Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

அகதிகளுக்கு உதவ தொண்டர் அமைப்புகளுக்குத் தடை விதிக்கக் கூடாது


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அகதிகளுக்கு உதவ தொண்டர் அமைப்புகளுக்குத் தடை விதிக்கக் கூடாது உகந்த அரசியல் தீர்வு காணாவிடில் முந்திய வரலாறு மீண்டும் திரும்பும்! ஐ.நா. பொதுச்செயலாளர் மூன் எச்சரிக்கிறார்

[24 மே 2009, ஞாயிற்றுக்கிழமை 9:00 பி.ப இலங்கை]

இலங்கையில் வாழும் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைக்கு உகந்த அரசியல் தீர்வு காணப்படவேண்டும். அதன் மூலம் அவர்களிடம் நம்பிக்கையை கட்டி எழுப்ப வேண்டும் .இல்லையேல் இந்த நாட்டில் முந்திய வரலாறு மீண்டும் வரும் நிலையேஉருவாகும்.

இவ்வாறு எச்சரிக்கும் தொனியில் கருத்து வெளியிட்டிருக்கிறார் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன்.

போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு தொண்டர் நிறுவனங்கள் செல்வதற்கு எந்தவித தடையும் விதிக்கக்கூடாது; அனுமதி வழங்க வேண் டும் என்றும் செயலாளர் நாயகம் வற்புறுத்தினார்.

இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் நேற்று கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிற் பகல் 4 மணிக்கு சந்தித்துப் பேசினார்.

அதன் பின்னர் கண்டி குயீன்ஸ் ஹோட் டலில் நேற்றிரவு செய்தியாளர் மாநாட்டை நடத்தினார்.

அங்கு அவர் தெரிவித்த கருத்துக்கள், தகவல்கள் வருமாறு:

இந்த நாட்டில் வாழும் சகல இன மக்க ளும் அமைதியான வாழ்க்கையை முன் னெடுக்க அரசு உதவ வேண்டும். எல்லா மக்களும் நல்லிணக்கத்துடன் வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும்.

சிறுபான்மையின மக்களின் பிரச் சினைக்கு உகந்த அரசியல் தீர்வு காணப் பட வேண்டும். அவர்கள் மத்தியில் நல் லிணக்கம் கட்டியெழுப்பப்படவேண் டும். அவ்வாறு செய்யப்பட வில்லையெனில் இந்த நாட்டில் முந்திய நிலையேமீண்டும் உருவாகும் என்பதனை சகலரும் மனதில் கொள்ளவேண்டும்.

அகதி முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க ஐ.நா. முகவர் அமைப்புக்கள், சர்வதேச தொண் டர் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எந்தவித தடையும் விதிக்கக்கூடாது. அந்த அமைப் புக்கள் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும்.

முகாம்களில் உள்ள மக்களின் தேவை கள் மிக அதிகமாக உள்ளன. அவற்றை நிறைவேற்றக் கூடிய வளங்கள் போதியளவு அரசிடம் இல்லை.

மக்களின் தேவைக்கும் அவர்களுக்கு என்ன உதவி வழங்க வேண்டும் என்பதற் கும் இடையில் பெரும் இடைவெளி காணப்படுகிறது.

உணவு, மருந்து, குடிதண்ணீர், அடிப் படை சுகாதார வசதி ஆகியன போதிய அளவு கிடைக்கவில்லை என மக்கள் என் னிடம் முறையிட்டனர்.

போதுமான உதவிகள் இல்லை

இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை இலங்கை அரசு ஒரளவுதான் பூர்தி செய்து வருகின்றது. அந்த உதவி போதுமானதாக இல்லை என்பதை அவதானிப்தேன்.

முகாம்களில் தங்கியுள்ளவர்களில் 80 சதவீதமானவர்களை இவ்வருட முடிவுக்குள் அவர்களது செõந்த இடங்களில் மீள் குடியேற்றி விடுவோம் என்று இலங்கை அரசு என்னிடம் தெரிவித்துள்ளது.

மக்களின் மீள்குடியமர்வுக்கு சர்வதேச உதவி தேவை என ஐ.நா கருதுகிறது. மோதல் நடந்த பிரதேசங்களில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றத் தமது சர்வதேச பங்காளர்கள் மூலம் உதவுவோம்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை வெளிப்படையாக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்

யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களை விமானம்மூலம் சென்று பார்வையிட்டேன். பெரும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருப்பதையிட்டு கவலை அடைகிறேன்.

30 வருடங்களாக தொடர்ந்த யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்தேன். அவர்களுக்கு உரிய புனர்வாழ்வுத் திட்டங்களை அரசு மேற்கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு ஐ.நா. அமைப்புக்கள் தயாராகவுள்ளன. ஏற்கனவே பல வேலைத்திட்டங்களை அந்த அமைப்புக்கள் முன்னெடுத்துள்ளன.

ஏராளமான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. அவற்றை அகற்ற ஐ.நா. தனது உதவிகளை வழங்கும்.

அகதிகளின் கல்வி நிலைமையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதற்குத் தேவையான உதவிகளை வழங்க ஐ.நா. தயாராக உள்ளது என்று தெரிவித்தார் பான் கீ மூன்.

நேற்றிரவு 11.30 மணிக்கு ஐ.நாவின் செயலாளர் நாயகம் நியூயோர்க் திரும்பினார்.

நன்றி உதயன்........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் மனைவியின் மற்றுமொரு சகோதரரும் சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சிறைச்சென்றுள்ளார். குற்றவாளியாக இனங்காணப்பட்ட அவர், 2007ஆம் ஆண்டு மே 29ஆம் திகதி நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் தனக்கான தண்டனையை வெலிக்கடை சிறைச்சாலையில் அனுபவித்துள்ளார். தண்டனைக்காலம் நிறைவுற்றதன் பின்னர் விடுதலையாகியுள்ளார் என அரசாங்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் ஏற்கெனவே வேலைச்செய்த சிறுமியை ரிஷாட்டின் மற்றுமொரு மைத்துனரான மொஹமட் ஹனீஸ் என்றழைக்கப்படுபவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என அறியமுடிகின்றது. Tamilmirror Online || ரிஷாட்டின் மற்றுமொரு மைத்துனரும் மற்றுமொரு சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்
  • யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவருக்கு இன்று (29) இரு கையிலும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. யாழ், மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று (29) முன்னெடுக்கப்பட்டது.  இந்த செயற்றிட்டத்தில் யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரியில்  அமைந்துள்ள கொரோனா தடுப்பூசி வழங்கும் மையத்தில், கொழும்புத்துறை, J/61 பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.  இதே பிரிவைச் சேர்ந்த  66 வயது வயோதிப பெண்ணுக்கு இரு கையிலும் தடுப்பூசி ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பெண்ணின் ஒரு கையில் தாதி ஒருவர் ஊசி போட்டு விட்டு உடனடியாக அங்கிருந்து சென்றுவிட  இது தெரியாமல் இன்னொரு தாதி அங்கு வந்து மற்ற கையை காட்டுமாறு கூறி ஊசி போட்டுள்ளார். தவறுதலாக இடம்பெற்றுவிட்டதாகவும் உடலில் உபாதை ஏற்பட்டால் அறிவிக்குமாறும் கூறி அனுப்பி வைத்துள்ளனர். Tamilmirror Online || இரு கைகளிலும் தடுப்பூசி குத்திய தாதிகள்
  • விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு செய்வதற்கு நேற்றும் (29) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையால் அங்கு பெரும் பதற்றமான நிலைமையொன்று இன்றுக்காலை முதல் ஏற்பட்டிருந்தமை யாவரும் அறிந்த விடயமாகும். இந்நிலையில், அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் ஏனைய தரப்பினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது,    முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு தொடர்பில் கடற்படை, காணிகளுக்கு உரியவர்கள், உரிய திணைக்கள அதிகாரிகளுடன் மாவட்டசெயலகத்தில் ஒரு கலந்துரையாடல் இடம்பெறும். அந்தக் கலந்துரையாடலின் அடிப்படையிலேயே நில அளவீடு தொடர்பில் முடிவு எடுக்கப்படும்.    அதுவரை நில அளவைச் செயறபாடுகள் இடம்பெறாது என்ற இணக்கமான முடிவொன்று எடுக்கப்பட்டது. இதனையடுத்தே, ஆர்ப்பாட்டம் சற்றுமுன்னர்  கைவிடப்பட்டது.  தென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோட்டாப கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர் காணியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த சீன நாட்டைச்சேர்ந்தவர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகைதந்து தனது காணிகளுக்குரிய நட்ட ஈட்டைப் பெறுவதற்கும், இதுவரைகாலம் அங்கு கடற்படை இருந்து தனது காணியைப் பயன்படுத்தியமைக்கான நட்ட ஈட்டைப் பெறுவதற்கும் கட்டாயம் அங்கு நில அளவீடு இடம்பெறவேண்டும் என வலியுறுத்தினார். குறித்த நபரின் இத்தகைய கருத்திற்கு அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டிருந்தனர். வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், சீனச்சிங்களவர் அங்கிருந்து வெளியேறவேண்டும் என கோசம் எழுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்களும் குறித்த நபர் அங்கிருந்து வெ ளியேறவேண்டுமெனக் கோசம் எழுப்பியதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்ட இடத்திலிருந்து அந்நபர் வெளியேறியிருந்தார். Tamilmirror Online || சீன நாட்டு பிரஜை ஒருவரும், கோட்டாபய முகாமுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
  • எனக்கு நீங்கள் கோபப்படுவதாக தெரியவில்லை.   ஆனால் நாதத்தை தேவைக்கு அதிகமாக சீரியசாக எடுக்கிறீர்களோ என்று தோன்றுகிறது🤣.
  • நானும் இதுக்குள்ளை புகுந்து விளையாடுவமெண்டு பாத்தால் கோதாரிவிழ ஒண்டும் விளங்குதில்லை 😎
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.