Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

அஞ்சலி அஞ்சலி கண்ணீர் அஞ்சலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலி அஞ்சலி கண்ணீர் அஞ்சலி

மண் மீட்க புறப்பட்ட மாவீரருக்கு அஞ்சலி

மாவீரராகிவிட்ட வன்னி மக்களுக்கு அஞ்சலி

அஞ்சலி செலுத்தி கடன் முடிக்க

அருகதை சிறிதும் எனக்கோ இல்லை

தளபதிகளுக்கு என் தாள் பணிந்து அஞ்சலி

இனம் தெரியாத உறவுக்கும் இளையோருக்கும் அஞ்சலி

கருவறையில் உலகம்கானாத கண்மணிக்கு அஞ்சலி

கருவாகி உருவாகி மண் மீது தவளாத பாலகருக்கு அஞ்சலி

வீரப்பெண் போராளிகளுக்கு அஞ்சலி

உணவின்றி குடிக்க நீரின்றி உடுத்திய

உடைகளுடன் துஞ்சிய உயிர்களுக்கு அஞ்சலி

வெறி கொண்ட படையின் தடையற்ற வல் வளைப்பில்

அழுகுரலோடு கற்பழிந்த பெண்களுக்கு அஞ்சலி

சித்திரவதையில் சிதைந்த இளையோருக்கு அஞ்சலி

"பேரர்களுடன் சாகிறேன் "என்ற பாட்டி மார்களுக்கு அஞ்சலி

இரவென்றும் பகலென்றும் பாராது மருத்துவம் செய்த

,மரணித்த மருத்துவர் தாதியர் பணியினருக்கு அஞ்சலி

அஞ்சலி சொல்ல தகுதியற்ற புலம் பெயர் அகதி நான்

வன்னி வாழ்ந்த மக்களுக்கு சொல்லும் கண்ணீர் அஞ்சலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தியாகங்களும் துன்பங்களும் வீண் போக விடக்கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

மக்களால் நிரம்பிக்கிடந்த எங்கள் வன்னி மண் இப்பொழுது எங்கள் அஞ்சலிகளால் மட்டுமே நிறைந்து கிடக்கிறது அந்தளவுக்கு இனப்படுகொலை நிகழ்ந்தேறி விட்டது இன்னமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

கவிதைக்கு நன்றி அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஞ்சலியோ டாறாத கண்ணீரைக் காணிக்கையாய்

வெஞ்சமரில் வேல்பட்டு வீழ்ந்த வீரன்

கொஞ்சு மன்னை தனைநினைந்து உருகுமாறே

மிஞ்சுகவி தந்தெமக்கு துயர்பகிர்ந்த தமிழமுதே

துஞ்சலிலே தூயதொரு வித்தான தூமணிகள்

வஞ்சக ரழித்ததனால் வருந்தாதே சோதரியே!

தஞ்சமென வந்தாலும் தாயை மறக்கவில்லை

பஞ்சம் பட்டினியால் பரிதவித்த நிலையறிந்தீர்

அஞ்சிநாம் வந்தாலும் ஆதரவு என்றுமுண்டு

நெஞ்சார்ந்த தமிழ்த்தலைவ னழியவில்லை யெம்மிடையே

விஞ்சுபுக ழீழமது விரைவினிலே வழிசமைத்து

ஆஞ்சநேய பலத்துடனே அரசாள்வார் ஆணையிதே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஞ்சநேய பலத்துடனே அரசாள்வார் ஆணையிதே!!...........

..ஆஞ்சநேய பலமுடன் .....மீண்டும் ஆளவேண்டும் நம் தலைவன். நன்றி கவிக்குமரா .

தேன் தமிழின் சுவை கண்டு கவி நயம் கண்டு ...கானகத்து மயிலானே..அழகு தமிழ் அமுதம் போல் இருந்தது

.......கவியே வாழ்க நின் கவிப்புலமை வளர்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலியால் நெஞ்சமதை கரைய வைத்த நிலாமதியக்காவே,

உணர்வால் ஒன்றித்து உரிமையை வென்றிடுவோம்.

பேரர்களுடன் சாகிறேன் என்ற பாட்டியரே

உங்கள் உடல் வேகியிராது

என்பது அறிவோம் நாம்

உரிமை வேண்டுமென்று

உங்களது பிள்ளைகளை

களத்திற் கனுப்பிவிட்டு

காந்திருந்த வீரமறத்தியரே

விடியும் ஒருநாளில்

அடையும் உங்கள் ஆத்மா சாந்தி !

விண்ணதிரும் படையமைத்து

வெளியிருந்து நாம் நடந்து

மண் மீட்டு எம் மானம் காப்போம் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மண்ணில் உயிர் நீத்த எம் போரளிகள், தளபதிகள், எம் உறவுகள் ஆத்தம சாந்திக்கும், அவர்தம் இலட்சியம் நிறைவேற நாம் திடசங்கற்பம் எடுப்பதுடன், உங்களுடன் பென்மன் தனது கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறான்.

தமிழர் தாகம் - ஈழம்

பென்மன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.