவதில் எனக்கு இன்பமேதுமில்லை.

நான் கனடாவிற்கு எட்டு வயதில் ஏதிலியாய் வந்தேன். இப்போது எனக்கு வயது இருபத்து நாலு. கனடா வந்தாலும் தாய் நாட்டையும் தமிழையும் மறக்கவில்லை… மறக்கவும் மாட்டேன். தங்களோடு ஒப்பிடும்போது நான் ஒரு சிறுமி. அஃதிருக்க, மேன்மக்கள் மேன் மக்களே என்ற தமிழ் வார்த்தைகள் உங்களுக்கு மட்டும் பொருந்தாமல் போனதேன்.

நீங்கள் தமிழுணர்வு மிக்கதொரு சிறந்த கதை ஆசிரியர் என்றுதான் இதுவரை தெரிந்து வைத்தோம். ஆனால் தாங்கள் உலகமகா நடிகன் என்று ஈழப் பிரச்சினை தொடர்பான உங்கள் தந்திகளாலும், கேள்வி பதில் அறிக்கைகளாலும் இப்போது அறிந்து கொண்டோம்.

உங்களிடம் இலைமறை காயாய் மறைந்திருந்த நடிப்புத் திறமையை வெளியே கொணர்ந்து வந்த அன்னை சோனியாவுக்கு தமிழ்த்திரையுலகின் சார்பில் கோடி நன்றி. இதற்கு விலையாக ஈழத்திலே கருவிலேயே குண்டுபட்டுச் செத்துப் போன சிசுக்களை யாது செய்ய?

பதவி ஆசைக்காகவும், அரசியல் குப்பைக் காரணங்களிற்காகவும் எங்கள் ஈழத்தமிழ் மக்களை பலியாக்காதீர்கள். அவர்கள் இரத்தம் சிந்துவதைப் பார்த்தும் உங்களுக்கு இரக்கம் வரவில்லை என்றால் நிச்சயமாக நீங்கள் ஒரு மனிதனாகவே இருக்க முடியாது. பதவியை இராஜினாமா செய்யப் போகிறீர்கள் என்று ஆரம்பி்த்து உண்ணாவிரதம் வரை உங்கள் மெகா தொடர் நாடகம் கலைஞர் ரீவியில் வரும் நாடகங்களைப் போலவே இன்னும் தொடர்கின்றது.

இன்னும் ஈழத்தமிழர் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். ஆனால் அதனை நீங்களே உங்கள் கபட நாடகங்களால் கெடுத்து விடுவீர்கள் போல் உள்ளது. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் ஐயா. ஈழத்தமிழரும் தமிழ்நாட்டுத் தமிழரும் வேறு வேறல்ல. அனைவரும் தமிழர்தான். தமிழன் என்றால் மானம் மரியாதைக்குத் தான் பெயர் போனவன். நீங்களோ மரியாதைக்குத்தானும் ஒரு மானமுள்ள இனப்பற்றுள்ள தமிழனாய் இருக்க விரும்புகிறீர்கள் இல்லை.

உங்களை மாதிரி பதவி ஆசைக்காக சோனியா அம்மையார் மற்றும் மகிந்த போன்றவர்களின் காலைப் பிடித்துக்கொண்டிருக்கம் சுயநலவாதிகளால்தான் எமக்கு இன்னமும் ஈழம் கிடைக்கவில்லை…விடிவும் கிடைக்கவில்லை.

இந்த வயதில் உங்களுக்கு பதவிப் பித்துத் தேவைதானா? பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்கள். தங்களுக்கு அதுவும் பொய்த்துப் போயிற்றே. பாதி நாட்கள் முதுகு வலி என்று வைத்தியசாலையில் படுத்துறங்கி அறிக்கைப் போர் புரிந்து அரசியல் என்னும் சாக்கடையில் புரண்டு தன்மானத்தை இழந்து பதவி சுகம் காண விரும்பும் வாழ்வெல்லாம் வெல்லமா? நீங்களே சிந்தியுங்கள். நாங்கள் ஏன் பிறந்தோம் என்று யோசியுங்கள். நாங்கள் மற்றவர்களுக்கு என்ன நல்லது செய்தோம் என்று சிந்தியுங்கள். நாளைக்கு நாங்கள் இறக்கும் போது எங்களுக்காக யாரேனும் அழுவார்களா என்று யோசியுங்கள்.

ஈழ இனத்தை அழிக்க திட்டம் போட்டுக் கொடுத்த பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனையே போர் நிறுத்தம் பற்றி பேச தூதனுப்பியதன் நியமான காரணம் ராஜதந்திரி உங்களுக்குத் தெரியாமல் போனது அதிசயம்தான். கூப்பிடு தூரத்திலே கோடி கோடியாய் இரத்ததின் இரத்தங்கள் நீங்கள் இருக்க, வன்னியிலே எம்மினம் இரத்தம் சிந்துவதும் அதிசயம்தான். உங்கள் கட்சியின் பெயரிலேயே திராவிடர் என்ற பதத்தை வைத்துக் கொண்டு ஆரியரோடு கூட்டுச் சேர்ந்து சிங்கள கொடுங்கோல் அரசுக்கு தாங்கள் உதவுவதும் அதிசயம்தான்.

“ஒரே இரத்தம்” என்ற நாடகம் யாத்த நீங்கள் எண்பத்தைந்து வயசினிலும் இனத்தை விட பதவிதான் முக்கியம் என்று சுயநலவாதியாய் இருப்பதும் அதிசயம்தான்.

உங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி இந்திய மத்திய அரசு தூதுவரை கொழும்பிற்கு அனுப்பிய மறு நாளில் எல்லாம் குண்டுவீச்சின் வீரியம் கூடுகிறதாம். உங்களுக்குப் போற வழியில் புண்ணியமாய்ப் போகும் தயவு செய்து இனியும் தூதுவர்களை அனுப்பி எரியிற நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம். மத்திய அரசுக்கு தந்தி அனுப்பிவிட்டோம்…இதற்கு மேல் யாது செய்ய என்ற சாட்டுக்களை விட்டுவிடுங்கள் ஐயா.

“இன்னும் ஓரு மணித்தியாலத்திற்குள் வன்னியிலே போர் நிறுத்தம் நடைமுறைக்கு வராவிடின் தமிழகம் இந்தியாவிலிருந்து பிரிந்து போகும்” என்று ஒரு அறிக்கை விட்டீர்கள் என்றால் ஒரு நிமிடத்திலேயே போர் நிறுத்தம் வந்துவிடும். வேண்டாம், இந்திய இறையாண்மைக்கு எதிராக நீங்கள் எதுவுமே பேச வேண்டாம். ‘இனி காங்கிரஸ்தான் தமிழகத்தின் எதிரி’ என்று ஓர் அறிக்கைவிட வேண்டியிருக்கும் என்று மத்திய அரசுக்குச் சொல்லுங்கள்…சொன்னபடி நடவுங்கள்…நாளையே வன்னியிலே போர் நிறுத்தம். உங்கள் பலம் உங்களுக்குத் தெரியவில்லை. முடிந்தால் ஈழ மக்களிற்கு உதவுங்கள். இல்லையேல் ஈழம் பற்றிக் கவிதை வரைவதை, அறிக்கை விடுவதை தயவு செய்து நிறுத்துங்கள்.

ஐயா கலைஞர் ஐயா, ஈழத்து மக்களுக்கு சோறும், பால்மாவும் அனுப்ப வேண்டாம். முதலில் அவர்களது உயிரைக் காப்போம். ஐயா முதல்வர் ஐயா, எங்கள் ஊரிலே பிணங்கள் சோறு தின்பதில்லை…கருகிப் போன குழந்தைகள் பால்மா கேட்பதுமில்லை.

தயவுசெய்து நீங்கள் எங்கள் தலைவர் பிரபாகரனின் நண்பன் என்று சொல்லி எங்கள் தலைவனைக் கேவலப்படுத்தாதீர்கள். தங்களை மாதிரி ஒரு சுயநல விரும்பி நிச்சயமாக எங்கள் தலைவனின் நண்பனாக இருக்கவே முடியாது. உங்களை கெட்ட வார்த்தை சொல்லி திட்ட வேண்டும் என்றுதான் தோன்றுகின்றது. ஆனால் நான் ஒரு ஈழத் தமிழிச்சி என்பதாலும், பெரியவர்களைக் கனம் செய்ய வேண்டும் என்ற தமிழர் பண்புக்காகவும் விட்டு வைக்கின்றேன்.

என்னைப்போன்ற பல தமிழர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்காகத் தான் இந்த மடலை எழுதுகின்றேன். இதை நான் உங்களைப் புண்படுத்துவதற்காக எழுதவில்லை..சிந்திக்க வைப்பதற்காகத் தான் எழுதிகின்றேன். மன்னித்துவிடுங்கள் என்று நிச்சயமாகக் கேட்க மாட்டேன். காங்கிரஸிடம் இன்னமும் கூட்டு வைப்பதற்காக நீங்கள்தான் அதனை அனைத்து தமிழர்களிடமும் கேட்க வேண்டும்.

வாழ்க தமிழ்

வெல்க தமிழர்

தமிழர்தான் புலிகள்

புலிகள்தான் தமிழர்

எவர் வந்து தடுத்தாலும்

விரைவில் மலரும் தமிழீழம்

இப்படிக்கு,

ஒரு தமிழிச்சி

.

படித்ததில் பிடித்தது .................நன்றி பாரிஸ் ......தமிழ் .

Link to comment
Share on other sites

இவனேல்லாம் ஒரு மனிதன் என்று..... தமிழ் செய்த மிகப் பெரிய பாவம் தமிழை இவன் அறிந்தது.

Link to comment
Share on other sites

அருமையான கடிதம். இதைவிடவா தெளிவாகவா கொலைஞருக்கு புரியவைக்க முடியும்.

கடித் எழுதியவருக்கும் அதை யாழ்இணையத்தில் வெளியிட்டவருக்கும் நன்றிகள்.

ஈழமகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கபட காரங்களுக்கு வால் பிடித்து சேவகம் புரியும் அந்த முகம் தெரியாத தொண்டர்களை கொல்ல வேணும் முதலில். தலைவர் உண்ணாவிரதம் எண்டு ஒரு நாடகத்த அரங்கேற்ற போவதாக அறிந்தவுடன் தாங்களும் உண்ணாவிரதம் இருந்த அந்த அறிவில்லாத தொண்டர்களை தான் சொல்றன் , அவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு ஆனால் அரசியல் செல்வாக்கு உள்ள காரணத்தினால் சாதாரண பொதுமக்களை பயமுறுத்தி வைத்துள்ளார்கள் , அவர்களை முதலில் போட்டு தள்ளினால் தலைவர்கள் தங்கள் உப்பு சப்பில்லாத செயற்பாடுகளை நிறுத்துவார்கள். அந்த தீவிர தொண்டர்களாக கூடுதலாக சண்டியர்களும் , தெரு போருக்கிகலுமே உள்ளார்கள் , அவர்கள் தான் அழகிரிக்கு ஆலவட்டமும் , ஸ்டாலினுக்கு விளக்கும் பிடிப்பவர்கள் . காரணமே இல்லாமல் கட்சி தலைமை சொல்லுதெண்டு போராட்டங்கள் கூட்டங்களை செய்து முடிப்பவர்கள் , ஒரு சில எலும்புத்துண்டுகளுக்காக .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல்வர் "கருணா" நிதி என்று மட்டும் சொல்லுங்கள்! இவரை ஐயா என்ற அழைத்தால் அந்த வார்த்தையே கோபம் கொள்ளக்க் கூடும். இவருக்கு கடிதம் எழுதி என்ன பயன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதிப்பும் மரியாதையும் உள்ளவர்களுக்குத்தான் ஐயா என்ற சொல் பொருந்தும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதிப்பும் மரியாதையும் உள்ளவர்களுக்குத்தான் ஐயா என்ற சொல் பொருந்தும்

ஆம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதிப்பும் மரியாதையும் உள்ளவர்களுக்குத்தான் ஐயா என்ற சொல் பொருந்தும்

om.. but uvannuku illai

Link to comment
Share on other sites

மகிந்த சிந்தனையுடன் ஊறிப்போய் இருக்கும் கிழவனுக்குக் கடிதமா?

முதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழ்மகள் எழுதும் கடிதம்

Posted by Renu on Tuesday, April 28, 2009, 5:14 | 399 Views |

இது அவர் செய்யும் கீழ்தரமான வேலைகளுக்கு அதிகம்.

வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் கூட நாற்காலி கூடவே இருக்க ஏங்கும் குறளோவியம் தந்த தானைத் தலைவா, இராஜதந்திரம் என்னும் பாழாய்ப்போன இடியப்பத்துக்குள் சிக்கி சிறுத்துப் போகும் சிங்கமே,

தனக்குத் தானே தந்தி அடிக்கும் அறிவுடை முதல்வா,

வார்த்தை ஜாலங்களால் மட்டுமே படை நடாத்தி உலகெல்லாம் வென்ற உலகத் தமிழினத்தின் தலைவா,

எழுதப்பட வேண்டிய வார்த்தைகள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூங்குபவரை எழுப்பலாம், நடிப்பவரை என்ன செய்வது. இணைப்புக்கு நன்றி நிலாமதி!!!

Link to comment
Share on other sites

வரும் 13ம் திகதி வரை மத்திய அரசுக்கு கறூணாநிதி கால அவகாசம் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது, தனது வாழ்க்கையையின் இறுதி கட்டத்தில் மிகப்பெரிய தோல்வியை தான் ஏற்றுக்கொள்ளவும் தயங்கமாட்டேன் என நெறுப்பு.கொம்மிடம் கறுனா நிதி தெரிவித்துகிறார்.

வரும் தேர்தலில் மக்களால் மிக கொடுராமாக தோற்க்கடிக்கப்படும் கறுனா நிதி அண்ட் கோவுக்கு இவ் நேரத்தில் அனுதாபத்தை முன் கூட்டியே தெரிவிப்பதோடு, நாற்காலி தன்னைவிட்டு போயிடுச்சே என எண்ணி எண்ணீ கவலைப்பட்டு மண்***யை போடும் பொழுது சிலவேளை எனது அனுதாபங்களும் உண்டு.:unsure:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வணக்கம் நண்பர்களே, கருணானிதி பற்றி இப்போதுதான் புரிந்து கொண்டுவிட்டீர்கள்

Link to comment
Share on other sites

கருணாநிதியோட பச்சைத் துரோகத்தை தமிழினம் மன்னிக்கவே மன்னிக்காது.

அது மட்டுமில்லீங்க. இந்தியாவை என்னோட நாடுன்னு சொல்லிக்கவே வெட்கமாயிருக்கு. ஈழத் தமிழரை தமிழனாகப் பார்க்க வேணாம் சக மனுஷரா கூடவா பார்க்க முடியல?

இந்த லட்சணத்துல இதுக்கு காந்தி தேசம்னு பெயர் வேற.

நான் முன்னாடி 5 அல்லது 6 வருஷத்திற்கு முதல்ல, நான் முதல்ல இந்தியப் பெண் அப்புறம் தமிழச்சி என்று சொல்லிக்கிட்டு இருந்தன்.

அப்புறம் நான் முதல்ல தமிழச்சி அப்புறம் இந்தியப் பெண் என்று சொல்லிக்கிட்டு இருந்தேன்

இப்ப சொல்லுறன் நான் முதல்ல மனுஷி அப்புறம் தமிழச்சி .

நாளை நடக்கப் போற தேர்தல்ல காங்கிரசோட ரத்தக் கைக்கு 16 ல ஒரு இடம் கூட கிடைக்கக் கூடாது.

கண்ணீர் விடுறதத் தவிர இந்தக் கோரக் கொலைகளை பார்த்துக்கிட்டருக்கிற நாடுகளை நினைச்சு காறி துப்புறதத் தவிர நம்மால எதையுமே செய்ய முடியில

வன்னிச் சொந்தங்களே எங்களை மன்னித்தருளுங்க

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.