Jump to content

பிரபாகரன் விரைவில் வருவான்: அருட்தந்தை ஜெகத்கஸ்பர்


Recommended Posts

ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர்

ஆயினும் போரது நீறும், புலி

ஆடும் கொடி நிலம் ஆறும்.

பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்

பாசறை ஆயிரம் தோன்றும், கருப்

பைகளும் ஆயுதம் ஏந்தும்.

மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை

மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த

சிங்கள கூட்டங்கள் ஓடும்.

-இணையத்தில்இன்று காலை நான் கண்ட கவிதை இது. எழுதியவர் புதுவை இரத்தினதுரையாக இருக்க லாம். படித்துச் சிலிர்த்து நின்ற வேளை தொலைபேசி அழைப்பொன்று வந் தது. கடந்த நான்கு நாட்களாய் தொலைபேசிய அந்த முக்கியமான வரை தொடர்பு கொள்ள நூறு முறையேனும் முயன்று மனக் களைப்புற்றிருந்தேன். களநிலை பற்றின பொய்யும் புனைவுமிலா உண்மையை தரவல்ல நிலையில் உள்ளவர் அவர். வானகத்தின் தூதுவன் நேரிடை வந்தது போல வந்தது அந்த அழைப்பு. அவர் சொன்னார்: ""கவலை ஏதும் வேண்டாம். தலைவர் பாதுகாப்பாக உள்ளார். அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக உறுதி செய்யப்பட்டபின் உலகோடு அவர் பேசு வார்''. தமிழீழ எல்லைகளின் காவலன் நல் லூர் முருகனும் எனது லூர்து மாதாவும் துணையிருந்தார்கள். படித்த கவிதை சந்தம் கட்டி என் மனதில் பாடலாய் துள்ள லாயிற்று. "பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில் பாசறை ஆயிரம் தோன்றும், கருப்பை களும் ஆயுதம் ஏந்தும்'.

எட்டு பத்து ஆண்டுகளுக்கு முன் இதே புதுவை ரத்தினதுரை எழுதிய கவிதையின் மறக்க முடியாத சில வரிகள் நினைவு வெளியில் கை வீசி நடந்தன.

""வா பகையே... வா...

வந்தெம் நெஞ்சேறி மிதி.

பூவாகவும் பிஞ்சாகவும் மரம் உலுப்பிக் கொட்டு.

வேரைத் தழித்து வீழ்த்து.

ஆயினும் அடிபணியோம் என்பதை மட்டும்

நினைவில் கொள்!''

புதுவை ரத்தினதுரையின் கவிதைகள்பால் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது 1995-ம் ஆண்டு. அதிபர் சந்திரிகா குமார துங்கே யுத்த வெறி கொண்டு முப்படைகளையும் அவிழ்த்து விட்டு யாழ்ப்பாணத்தை சிறைப்படுத்திய காலம். யாழ்ப்பாணத்தில் சிங்க முத்திரை பொறித்த சிங்களக் கொடியை ஏற்ற அன்றைய ராணுவ அமைச்சர் அனுருத்த ரத்வத்தே வந்தார். அக்கொடியை சுமந்து வந்தது யாழ்ப்பாணத்து மேயராக இருந்த தமிழர். பெயர் மறந்துவிட்டேன். வடதமிழீழத்து இதயமாம் யாழ்ப்பாணத்திற்கு சிங்கக் கொடி சுமந்து வந்த மேயர் மீது புதுவைக்குச் சீற்றம். நீண்ட கவிதையொன்று எழுதியிருந்தார். இரண்டு வரிகள் மட்டும் அடித்த ஆணிபோல் நினைவில் பதிந்து நிற்கின்றன.

""மேயர் அவர்களே

நீவிர் சிங்கக் கொடியை சுமந்து வந்தபோது

மின்னும் ஜரிகை கரை கொண்ட

பட்டு வேஷ்டி கட்டி வந்ததாய் அறிந்தேன்.

கக்கூஸ் வாளிக்கு தங்க முலாம் பூசுவதில்லையே?!

-அறுபதாயிரத்திற்கும் மேலான அப்பாவித் தமிழ் உயிர்களை கொன்றழித்து, இரண்டரை லட்சம் பேரை சொந்த மண்ணில் அகதிகளாக்கி, முப்பதாண்டு கால விடுதலைப் போராட்டத்தை நீசத்தனமாய் நிர்மூலம் செய்த ராஜபக்சே கும்பலுக்கு வன்னிப்பரப்பில் சிங் கக் கொடி தூக்க நாக்கை தொங்கவிட்டுக் காத்திருக்கும் ஆனந்தசங்கரி வகையறாக்கள் ஒரு கணம் நினைவுக்கு வந்தபோது புதுவையின் கவிதையும் உடன் சேர்ந்து வந்தது. ""கக்கூஸ் வாளிகளுக்கு தங்க முலாம் பூசுவதில்லையே...?! ராஜபக்சேக்களுக்கு லாவணி பாடும் ஆனந்த சங்கரிகளே இருக்கிறவரை ஏதேனும் நாற்காலியில் இருந்துவிட் டுப் போங்கள். தங்க முலாம் பூசிய கக்கூஸ் வாளிகளுக்கும் கருணை செய்து ஓய்வூதியம் தர வேலுப்பிள்ளை பிரபாகரன் விரைவில் வருவான். உங்களுக்காக வரவில்லையென்றாலும் முல்லைத்தீவு முற்றுகையின் கடைசி நாள் நடந்த மன்னிக்க முடியா துரோகத்திற்கு நீதி செய்யவேனும் அவன் வருவான்.

கடைசி நாளில் -அதாவது கடந்த சனிக்கிழமை நடந்தது இதுதான். வேலுப்பிள்ளை பிரபாகரனும் எதிர்காலத்தில் போராட்டத்தையும் இயக்கத்தையும் மீள் கட்டமைப்பு செய்வதற்கு முக்கியமானவர்களான சில தளபதியர்களும் பாதுகாப்பாக அகன்றபின் களத்தின் இறுக்கம் தணிகிறது. கை ஒடிந்து, கால் முறிந்து, உடலின் சில பகுதிகள் சிதைந்து ரத்தம் வழிந்தே பாதி செத்துப் போன சுமார் 12,000 அப்பாவி மக்களையும், அவ்வாறே காயமுற்ற சுமார் 3,000 போராளிகளையும் எப்படியேனும் அப்புறப்படுத்திக் காப்பாற்றும் முடிவினை விடுதலைப்புலிகள் எடுக்கி றார்கள். கடற் புலித் தளபதி சூசை மதுரையில் ஒருவரோடு தொடர்பு கொண்டு காயமுற்ற மக்களையேனும் பாதுகாப்பாய் வெளியேற்ற 48 மணி நேர சண்டை நிறுத்தம் வேண்டுகிறார்.

மதுரை தமிழரோ உணர்வாளர் சுப.வீ. என்ற சுப.வீரபாண்டியன் அவர்களை மன்றாட சுப.வீ. அவர் கள் கனிமொழி அவர்களின் கருணையை கேட்கிறார். கனிமொழி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான ஒருவரோடு பேச "அதிகாரப்பூர்வமற்ற', ஆனால் யதார்த்த மான முடிவொன்று தரப்பட்டது. ""விடுதலைப் புலிகளின் அனைத்துலக பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாபன் கொழும்பிலுள்ள இந்திய தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்க தயாராக உள்ளோம் என்ற முடிவினை எழுத்துப் பூர்வமாய் தொலைநகல் (எஆல) வழி உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவையெல்லாம் இந்தியா பார்த்துக் கொள்ளும்''. இரவு 10 மணி ஆயிற்று. இந்தக் கட்டத்தில் நானும் இணைந்தேன். லண்டனிலுள்ள எனது நண்பர்கள் மூலம் செல்வராஜா பத்மநாபன் அவர்களுக்கு தகவல் சொல்லப்பட அவரும் மின்னல் வேகத்தில் இயங்கினார். ""இந்தியாவிடமே நாங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறோம். அது சாத்தியமில்லையென்றால் ஐ.நா. ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம்'' என்ற முடிவை விடுதலைப் புலிகள் இரவு 11.50-க்குத் தெரிவித்தார்கள். கனிமொழி தயக்கத்துடன் காங்கிரஸ் பெரியவரை தொடர்பு கொள்ள அவரும் விழித்தே இருந்தார். ""கால அவகாசமில்லை. இந்தியாவிடம் சரணடைவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போது இல்லை. இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது'' என்கிறார் அப்பெரியவர்.

மக்களை காக்க வேண்டி இலங்கை ராணு வத்திடமே ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவினை சனி நள்ளிரவு புலிகள் எடுத்தார்கள். ஞாயிறு காலை கொழும்பு இந்திய தூத ரகத்தின் உதவியுடன் இலங்கைத் தமிழர் பாராளுமன்ற உறுப்பினர் கஜன் பொன்னம்பலம் ராஜபக்சேவோடு பேச்சுவார்த்தை கள் நடத்த முடிவொன்று ஏற்படுகிறது. "முல் லைத்தீவு களத்தில் நிற்கும் புலிகளின் தளபதிகள் வெள் ளைக்கொடி பிடித் துக் கொண்டு இலங் கை தளபதிகளிடம் வரட்டும். ஆயுதங் களை ஒப்படைப்பது, காயமுற்றோரை அப்புறப்படுத்துவது தொடர்பான நடைமுறை ஒழுங்குகளை அவர்களே கலந்து பேசி முடிவு செய்யட்டும்' என்பதாக அந்த ஏற்பாடு.

இம்முடிவினை ராஜபக்சே அலுவலகம் ராணுவத் தலைமைக்கும், முல்லைத் தீவு கட்டளைத் தளபதிகளுக்கும் அறிவிக்கிறது. இந்த ஏற்பாடுகள் முடியவே ஞாயிறு இரவாகி விடுகிறது.

ராஜபக்சேவுடன் நடந்த விவாதங்களையும் முடிவுகளையும் கஜன் என்ற கஜேந்திரன் பொன்னம்பலம்... செல்வராஜா பத்மநாபனுக்குத் தெரிவிக்க முல்லைத்தீவு களத்தில் நின்ற விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவுப் பொறுப்பாளர் நடேசனுடன் இவற்றை திங்கள் அதிகாலை 2.30 மணிக்கு விவாதிக்கிறார் பத்மநாபன். யுத்தம் 500 மீட்டர் அருகில் வந்த போதும் கூட உலகோடு உரையாடும் செயற் கோள் வசதிகளை விடுதலைப்புலிகள் கொண்டிருந்தார்கள் என்பது ஒரு ராணுவ அரசியல் இயக்கமாக எத்துணை ஆழமாக வளர்ந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றாகத் தெரிந்தது. விடிந்ததும் நடேசன், சிறப்புத் தளபதி ரமேஷ் -இவர் முன்பு கருணாவின் துணை தளபதியாக இருந்தவர், புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் மூவரும் வெள்ளைக் கொடி ஏந்தி சிங்களத் தளபதியர்களை சந்திக்கச் செல்வ தாய் ஏற்பாடு.

வெடிபொருள் புகை கவிந்த முல்லைத் தீவு பரப்பு விடிந்தது. வெள்ளைக் கொடி ஏந்தி மூவரும் நடந்தார்கள். சிங்களத் தளபதியர்களின் கூடாரம் அருகே வந்தார்கள். ஏன், என்னவென்ற பேச்சின்றி சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பின்னர்தான் தெரிய வந்தது அவர்களைச் சுட்டுக் கொல்லும் உத்தரவை ராஜபக்சேவின் சகோதரனும் ராணுவ அமைச்சருமான கோத்தபய்யா ராஜபக்சே பிறப்பித்திருந்த சதி.

வெள்ளைக் கொடியேந்தி சரணடையவோ, பேச்சுவார்த்தை நடத்தவோ வருகிறவர்களுக்குத் தீங்கிழைப்பது யுத்தக் குற்றம். அனைத்துலக சட்டதிட்டங்கள் இதனை கடுமையாக வலியுறுத்துகின்றன. ஆனால் சிங்கள இனவெறி பிடித்தாடும் கோத்தபய்யாவை பொறுத்தவரை தமிழருக்காகப் பேச எவருமே உயிரோடு இருக்கக்கூடாது. நடேசனும், புலித்தேவனும் சரணடைந்து கைது செய்யப்பட்டாலும் அவர்கள் யுத்தக் கைதிகளாகவே நடத்தப்பட வேண்டும். நாளை அனைத்துலக ஏற்பாட்டில் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் போது புலிகள் தரப்பிலும் பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென உலக நாடுகள் நிச்சயம் வலியுறுத்தும். அத்தகு சூழலில் தகுதியோடு தமிழரை பிரதிநிதித்துவப்படுத்த எவருமே இருக்கக்கூடா தென்பதுதான் கோத்தபய்யாவின் கணக்கு. முக்கிய செய்தி என்னவென்றால் இந்தியா சொல்வதையோ, அண்ணன் ராஜபக்சே சொல்வதையோ கேட்பதற்கு கோத்தபய்யா தயாராக இல்லை என்பதுதான்.

கொடுமை அத்தோடு முடியவில்லை காயமுற்று பாதி உயிரோடு முனகிக் கிடந்த பத்தாயிரத்திற்கும் மேலான அப்பாவி மக்களை புல்டோசர்கள், செயின் புளக்-கள் ஏற்றிக் கொன்றுவிட்டு ஆதாரங் கள் ஏதுமின்றி அதிநவீன ரசாயனக் கலவைகள் ஊற்றி எரித்திருக்கிறார்கள். அவ்வாறே காய முற்றிருந்த சுமார் 3,000 போராளிகளையும் கரு ணை இரக்கமின்றி சுட்டுக் கொன்று வெறி தீர்த்திருக்கிறார்கள். வேறெதற் கும் இல்லையெனினும் கோத்தபய்யாவிற்கு நீதி சொல்லவேனும் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருவான், நிச்சயமாய் வருவான்.

மரணத்தின் நிழலில் வளர்ந்த அதீதப் பிறவி பிரபாகரன். மாத்தையா அவரது வாகனத்திற்கு அடியிலேயே வெடிகுண்டு பொருத்தினார். ஆனால் வெடிக்கவில்லை. ஏன் வெடிக்கவில்லை என்பதற்கு மனித அறிவு சார்ந்த விளக்கம் எதுவுமில்லை. சாவகச்சேரி நகர் வளைவு திறக்கும் நிகழ்வின் போது அவரோடு மூத்த தளபதிகள் யாவரதும் கதை முடிக்க மாத்தையா ஏற்பாடு செய்திருந் தார்.

விழாவுக்குப் புறப்படும் போது மோசமான வயிற்று நோவு வர விழாவிற்கு அவர் வரவில்லை. வந்திருந்தால் அன்றே அவர் வரலாறு முடிந்திருக்கும். திருநெல்வேலி தாக்குதலின் போது அவரது துப்பாக்கியில் ரவை தீர்கிறது. குனிந்து ரவை நிரப்புகிறார். புறத்தே மின்னல் தெரிகிறது. சக தோழர்களின் பறக்கிற ரவைகள் என நினைக்கிறார். காலையில் பார்த்தால் தான் குனிந்தபோதுதான் நின்ற இடத்திலேயே எதிரியின் ரவைகள் பாய்ந்து வந்திருக்கின்றன. அக்கணம் குனிந்திராவிட்டால் அன்றே அவர் முடிந்திருப்பார். ""கடவுள் காத்து வருகிறார் எனக் கருதலாமா?'' என 2002-ல் அவரிடம் கேட்டேன். ""இன்னும் நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கிறதென இயற்கை நினைக்கிறது போலும்'' என்றார். தமிழர்களே, நண்பர்களே, முல்லைத்தீவில் கதை முடிய வில்லை. புதிய கதை தொடங்குகிறது. உலகத் தமிழினம் இனி நடக்கப் போவது புதிய தடங்களில்.

கொடுமை அத்தோடு முடியவில்லை காயமுற்று பாதி உயிரோடு முனகிக் கிடந்த பத்தாயிரத்திற்கும் மேலான அப்பாவி மக்களை புல்டோசர்கள், செயின் புளக்-கள் ஏற்றிக் கொன்றுவிட்டு ஆதாரங் கள் ஏதுமின்றி அதிநவீன ரசாயனக் கலவைகள் ஊற்றி எரித்திருக்கிறார் கள். அவ்வாறே காய முற்றிருந்த சுமார் 3,000 போராளிகளையும் கரு ணை இரக்கமின்றி சுட்டுக் கொன்று வெறி தீர்த்திருக்கிறார்கள்.

நன்றி நக்கீரன் வார இதழ்

Link to comment
Share on other sites

12 ஆயிரம் மக்களின் சாவும், 3000 போராளிகளின் வீர மரணமும் மிக வேதனை தந்த்தாலும். தலைவன் இருக்கின்றார் என்று நீங்கள் இட்ட இந்த இணைப்பை வாசித்த பின், வசி நீங்கள் மட்டும் இப்ப நேரில் வந்திருந்தால் கட்டிப் பிடித்து முத்தோ முத்தென்று முத்தமிட்டு இருப்பன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

""மேயர் அவர்களே

நீவிர் சிங்கக் கொடியை சுமந்து வந்தபோது

மின்னும் ஜரிகை கரை கொண்ட

பட்டு வேஷ்டி கட்டி வந்ததாய் அறிந்தேன்.

கக்கூஸ் வாளிக்கு தங்க முலாம் பூசுவதில்லையே?!

-அறுபதாயிரத்திற்கும் மேலான அப்பாவித் தமிழ் உயிர்களை கொன்றழித்துஇ இரண்டரை லட்சம் பேரை சொந்த மண்ணில் அகதிகளாக்கிஇ முப்பதாண்டு கால விடுதலைப் போராட்டத்தை நீசத்தனமாய் நிர்மூலம் செய்த ராஜபக்சே கும்பலுக்கு வன்னிப்பரப்பில் சிங் கக் கொடி தூக்க நாக்கை தொங்கவிட்டுக் காத்திருக்கும் ஆனந்தசங்கரி வகையறாக்கள் ஒரு கணம் நினைவுக்கு வந்தபோது புதுவையின் கவிதையும் உடன் சேர்ந்து வந்தது. ""கக்கூஸ் வாளிகளுக்கு தங்க முலாம் பூசுவதில்லையே...?! ராஜபக்சேக்களுக்கு லாவணி பாடும் ஆனந்த சங்கரிகளே இருக்கிறவரை ஏதேனும் நாற்காலியில் இருந்துவிட் டுப் போங்கள். தங்க முலாம் பூசிய கக்கூஸ் வாளிகளுக்கும் கருணை செய்து ஓய்வூதியம் தர வேலுப்பிள்ளை பிரபாகரன் விரைவில் வருவான். உங்களுக்காக வரவில்லையென்றாலும் முல்லைத்தீவு முற்றுகையின் கடைசி நாள் நடந்த மன்னிக்க முடியா துரோகத்திற்கு நீதி செய்யவேனும் அவன் வருவான்.

இதனை எதிர்பார்த்து, நாங்கள் மட்டுமல்ல எதிரிகளும் காத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

Link to comment
Share on other sites

உங்களைப்போலத்தான் நானும் நிழலி.. ஒருபுறம் வேதனை நெஞ்சை அடைத்தாலும்.. தலைவர் பற்றிய செய்தியால் மனம் கொஞ்சம் அமைதி அடைகிறது!

நன்றி நக்கீரனுக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுரையில் சில வினாக்கள் கேக்காமல் இருக்க முடியவில்லை:

1. இந்தியா சொல்வதையோ, அண்ணன் ராஜபக்சே சொல்வதையோ கேட்பதற்கு கோத்தபய்யா தயாராக இல்லை. ஒருவேளை இவர் இந்தியவுக்கு எதிராக செயல் பட்டிருந்தால் இந் நேரம் இந்தியா கோபம் கொண்டிருக்காதா?

2. இலங்கை ராணுவம் அண்ணன் சொல்வதைக் கேக்குமா அல்லது தம்பி செய்வதைக் கேக்குமா?

3. என்னுடைய பார்வை: இந்தியா, இலங்கை, அண்ணன், தம்பி, காங்கிரஸ் அனைவருமே அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வக்கிரத்தை தணித்துக் கொண்டர்கள் என்பதே உண்மை.

Link to comment
Share on other sites

கட்டுரையில் சில வினாக்கள் கேக்காமல் இருக்க முடியவில்லை:

1. இந்தியா சொல்வதையோஇ அண்ணன் ராஜபக்சே சொல்வதையோ கேட்பதற்கு கோத்தபய்யா தயாராக இல்லை. ஒருவேளை இவர் இந்தியவுக்கு எதிராக செயல் பட்டிருந்தால் இந் நேரம் இந்தியா கோபம் கொண்டிருக்காதா?

2. இலங்கை ராணுவம் அண்ணன் சொல்வதைக் கேக்குமா அல்லது தம்பி செய்வதைக் கேக்குமா?

3. என்னுடைய பார்வை: இந்தியாஇ இலங்கைஇ அண்ணன்இ தம்பிஇ காங்கிரஸ் அனைவருமே அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வக்கிரத்தை தணித்துக் கொண்டர்கள் என்பதே உண்மை.

ஆம் இதுதான் உண்மை.

தலைவர் வரவேண்டும் இவர்களை பளிதீர்க்க...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது எல்லாமும் பார்த்தாச்சு. சர்வதேசத்தின் இயலாமையும் பார்த்தாச்சு. எங்களுக்கு எங்கள் தலைவனும் அவன் வழிநடத்தலும் தான்

தலைவா உன்னைபோல தலைவன் எந்த இனத்திற்கும் வாய்த்ததில்லை..

நீ இருக்க பயமேன்

எதனை உறவுகளை எம் இனிய கண்மணியாம் போராளிகளை அநியாயமாக இழந்துவிட்டோம். வருந்தி அழுவது மாவீரர்களுக்கு பிடிகாது. துணிந்து எழுவது தான் இப்போது தேவை.

எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது இனி இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது.

விழியில் வழியும் நீரை துடைத்து எழுக எழுக தமிழா

Link to comment
Share on other sites

வருவான் எம் தலைவன். அந்த நம்பிக்கை எமக்கு மலைபோல. பகை முடிப்பான். ஈழத்தின் கொடி நிச்சயமாய் தலைவரின் கையால் ஏறும். அந்த நம்பிக்கை விண்ணிற்கும் மேலாக

ஜானா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2. இலங்கை ராணுவம் அண்ணன் சொல்வதைக் கேக்குமா அல்லது தம்பி செய்வதைக் கேக்குமா?

அது பற்றித் தெரியவில்லை. ஆனால் அண்ணன் தம்பி சொல்வதை எப்பொழுதும் கேட்பார். உண்மையில் மகிந்தவை இயக்குவது பசில், கோத்தபாய என்ற இரு தம்பிகளும் தான்.

மேலும் இந்தியா குமரப்பா புலேந்திரன் விடயத்திலும் இதையே செய்தது.

Link to comment
Share on other sites

""கடவுள் காத்து வருகிறார் எனக் கருதலாமா?'' என 2002-ல் அவரிடம் கேட்டேன். ""இன்னும் நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கிறதென இயற்கை நினைக்கிறது போலும்'' என்றார்.

சுதந்திர தமிழீழத்தின் முதல் தலைவர் பிரபாகரன் என்பது இயற்கையின் நியதி. வரலாறு இட்ட கட்டளை . அதை மகிந்த அல்ல சோனியா அல்ல எந்த கொம்பன் வந்தாலும் மாற்ற முடியாது

Link to comment
Share on other sites

கெட்ட செய்தி ஒன்று இன்று பதிதிரிகைகளுக்கு

வெளியிடப்பட இருப்பதாக தகவல்

அது பொய்யாக இருக்கவேணும் என்று மனம் தவிக்குது

Link to comment
Share on other sites

கட்டுரையில் சில வினாக்கள் கேக்காமல் இருக்க முடியவில்லை:

1. இந்தியா சொல்வதையோஇ அண்ணன் ராஜபக்சே சொல்வதையோ கேட்பதற்கு கோத்தபய்யா தயாராக இல்லை. ஒருவேளை இவர் இந்தியவுக்கு எதிராக செயல் பட்டிருந்தால் இந் நேரம் இந்தியா கோபம் கொண்டிருக்காதா?

2. இலங்கை ராணுவம் அண்ணன் சொல்வதைக் கேக்குமா அல்லது தம்பி செய்வதைக் கேக்குமா?

இது நடக்கும் போறது அண்ணன் ஜோர்தானில் இருந்தான் இலங்கையின் பதில் ஜனாதிபதி யார் என்று தெரியாத நிலை. அந்த சமயம் தம்பியின் கை தான் ஓங்கி இருந்தது. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேறெதற் கும் இல்லையெனினும் கோத்தபய்யாவிற்கு நீதி சொல்லவேனும் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருவான், நிச்சயமாய் வருவான்.

""கக்கூஸ் வாளிகளுக்கு தங்க முலாம் பூசுவதில்லையே...?! ராஜபக்சேக்களுக்கு லாவணி பாடும் ஆனந்த சங்கரிகளே இருக்கிறவரை ஏதேனும் நாற்காலியில் இருந்துவிட் டுப் போங்கள். தங்க முலாம் பூசிய கக்கூஸ் வாளிகளுக்கும் கருணை செய்து ஓய்வூதியம் தர வேலுப்பிள்ளை பிரபாகரன் விரைவில் வருவான். உங்களுக்காக வரவில்லையென்றாலும் முல்லைத்தீவு முற்றுகையின் கடைசி நாள் நடந்த மன்னிக்க முடியா துரோகத்திற்கு நீதி செய்யவேனும் அவன் வருவான்.

அது வரலாற்று கட்டாயம்,யார் நினைத்தாலும் அது நடந்தே தீரும்.

நம்புங்கள் நாளை நமதே,

எத்தனை இழப்புகள்...பொறுக்க இயலாத வலிகள்...இவ்வளதுக்கும் பிறகு நம் நோக்கம் கனவாக மட்டுமே போக கூடாது.சிந்தனைகள் ஒருமித்ததாக இருக்கட்டும்,பயணத்தை தொடர்வோம்.தலைவனது கரங்களை வலுப்படுத்துவோம்.

அது தான் இழந்த இழப்புகளுக்கு நாம் செய்யும் நன்றி கடன்.

போராட்டங்களை பல பரிணாமத்துடன் முன்னேடுப்போம்.

வசி அண்ணா இணைப்பு க்கு நன்றி.

Link to comment
Share on other sites

தலைவர் இருந்தாலும் வீரமரணம் அடைந்தாலும் நாங்கள் இந்தப் போராட்டத்தை தொடர்ந்து கொண்டு செல்லவேண்டும். தலைவரின் கனவான தமிழீழத்தை நாங்கள்

பெற்றுக்கொடுக்கவேண்டும். அதுவே வீரமரணம் அடைந்த போராளிகளுக்கும் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்கும் நாங்கள் செய்யும் ஒரு சிறிய நன்றிக்கடனாயிருக்கும்.

Link to comment
Share on other sites

""இன்னும் நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கிறதென இயற்கை நினைக்கிறது போலும்''

அரசினதும். உலகத்தினதும் துரோக தனத்துக்கு சரியான பாடம் தலைவர் கற்பிப்பார்.அனைத்து தமிழர்களும் அவர் பின் அணி திரள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசினதும். உலகத்தினதும் துரோக தனத்துக்கு சரியான பாடம் தலைவர் கற்பிப்பார்.அனைத்து தமிழர்களும் அவர் பின் அணி திரள வேண்டும்.

நிச்சயமாக அவரின் பின்னால் நிற்போம்

அவரின் பின்னால் மட்டுமே நிற்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காயப்பட்ட மக்களும் போராளிகளும் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் பதில் சொல்ல தலைவர் வரவேண்டிய அவசியம் இல்லை ஒவ்வொரு தமிழனும் போராடவேண்டும். புலத்தில் நாங்கள் உக்கிரமாக எங்கள் அறவழிப்போராட்டங்களை தொடரவேண்டும். தலைவரின் கரத்தை பலப்படுத்தவேண்டும்.

Link to comment
Share on other sites

நடந்து முடிந்தவைகளை சுதாகரிக்க எங்களுக்கு பலருக்கு இன்னும் காலம் தேவைப்படுகிறது, விரைவில் மீண்டெழுங்கள்.

இந்த ரணத்தை நேரில் பார்த்து மட்டுமல்ல இழப்புக்களை இரைமீட்டு மீண்டும் பலமாக எழ தலைவருக்கும் கால அவகாசத்தை நாம் வழங்கவேண்டாமா?

அவருடைய மனதின் காயத்தை நாம் ஆற்றவேண்டாமா? இந்த மிலேனியத்தில் உதித்த மாமெரும் அவதாரம் எங்கள் தலைவன்

இந்த பொக்கிசத்தை பாதுக்காக்க எங்களுக்கு கிடைத்திரும் வாய்ப்பை எமது பிறவிக்கடனாக நாம் செய்யவேண்டும்.

Link to comment
Share on other sites

Why the West ignored the Tamils' pleas

By Brian Stewart CBC News

Western leaders seemed genuinely surprised at the rapid end to Sri Lanka's 25-year-old internal war and the collapse of the Tamil Tiger insurgency.

Not so taken back, however, that the Canadian, U.S. and European governments did not know, virtually in unison, what approach to take: do as little as they could semi-decently get away with.

It was just such diplomatic minimalism that compelled Tamil demonstrators in Toronto and elsewhere to take to the streets in rage and frustration. Still, for all the attention their flag-waving and traffic-blocking protests received, there was no way it was going to change the approach of the West.

These countries had their own agenda and it did not involve any efforts to use diplomatic or economic leverage to force the Sri Lanka government to accept yet one more ceasefire in this seemingly endless war.

However cold-blooded it may have seemed, it was clear in diplomatic circles that the dictates of realpolitik and national self-interest would trump humanitarian calls to action.

What the world saw was foot-dragging in its purest diplomatic form.

A checklist for non-action

A lame European call for the Sri Lankan government to hold off "a final assault" was still only in draft form when representatives of the 27 European Union governments broke for the weekend, just as the fighting entered its last 48 hours.

"So far there have been only statements issued by the most powerful bodies in the world, the UN the EU, G8 and Western governments. But here has been no follow through in terms of action," observed David Poopalalillai of the Canadian Tamil Community. "The international community has failed the Tamils by not fulfilling its obligation to protect civilians caught in this armed conflict."

Why did this happen, despite a sympathy that exists in international circles for the Tamil sense of abandonment?

There's a rather long checklist of reasons for the non-action of Western governments.

First, there was consensus that anything that ended Sri Lanka's brutal, on-and-off-again civil war would be far better than letting the conflict continue.

Diplomats may have seemed deaf to humanitarian calculations, but they had their own numbers in mind: this war had already killed more than 80,000 people, had forced hundreds of thousands to flee and had become a permanent blight on Sri Lanka's hopes to develop economically and politically.

Also, past international attempts to broker progress during three former ceasefires had crumbled to dust in the breakdown of talks between the Tamil minority, the insurgent Tamil Tigers, and the Sinhalese and Buddhist majority.

Ceasefires can be very dangerous in some conflicts. As was the case in Sri Lanka in the past, they can leave the warring sides more intransigent and better armed than before, which makes any eventual resumption of fighting all the bloodier.

No sympathy for the Tigers

Add to this the view that the Tamil Tigers were seen as a deeply dangerous force wedded to terrorism, assassination and the use of child soldiers. Its very presence was yet another potential explosive charge in the tinderbox of South Asia's hostilities.

Then take the tactical situation on the ground. The Sri Lankan military was so close in the last weeks to capturing the final Tamil Tiger positions that few world leaders, whatever their public posture, could really blame the Sri Lankan government for trying to seize a final victory.

As a Canadian source close to the conflict told me: "Let's be blunt, in their position we'd have done the same thing, and even used the example of Lincoln ending the U.S. Civil War as an historic justification."

The Western calculation was that outside pressure would best be employed in the aftermath of the fighting to ensure Sri Lanka acted to heal the wounds and deal honourably with the Tamil community.

That may be just wishful thinking, of course, especially given the very low opinion in the West of Sri Lanka President Mahinda Rajapaksa, a hardline Sinhalese nationalist with little regard for world opinion or, seemingly, human rights.

Relief groups in the country remain properly more skeptical about the president and are already complaining that their repeated attempts to help Tamil refugees are being blocked by the authorities.

China's hand

Still, in this post-George W. Bush world, Western government are keenly aware that there is a new power reality surrounding certain events, such as this final, bloody confrontation in Sri Lanka.

Rajapaksa simply didn't have to worry much even if Western displeasure or criticism had surfaced with force because he had two allies that matter to him far more: China and India.

India, the closest neighbour, offered quiet, but critically important support, including using its efficient navy to block arms shipments to the Tamil Tigers (the group behind the assassination of then Indian prime minister Rajiv Gandhi in 1991).

It was China's support, however, that proved decisive. Expanding its clout across Asia at dizzying speed, China has positioned itself as a warm, uncritical friend of Sri Lanka at all international gatherings, including the UN, which is a place where no one wants to offend Beijing.

In return, Sri Lanka has agreed to host a huge, Chinese-built port at Hambantola, currently under construction. It will be the third, large Chinese port being built at strategic locations across the Indian Ocean, including one in Myanmar and another in Pakistan.

Though planned in large part for civilian traffic, the Sri Lanka port will give China's expanding navy an extraordinarily valuable base overlooking South Asian trade routes and make Sri Lanka a firm and well rewarded ally.

Limited influence

In moving forward from here, Western governments will undoubtedly have some say when it comes to Sri Lanka's post-war recovery because they are still large aid donors and trading partners.

But, flush with victory and happily in bed with its new big-power partner in Beijing, Sri Lanka now delights in telling the West that its influence has strict new limits and that these limits apply especially to countries such as Canada that permitted large Tamil protests in recent weeks.

One of the sad ironies of the Tamil protests in Canada is that the more the marchers demanded this country use its influence on their homeland, the less influence Canada was being accorded in any peace effort there.

This new chill in relations with the West is worrisome precisely because Sri Lanka has such a strategic location in the sea lanes of the Indian Ocean. Militaries and strategic think tanks here are strongly telling Western governments that they cannot let Sri Lanka slip into a future, Chinese-power orbit, which is another reason why our leaders were so anxious to avoid a direct clash with Sri Lanka over this war and why they went out of their way to shun Tamil protesters in Canada and Europe.

Tamils around the world were trying to push foreign governments into a showdown with Sri Lanka at the very time that these governments were trying to win back whatever diplomatic footholds they still had there.

This is not meant to defend diplomatic behaviour, simply to explain it and to note why these Tamil protests seemed so especially forlorn given the new power realities reshaping our world.

http://www.cbc.ca/world/story/2009/05/21/f-vp-stewart.html

Link to comment
Share on other sites

இது மேற்கின் கருத்து ... ஆனால் எங்கலின் தவிப்பு இது இல்லையே?

நிச்சயமா எதற்கும் ஒரு வளி இருக்கும்... சாத்தியமான எல்லாவளியையும் நாம் முயற்சிக்க வேண்டாமா?

மேற்கின் ஆதரவை திரட்டியே ஆகவேண்டும். இல்லாவிட்டால் அடிமையாக வாழவே வேண்டும்.

இந்தகட்டுரையில் இந்தியாவின் பங்களிப்பைப்ற்றி எதுவுமே சொல்லப்படவிலை?

Link to comment
Share on other sites

புவிசார் அரசியலையும், வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டியையும் கண்டு தமிழர் போராட்டத்தில் முற்றாக நம்பிக்கை இழக்கவேண்டிய அவசியம் இல்லை. சமகாலத்தில் நமதை விடச் சிக்கலானதும் நேரடியாக வல்லரசுகளின் தலையீட்டைக் கொண்டதுமான கொசோவோ சுதந்திரம் அடைந்திருக்கின்றது. சின்னஞ்சிறிய தாய்வான் சீனாவின் ஆதிக்க ஒருமைப்பாட்டை வீறாப்பாக எதிர்த்து நிற்கின்றது. கிழக்கு தீமோர் சீனாவை பின் பலமாகக் கொண்ட இந்தோனேசியாவில் இருந்து விடுதலை பெற்றிருக்கின்றது.

இவை யாவற்றிலும் உள்ள ஒற்றுமை இந்த தேசங்கள் தமது எதிரியுடன் நேரடியாக மோதிக்கொண்டு மட்டும் இராமல் தமது பிரச்சனைகளை சர்வதேச மயப்படுத்தியமை தான் வெற்றிக்கு வழிகோலியது.

சமாதான காலம் சர்வதேச மயமாக்களுக்கு நல்ல சந்தர்ப்பத்தை வளங்கியது. இருப்பினும் நாம் இதைத் தவற விட எதிரி நன்றாகப் பயன்படுத்திக்கொண்டான்.

இன்று மீண்டும் நிலமை மாறியிருக்கின்றது. அளவற்ற மனித உரிமை மீறல்களையும் மனிதப் படுகொலைகளையும் புரிந்துகொண்டு எதிரி, பாதுகாப்பு நாடி சீனா, ஈரான் போன்ற தாதாக்களின் கூடார வாசலில் நிற்கின்றான்.

1. சர்வதேசத்திற்கு எதிரியின் மனித உரிமை மீறல், போர்குற்றங்களை ஆவணப் படுத்துவோம். இது எதிரிக்கு சார்பான‌ குரல்க‌ளை மௌன‌மாக்கும்.

2. ஈழத்த‌மிழ‌ரை பிர‌திநிதிப்ப‌டுத்தும் ச‌ர்வ‌தேச‌ அமைப்பொன்றை நிறுவுவோம். நாம் வாழும் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி அவ்வ‌மைப்பிற்கு பிர‌திநிதிகளைத் தெரிவுசெய்து, அவ்வ‌மைப்பை எம‌து ச‌ட்ட‌பூர்வ‌ பிர‌திநிதியாக்குவோம்.

3. இவ்வ‌மைப்பினூடாக‌ உல‌க‌ நிறுவ‌ன‌ங்க‌ளையும் , அர‌சுக‌ளையும் அணுகுதல் மற்றும் த‌னி நாட்டிற்கான‌ முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தகட்டுரையில் இந்தியாவின் பங்களிப்பைப்ற்றி எதுவுமே சொல்லப்படவிலை?

ஏனய்யா இன்னும் இந்தியா

இவ்வளவு நாளும் அவையாலை பட்டது காணாதோ

இன்னும் அதே 13 ஆம் திருத்தச் சட்டத்தை வைச்சுக்கொண்டு அதிலயிருந்தே தொடங்கலாமெண்டு சொல்லிக்கொண்டிருக்கினம்

அவைந்தை சுய லாபத்துக்காக ஒரு இனத்தையும் அதன் பிரதிநிதிகளையும் அழிக்க நினைக்கினம்

நிறையவே பட்டாச்சு

200 000 சனத்தையும் 25 000 இற்கும் மேற்பட்ட மாவீரர்களையும் இழந்தாச்சு இழக்க வைக்காப்பட்டாச்சு

இனியும் என்ன இந்தியா????????????????????

இனியும் என்ன சர்வதேச சமூகம்???????????

எல்லாரையும் கூண்டிலை ஏத்தோணும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல்  "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே"  என கூறுகிறார். சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால், அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம், தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி] போடலாம். ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த பாவனை தான் பதவியைக்  காட்டுகிறது. ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. இப்பவும் இருக்கிறது. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே. அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள். "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. -புறநானுறு 186"  அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது. அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது. குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள். காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள். என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது, அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் , அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது - ஒரு கிரீடம் போல். இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும் - அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
    • "பதவி உங்களுக்குப் பெருமை தருவதை விட நீங்கள் தான் அதைப் பெருமை படுத்த வேண்டும்." புறநானுறு 75. அரச பாரம்! [படியவர்: சோழன் நலங்கிள்ளி] "மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக் குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் 5 சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர் அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் 10 நொய்தால் அம்ம தானே; மையற்று விசும்புஉற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே," பாடலின் பின்னணி: ஒரு சமயம் நலங்கிள்ளி தன் அரசவை அறிஞர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுது எத்தகைய அரசு முறை சிறந்தது என்பது பற்றிப் பேச்செழுந்தது. “பரம்பரை பரம்பரையாக மூத்தோர் இறக்க அதற்கு அடுத்து உள்ள இளையோர் அரசுரிமைப் பெற்று பதவி ஏற்க , பதவி பெறுவது ஒன்றும் பெருமை இல்லை . அது யார் கைக்கு வருகிறது என்பதை பொறுத்து தான் அந்த பதவிக்கே மரியாதை / பெருமை வருகிறது . ஆட்சித் திறனின்றி மக்களுக்கு வரிச் சுமையை அதிகமாக்கும் சிறியோனின் கைகளில் சேர்ந்தால் அது நலிவு அடைகிறது . ஆண்மையும் தகுதியும் உடையவன் கையில் வந்தால் அது பொலிவு பெறுகிறது " என்று தன் கருத்தை இப்பாடலில் நலங்கிள்ளி கூறுகிறான். "ஒரேயடியாக உச்சிக்குப் போய் விட வேண்டு மென்று முயற்சி தான் உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணமாக அமைகிறது" உச்சிக்குப் போவது அவ்வளவு பெரிதான விடயம் அல்ல ! தொடர்ந்து முயற்சிக்கும் எவருமே உச்சிக்கு ஒரு நாள் போய்விட முடியும். ஆனால் கடினமானது எதுவென்றால், உச்சியிலே தொடர்ந்து இருக்க முயல்வது தான்! இந்த ஒரு கருத்தை நகைச்சுவையோடு தன்னுடைய புத்தகத்தில் "ஜான் மாக்ஸ்வெல்" சொல்லியிருப்ப தாகப் படித்துள்ளேன் அவர் சொல்லும் கதை இது. ஒரு நாள் ஒரு காட்டு வான்கோழியும், எருதும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன. எதிரே தெரிந்த உயரமான மரத்தை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வான்கோழி சொன்னது: "அந்த மரத்தின் உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது! ஆனால் அதற்குத் தேவையான சக்தியோ, சத்தோ என்னிடம் இல்லை." எருது சொன்னதாம்! "என்னுடைய சாணியை கொஞ்சம் சாப்பிட்டுத் தான் பாரேன்! அதில் ஏகப்பட்ட சத்து இருக்கிறது!" வான்கோழியும், நம்பிக்கையோடு சாணியைச் சாப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்ததாம்! எருது சொன்ன மாதிரியே அது ஊட்டச்சத்து மிகுந்ததாகத் தான் இருந்தது. மரத்தின் அடிவாரம் வரை போகக் கூடிய தெம்பு வந்து விட்டது. மறுநாள், இன்னும் கொஞ்சம் சாணியைச் சாப்பிட மரத்தின் கீழ்க் கிளை வரை போக முடிந்தது. அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாள் என்று சாணியைச் சாப்பிட்டு, நான்காவது நாள் ஒருவழியாக மரத்தின் உச்சிக் கிளைக்குப் போய் உட்கார முடிந்தது. உச்சிக்குப்போய் உட்கார்ந்த பெருமிதத்தோடு வான்கோழி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சந்தோஷத்தில் குரல் எழுப்பியதாம்!  காட்டில் வேட்டையாட வந்த ஒருவன் கண்ணில் பட, துப்பாக்கியால் சுட்டானாம்.. வான் கோழி பணால்! உயரத்திலேயிருந்து, ஒரே தோட்டாவில் கீழே வந்தாயிற்று! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  
    • எல்லாம் ப‌ண‌த்துக்காக‌ தான் ஈழ‌ ம‌ண்ணில் சிங்க‌ள‌ ராணுவ‌ம் நாட்டு ப‌ற்றினால் போர் புரிந்த‌வையா இல்ல‌வே இல்லை எல்லாம் காசுக்காக‌ ஈழ‌ ம‌ண்ணில் வ‌ந்து ப‌ல‌ ஆயிர‌ம் சிங்க‌ள‌ இராணுவ‌ம் ப‌லி ஆனார்க‌ள்.........................   ர‌ஸ்சியா விவ‌கார‌த்தில் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் ர‌ஸ்சியா போகாம‌ல் இருப்ப‌து ந‌ல்ல‌ம்......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.