Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

. நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை .............பிறக்கும்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

. நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை .............பிறக்கும்.

டிரிங் .........டிரிங் .......என்ற மணியோசை அவள் தூக்கத்தை கலைக்க ........எழுந்து தெலிபோனை எடுத்தால் .மறுமுனையில் அவள் தங்கை சாந்தி .........அக்கா என்ன இன்று இவ்வளவு நேரம் படுகிறாயா .............இல்லையாடியம்மா .நேற்று அம்மாவை கனாக்கண்டேன் அது தான் ....இரவு முழுக்க நித்திரையில்லை விடிந்தது தெரியாமல் தூங்கி விடேன் . இப்போது எத்தனை மணி உங்க நாடில்.? .காலை எட்டு மணியாகிறது . அக்கா வார ஞாயிறு ஆவணி இருபத்திநாலு ........அம்மாவின் இறந்த நாள் .........என்று அவர்கள் சம்பாஷனை போனது .........அத்தொலைபேசி உரையாடல் முடிந்தாலும் அவள் நினைவு மட்டும் தாயகதை நோக்கி பறந்தது ........

தமிழ் ஈழத்தின் தீவக பகுதியில் அவள் வாழ்விடமும் பிறந்த மண்ணும். தொண்ணூறுசிதறியோடி ஒரு கோவிலை அடைந்த ஒரு பொழுதில் ..........நாள் முழுக்க நடந்த களை சரியான உணவு இல்லத நிலை .ஒரு கொடிளைல் தஞ்சமடைய சென்ற நேரத்தில் ,அது ஜனதிரளால் நிறையவே , அவள் குழந்தைகளுடன் அருகிலிருந்த பள்ளியில் தஞ்சமடைந்தாள். கடைசியாக அம்மாவையும் அப்பாவையும் கடைசி தங்கையையும் கண்டது அதுவாக தான் இருக்க போவது தெரியாது அவளுக்கு. அந்த சனத்திரள் மத்தியிலும் அம்மா சொல்கிறா .இங்க சன கூடம் நாங்க சமாளிக்கிறோம் நீயும் பிள்ளைகளும் உன் மாமா மாமியுடன் பள்ளிக்கூட பக்கமாய் போய் ஒதுங்க்குங்கோ ....பிள்ளைகளுக்கு பால் மா பிஸ்கட் கொண்டு வந்தனியே ....? இது தான் கடைசி வார்த்தை . ஓம் அம்மா ரண்டு நாளுக்கு சமாளிக்கலாம். ஆமி போன பின் வீடுக்கு போகலாம் தானே .......ஹெலி சத்தம் கேட்குது ஓடுங்கோ ....இரவிரவாய் நித்திரை விழிப்பு ..........

ஒரு உறவினர் துணையுடன் . அவள் அராலி .........கடந்து நடக்க ஆரம்பித்தாள் ........எதுவுமே தணிந்த பாடாய் இல்லை ........ஒவ்வொரு இடமாய் நடந்து .......தங்கி ...இரவைக் கழித்து .ஒரு மறை ..... மாவட்ட கோவிலை அடைந்தாள். லங்கையிலே பிரபலமான கோவில். ....அங்கு அவளுக்கு முன்பே ........அந்த வளவும் கோவிலும் நிறைந்து விட்டு இருந்தன...........ரண்டு வாரங்களின் பின் இடியோசை போல ஒருசேதி ...........அவளின் தாய் , ஹெலி யில் இருந்து ஏவப்பட்ட ஒரு துப்பாக்கி சன்ன்தால் இவர்கள் புறப்பட்ட அன்று இரவே .........காலமாகி விடார் என்று .........ஐயோ கடவுளே நானும் அங்கு இருந்து இருந்தால் .......நினைக்கவே நெஞ்சு பதறியது .........என் தாயை கடைசியில் கட்டையிலும் பார்க்கவிலையே .........அம்மா என்று அவள் மீது விழுந்து அழவில்லியே ..........ரத்தத்தை பாலாகி ஊட்டி வளர்த்த அந்த தாய் ..........நோயிலும் பசியிலும் அரவணைத்த தாய் .......பருவத்தே பள்ளி விட்டு , சபையோர் புகழ....கல்வியிலே முன்னிர்ற்க வைத்த தாய் .........எழு புத்திர பாக்கியத்தில் நான்காவதாய் என்னை பெற்ற தாய் ....மண் கொண்டு போய் விடதே. காலம் தான் எவ்வளவு வேகமாய் .........இன்று இத்தனை வருடங்கள் சென்றும்

.....இன்னும் மோசமாக செல்லும் என் தேசம் .........கடவுளே இதற்கு ஒரு கங்கு கரை இல்லயா .......? வன்னியிலே மக்கள் படும் கஷ்டம். .......இனம் தினம் அலையும் சேதி ..........வயது இன வேறுபாடின்றி .......அழிக்க க்கப்படும் மக்கள். புனர் வாழ்வு .... தீர்வு என்று .......சர்வ தேசத்தின் இழுத்தடிப்பு ...........ஆட்சியாளனின் இன வெறி ..........ரத்தம் குடிக்கும் பாது காப்பு தலைவனின் ..........கோர முகம் கொண்ட கொலை வெறி ........இத்தனைக்கும் என தேசம் .............ரத்தமும் சதயுமாய் .......கிபீர் கொத்துக்குண்டுகள்.எனறு அத்தனை அழிவு கருவிகளும் என் இனத்தை பதம் பார்க்க ...........கொடியவனுக்கு ஒரு சாவு வராதோ ? பாது காப்பு வலயம் எனும் பெயரில் ....வடித்தெடுத்து .......கொலைக்களம் ,,,,சித் திரவதை கூடம் அனுப்பும் .......நடவடிக்கை. என்று தான் தீருமோ ? வெள்ளத்திலும் ....கொடிய வெயிலிலும் பங்கர் எனும் அகழி வாழ்கை ..........துன்பமும் துயரமும் என் தலை முறையுடன் போகட்டும்.....புதிய யுகம் பிறக்கட்டும் ...அமைதி நிலவட்டும் .......மதி கெட்ட இன வெறி மகிந்த ஆட்சி மறையட்டும் .........புதிய உலகம்பிறக்கட்டும் என் இனம் புத்துணர்ச்சி யுடன் நம் தலைவன் வழியில் மலரட்டும் .............தமிழ் ஈழம் தான் .........ஒரே தீர்வு .........

.பலவாறு சிந்தனையில் மிதந்தவள் ....பாடசாலை விட்டு வ்ரும் பிள்ளைகளுக்கு உணவு தயாரித்து விட்டு ............வீதியில் நடக்கும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்து கொள்ள ...........புறப்படுகிறாள் .......அங்கு ........அவளுக்கு முன்பே சனக்கூட்டம் ........நிறைந்து கோஷங்கள் கேட்கிறது . நிறுத்து ......நிறுத்து ......இனப்படுகொலையை.....தேவை ...ஒரு யுத்த நிறுத்தம் ..கொண்டு வா ....அமைதியை ..... தேவை .........தமிழ் ஈழம் ........விடுதலைப்போராளி பிரபாகரன் .......வாழ்க . எங்களுக்கு தேவை தமிழ் ஈழம்.........இன்று உலகெங்கும் தமிழர் வாழும் நாடுகள் எல்லாம் உரத்து ....ஒலிக்கும் ஓசை ....கேட்குமா ?

தீருமா அவலம் நிறைந்த தேசத்தின் அவலம் .........பிறக்குமா தமிழ் ஈழம் ........அது ஏற்கனவே இருக்கு .........கிடைக்குமா அங்கீகாரம் ........காலமும் கடமையும் ...இணைந்து ஒரு விடிவு பிறக்கும்

. நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை ..............பிறக்கும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆட்டோ பயாகிராபியா அக்கா..... அசத்திட்டீங்க போங்க

தாகமும்... சோகமும்... தெரிகிறது

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நன்றி .......சரவெடி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அவர்களே

தங்களின் கதை கண்டு இரசித்தேன்.

தமிழ் நன்று, உணர்வு நன்று.

தங்கள் ஆக்கங்கள் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை

தாயக உணர்வுடன் வந்த கதை அற்புதம்

தங்கள் ஆக்கங்கள் தொடர வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான ஆக்கம் அக்கா

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தங்கள் ஆக்கங்கள் தொடர வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

 • 1 month later...
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா!

நடந்த கொடுமைகளை நினைத்தால் உணவும் இறங்க மறுக்கிறது. சாப்பிட சிறிது நேரம் தாமதமானால், வயிறு காந்தும்பொது, "அய்யோ, எம்மின மக்கள் பல நாள் பட்டினி கிடந்து மாண்டு போனார்களே" என்னும் எண்ணம் வதைக்கிறது. இப்படியே ஒவ்வொரு விடயத்திலும். இன்னும் தீவிரமாக ஏதாவது செய்திருக்க வெண்டுமோ என்று அடித்துக்கொள்ளுகிறது. ஆயினும் மனதை தளரவிட்டேனில்லை. நீங்களும் மனம் தளர வேண்டாம். தீவிரமாக நம்பிக்கை கொள்ளுவோம். நிச்சயம் ஈழம் மலரும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அக்கா ஒவ்வொரு தன்மான தமிழனும் தெளிந்த சிந்தனையுடன் செயல் பட்டால்

நிச்சயமாக...... கட்டாயமாக.......உறுதியாக நம்பிக்கையுடன் காத்திருக்கலாம்....

உங்களின் தனி நாடு மலரும் என்று................

உங்கள் ஆக்கம் இன்றய நிலையை உணர்த்தி நிற்கிறது!!!!!!

நன்றி அக்கா!!!!!

அன்புடன்

மாறன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கறுப்பு யூலை – 38ம் ஆண்டு- பிரித்தானியா Posted on July 25, 2021 by சமர்வீரன்  19 0 1983 யூலை இன அழிப்பைத்தொடர்ந்து இலங்கைத் தீவு இரு தேசங்கள் கொண்டதென்பதை சிறீலங்கா அரசாங்கம் உணர்ந்ததும், தமிழீழத் தனி அரசே தமிழ் மக்களுக்கான ஒரே தீர்வு என்பதனை தமிழ்மக்கள் தமது ஆன்மாவில் உரமேற்றிக் கொண்டதுமான நாள் யூலை 23 ஆகும். தமிழீழ மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசாங்கம் 1983ம் ஆண்டு மேற்கொண்ட இன அழிப்புப்போர் நடைபெற்று இந்த ஆண்டுடன் 38 ஆண்டுகள் ஓடிவிட்டன. தொடர்ச்சியாக ஒருவார காலம் மேற்கொண்ட இன சுத்திகரிப்பு நடவடிக்கையில் 3000க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இனப்டுகொலை செய்யப்பட்டும் சொத்துக்கள் அழிக்கப்பட்டும் சூறையாடப்பட்டும் பெரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர். 38ம் ஆண்டு நினைவேந்தலை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து இலக்கம் 10 டவுனிங் ஸ்ட்ரீட் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். நிகழ்வானது அகவணக்கத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்தும் நடைபெற்றது. https://www.kuriyeedu.com/?p=342793
  • கொழும்பான் இது பம்பா ஹிந்து பழைய மாணவர், ரேடியோ அறிவிப்பாளர் முகுந்தனா?
  • பெரும்ஸ் சொல்வதை போல நீங்களே தொடங்குங்கள். நான் வழமையாக ஆர்வமாக பார்ப்பேன். இந்த முறை ஒரு விசயம் ஒப்பேத்த வேண்டி இருப்பதால் இன்னும் பார்க்க தொடங்கவில்லை. எப்படியும் அத்லெடிக்ஸ், சைக்கிளிங், சுவிமிங் சூடு பிடிக்கும் முன் தொடங்கிவிடுவேன்.
  • மாறாத வடுவை ஏற்படுத்திய கறுப்பு யூலையின் நினைவு நிகழ்வு கால்சுறு (Karlsruhe Germany) Posted on July 25, 2021 by சமர்வீரன்  38 0 என்றும் தமிழர்களின் உள்ளத்தில் மாறாத வடுவை ஏற்படுத்திய கறுப்பு யூலையின் 38ஆம் ஆண்டை முன்னிட்டு 24.07.2021 அன்று யேர்மனியில் பல்வேறு இடங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. அந்த வகையில் கால்சுறு (முயசடளசராந) நகரத்திலும் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் முன்னெடுக்கப்பட்டது. 24.07.2021 அன்று 16:30 மணிக்கு அகவணக்கத்துடன் உணர்வுப்பூர்வமாக ஆரம்பமானது. அகவணக்கத்தை தொடர்ந்து செயற்பாட்டாளர் ஒருவரால் கறுப்பு யூலை தொடர்பாகவும் தமிழீழத்தை வென்றெடுக் தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து தமிழர்கள் தொடர்ந்தும் விடுதலைக்காக போராட வேண்டுமென உரையாற்றப்பட்டது. கோவிட் 19 (ஊழஎனை 19) காலக் கட்டத்திலும் பல தமிழ் மக்கள் கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்து கொண்டார்கள். மேலும் எமது இளைய தலைமுறையினரும் கலந்து கொண்டு வேற்றின மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியும் விளக்கமளித்தும் தமது உணர்வுகளை வௌிப்படுத்தி நின்றது குறிப்பிடத்தற்கதாகும். காட்சிப்படுத்தல்களை வேற்றின மக்கள் பார்வையிட்டதோடு வாழிட மொழியில் ஒலிபரப்பாக்கப்பட்ட தமிழர்களின் வலிகளையும் உள்வாங்கினார்கள. இறுதியாக 18:38 மணிக்கு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்கவிடப்பட்டு வருகை தந்த தமிழுறவுகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்து தமிரின் தாரக மந்திரத்துடன் உணர்வுப்பூர்வமாக கறுப்பு யூலை நிகழ்வு நிறைவடைந்தது. https://www.kuriyeedu.com/?p=342830 983 யூலைப்படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் !-யேர்மனியில் நடைபெற்ற நிகழ்வுகள் Posted on July 25, 2021 by சமர்வீரன்  66 0 தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 38 ஆண்டுகள் நிறைவாகின்றன. சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் பல கோடிகள் பெறுமதியான மக்களின் வாழ்விடங்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எமது விடுதலைப் போராளிகளும்,மக்களும் குரூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் மக்கள் தென்னிலங்கையிலிருந்து வெளியேறி,பாதுகாப்புத் தேடி தமது பாரம்பரியத் தாயகப்பகுதியாகிய வட-கிழக்கில் தஞ்சம் அடைந்தனர். நமது தாயகமே நமக்கு பாதுகாப்பானது என்பதனை இந் நிகழ்வு உலகுக்கு உணர்த்தியது. நமது தாயக விடுதலைக்கான போராட்டமும் எழுச்சி கண்டது. சிறிலங்காவின் தமிழர் தேசத்தின் மீதான இன அழிப்பு எண்ணமும், நடவடிக்கைகளும் மிகத் தீவிரமடைந்திருக்கின்றனவேயன்றி எவ்வகையிலும் மாற்றமடைந்துவிடவில்லை என்பதனை 2009 ஆண்டு மே வரை நடந்தேறிய நிகழ்வுகள் மற்றும் இன்றும் எமது மக்கள் மீது சிங்கள பயங்கரவாத அரசு முன்னெடுக்கும் நிலப்பறிப்பு, ராணுவமயமாக்கல் ,கலாச்சார அழிப்பு எமக்கு இரத்தமும் சதையுமாக உணர்த்தி நிற்கின்றன. 1983 ஆம் ஆண்டு யூலையில் படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் வகையிலும் , தமிழின அழிப்பின் சாட்சியாக அமைக்கப்பெற்ற கண்காட்சியை முன் நிறுத்தி அனைத்துலக சமூகத்திடம் நீதி கோரி இன்றைய நாட்களில் யேர்மனியில் பல நகரங்களில் அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. . தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி https://www.kuriyeedu.com/?p=342769 கறுப்பு யூலை 38 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு-யேர்மனி,பீலபெல்ட், பிறீமன். Posted on July 25, 2021 by சமர்வீரன்  32 0 சிறிலங்கா சிங்கள இனவெறி அரசின் தமிழர்கள் மீதான இன அழிப்பின் ஓர் அங்கமான கறுப்பு யூலை 38 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு இன்று (22.07.2021)பீலபெல்ட் நகர மத்தியில் மிகவும் உணர்வோடு நினைவு கூரப்பட்டது. பீலபெல்ட் தமிழாலய நிர்வாகி திருமலைச்செல்வன் அவர்கள் நினைவுச்சுடரினை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். கவனயீர்ப்பு நிகழ்வில் இன அழிப்பு காட்சிகளை பார்வையிட்டவர்களுக்கு எமது மனிதநேய செயற்பாட்டாளர்களும் இளையவர்களும் துண்டுப்பிரசுரங்களை வழங்கியதோடு கறுப்பு யூலை படுகொலை பற்றியும் விளக்கமளித்தார்கள். இதேபோன்று கறுப்பு யூலை கவனயீர்ப்பு நிகழ்வானது நாளையும் நாளை மறுநாளும் யேர்மனியில் பல முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழரின் தாகம் தமிழீழ தாயகம். https://www.kuriyeedu.com/?p=342931
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.