Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

உராய்வு


Recommended Posts

நூல் வெளியீடு

அரங்கம் ஒன்று நிகழ்வு மூன்று

நட்புள்ள யாழ் களஉறவுகளுக்கு,

இளைஞனின் அன்பான அழைப்பு இது. வரும் ஓகஸ்ட் மாதம் 27ம் திகதி சனிக்கிழமை அன்று இலண்டன் மாநகரில் எனது முதலாவது கவிதைத் தொகுப்பான "உராய்வு" வெளியிடப்பட இருக்கிறது. யாழ் களஉறவுகள் அனைவரையும் அந்நிகழ்விற்கு வருகைதந்து சிறப்பிக்குமாறு அழைக்கிறேன். :D

நூல் வெளியீடு முதன்மை நிகழ்வாக இருந்தபோதிலும், ஆவணக்கண்காட்சியும், குறும்படக் காட்சியும் நடைபெற உள்ளது. ஆவணக்கண்காட்சியில் உலகநாடுகளின் முத்திரைகள், நாணயங்கள், பணத்தாள்கள் என பலதும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. அதேபோல் குறும்பட நிகழ்வில் புதியதாக வெளியான ஒரு குறும்படமும் காண்பிக்கப்படவுள்ளது.

"உராய்வு" கவிதைத் தொகுப்பிற்கென விசேடமாக அமைக்கப்பட்டுள்ள "உராய்வு இணையத்தளத்தில்" மேலதிக விபரங்களையும், நிகழ்வுகள் (+நிகழ்ச்சி நிரல்கள்) பற்றிய தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். உராய்வு பற்றிய அனைத்து ஆவணங்களையும் அங்கு பெறக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. (இத்தளம் இன்னும் முழுமைபெறவில்லை என்பதை அறியத்தருகிறேன்).

notice_uraayvu1_213.gif

* மாற்றம் செய்யப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

 • Replies 318
 • Created
 • Last Reply

களத்தின் நீண்ட கால நண்பர் இளைஞன் (சஞ்சீவ்காந்த்) அவர்களின் உராய்வு ( கவிதைத் தொகுப்பு ) நூல் வெளியீட்டு விழா சிறப்புற சக கள உறவாக எமது வாழ்த்துக்கள்...!

Link to comment
Share on other sites

உங்கள் அ௯ழைப்புக்கு நன்றி இளைஞன்

மேற்கு லண்டன் பகுதியில் இருப்பவர்களுக்கு ஈலிங் கனக துர்க்கை அம்மன் கோவில் அருகில் உள்ளது. எனவே நாம் எமது நண்பர்களுடன் வந்து நூல் வெளியீட்டை சிறப்பிப்போம்.

நேரில் வந்து உங்களுக்கு வாழ்த்தை தெரிவிக்க வாய்ப்பு கிடைக்கப் போவதையிட்டு மிக்க மன மகிழ்ச்சி அடைகிறோம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளைஞனின் கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா சிறப்புற நடை பெற வேண்டுமென களஉறவுகள் எல்லோரும் வாழ்த்துவோம்--------------------------------------------------------------------------------------ஸ்ராலின்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் இளைஞன். உராய்வு கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா சிறப்புடன் நடைபெற்ற வாழ்த்துக்கள். :P

Link to comment
Share on other sites

குருவி..தமிழினி..வருவீங்களா?

எனக்கு சனிக்கிழமையும் வேலைதான் என்றபடியால்

வருவது கஸ்டம். இருந்தாலும் கூடியவரை வர முயற்சி

செய்வேன்.

Link to comment
Share on other sites

அனைவருக்கும் எனது மனமகிழ்ந்த நன்றிகள். இங்கு எழுதுவது மட்டும் போதாது, நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும். அப்பதான் உங்கள் யாழ் களஉறவான எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். நிச்சயமாக வருவீர்கள். :D வசி சனிக்கிழமை வேலைக்கு விடுமுறை எடுங்கள் (இளைஞனுக்காக).

வசி

நித்திலா

ஸ்ராலின்

மைன்ட் hPடர்

வருவதாக சொல்லியுள்ளீர்கள். இது ஒரு யாழ் களஉறுப்பினர் சந்திப்பாகவும் அமையும் என நம்புகிறேன். எனவே குறிப்பாக இங்கிலாந்தில் இருப்பவர்கள் வர முயற்சி செய்யுங்கள். சரியா?

Link to comment
Share on other sites

குருவி..தமிழினி..வருவீங்களா?

இதென்ன கேள்வி? அவையும் கட்டாயம் வருவினம்! சரிதானே?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எண்ணங்களுக்கு

எழுத்துரு கொடுத்து

எழுதிய கவிகள் தனை

ஏட்டில பதித்து...

எமையேல்லாம் அழைத்து

புதிய தோர் உலகம் செய்ய

புறப்படும் இளைஞனே! -உன்

புறப்பாடுகளின் பின்னே -எம்

பலமிருக்கும் என்நாளும் -உன்

முகமறியா...

முகவரியறியா...-உன்

முன்னுதாரணம் கொண்டு

சிறக்க வேண்டும்-என்

சமூகம்........

எட்டா தூரத்தில் நானிப்பதால்

பட்டென்று உம் நிகழ்வுக்கு

வரமுடியவில்லையேன்றோரு

மன வருதம் இருந்தாலும்...

என் மனம் உங்கள் அரங்குகளை காணுகிறது....

உள்ளத்தில் உவகையுடன் வாழ்த்துகிறேன்..உராய்வுகள் தஎங்கள் சமூகத்தில் உராய்வுகளை ஏற்ப்படுத்தட்டும்

லண்டன் வாழ் கள உறவுகள் உங்கள் நிகழ்ச்சிக்கு வருவார்கள் என்ற நம்புகிறேன்...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் எனது மனமகிழ்ந்த நன்றிகள். இங்கு எழுதுவது மட்டும் போதாது, நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும். அப்பதான் உங்கள் யாழ் களஉறவான எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். நிச்சயமாக வருவீர்கள். :D வசி சனிக்கிழமை வேலைக்கு விடுமுறை எடுங்கள் (இளைஞனுக்காக).

வசி

நித்திலா

ஸ்ராலின்

மைன்ட் hPடர்

வருவதாக சொல்லியுள்ளீர்கள். இது ஒரு யாழ் களஉறுப்பினர் சந்திப்பாகவும் அமையும் என நம்புகிறேன். எனவே குறிப்பாக இங்கிலாந்தில் இருப்பவர்கள் வர முயற்சி செய்யுங்கள். சரியா?

நேரம் கிடைக்கும் என்றே நம்புகின்றேன். கட்டாயம் வர முயற்சிக்கின்றேன்.

சிற்றுண்டிகளும் வழங்கப்படுமா (இலவசமாக)? :wink:

Link to comment
Share on other sites

உராய்வு கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா சிறப்புடன் நடைபெற்ற வாழ்த்துக்கள் இளைஞன்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா தமாசுக்கு எழதுறன்..யாரும் சீரியசாக எடுக்க வேண்டாம்.......கிருபன் பேரில் எழுதும் இளைஞன் என்று யாழ் களததில் யாரோ எழுதிய ஞாபகம்.......இப்ப இளைஞன் விழாவுக்கு கிருபன் வாறன் என்றார்...விழாவில் பார்க்கக்கை திரைப்படங்களிலை வர்ற டபிள் றோல் மாதிரி இருக்குமா............. :D

Link to comment
Share on other sites

இதென்ன கேள்வி? அவையும் கட்டாயம் வருவினம்! சரிதானே?

குருவிகள் தற்போது லண்டனில் வதியவில்லை...எனவே விழாவுக்கு நேரடியாக சமூகம் தரமுடிமோ தெரியவில்லை... இருந்தாலும் உங்களுக்கான எங்கள் வாழ்த்துக்கள் என்றும் எங்கும் இருக்கும்...! :wink: :P

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இளைஞன் இளைஞனாக வந்தால் நான் கிழவன் வேஷத்தில் வருகின்றேன் (இந்தியன் ஸ்ரைலில்) :wink:

Link to comment
Share on other sites

இளைஞனுக்கு எனது வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

இளைஞனுக்கு வாழ்த்துக்கள்.. யேர்மனீல வைச்சிருந்தால் வந்திருக்கலாம்.. :D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இளைஞன். வெளியீடு சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்.

அழைப்புக் கிடைத்தது ஆனால் லண்டன் வர முடியாதுள்ளது

ஜேர்மனி அறிமுக விழாவிற்கு நிச்சயம் வருவேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இளைஞனுக்கு வாழ்த்துக்கள்.. யேர்மனீல வைச்சிருந்தால் வந்திருக்கலாம்.. :D

ஜேர்மனியில் அறிமுகவிழா இருக்கு. அதுக்கு சாட்டுச் சொல்லாமல் வந்திடுங்கோ சோழி. :D

Link to comment
Share on other sites

எட்டா தூரத்தில் நானிப்பதால்

பட்டென்று உம் நிகழ்வுக்கு

வரமுடியவில்லையேன்றோரு

மன வருதம் இருந்தாலும்...

என் மனம் உங்கள் அரங்குகளை காணுகிறது....

உள்ளத்தில் உவகையுடன் வாழ்த்துகிறேன்..

இதே நிலமையிலே தான் நானும் அண்ணா

உங்கள் முயற்சி வெற்றியளிக்க எனது அன்பான வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இன்றய தின உங்களின் விழா சிறப்பாய் நடைபெற வாழ்த்துக்கள்.. இளைஞன்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.