Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சிரிக்க மட்டு மல்ல சிந்திக்கவும் தான் ......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிரிக்க மட்டு மல்ல சிந்திக்கவும் தான் ........

என் பெரியக்காவின் பேரன் ஆறு வயது .....என் அக்கா வுக்கும் பேரனுக்கும் நடந்த

உரை யாடலாம .?........

சிஜன் : அம்மம்மா என் அழுகிறீங்கள் , ஏன் பிக்கா (பிஸ்கட்) வேணுமா ? .ஜூஸ் குடிசீங்க்களா ?

அம்மம்மா : இல்லய் குஞ்சு ...டி வீ பார்த்து அழுகிறேன் எங்கட ஊரில பிரச்னை . ஆட்கள் சாகினம் சுடு பட்டு , சாப்பாடு இல்லாம ,ஆமி ...கொடுமை செய்கிறானாம் .

சிஜன் : .....அம்ம்ம்ம்மா நாங்க சாப்பாடு கொண்டு போய் கொடுப்பமா ? ஆமியை யார்

சுடசொன்னது ..........

அம்மம்மா: உங்களுக்கு விளங்காது நாடுக்காக போராடுற மாமா மாரை பிடிக்க போகினமாம். சிங்கள லீடார் தான் சுட சொன்னது ........

சிஜன் : அந்த லீடருக்கு எத்தனை வயசு ..அவர் கார்ட் அட்டாக் வந்து சாக

மாடாரோ ?அப்ப சண்டை நடக்காது தானே .......

அம்மா : அவர் செத்தா வேறு ஒரு வர வந்து திரும்பவும் இதை தான் செய்வார் . எங்களுக்கு ஒரு நாடு இருந்தால் இது எல்லாம் இருக்காது ....(அவன் விடுவதாயில்லை )

சிஜன் : அம்மா , ஒரு நாடு வர என்ன செய்யவேணும் , ஒரு லீடர் வர வேணுமோ ?

அம்மம்மா: ஓம் அதுக்காக தான் புலி மாமாக்கள் சண்டை பிடிகினம்.

சிஜன் .........நான் கொழும்புக்கு போகட்டோ ? (சிரித்து )

அம்மாம்மா ......ஏன் குஞ்சு போய் என்ன செய்து வர போறீங்கள்.

சிஜன் : ................நான் போய் ...லோயர் மாமாவை கூடி கொண்டு போய் ......உங்களோட ஒரு அலுவல் கதைக்க வேணும் என்று சொல்லி .... சிங்கள லீடாரை ....சுட்டு போட்டு வரட்டா.....

அம்மம்மா .........ஐயோ குஞ்சு ...இந்த வேலை பார்க்க பெரிய மாமாக்கள் இருக்கினம் நீங்க படிச்சு .....பெரிய ஆளாய் வந்து அங்க கால் இல்லாம் கை இல்லாம இருக்கிற ஆட்களுக்கு வைத்தியம் செயுங்கோ .....

.அம்மம்மா எனக்கு நித்தா வருகுது ....காலயில் எழுப்பி விடுங்கோ ........நான் படிக்க வேணும் ...பெரிய ஆளாய் வந்து ...டாக்டரை வரவேணும் ...பிறகு கொழும்புக்கு போய் ஒரு ஆஸ்பத்திரி ....வைச்சு ....டாக்டராய் வரவேணும் ....பிறகு எலாரையும் ....சுகமாக்க வேணும் ..........

.( கடவுளே இந்த பிஞ்சின் மனதில் இத்தனை ஆசைகள். ....இனும் மனம் மாறாத எத்தனை மனிதர்கள். )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிரிக்க மட்டு மல்ல சிந்திக்கவும் தான்,வேதனையும் தருகுது

தமிழ் பெற்றோரின் சுயநலத்தை அந்த அம்மா வெளிகாட்டிஉள்ள. என்ட பிள்ள doctor ஆக வேணும் , மத்தவன் பிள்ள இருக்கிறன் போராட.

எத்தனையோ பெறோர் , தமது பிள்ளைகளின் புலி நண்பர்களுடன் கதைக்க வேணம் என்று தடுத்திருக்கிறார்கள். ஏனென்றல் அவர்கள் தமது பிள்ளைகளையும் போராட கூட்டி போய்விடுவார்கள் என்று.

அந்த புலி நண்பர்கள் தான் தனது பிள்ளையை இராணுவத்திடம் இருந்து பாதுகாக்கிறது என்று அந்த தமிழ் பெற்றோருக்கு தெரியாது.

அந்த அம்மா நீ பெரிய ஆள வந்து போராட போ என்று சொல்லவில்லை

Doctor ஆகிவிடு

சுயநலமே இரத்தத்தில் ஊறி போன எம் இன்னத்துக்கு போராடுவதில் பயன் ஒன்றும் இல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் சீலன் ..........புலம் பெயர்ந்து வந்த நீங்க சொல்ல கூடாது ......என் பேரன் போராட போக வேணும் என்று .....ஆயுதம் தூக்குவது மட்டும் தான் போராட்டம் அல்ல வன்னியில் வைத்திய துறையில் இருப்பவர்களும் தான் போராடுகிறார்கள். நம் இனத்தைக்காக்க ......இரவு பகல் பாராது அவர்களது சேவையும் ஒரு போராட்டம் மக்களை காக்கும் போராட்டம் .......பேரனை இங்கிருந்து சம்பாதிக்காமல் வெளி நாடு வாழ்கை வாழாமல் அங்கு சென்று சுகமாக்க வேணும் வைத்திய சேவை செய்யவேண்டும் என்பதும் ஒரு வகை போராட்டம் ...............நாடு மக்களை காப்பது ...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது இனத்தில் டாகுத்தர் மாருக்கு பஞ்சமே இல்லை.....எம் இனத்தவர்கள் "போர்விமான ஒட்டிகளாக" பயிற்சி எடுத்தால் தான் நல்லம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறுவனுக்கு உள்ள பொறுப்புணர்வு வியக்க வைக்கிறது...

எமது இனத்தில் டாகுத்தர் மாருக்கு பஞ்சமே இல்லை.....எம் இனத்தவர்கள் "போர்விமான ஒட்டிகளாக" பயிற்சி எடுத்தால் தான் நல்லம்

எங்கட இனத்தில பஞ்சமில்ல தான். அதுல எத்தின பேர் யாழ்ப்பாணத்திலயும் மற்ற தமிழர் பிரதேசத்திலும் (இலங்கைக்குள்) இருக்கினம் என்று சொல்லுங்கோவன்... படிச்சுப்போட்டு ஸ்கொல் என்று சொல்லி வெளிநாடு போனவர்களில் எவரும் திரும்பி தாயகம் வரவில்லை... ஞாபகம் வைத்திருங்கள்... துப்பாக்கி தூக்குவது மட்டும் தான் போராட்டமல்ல... தோள்கொடுப்பவனும் போராளி தான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவனுக்கு உள்ள பொறுப்புணர்வு வியக்க வைக்கிறது...

எங்கட இனத்தில பஞ்சமில்ல தான். அதுல எத்தின பேர் யாழ்ப்பாணத்திலயும் மற்ற தமிழர் பிரதேசத்திலும் (இலங்கைக்குள்) இருக்கினம் என்று சொல்லுங்கோவன்... படிச்சுப்போட்டு ஸ்கொல் என்று சொல்லி வெளிநாடு போனவர்களில் எவரும் திரும்பி தாயகம் வரவில்லை... ஞாபகம் வைத்திருங்கள்... துப்பாக்கி தூக்குவது மட்டும் தான் போராட்டமல்ல... தோள்கொடுப்பவனும் போராளி தான்...

நீங்கள் சொல்வது சரிதான்...ஆனால் கதையில் புலம் பெயர்ந்த சிறுவனை பற்றி சொல்லுகிறார்கள்....புலம்பெயர் மக்களின் பிள்ளைகள் அதிகமாக டாக்குத்தருக்கு தான் படிக்கிறார்கள்...எனைய துறைகளில் படிப்பது வெகு குறைவு...முக்கியமாக ஊடகதுறையை எடுத்தோமாயின் மிகமிக குறைவு... :(:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீலன் .........புத்தன் .........அன்பன் , உங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.