Jump to content

குட்டிக்கதை

Recommended Posts

ஒரு ஊரில் நான்கு நண்பர்கள் இருந்தார்கள். நான்கு பேரும் ஒரே ஊரில் வாழ்ந்தாலும் வெவ்வேறு பாடசாலைகளில் கல்வி பயின்றார்கள். இதில் முதலாமவன் பெயர் சங்கர், இரண்டாவது நண்பனின் பெயர் பானு, மூன்றாவது நண்பனின் பெயர் கார்த்திக், நான்காவது நண்பனின் பெயர் ஜோ.

ஒருநாள் நான்கு பேரும் வழமைபோல் கிரிக்கட் விளையாடுவதற்காக ஊரில் இருந்த ஒரு ஒதுக்குப்புறமான வெளியிற்கு துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது....

சங்கர் திடீரென்று தனக்கு தலை சுற்றுவதாய் கூறி அலர சங்கரை வைத்து துவிச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு போன ஜோ தடார் என்று கால் பிரேக் அடிச்சு கிரீச் என்ற சத்தத்துடன் சைக்கிளை நிற்பாட்டினான். பக்கத்தில் இன்னுமொரு சைக்கிளில் கார்த்திக்கை ஏற்றிவந்த பானுவும் உடனடியாக தனது சைக்கிளையும் கால் பிரேக் அடித்து நிற்பாட்ட முயன்ற போது, அவனுக்கு கால் பிரேக் போடுவதில் அவ்வளவு அனுபவம் இல்லாததனால் அவன் தனது குதிக்காலில் தேயல் காயத்தை தேடிக்கொண்டான். அவனது காலில் வெளித்தோல் சிறுபகுதி உரிந்து இரத்தம் சொட்டியது. இப்போது சங்கருக்கு தலைசுற்றல், பானுவுக்கு காலில் காயம் என நான்கு நண்பர்களும் விளையாடப் போகும் வழியில் ஏற்பட்ட விபரீதம் காரணமாக நிலைகுலைந்து நின்றார்கள். இந்நிலையில்...

அருகில் இருந்த சிறு குடிசை வீட்டில் இருந்து வந்த நாய் இவர்களை பார்த்துப் பார்த்து சத்தமிட்டு குரைக்கத் தொடங்கியது. அந்த சிறிய அழகிய பனைஓலையினால் வேயப்பட்ட குடிசையினுள் இருந்து இந்த ஆரவாரங்களை கேட்ட ஒரு பெண் ஒருத்தி விரைவாக வெளியில் என்ன நடக்கின்றது என்று பார்க்க ஓடி வந்தாள். ஆனால், உள்ளே இருந்து "ஆமிக்காரங்கள் வாரங்களோ தெரியாது கவனம் பிள்ளை, வெளியில தலையை காட்டாதை!" என்று சொல்லும் ஒரு எச்சரிக்கைக் குரல் ஒன்று கேட்டது. சில கணங்களிலேயே குரலுக்கு சொந்தக்காரரான அந்த பெண்ணின் அம்மாவும் வெளியில் வந்துவிட்டார்.

"அம்மா யாரோ எங்கட வீட்டி வேலியோரம் சைக்கிளை விழுத்திப் போட்டு நிற்கிறீனம்!" இது மகளின் குரல். "அது யாரும் குடிகாரன்களா இருப்பாங்கள், நீ போகாதை, நான் யாரென்று பார்க்கிற பிள்ளை!" இது தாயின் மறுமொழி.

"மச்சான் இப்ப உனக்கு எப்பிடி இருக்கு?" என்று தலைசுற்றுவதாய் சொன்ன சங்கரிடம் பானு கேட்டான். "அது ஒன்றும் இல்லை மச்சான், நான் மத்தியானம் தோட்டத்தில பயிருக்கு தண்ணி இறைக்கேக்க கனநேரம் மண்ணெண்ணெய் மிசுனுக்கு பக்கத்தில நின்றனான். அதான் ஏதும் செய்திச்சோ தெரியாது. இப்ப எனக்கு எல்லாம் போட்டுது! நீதான் தேவையில்லாமல் அருமந்த காலை பிச்சுப்போட்டாய்!" இவ்வாறு சங்கர் பதிலளித்தான். "எட நாயே உனக்கு நான் எத்தனை நாள் சொன்னனான், ஒழுங்கா கையில இருக்கிற பிரேக்கை போடு, காலால போடாதையென்று? இன்றைக்கு வீணா காலில காயத்தோட நிற்கிறாய்!" ஜோ சொன்னான். "சரி, சரி அவனைப் பேசுவதில ஒரு பிரியோசனமும் இல்ல, காலுக்கு அவனுக்கு ஏதாவது மருந்து போடவேணுமோ இல்லாட்டி ரத்தம் தன்பாட்டில இப்ப நின்றுடுமோ?" கார்த்திக் கேட்டான்.

"எட தம்பிமார், ஆமிக்காரன் வார நேரத்தில ஒழுங்கையுக்க நின்று என்னடா பிள்ளைகள் செய்யுறீங்கள்? நேரகாலத்துக்கு வீடுகளிக்கு போய் சேருங்கோ பிள்ளைகள்!" இவ்வாறு அன்புடனும், அதிகாரத்துடனும் ஓலைக்குடுசை தாய்க்காரி இவர்களிடம் சொன்னாள். திடீரென்று "இல்லையம்மா ஒரு அண்ணாக்கு காலில காயம் பட்டு இரத்தம் வருது போல இருக்கு, இந்தாங்கோ இந்த பிளாஸ்ட்ரை அவேளிடம் குடுங்கோ!" என்று மகள்காரி பதிலளித்தாள். நான்கு நண்பர்களின் சம்பாசணையை வேலிக்குப் பின்னால் நின்று கேட்ட அந்தப் பெண் சுதர்சினி உடனேயே குடிசையினுள் ஓடிச்சென்று அவரச தேவைக்காக தான் கடையில் 50 சதம் கொடுத்து வாங்கிவைத்திருந்த பிளாஸ்டரை கொண்டுவந்திருந்தாள்.

"மச்சான் இந்தப் பிளாஸ்டரை போடு, மெத்தப் பெரிய உபகாரம் தங்கச்சி!" இவ்வாறு புண்ணுக்கு போடும் பிளாஸ்டரை தாயிடம் வாங்கிய ஜோ கூறினான். "ம்ம்ம்... எல்லாம் குழம்பிப்போச்சு! இப்ப என்ன செய்வம்? போய் விளையாடுவமா? இல்லாட்டி வீட்ட போவமா?" கார்த்திக் கேட்டான். இப்போது தூரத்தில் இரண்டு ஒழுங்கைகள் தள்ளி பல நாய்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு குரைக்கும் சத்தம் கேட்டது.

நாய்க்கூட்டம் கோரசாக ராகம் பாடுவதை கேட்ட அனைவரும் இராணுவம் ரோந்தில் வந்துகொண்டிருக்கின்றது என்பதை அறிந்துகொண்டார்கள். உடனடியாகவே நண்பர்கள் சைக்கிள்களில் திரும்பவும் தமது வீடுகளிற்கு போக ஆயத்தமானார்கள். "தம்பிமார், நீங்கள் வந்தபாதையால் போகாதிங்கோ, எங்கள் வீட்டுக்கு பின்னால் வடலிப்பக்கமாக ஒரு குச்சி ஒழுங்கை இருக்கு அதால போங்கோ" என்று தாய்க்காரி கூற இவர்கள் உடனடியாகவே தாய்க்காரிக்கு நன்றிகூறிவிட்டு குடிசையின் பின்பக்கத்தால் திரும்பிப்போக வெளிக்கிட்டார்கள். திடீரென்று சுதர்சினியும் "அம்மா போன கிழமை ஆமிக்காரன் இங்க வரேக்க எங்கட வீட்டுக்க சோதனை செய்யப்போறன் என்று வந்தவன், எனக்கு இங்க இருக்க பயமா இருக்கு, நானும் அண்ணாமாருடன் பெரியம்மா வீட்ட போகப்போறன்.." என்று சொல்லிக்கொண்டு அவசர, அவசராமாக தனது பழைய லுமாலா சைக்கிளில் ஏறி அவர்களுடன் புறப்பட்டாள். அனைவரும் தாயிற்கு "போட்டு வாறம்" என்று சொல்லிவிட்டு வேகமாக பனைமரங்களினூடாக வளைந்து, வளைந்துபோன கையொழுங்கையூடாக சைக்கிளில் மிதித்தார்கள். சுதர்சினிக்கு இந்தப் பாதை அத்துபடி என்றபடியால் அவள் முன்னால் போக அவளுக்கு பின்னால் நண்பர்கள் சென்றார்கள். போகும் வழியெல்லாம் பனையோலைகளும், பனம்பழம், பிய்ந்துபோன கங்குமட்டைகள் பனங்கொட்டையெல்லாம் வழிநெடுகலும் தட்டுப்பட்டது.

"தங்கச்சி உங்களுக்கு என்ன பெயர்? எங்க படிக்கிறீங்கள்?" என்று ஜோ கேட்க, "எத்தனையாம் வகுப்பு படிக்கிறீங்கள்?" என்று பானு கேட்டான். "இது சரியான பெரிய பனை வளவா இருக்கு! இருநூறு பரப்பாவது வரும்" என்று சங்கர் தன்பாட்டில் கூறிக்கொண்டான். இந்தமுணுமுணுப்பை கேட்ட ஜோ "இஞ்ச பாருங்கடா இவன் இதுக்க நின்றும் பனங்காணி அளந்து கொண்டு இருக்கிறான். இவனுக்கு எங்கபோனாலும் இந்த தோட்ட புத்தி போகாது" என்று சொல்ல பானு "டேய் சங்கர், நல்ல பெரிய பனங்காணியா இருக்கு, நீ இந்தக்காணிக்காரனின்ற மகளையே கலியாணம் கட்டு" என்று சொன்னான்.

வடலியினூடாகச் சென்ற குச்சிப்பாதை முடிவடைந்து வயல்வெளி வரும்போது திடீரென்று "உஸ்.." என்ற சத்ததுடன் யாருடையதோ துவிச்சக்கரவண்டி பஞ்சராகி காற்றுப் போகும் சத்தம் கேட்கத் தொடங்கியது. "ஐயோ என்ற சைக்கிள் ரியூப் ஓட்டையாகி காத்துப் போகுது.. நான் இதால வரேக்க அப்பவே நினைச்சனான் இப்படி நடக்கும் என்று.. இந்த வடலிக்கூடல் எல்லாம் ஒரே முள்ளுகள்.. இனி என்ன செய்யுறது?" இவ்வாறு சுதர்சினி கேட்க, "தங்கச்சி ஒன்றும் பயப்படாதிங்கோ! என்ற சைக்கிள் பின்கரியரில ஏறுங்கோ! நாங்கள் உங்களை உங்கள் பெரியம்மா வீட்டில கொண்டுபோய் சேர்க்கின்றோம்! ஜோ ஒரு கையால உங்கள் சைக்கிளை இழுத்துக் கொண்டு வருவான்!" என்று பானுவை சைக்கிளில் வைத்து ஏற்றிவந்த கார்த்திக்கூற, "இல்லை மச்சான் நானே பாரில் இருந்துகொண்டு ஜோ சைக்கிளை ஓட, தங்கச்சியின் சைக்கிளை ஒற்றைக் கையால் இழுப்பன்!" என்று சங்கர் சொன்னான். இறுதியில் சக்கு, புக்கு என்று இருந்த வயல்வெளிப் பாதையூடாக அவர்கள் தமது பயணத்தை தொடர்ந்தனர்.

தூரத்தில் திடீரென்று துவக்குச் சூடுகள் கேட்டது. டக், டக், டக், டுமீல்... டுமீல்... இறுதியில் "கும்" என்ற ஒரு பெரிய வெடிச்சத்தத்துடன் சூடுபாடு முடிவுக்கு வந்தது. "ஐயோ கடவுளே, சூடுகள் எங்கட வீட்டுப் பக்கமாத்தான் கேட்கிது, அம்மாவை விசர் வேலை பார்த்து மறந்துபோய் வீட்டில விட்டுட்டு வந்திட்டன். அம்மாக்கு என்னவும் பிரச்சனையோ தெரியாது. எனக்கு செரியான பயமா இருக்கு" என்று சொல்லிவிட்டு சைக்கிள் பின் கரியரில் இருந்த சுதர்சினி வீரிட்டு அழத் தொடங்கிவிட்டாள். ஜோ, "தங்கச்சி இப்ப அழுதுகொண்டிருக்க நேரம் இல்லை, உங்கட பெரியம்மா வீடு எங்க இருக்கு என்று உடன சொல்லுங்கோ!" என்று உரக்கச் சொன்னான். "ம்ம்ம்.. அது புளியடிப் பிள்ளையார் கோயிலுக்கு பக்கத்தில இருக்கு, நீங்கள் என்னை ரயில்வே பாதையடியில் இறக்கிவிட்டாலே போதும், அங்கால நான் சைக்கிளை உருட்டிக்கொண்டு நடந்து போயிடுவன்" என சுதர்சினி சொல்ல "அட அங்கயே நீங்கள் போறீங்கள்? நானும் அதடியிலதான் இருக்கிறன்" என கார்த்திக் பதிலளித்தான். வயல்வெளிப் பாதையினூடாக சென்றதனால் சைக்கிள் ரயர்கள் முழுவதும் சேரு அள்ளுப்பட்டு பெரிய மண் வளையமாக ரயரைச் சுற்றி இருந்தது. மட்காட் எல்லாம் சேரு தெறித்துக் கொண்டு இருந்தது. இதனால் இவர்களால் விரைவாக துவிச்சக்கரவண்டிகளை ஓட முடியவில்லை.

"டேய் சங்கர் இப்ப என்ன நேரமடா இருக்கும்?" பானு கேட்க "பின்னேரம் ஐஞ்சு மணி சொச்சம்" என ஜோ சொன்னான். "இண்டைக்கு எனக்கு ஒரே கெட்டகாலமா இருக்கு, யாரிண்ட முகத்தில முளிச்சனோ தெரியாது" பானு சளித்துக் கொண்டான். "உனக்கு மாத்திரமே? எல்லாருக்கும் தான் கெட்டகாலம்.. இப்ப திருவிழா நடந்திருக்கு, பெடியளிட்ட ரோந்துக்கு வந்தவேள் நல்லா வாங்கிக் கட்டி இருக்கிறீனம் போல! நாளைக்கு ஊரை ஆமிக்காரன் ரவுண்ட் அப் செய்யப் போறாங்கள்" கார்த்திக் சொன்னான். வயல்வெளி முடிந்து இப்போது ரயில்பாதைக்கு அண்மையாக இவர்கள் வந்துவிட்டார்கள். தூரத்தில் மிகவிரைவாக இரு ஆமி ஜீப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக சீறீக்கொண்டு வருவது தெரிந்தது.

Link to comment
Share on other sites

  • Replies 313
  • Created
  • Last Reply

பகுதி ஒன்று

"டேய் ஆமி வாராண்டா! நைசா இந்தவீட்டிக்க மெல்ல போவம், பதற்றப்படுற மாதிரி வெளியில் காட்டிக் கொள்ளாமல் பேசாமல் வாங்கோ.. இது எனது ஒரு தூரத்து சொந்தக்கார ஆக்களின் வீடு, பயப்படாம வாங்கோ.." கார்த்திக் சொல்வதை மெளனமாக கேட்டபடி அவனை அனைவரும் தொடர்ந்தார்கள். வழமையாக குரைத்து அட்டகாசம் செய்யும் அந்த பிரவுண் கலர் கடுவனும், இவர்களின் நிலமை அறிந்தோ என்னமோ அமைதியாக கழுத்தை முன்னே நீட்டிய இரண்டு கால்களினுள் வைத்தபடி பேசாமல் இருந்தது. அது ஒரு ஓலைகளால் வேயப்பட்ட வீடு. முற்றத்திலும், வீட்டினுள் உள்ளே இருப்பதைப்போல் மண்ணால் மெழுகப்பட்டு இருந்தது. சுற்றிவர செம்பரத்தை, மல்லிகை என்று பூமரங்களாய் காட்சி தந்தது. இதைவிட வீட்டுவேலியோரம் இரண்டு பெரிய கொன்றை மரங்கள் மஞ்சள் நிறத்தில் நீண்ட அழகிய பூக்களுடன் பூத்துக் குழங்கி வீடு பூஞ்சோலையாக காட்சி தந்தது. வீட்டு தகரப்படலை திறக்கும் சத்ததை கேட்ட சின்னப்பெடியன் ஒருவன் "யாரோ வீட்ட வாறீனம்" என்று புளுகமாகக் கத்தியபடி யார் வருகின்றார்கள் என்று பார்ப்பதற்கு வெளியே ஓடிவந்தான். அவனுக்கு பின்னால் அவனைத் தொடர்ந்து அவனது இரண்டு வயது தங்கையும் பின்னால் அரக்கப் பறக்க ஓடி வந்தது. பிள்ளைகள் வெளியே ஓடுவதைக் கண்ட தாய் பிள்ளைகளை தொடர, கணவன் மனனவியைப் பின்தொடர.. இப்படியே முழுக்குடும்பமும் இவர்களை வரவேற்க வெளியே வந்துவிட்டது.

"எட தம்பி கார்த்திக்கு! என்ன கனகாலத்குக்கு பிறகு இங்காலப் பக்கம் கூட்டாளி மாரோட வந்திருக்கிறாய்? உது யார் உந்த பொம்பிளைப் பிள்ளை? உள்ள எல்லாரும் வாங்கோ! இஞ்சாருங்கோ அந்த வாங்க பிள்ளைகள் இருப்பதற்கு வெளியில எடுத்துப் போடுங்கோ... " இவ்வாறு வீட்டுக்காரி சொன்னாள். "அது ஒன்றும் இல்ல மாமி, நாங்கள் விளையாடப் போகேக்க ஒரு சின்னப் பிரச்சனை, பிறகு வீட்ட திரும்பிப் போவம் என்று பாத்தால் ஆமிக்காரன் ஜீப்பில வாரான். அதான் உங்கள் வீட்டுக்க அவசரத்தில் வந்திட்டம்" இப்படி கார்த்திக் விளக்கம் சொல்ல "ஆமிஆமி.." என்று கத்தியபடி துணிவுடன் படலையைத் திறந்து வெளியே போன சின்னப் பெடியன் வெளியில் ஆமி ஒன்றையும் காணவில்லை என்று வந்து கூறினான். ஜீப்பில் வந்த ஆமி இவர்கள் வயல்வெளியூடாக வந்த பாதையூடாக திரும்பி வேறு பக்கமாக சென்றுவிட்டார்கள்.

"இப்ப நாங்கள் என்ன செய்யிறது? எப்பிடி வீட்ட போறது? " என்று பானு கவலையுடன் கேட்டான். சுதர்சினியின் முகம் பயத்தாலும், வெட்கத்தாலும் சிவந்துபோய் இருந்தது. சங்கருக்கும் இதயம் படக் படக் என்று அடித்துக் கொண்டிருந்தது. ஆனால், ஜோவும், கார்த்திக்கும் மட்டும் நிலமையை மறந்து ஜாலியான மூட்டில் இருந்தார்கள். "டேய் அங்க பாரடா, கரம்போர்ட் பலகை இருக்கு, கனகாலம் விளையாடி, இண்டைக்கு விளையாடுவமே?" என்று கேட்டான். "நல்லா விளையாடு ஆமிக்காரங்கள் எங்களுக்கு கரம்போர்ட் அடிக்கப்போறாங்கள் " என பானு கோபத்துடன் பதில் அளித்தான். இதற்கிடையில் இவர்கள் கதைத்துக் கொண்டு இருக்கும்போது தட்டில் கொஞ்ச முறுக்கு, ஒடியலைக் கொண்டு வீட்டுக்கார தாய் வந்துவிட்டாள். "கனகாலத்துக்கு பிறகு வந்திருக்கிறியள், இதச் சாப்பிடுங்கோ, தேத்தண்ணி போட்டுக் கொண்டுவாரன், ஏதாவது பிரச்சனை என்றால் நீங்கள் இண்டைக்கு இரவைக்கு இஞ்சயே நிற்கலாம். அப்பா சிங்களம் கதைப்பார். ஏதாவது பிரச்சனையென்றா அவர் பார்த்துக்கொளவார். நீங்கள் இப்ப வெளியில் போகவேண்டாம். துவக்குச் சத்தம் எல்லாம் கேக்கிது." இப்படிச் சொல்லிவிட்டு தாய் குசினிக்குள் போய்விட்டாள். அனைவரும் ஒடியலையும், முறுக்கையும் வாங்கில் இருந்து கடித்தபடி கரம்போர்ட் விளையாட தயார் ஆனார்கள். சுதர்சனி சின்னக்குழந்தையை போய்த்தூக்கியபடி "குட்டிக்கு என்ன பெயர்?" என்று கேட்டாள்.

நேரம் இப்போது மாலை ஆறுமணியளவு ஆகத் தொடங்கியது. வழமையாக இவர்கள் சூரியன் மறைந்து பந்து கண்ணுக்கு கறுப்புப் புள்ளியாக தெரியும்வரை துடுப்பாட்டம் ஆடுவார்கள். சிலவேளைகளில் சங்கரின் அப்பா அவனை நீண்டநேரமாக காணவில்லை என்று கோபித்துக் கொண்டு சங்கரிற்கு அடிப்பதற்கு விளையாடும் இடத்திற்கே வந்துவிடுவார். இப்படித்தான் ஒருமுறை தோட்டத்தில் செய்யவேண்டிய வேலைகளை பாதியில் விட்டுவிட்டு தந்தையாருக்கு சொல்லாமல் கிரிக்கட் மச் விளையாட வந்த சங்கரிற்கு பலர் முன்னிலையில் மட்ச் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தபோது மைதானத்திற்கு வந்த அவனது அப்பா மொங்கு மொங்கென்று சங்கரை மொங்கிவிட்டார். விளையாட்டு மைதானத்தினுள் அவிட்டுவிட்ட காளைமாடு மாதிரி புகுந்து விக்கெற்றுக்களை புடுங்கி எறிந்து ரகளையும் செய்துவிட்டார். இதனால் சங்கரிற்கு பெருத்த அவமானமாக போய்விட்டது. இதனால் நீண்டகாலத்திற்கு நண்பர்களுடன் விளையாட வராமல் இருந்துவிட்டு இப்போதுதான் சில கிழமைகளாக கிரிக்கட்டு விளையாட்டில் திரும்பவும் ஈடுபட்டு இருந்தான். சங்கரிற்கு இப்போது பதினேழு வயது ஆகி இருந்தாலும் அவன் அவனது அப்பாவின் பூரண கட்டுப்பாட்டினுள் இருந்தான். தந்தையார் சொல்வதை ஒழுங்காக கேட்காது இசகு பிசகாக ஏதாவது செய்தால் அவனுக்கு தாராளமாகவே வீட்டில் பூசைகள் விழுந்தது. வீட்டில் மூத்தபிள்ளையாக சங்கர் இருந்ததால் அவன் கவனமாக வளர்க்கப்படவேண்டும் என்பதில் அவனது தந்தையார் மிகவும் அக்கறையாக இருந்தார். காலங்காலமாக மூதாதையர் செய்துவந்த விவசாயத் தொழில்பற்றி சங்கரும் ஓரளவுக்காவது அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அவன் வீட்டில் சும்மா நிற்கும் நேரத்தில் அவனை தோட்டத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனால், மகன் படித்துபெரிய ஆளாக வரவேண்டும் என்பதில் அவர் மிகவும் அக்கறையாக இருந்தார். இதற்காக சங்கரை மற்றைய பெற்றோர் செய்வதுபோல் தனியார் ரியூசனுக்கு படிப்பதற்கு அனுப்பாது வீட்டிலேயேவைத்து, ஊரில் அண்மையில் ஏ.எல் பரீட்சை செய்து சிறப்புச் சித்திபெற்ற மாணவர்களை கூப்பிட்டு அவர்களிற்கு பணம் கொடுத்து மகனிற்கு படிப்பித்தார். சங்கரும் ஊரில் உள்ள பாடசாலையில் வர்த்தகப்பிரிவில் படித்து வகுப்பில் முதலாவது மாணவனாக வந்துகொண்டிருந்தான்.

சங்கரின் யோசனையெல்லாம் அப்பா தன்னைத் தேடி அவர்கள் வழமையாக விளையாடும் இடத்திற்கு போகும்முன் வீட்டுக்கு போய்விடவேண்டும் என்பதாகவே இருந்தது. இந்நிலையில் பால் கொடுப்பதற்காக வந்த ஞானி அக்கா அந்த சந்தோசமான செய்தியை இவர்களிற்கு செப்பிவிட்டு சென்றாள். சற்றுமுன் சூடுபாடு நடந்ததற்கான உண்மையான காரணம் இருவேறு திசைகளினூடாக ரோந்துவந்த வெவ்வேறு ஆமி குழுக்கள் தம்மிடையே தவறுதலாக மோதிக்கொண்டதால் வந்தது என்றும், இப்போது அவர்கள் அனைவரும் திரும்பி தமது முகாம்களிற்கு போய்விட்டார்கள் என்றும் சொன்னாள். அவள் சொல்லிமுடிப்பதற்குள் இந்தச் செய்திசற்றுமுன்னமே பலருக்கு தெரிந்துவிட்டதால், திடீரென மயானமாகக் காட்சிதந்த தெரு சைக்கிள் மணியோசைகள், லாண்ட்மாஸ்ரர் ஒலி, சீசீ மோட்டார் வண்டி சத்தங்களால் நிறைந்து கலகலப்பாகிவிட்டது. இதற்கிடையில் வீட்டுக்கார தாய் "தம்பிமார் நான் தேத்தண்ணிய ஊத்திப்போட்டன். குடிச்சுப்போட்டு போங்கோ! இண்டைக்கு எங்கள அந்த புலியடி பிள்ளையான் தான் காப்பாற்றி இருக்கிறான். கடவுளே, இப்படி எத்தன நாட்களுக்கு எங்களச் சோதிக்கப்போறாய் " என சொல்லி பெருமூச்சு விட்டபடி தேனீரை பரிமாறினாள்.

"அண்ணாமார் உங்கட உதவிக்கு நன்றி, என்ர பெயர கேட்டனீங்கள் சொல்ல மறந்துபோனன். என்ற பெயர் சுதர்சினி, அந்தா தெரியுது! அங்கதான் ஓ.எல் படிக்கிறன்." தூரத்தில் தெரிந்த பாடசாலையை சுட்டிக் காட்டியபடி சுதர்சினி தனது காற்றுப்போன சைக்கிளை உருட்டியபடி பெரியம்மா வீடு நோக்கிநடக்க வெளிக்கிட்டாள். "இப்பதானே பிரச்சனை ஒன்றும் இல்லை என்று சொல்லுறீனம்! ஏன் நீங்கள் உங்கட வீட்டயே திரும்பிப்போகலாமே?" ஜோ சுதர்சினியைப் பார்த்துகேட்க, "இல்ல, நான் கனகாலம் பெரியம்மாட்ட போகேல, இண்டைக்கு அங்கபோய் நிக்க போறன்" என பதில் அளித்தாள். கார்த்திக்கும் தனது சொந்தக்காரருக்கு நன்றி தெரிவித்து, நண்பர்களிற்கும் பிரியாவிடை கூறிவிட்டு கால்நடையாக சுதர்சினியுடன் தனது வீடு நோக்கி பயணமானான். ஜோ சங்கரை தனது சைக்கிளில் ஏற்றிவந்து இருந்தான். பானு தனது சைக்கிளில் கார்த்திக்கை ஏற்றிவந்திருந்தான். இப்போது எல்லோரும் தத்தம் பாதைகளில் பிரிந்து சென்றனர்.

சுதர்சினியும், கார்த்திக்கும் ஒருவருடன் ஒருவர் கதைத்தபடி புளியடிப் பிள்ளையார் கோயில்பக்கமாக நடக்கத் தொடங்கினர். "பிறகு, அப்ப சொல்லுங்கோ..." கார்த்திக் சுதர்சினியைப் பார்த்து கேட்க...

Link to comment
Share on other sites

கார்த்திக் சுதர்சினியைப் பார்த்து கேட்க...

கார்த்திக் நான் நல்லா பயந்தே போனன் தெரியுமா. இப்பிடி பயந்து பயந்து நாங்கள் எவ்வளவு நாளைக்கு வாழுறது? எங்களுக்கு என்று ஒரு சொந்த நாடு இருந்தால் தான் நாங்கள் நிம்மதியா வாழலாம். பேசாமல் படிப்ப விட்டுட்டு இயக்கத்தில போய் சேரலாம் போல இருக்கு....... ஆனால் எனக்கு இப்ப வயசு காணாது. என்ன சேக்கமாட்டீனம்" என்று சுதர்சினி கவலையுடன் சொல்ல......

Link to comment
Share on other sites

ஆகா இது தொடர்கதை மாதிரி போகுதே மாப்பி. ஒரு பக்க கதையா வாற மாதிரி முடிசுட்டு இன்னொரு புதுக்கதையா மற்ற கதையை தொடர்ந்தால் நல்லா இருக்கும் என்டு நினைக்கிறன். :D

Link to comment
Share on other sites

அதேதான் தானே ஆரம்பித்து தானே முழுவதையும் கொண்டுபோய்ட்டு இருக்கார், மாப்பி இதை சிறுகதியில எழுதலாம் நீங்கள்

நான் நினைக்கிறன் மாப்பி கதையில லயித்து முழுவதையும் எழுதிட்டார் போல. சரி பறவாயில்லை

இதுதான் நிபந்தனை தொடர்ந்து எழுதுங்கோ

நாங்கள் தொடர்ந்து ஒரு கதையை உருவாக்குவோமா?

சரி நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் ஒருவர் இரு வரிகள் உபயோகிக்கலாம் ஆனால் கதை தொடர்ச்சியாக போக வேண்டும் அத்துடன் நீங்கள் மற்ற இரசிகர் பதில் எழுதும் வரைய்ம் பொறுத்து இருக்க வேண்டும் சரியா? ஆரம்பிப்போமா?

Link to comment
Share on other sites

நான் நினைக்கிறன் மாப்பி கதையில லயித்து முழுவதையும் எழுதிட்டார் போல. சரி பறவாயில்லை

இதுதான் நிபந்தனை தொடர்ந்து எழுதுங்கோ

அக்கா புது கதி ஆரம்பியுங்கள்

சுதர்சினியும், கார்த்திக்கும் ஒருவருடன் ஒருவர் கதைத்தபடி புளியடிப் பிள்ளையார் கோயில்பக்கமாக நடக்கத் தொடங்கினர். "பிறகு, அப்ப சொல்லுங்கோ..." கார்த்திக் சுதர்சினியைப் பார்த்து கேட்க... கார்த்திக் நான் நல்லா பயந்தே போனன் தெரியுமா. இப்பிடி பயந்து பயந்து நாங்கள் எவ்வளவு நாளைக்கு வாழுறது? எங்களுக்கு என்று ஒரு சொந்த நாடு இருந்தால் தான் நாங்கள் நிம்மதியா வாழலாம். பேசாமல் படிப்ப விட்டுட்டு இயக்கத்தில போய் சேரலாம் போல இருக்கு....... ஆனால் எனக்கு இப்ப வயசு காணாது. என்ன சேக்கமாட்டீனம்" என்று சுதர்சினி கவலையுடன் சொல்ல...... "எனக்கும் சேர விருப்பம், ஆனா அம்மா, அப்பாவ பிரிஞ்சுபோக மனமில்லாமல் இருக்கு. நான் வீட்டில ஒரே ஒரு ஆம்பிளப்பிள்ள, எனக்கு நாலு அக்காமார் கலியாணம் கட்டாம இருக்கிறீனம். இதாலதான் யோசனையா இருக்கு. இப்ப எல்லாரையும் இயக்கத்தில சேக்க மாட்டீனமாம். பயிற்சியும் செரியான கஸ்டமாம்.. எனக்கு ஒவ்வொருநாளும் ஆமிக்காரங்களிண்ட அக்கிரமங்கள பாத்து வெறுத்துப்போச்சு" கார்த்திக் அலுத்துக்கொண்டான். "ஓம் நீங்கள் போனா உங்கட அக்காமார் கவலைப்படுவீனம். எனக்கும் இதேபிரச்சனைதான். நான் வீட்டில ஒரேஒரு பிள்ள. ஆனா, நான் இயக்கத்துக்கு போகாட்டியும் வேறு வழிகளால எங்கட தமிழீழத்துக்கு உதவிகள் செய்வன்.." சுதர்சினி சொன்னாள். மெல்ல மெல்ல நடந்து தாம் போகவேண்டிய வீடுகளை இருவரும் அண்மித்துவிட்டனர். "டாங் டாங்" என்று இரவுப் பூசைக்காக அடித்த பிள்ளையார் கோயில் மணியோசை இருவரது காதுகளிலும் தமிழீழ தாயகத்தின் விடியலுக்கான ஓசையாக வந்து விழுந்து பெரிய சத்தமாக கேட்டது.

கதை முற்றும்! :P :P :P

Link to comment
Share on other sites

ஓ... ஒருவர் ரெண்டு வசனம் எழுதிவிட்டு இன்னொருவர் தொடர்ந்து எழுதும்வரை ரெண்டு நாள் பொறுத்திருக்க வேண்டுமா? மன்னிக்கவும்... நான் யாராவது கதையைதொடர்வார்கள் என்று பார்த்தேன். ஒருவரும் தொடரவில்லை. எனவே, என்பாட்டில் வண்டியை இழுத்துக்கொண்டு வந்துவிட்டேன். உங்கள் விதிகள் விளங்கவில்லை...

சரி, அப்ப நான் செல்வி தொடர்மாதிரி வருடக் கணக்காக இழுபடும்வகையில் ஒரு தொடர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் உங்களின் கதை நன்றாக இருக்கிறது. குட்டிக்கதை போல தொடர் கதையையும் எழுதக்கூடிய ஆற்றல் உங்கள் இருக்குது. பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லா இருக்குது காலால பிரேக் போட்டு காலில் புண் வந்த அநுபவம் எனக்கும் உண்டு.

Link to comment
Share on other sites

குட்டிக்கதை முடிஞ்சுதா.... ஹும் நல்லா எழுதிக் கொண்டு வந்தனீங்க ....இதே கதையை தொடாரா எழுத முயற்சி செய்து பாருங்க .பெரிய கதையாய் நல்லாயிருக்கும். :lol:

Link to comment
Share on other sites

இந்தக்கதையை தொடர்ந்து தொடர்கதையாக எழுதுவது கஸ்டம். ஏற்கனவே செல்வன் தொடர்கதையை தொடங்கிவிடேன். இந்தக் குட்டிக் கதையிலுள்ள பாத்திரங்கள் அனைத்தையும் அங்கே கொண்டுபோய் இணைத்து - ஜொயின் செய்துவிடுகின்றேன். இந்த நான்கு நண்பர்களின் இன்னொரு நண்பனாக செவ்வன் தொடரில் வரும் ஆதியை இணைத்துவிடுகின்றேன். உங்கள் கருத்துக்களிற்கு நன்றி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.