Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நெடுமாறன், பாரதிராஜா உள்ளிட்ட 200 பேர் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2ம் இணைப்பு)ஈழத் தமிழர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து சோனியாவுக்கு 3 இடங்களில் கறுப்புக்கொடி: நெடுமாறன், பாரதிராஜா உள்ளிட்ட 200 பேர் கைது

[ஞாயிற்றுக்கிழமை, 10 மே 2009, 10:41 பி.ப ஈழம்] [தமிழ்நாடு நிருபர்]

இலங்கைத் தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தவறிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தமிழ்நாட்டிற்கு வாக்கு கேட்டு வருவதைக் கண்டித்து சென்னையில் 3 இடங்களில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் கலந்துகொண்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், இயக்குநர் பாரதிராஜா உட்பட 200-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

எனினும் கறுப்புக் கொடி போராட்டங்கள் நடைபெறவிருப்பதை அறிந்த சோனியா சாலை வழியைத் தவிர்த்து உலங்குவானூர்தி வழியாகத் தீவுத் திடல் சென்றார்.

இலங்கைத் தமிழர்களின் படுகொலைக்குத் துணைபோன சோனியா காந்தி தமிழகம் வரக்கூடாது என்று வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4:00 மணிக்குத் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு, திரையுலகத் தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கம், தமிழக வழக்கறிஞர்கள், தமிழீழ போராட்டக் குழு பேரவை உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இப்போராட்டத்தில் பழ. நெடுமாறன், பாரதிராஜா, வழக்கறிஞர் கருப்பன், இயக்குநர் ஆர். சுந்தரராஜன், ஓவியர்கள் மருது, வீரசந்தனம், தமிழறிஞர்கள் இறைக்குருவனார், கி.த.பச்சையப்பன், உள்ளிட்டோர் கறுப்புக் கொடி ஏந்தி கலந்து கொண்டனர்.

சோனியா காந்தி, ராஜபக்ச மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தொடர் முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில் பேசிய பழ.நெடுமாறன், "இலங்கையில் கடந்த சில மாதங்களில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

5 லட்சம் தமிழர்கள் வாழ்விடங்களை இழந்திருக்கின்றனர். தமிழர்களுக்குச் செல்லும் உணவுப் பொருட்களை சிறிலங்கா அரசு தடுத்துவிட்டதால் நாள்தோறும் 15 தமிழர்கள் பட்டினியால் இறக்கின்றனர். ஒருபுறம் தாக்குதல், மறுபுறம் பட்டினி எனத் தமிழர்களை சிறிலங்காப் படை கொன்று குவிக்கிறது.

தமிழர்களின் படுகொலைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இதுவரை அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது தமிழகத்திற்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறார். அவரை தமிழினத் துரோகிகள் சிலர் மாலை போட்டு வரவேற்பார்கள்.

இலங்கையில் போரை நிறுத்த இந்தியா நடவடிக்கை எடுக்காவிட்டால் சோனியா காந்தி எந்தக் காலத்திலும் தமிழகம் வரமுடியாது" என்று எச்சரித்தார்.

இதைத் தொடர்ந்து தடையை மீறி கறுப்புக்கொடி போராட்டம் நடத்தியதாகக்கூறி பழ.நெடுமாறன், இயக்குநர் பாரதிராஜா, வழக்கறிஞர் கருப்பன் உட்பட 200-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளையில் பனகல் மாளிகைக்கு அருகிலேயே மற்றொரு இடத்தில் புரட்சிகர தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 50-க்கும் அதிகமானோர் சோனியாவுக்கு எதிராகக் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தினர். அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதேபோன்று, சென்னை நினைவரங்கத்தில் ஈழத் தமிழர் படுகொலைக்கு எதிரான பெண்கள் அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் அதிகமானோர், அந்த அமைப்பின் தலைவர் ஷீலு தலைமையில் சோனியாவுக்கு எதிராகக் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தினர்.

தமிழ் அமைப்புக்களின் சார்பில் நடத்தப்படும் போராட்டங்கள் குறித்து சோனியாவுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருந்ததால் வானூர்தி நிலையத்தில் இருந்து சாலை வழியாக செல்லாமல் உலங்குவானூர்தி மூலம் தீவுத் திடலுக்குச் சென்றுவிட்டார்.

புதினம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு செய்வதற்கு நேற்றும் (29) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையால் அங்கு பெரும் பதற்றமான நிலைமையொன்று இன்றுக்காலை முதல் ஏற்பட்டிருந்தமை யாவரும் அறிந்த விடயமாகும். இந்நிலையில், அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் ஏனைய தரப்பினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது,    முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு தொடர்பில் கடற்படை, காணிகளுக்கு உரியவர்கள், உரிய திணைக்கள அதிகாரிகளுடன் மாவட்டசெயலகத்தில் ஒரு கலந்துரையாடல் இடம்பெறும். அந்தக் கலந்துரையாடலின் அடிப்படையிலேயே நில அளவீடு தொடர்பில் முடிவு எடுக்கப்படும்.    அதுவரை நில அளவைச் செயறபாடுகள் இடம்பெறாது என்ற இணக்கமான முடிவொன்று எடுக்கப்பட்டது. இதனையடுத்தே, ஆர்ப்பாட்டம் சற்றுமுன்னர்  கைவிடப்பட்டது.  தென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோட்டாப கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர் காணியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த சீன நாட்டைச்சேர்ந்தவர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகைதந்து தனது காணிகளுக்குரிய நட்ட ஈட்டைப் பெறுவதற்கும், இதுவரைகாலம் அங்கு கடற்படை இருந்து தனது காணியைப் பயன்படுத்தியமைக்கான நட்ட ஈட்டைப் பெறுவதற்கும் கட்டாயம் அங்கு நில அளவீடு இடம்பெறவேண்டும் என வலியுறுத்தினார். குறித்த நபரின் இத்தகைய கருத்திற்கு அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டிருந்தனர். வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், சீனச்சிங்களவர் அங்கிருந்து வெளியேறவேண்டும் என கோசம் எழுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்களும் குறித்த நபர் அங்கிருந்து வெ ளியேறவேண்டுமெனக் கோசம் எழுப்பியதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்ட இடத்திலிருந்து அந்நபர் வெளியேறியிருந்தார். Tamilmirror Online || சீன நாட்டு பிரஜை ஒருவரும், கோட்டாபய முகாமுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
    • எனக்கு நீங்கள் கோபப்படுவதாக தெரியவில்லை.   ஆனால் நாதத்தை தேவைக்கு அதிகமாக சீரியசாக எடுக்கிறீர்களோ என்று தோன்றுகிறது🤣.
    • நானும் இதுக்குள்ளை புகுந்து விளையாடுவமெண்டு பாத்தால் கோதாரிவிழ ஒண்டும் விளங்குதில்லை 😎
    • என்னைப்பொறுத்தவரை சில துறைகளை(பொதுவாக மக்களுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட,  சேவை சார்ந்த)  தேர்ந்தெடுக்க முன்பு சரியான தெளிவு இருக்க வேண்டும் என நினைப்பதுண்டு ஏனெனில் அவற்றிற்கான கேள்வி அதிகம், வழங்கல் குறைவு (உ+ம் doctors , nurse, social worker) .அதில் முழுமையான மனதோடு ஈடுபடாமல் மற்றவர்களின் வற்புறுத்தல், social statusற்காக தேர்ந்தெடுத்து இடையில் குழப்புவதாலோ அல்லது படித்து முடிந்த பின் வேறு துறையை தேர்ந்தெடுப்பதால் இன்னொருவரின் இடத்தினை வீணாக்குவதுடன் சமுதாயத்திற்குத்தான் இழப்பு என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும் இதைப்பற்றி தெளிவுபடுத்த வேண்டியதும் அவசியம் என்பதால் இதில் நான் “விளங்கப்படுத்த வேண்டும்/தெளிவுபடுத்த வேண்டும என்ற ஆதங்கம்/அக்கறை”இருப்பதையே அவதானித்தேன்..   மேலும், இன்னொரு விடயம், இது ஒரு பொது ஊடகம், இங்கே எழுதும் எல்லோருக்கும் ஒரு சமுதாய கடமை உள்ளதை மனதில் வைத்து எழுதினால் நன்றாக இருக்கும் என நினைப்பதுண்டு,ஆனால் அது சாத்தியப்படுமா என்பதும் எனக்கு சந்தேகமே
    • ரிஷாட்டிற்கும் அவர் குடும்பத்துக்கும் சார்பாக (அதாவது இந்த சிறுமியின் குடும்பத்துக்கு எதிராக) வாதாடுவது தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகர்  K.V தவராசாவின் மனைவியாரான கெளரிசங்கரி தவராஜா ஆகும். ..கேட்டால் இது தொழில் ரீதியிலானது என்று சப்பைக் கட்டு கட்டவும் பலர் உள்ளனர். ஆனால் தொழிலில் தர்மம் என்றது கொஞ்சமாவது இருக்க வேண்டாமா?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.