Jump to content

நித்தியா கவிதைகள்


Recommended Posts

  • Replies 220
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருவியண்ணா என்ன சின்னப்பிள்ள மாதிரி கேள்வி கேக்குறீங்கள்...... இது ஒரு கவிதையாக்கும்.....இது கூடத் தொயாதா????????

Link to comment
Share on other sites

இடை நோகக் கட்டியணைத்து

இளந்தென்றல் வெளியேறப் போட்டி போட

சுடு மூச்சு தேகம் பட உள் ஆவி இறந்தது

27 ஆண்டுகளை நல்லிரவில் கைதான போது

விழியோரம் எட்டிப்பார்த்த கண்ணீர்

சுமையாகிப் போனது..

பி.கு.: இந்தக் கவிதை வைரமுத்துவின் ஒரு கவிதையின் பாதிப்பில் எழுதியது என நித்தியா குறிப்பிடச் சொன்னார்.

இது வைரமுத்துவின் உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே கவிதையின் பாதிப்பா?

அவருடைய அந்த கவிதையின் ஒரு பகுதி இருவர் படத்தில் அரவிந்தசாமியின் குரலில் வெளிவந்தது தானே?

Link to comment
Share on other sites

நித்தியாக்கா இது என்னவென்று அறியலாமா? :wink: :idea:

அறியலாமே..

இது ஒரு கவிதை..

ம்மம்

அறிமுகம்ப் படுத்தப்பட

வேண்டி இருந்தது..

காதலனின் காதலி

அல்லவா?? :) :? :wink:

அறிமுகப்படுத்தினேன்

*தீர்த்தாள்

*உயிர்த்தாள்

* மானிடம் பல கர்ச்சித்த போதும்

என சின்ன சின்னதா பிழைகள் உண்டு..!!

கவிதையை இங்கு இணைத்தமைக்கு

நன்றி அருவி..!!

Link to comment
Share on other sites

கற்பனை

karpanai_nithi_141.jpg

இடை நோகக் கட்டியணைத்து

இளந்தென்றல் வெளியேறப் போட்டி போட

சுடு மூச்சு தேகம் பட உள் ஆவி இறந்தது

27 ஆண்டுகளை நல்லிரவில் கைதான போது

விழியோரம் எட்டிப்பார்த்த கண்ணீர்

சுமையாகிப் போனது..

உயிரைப் பிழியும் உன் பார்வை

தேடல் கொண்டதில்

21 ஆண்டுகள் கன்னக்குழியில்

தொலைந்து போனது..

கிளிப்பேச்சு கேட்கும் காலையில்

அவன் விழிப்பேச்சு கண்டு

மூச்சுமுட்ட கட்டியணைத்து

இறந்தபோன உடலுக்கு அவன்

உதடுகளால் உயிர் தந்த போது..

தொலைந்து போகும் என் காதலை

எண்ணி இதயம் வேகமாய்த் துடித்தது..

"காந்த"க் கண்ணில் தீப்பொறி கண்டதும்

மின்னலின் தலைக்கனம்

மெத்தைமேல் இளகிப்போனது..

கண்ணின் மணி 72கிலோ'வை

எடை போட்டபோது

மெல்லிடை நூலாகிப்போனது..

வஞ்சகன்...

சென்மம் முழுதும்

தொலைந்து போகிறவளுக்கு

இரண்டு நாள் ஈடாக கொடுத்தான்

திருமார்பில் முகம் புதைப்பதுக்குள்

தேய்ந்து போனதடா

அந்த 43 மணித்தியாலங்கள்..

தூக்கி எடைபார்த்த போது

கண்ணடித்த கறுப்புமுகம்

இன்னும் பாதத்தை

கோலம் போட வைக்குதடா..

விழி சொரியும் கண்ணீருடன் கடைசி முத்தம்

தந்து விடை பெற்ற போது - காதல்

நிரந்தரமாக விடைபெறுகிறதோ..?

என்று ஏக்கத்தில் கை நடுங்க

நடை தானாகத் தளர்ந்தது..

கத்தரிக்காய் எடை இல்லாக்காதல்

என்று ஊர் தூற்றுகையில்

இதயம் வெடித்து சிதறியது

காதலுக்காய் மரணிக்க

மாற்றுயிர் இல்லையே என்று..

எழுதியவர்: நித்தியா

பி.கு.: இந்தக் கவிதை வைரமுத்துவின் ஒரு கவிதையின் பாதிப்பில் எழுதியது என நித்தியா குறிப்பிடச் சொன்னார்.

பிரியசகி கேட்டதற்கிணங்க... இருவர் படத்தில் பிரகாஷ்ராஜ் வாயசைக்க, அரவிந்தசாமியின் கவித்துவமான குரலில் ஒலித்த வைரமுத்துவின் "உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்" என்ற கவிதை எனது குரலில்.

[url=http://www.vannithendral.net/soundclips/unnoduNan.mp3]உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்...

Link to comment
Share on other sites

[url=http://www.vannithendral.net/soundclips/unnoduNan.mp3]உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்...

வாவ் அக்கா கவிதை உங்கட குரலில சிறப்பாய் இருக்கு. குரற்பதிவு மிகவும் தெளிவாகவும் பின்னணி இசை நெருடல் இல்லாமலும் இருக்கு.

நன்றி அக்கா.

Link to comment
Share on other sites

நித்யா அக்கா பிய்ச்சு உதறியிட்டிங்க.... உங்க குரலில் நன்னா ஜமாய்ச்சிருக்கிங்க...நன்றி. :)

Link to comment
Share on other sites

வைரமுத்துவின் கவி வரிகள் சூப்பர் ..அதயே உங்க குரலில் கேக்க இன்னும் அருமையா இருக்கு..பின்னணி இசை கூட சூப்பர் நித்தியா.. நன்றி...:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நித்யாக்கா...............அந்தமாதிரி வாசிக்கிறீங்க....கவித வாசிக்கிற உங்கட குரலே ஒரு கவித மாதிரி இருக்கக்கா.....நீங்க வாசிச்ச அந்தக் கவிதயும்...பின்னுக்கு போன அந்த இசையும் நல்லாருந்திச்சு.....இப்ப 13 தடவ அத கேட்டிட்டன்.....நல்லாருக்கக்கா

...

Link to comment
Share on other sites

வைரமுத்து கவிதையை குரல் வடிவில் தந்தமைக்கு நன்றி நித்தியா.

வைரமுத்து தொகுப்பில் இருக்கும் வேறு கவிதைகள் ஏதும் உங்களிடம் இருந்தால் குரல் வடிவில் தாருங்களேன்.

Link to comment
Share on other sites

ரொம்ப நன்றி நித்யாக்கா...ரொம்ப நன்றி..உங்கள் குரலில் கவிதை சூப்பரா இருக்கு...

மேலும் உங்கள் கவிதைகளும் தாருங்கள்...வைரமுத்து கவிகளும் இருந்தால்..குரலில் தாருங்கள்..அப்போ...கணணியில் வைத்து கேட்கலாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பர் சுப்பர்.. ரொம்ப நல்லாஇருக்கு நித்தியா அக்கா.. சுப்பர்.. இன்னும் எதிர் பார்க்கிறோம்....

Link to comment
Share on other sites

நன்றி நன்றி நன்றி

ஆஆஆஆஆஆஆஆஆஆகாகாகாகா

அக்கா அக்கா என்று நீங்கள் கூப்பிடுவது

"உங்கள் எல்லாரையும் எப்படி கரை சேர்கப் போகிறேன்"

என்று கவலையடைய வைக்குது..!! :):):)

இவ்வளவு போறுப்பா எனக்கு ???

யாராவது தங்கச்சி என்றால் என் சுமையில்

ஒன்று குறைந்த மாதிரி இருக்கும் :):)

உங்கள் பதிவுகளுக்கு நன்றி..!!

Link to comment
Share on other sites

யாராவது தங்கச்சி என்றால் என் சுமையில்

ஒன்று குறைந்த மாதிரி இருக்கும் :):)

உங்கள் பதிவுகளுக்கு நன்றி..!!

அக்காவ அக்கா என்று சொல்லாம எப்படி தங்கச்சி என்று சொல்லுறது :roll: :wink:

சரி உங்கட அடுத்த கவிதை எப்பவரும்

இது மாவீரர் மாதமல்லவா, அப்படியே எங்களின் மாவீரர்கள் பற்றியும் அவர்கள் புகழ்பற்றியும் சில வரிகள் கூறுங்களேன்.( உங்கள் குரலில் கேட்க ஆவலாய் உள்ளோம்.)

Link to comment
Share on other sites

(மதன் கேட்டதற்கிணங்க) வைரமுத்துவின் கவிதைத் தொகுப்பிலிருந்து (அருவி கேட்டதற்கிணங்க) மாவீரர் பற்றிய கவிதை ஒன்று:

[url=http://www.vannithendral.net/soundclips/ezham.mp3]ஈழம்

Link to comment
Share on other sites

நித்தியாக்காவின் கவிதை வரிகள் சொந்த குரலில் கவிதைக்கான இசையுடன் கேட்கும் போது அருமை. ஈழம் கவிதை நல்லாக இருக்கு அக்கா. வாழ்த்துக்கள். :P

Link to comment
Share on other sites

"வா மகனே வா

வந்து முகர்ந்து பார்

உன் தந்தையின்

சட்டையில் அடிப்பது

இரத்த வாசனை அல்ல

தேச வாசனை

உள்ளம் கல் செய்

அழுதழிக்காதே இரத்தக் கறையை

தமிழ்ப் பெண்களின் நெற்றிகளிற்கு

உன் தந்தை தந்த

குங்குமப் பொட்டு அது

தொடு - உணர்வால்

அவர்விட்ட கடைசி மூச்சின் ஆறாத சூட்டை

சட்டையின் நெஞ்சில் காதுவை

கேட்கும் கடைசித் துடிப்பின்

தேய்ந்த எதிரொளி

காற்சட்டைக் கிழிசலில்

காற்றாடும் நூல்கள்

இமயம் கட்டியிழுத்த இழைகள்

இது தமிழ்த்தாய்

எனக்குத்தந்த சீருடை

இந்த உடைக்குள் இருந்த தேகம்

இன்று பூமிக்குள்

உள்ளிருந்த உணர்வு மட்டும்

உன்னில்..

என்னில்..

ஊரில்..

தேசமே அழட்டும் - உன் தந்தைக்காய்

உன்னையும் என்னையும் தவிர

என்தலையணை தெலைந்த இடத்தில்

உன் தந்தையின் உடை

ஒவ்வொரு நாளும்

தமிழீழத்தை

தலைக்குவைத்துத் தூங்கப் பார்க்கிறேன்

தூங்கமாட்டேன் மகனே

தூங்கமாட்டேன்

தந்தையின் கடைசி உடையுடன்

காத்திருப்பேன்

உன் உயரம்

அகலம்

உள்ளம்

இந்த உடையோடு பொருந்தும் வரை."

ம் நல்ல ஒரு கவிதையைத் தந்திருக்கிறீர்கள் அக்கா.

தேச விடிவிற்காய் தன் தந்தையை இழந்த தனயனிற்கு ஆறுதல் சொல்லும் உறவொன்று....

மாவீரர்களிற்கும் போராளிகளுக்கும் எம்மைப்போன்று உறவுகள் சிலவல்ல....

கார்த்திகை 27 அவர்கள் தம் உறவுகளைக் கண்ணெதிரே காணும் நாள். எம் தேசத்தின் எழுச்சிநாள்...

நன்றி அக்கா!

அழகான இசையுடன் உங்கள் இனிமையான குரலில் இக்கவிதையைத் தந்ததற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னொரு கவிதை:

[url=http://www.vannithendral.net/soundclips/mariyathai1.mp3]மரியாதை

:roll: :roll: :roll: நித்தியாக்கா.. மீண்டும் உங்கள் குரலில் ஒரு அருமையான கவிதை. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் கவி மழை

Link to comment
Share on other sites

வைரமுத்துவின் இன்னொரு கவிதையை குரல் வடிவில் இணைத்ததாக எழுதியிருந்தீர்கள். எங்கே அதை காணவில்லையே?

மரியாதை கவிதையை இனைத்தமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

நித்தியா உங்கள் குரல் பதிவுகள் நன்றாக இருக்கிறன. மூன்று பதிவுகளையும் இன்று தான் கேட்டேன். தொடர்ந்தும் இணையுங்கள்.

Link to comment
Share on other sites

எனக்கு மிக மிக பிடித்த கவிதை

உங்களுக்கும் பிடிக்கும் என்று

நம்புகிறேன்..

சுடுக்குவும்

http://www.acidplanet.com/radio/playartist...D=442849&T=5528

நித்தியாக்கா கவி மிக நன்றாக இருக்கிறது. அது சரி என்ன எப்பவும் சோகமாய் இருக்கிறீங்க. :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.