Jump to content

கனடா தூதரகம் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டுள்ளது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடா தூதரகம் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டுள்ளது

சிறிலங்காவில் உள்ள கனடா தூதரவாலயம் இன்று, புதன்கிழமை, சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கனடா ஆதரிப்பதாகவும், கனடா பயங்கரவாதிகள் நிறைந்த நாடு என்றும் கோஷமிட்டபடியே தூதரவாலயச் சுவர்கள் மற்றும் வளாகமானது காடையர்களால் தாக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் பணத்துக்காய் விலைக்கு வாங்க பட்டவர்கள். .......போடும் வேஷம். நல்லாய் தான் நாடகம் போடுகிறார்கள். பணம் பாதாளம் மட்டும் பாயும். இவை வெறும் அம்புகள் எய்தவன் யாரோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களின் சொல்லை கேட்டு எம்மை தடை செய்த மேற்குலகம் , இன்று சிங்களவனாலேயே புலி முத்திரை குத்தப் படுவது நல்ல வேடிக்கை .

இதுகும் ஒரு வகையில் நன்மைக்கே . சிங்களவர்களின் உண்மை முகத்தை மேற்குலக நாடுகளும் புரிந்து கொள்ளட்டும் .

அப்பிடியே ....... அவுஸ்திரேலியா , அமெரிக்கா , ஐரோப்பா தூதுவராலயங்கள் முன்பும் ஆற்பாட்டங்கள் வரவேற்கப் படுகின்றன .

Link to comment
Share on other sites

இவர்கள் பணத்துக்காய் விலைக்கு வாங்க பட்டவர்கள். .......போடும் வேஷம். நல்லாய் தான் நாடகம் போடுகிறார்கள். பணம் பாதாளம் மட்டும் பாயும். இவை வெறும் அம்புகள் எய்தவன் யாரோ ?

தவறான கருத்து... உயிரை கொடுத்து தாய்நாட்டின் மானத்தை காக்க கூடிய அளவு எழுச்சி கொண்டிருக்கிறார்கள் அண்மைய நாட்களில். விரைவில் மகிந்த கூட்டணியின் வராலாறு காணத தேர்தல் வெற்றி அதை உங்களுக்கு உணர்த்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறான கருத்து... உயிரை கொடுத்து தாய்நாட்டின் மானத்தை காக்க கூடிய அளவு எழுச்சி கொண்டிருக்கிறார்கள் அண்மைய நாட்களில். விரைவில் மகிந்த கூட்டணியின் வராலாறு காணத தேர்தல் வெற்றி அதை உங்களுக்கு உணர்த்தும்.

புலம் பெயர்ந்த நாட்டில் ஈழத்தவர் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் சொந்த நாட்டில் சிங்களவன் அரச உதவிகளுடன் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

இவ்வளவு வெளிப்படையான இன அழிவுக்குப்பின்னும் புலம்பெயர்மக்கள் ஒருங்கிணையாவிடில்..........................???????????????? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் அயல்நாட்டில் ஏதாவது வில்லங்கம் செய்தாலும், ஏன் கொலையே செய்தாலும், இனவ வெறி சிங்கள அரசாங்கத்தின் தூதுவர் ஓடோடி வந்து அனைத்து உதவிகளையும் செய்வார்கள். தமிழனுக்கு? ஆகவேதான் நாம் அடக்கி வாசிக்க வேண்டியிருக்கிறது.

இதையே வாய்ப்பாக பயன்படுத்தி சிங்கள இன வெறி அரசின் கொலை வெறி கோர தாண்டவத்தையும், தமிழர்கள் அங்கே எவ்வாறு சிறுமைப்படுத்தப்படுகிறார்க

Link to comment
Share on other sites

தவறான கருத்து... உயிரை கொடுத்து தாய்நாட்டின் மானத்தை காக்க கூடிய அளவு எழுச்சி கொண்டிருக்கிறார்கள் அண்மைய நாட்களில். விரைவில் மகிந்த கூட்டணியின் வராலாறு காணத தேர்தல் வெற்றி அதை உங்களுக்கு உணர்த்தும்.

மிகவும் மகிழ்ச்சி... அவர்கள் தமிழர்களுக்கு கொடுக்க போகும் நற்பலன்களில் அதிகமானவை கொழும்பில் உள்ளவர்களுக்கு அதிகமாக கிடைக்க வேண்டும் எண்று வேண்டிகொள்கிறேன்....

தமிழர்களை சர்வதேச ரீதியில் தோற்கடிக்க முன்னிண்று உழைத்த கொழும்புவாழ் மக்களுக்கு போதாதுதான் எண்றாலும்...

Link to comment
Share on other sites

மிகவும் மகிழ்ச்சி... அவர்கள் தமிழர்களுக்கு கொடுக்க போகும் நற்பலன்களில் அதிகமானவை கொழும்பில் உள்ளவர்களுக்கு அதிகமாக கிடைக்க வேண்டும் எண்று வேண்டிகொள்கிறேன்....

தமிழர்களை சர்வதேச ரீதியில் தோற்கடிக்க முன்னிண்று உழைத்த கொழும்புவாழ் மக்களுக்கு போதாதுதான் எண்றாலும்...

இதில ஏதாவது ரெண்டு அர்த்தம் இருக்கா? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் பணத்துக்காய் விலைக்கு வாங்க பட்டவர்கள். .......போடும் வேஷம். நல்லாய் தான் நாடகம் போடுகிறார்கள். பணம் பாதாளம் மட்டும் பாயும். இவை வெறும் அம்புகள் எய்தவன் யாரோ ?

எய்தவனும் இல்லை கொய்தவனும் இல்லை அக்கா அவனுகள் எல்லாம் தமிழனை அழிக்க இதய சுத்தியுடன் செயற்படுகிறானுகள் ஆனால் நம்மட பண்டிகள் அவனுக்கு ..........கழிவி நக்கி துணைபோகிறானுகள் .புலம் பெயர்ந்த தமிழன் எங்கு ஆர்ப்பாட்டம் பண்ணி தங்களது போராட்டத்திற்கு வலுசேர்க்கிறானோ அந்தந்த நாட்டு தூதரகங்களுக்கு முன்னால் அவர்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்கிறார்கள் [காசு கொடுக்காமல்] ஆனால் நம்மவர்களை ஆர்ப்பாட்டம் பேரணி என்று கூப்பிட்டு பாருங்களன் எப்பா................... :(

Link to comment
Share on other sites

திமிர்.

ஆதரவு தரும் காவல்துறை

. எதிர்க்க ஆளில்லாத சூழல். எருமை மாட்டில் மழை பெய்ததுபோல் சொறிலங்காவின் சேட்டைகளைப் பொறுத்துக் கொள்ளும் சர்வதேசம். இவற்றின் மத்தியில் எந்த ஆதரவுமற்ற தமிழரை அழிக்க முனையும் காடைத்தனத்திற்குப் பெயர் எழுச்சியா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடிய பிரதம மந்தி 'ரி' ஸ்டீவன் கொப்பர் :"நாங்கள் இதை வன்மையா கண்டிக்கிரம். இலங்கை அரசு மக்களுக்கு இன்னும் நல்லது செய்ய இன்னும் ஒரு அன்ச்சு மில்லியன் காசு கொடுக்கப்படும். எங்கடை எம்பசிக்கு பெயின்ட் மாத்திரம் அடிச்சு குடுத்தா சரி.."

பந்துல ஜெயசேகர : அது சும்மா எங்கடை சின்ன பெடியள் கொளுன்பில கிரிகெட் விளையாடேக்க கல்லு போய் கனடிய எப்பசிக்க விழுந்து போச்சு.... சிலவேளை இது கனடாவில பயிஞ்சி பெற்ற விடுதலை புலிகளின் சதியாகவும் இருக்கலாம்.....இல்லடி கனடா எம்பசி எங்கடை நாட்டில 'கிலேம்(claim)' ஏதாவது போட சதி செய்யுது போல

Link to comment
Share on other sites

மிகவும் மகிழ்ச்சி... அவர்கள் தமிழர்களுக்கு கொடுக்க போகும் நற்பலன்களில் அதிகமானவை கொழும்பில் உள்ளவர்களுக்கு அதிகமாக கிடைக்க வேண்டும் எண்று வேண்டிகொள்கிறேன்....

தமிழர்களை சர்வதேச ரீதியில் தோற்கடிக்க முன்னிண்று உழைத்த கொழும்புவாழ் மக்களுக்கு போதாதுதான் எண்றாலும்...

ஆற்றாமை - பொறாமை - புத்தி பேதலிப்பு!

வன்னிமக்களுக்கு பெற்றுக் கொடுத்ததுக்கு அதிமாகவா இங்க கிடைக்கப்போகுது? தேங்காய் உடைச்சு நேர்த்தி வையுங்கோ!

சுயவிருப்பு வெறுப்புகளுக்காக மற்றவர்களை அவலப்படுத்தி அதை பார்த்து ரசிக்க விரும்பும் தமிழ்சாதியை விட நாய் சாதி மேல்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியாகச் சொன்னீர்கள் சாணக்கியன் ,

தமிழனை காட்டிக் கொடுத்த ஒட்டுக்குழுவை விட உண்மையில் நாய்கள் மேல் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் உள்ள கனடிய தூதரகம் மீது திட்டமிட்டு இலக்குவைத்த தாக்குதல் - கனடிய அரசு கடும் கண்டனம்

வீரகேசரி நாளேடு 5/28/2009 9:19:59 PM - கனடா புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கொழும்பில் உள்ள கனடிய தூதரகம் மீது மேற்கொண்ட தாக்குதலை கனடிய அரசாங்கம் கண்டித்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியும் தூதரகத்தின் சுவர்களில் சில வாசகங்களை எழுதியும் பாதுகாப்பு கமராவுக்கு வர்ணம் பூசியும் தமது எதிர்ப்புக்களை வெளிக்காட்டியமை தொடர்பில் கனடா அதிருப்தி தெரிவித்துள்ளது.

இது திட்டமிட்ட இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் என்று தெரிவித்துள்ள கனடா இந்த செயல் மிகவும் கண்டித்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இலங்கையில் உள்ள கனடிய தூதரகத்தை பாதுகாக்க இலங்கை பொலிஸார் போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கனடா சுட்டிக்காட்டியுள்ளதுடன் இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் பூரண விசாரணை நடத்தவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

Link to comment
Share on other sites

QUOTE (சாணக்கியன் @ May 27 2009, 09:10 PM)

தவறான கருத்து... உயிரை கொடுத்து தாய்நாட்டின் மானத்தை காக்க கூடிய அளவு எழுச்சி கொண்டிருக்கிறார்கள் அண்மைய நாட்களில். விரைவில் மகிந்த கூட்டணியின் வராலாறு காணத தேர்தல் வெற்றி அதை உங்களுக்கு உணர்த்தும்.

மிகவும் மகிழ்ச்சி... அவர்கள் தமிழர்களுக்கு கொடுக்க போகும் நற்பலன்களில் அதிகமானவை கொழும்பில் உள்ளவர்களுக்கு அதிகமாக கிடைக்க வேண்டும் எண்று வேண்டிகொள்கிறேன்....

தமிழர்களை சர்வதேச ரீதியில் தோற்கடிக்க முன்னிண்று உழைத்த கொழும்புவாழ் மக்களுக்கு போதாதுதான் எண்றாலும்...

ஐயா...நீங்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி வந்து இங்கிருந்து கொண்டு வீரம் கதைக்கிறீக்கள்...கொழும்பில இருந்து இதை சொல்லுவீங்களா?...சொல்லிட்டு எத்தன நிமிஷம் உயிரோட இருப்பீங்கள்?..தயவு செய்து இங்கு இருந்து கொண்டு அங்கிருப்பவர்களை குறை சொல்ல வேண்டாம்..அவர்கள் எத்தனை கஷ்டப்படுகிறார்கள் என்று உங்களுக்கு தெரியவில்லை...ஒரு உதாரணம் மனோ கனேசன்.

Link to comment
Share on other sites

ஆற்றாமை - பொறாமை - புத்தி பேதலிப்பு!

வன்னிமக்களுக்கு பெற்றுக் கொடுத்ததுக்கு அதிமாகவா இங்க கிடைக்கப்போகுது? தேங்காய் உடைச்சு நேர்த்தி வையுங்கோ!

சுயவிருப்பு வெறுப்புகளுக்காக மற்றவர்களை அவலப்படுத்தி அதை பார்த்து ரசிக்க விரும்பும் தமிழ்சாதியை விட நாய் சாதி மேல்!

வன்னி மக்களுக்காக நீங்கள் அழுகிறது கேவலமாய் இல்லையா...?? யாழ் மக்களுக்கு தினமும் நடப்பது , கிழக்கில் இருக்கும் மக்களுக்கு இப்போது நடப்பது வன்னி மக்களுக்கும் நடக்க வேண்டும்... அவர்கள் எல்லாம் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்து சிறைக்குள் இருக்க வேண்டும் எண்டு சொன்ன ஆள் இல்லையா நீங்கள்...??

அது சரி சிங்களவனோடு கூடி கும்மாளம் அடிப்பதில் அதீத அக்கறையும் ஆசையும் கொண்ட உங்களுக்கு சிங்களவன் உங்களுக்கு தேவையானதை தரவேண்டும் தானே...???

உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமோ... புலிகள் ஆயுதங்களை தூக்கினது பிச்சை போடச்சொல்லி மிரட்டுவதுக்கு இல்லை... மக்களை காப்பதுக்கு... !

வன்னியிலை நாலு லட்ச்சம் மக்கள்.. கொழும்பிலை 10 லச்சம் பேர் வாழ்வது போல வாழ முடியும் எண்று சிங்களவன் சர்வதேசத்துக்கு சொல்லும் போது ஏன் அமைதியாக இருந்தீர்கள்...??? அவன் சொல்லுவது உண்மை என்பதினால் தானே...??? (ஆகவே சிங்களவர் தருவதை நீங்கள் வாகுவதில் எனக்கு என்ன கவலை...) இல்லை எண்டால் காரணம் என்ன...???

பயமா...??

அப்படி பயந்தவர்கள் புலிகளை மக்களை எல்லாம் விடுவித்து உங்களை போல சரண் அடைந்து வாழ விடுமாறு கேப்பது கேவலமாக இருக்க இல்லை...??

அப்படி பயம் எண்றால் மற்றவர்களை பற்றி பேசுவதை விட்டு போட்டு அமைதியாக இருக்க பழகுங்கோ... சிங்களவன் தருவது உங்களுக்கு எல்லாம் போதும்...

தலைவர் இல்லாத போது எனக்கும் எதுவும் தேவை இல்லை...

Link to comment
Share on other sites

ஐயா...நீங்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி வந்து இங்கிருந்து கொண்டு வீரம் கதைக்கிறீக்கள்...கொழும்பில இருந்து இதை சொல்லுவீங்களா?...சொல்லிட்டு எத்தன நிமிஷம் உயிரோட இருப்பீங்கள்?..தயவு செய்து இங்கு இருந்து கொண்டு அங்கிருப்பவர்களை குறை சொல்ல வேண்டாம்..அவர்கள் எத்தனை கஷ்டப்படுகிறார்கள் என்று உங்களுக்கு தெரியவில்லை...ஒரு உதாரணம் மனோ கனேசன்.

இண்டைக்கும் வெள்ளைக்காறன் எங்களை கேட்ப்பது கொழும்பில் தமிழர்கள் மகிழ்ச்சியாகத்தானே வாழ்கிறார்கள்...?? என்பதுதான்.. அப்படி எண்றால் ஏன் இலங்கை பூராகவும் வாழமுடியாது என்பது அடுத்த கேள்வி... நியாயமான கேள்விதானே...???

அவனுக்கும் என்ன பதில் சொல்ல முடியும் ...?? இதுக்கு பதிலை சொல்லுங்கோ பிறகு உங்களுக்கு விளக்கம் சொல்லாம்...

Link to comment
Share on other sites

இண்டைக்கும் வெள்ளைக்காறன் எங்களை கேட்ப்பது கொழும்பில் தமிழர்கள் மகிழ்ச்சியாகத்தானே வாழ்கிறார்கள்...?? என்பதுதான்.. அப்படி எண்றால் ஏன் இலங்கை பூராகவும் வாழமுடியாது என்பது அடுத்த கேள்வி... நியாயமான கேள்விதானே...???

அவனுக்கும் என்ன பதில் சொல்ல முடியும் ...?? இதுக்கு பதிலை சொல்லுங்கோ பிறகு உங்களுக்கு விளக்கம் சொல்லாம்...

இதே வெள்ளைகாரன் தான்.."ஏன் தமிழீழம் வேணும் என்டு வெளிநாடுகளில இருந்து கத்திற தமிழர் தாயகத்திலயிருந்து போராடாம வெளிநாட்டுக்கு ஓடி வந்தவை" எண்டும் கேக்கிறான்...அதுவும் நியாயமான கேள்வி தானே???? இதுக்கு என்ன பதில் சொல்ல?

சிங்கத்தின்ட குகைக்குள்ள இருந்துகொண்டு சிங்கத்தை எதிர்த்து குரல் கொடு என்டு சொல்ல எங்களுக்கு என்ன அருகதை இருக்கு??...இண்டைக்கு வன்னி மக்கள் கூட சிங்களவன்ட முழு கட்டுப்பாட்டுக்க தான் இருக்கினம்...பான் கி மூன் வர சிங்க கொடி காட்டி வன்னி சிறுவர்கள் அவனை வரவேற்கினம் அதுக்காக அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்டு அர்த்தமா?? இல்லை அவர்கள் இதுவரை காலமும் விடுதலைக்காக தங்கட வாழ்க்கையையே இழந்த்தது பொய்யா??

என்னுடைய ஒரே ஒரு கேள்வி பத்தாயிரம் போராளிகளையும் அவர்களது குடும்பங்களையும் வெளிநாடு செல்ல வசதியில்லாத சனங்களையும் மட்டும் போராடுங்கள் என்டு சொல்லிவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவந்த எங்களுக்கு இலங்கையில் வசிக்கும் தமிழரை குறை சொல்ல என்ன அருகதை இருக்கு??

இவ்வளவு கதைக்கிற நீங்கள் உங்கட குடும்பத்தோட கொழும்பில இருந்தா தமிழர் போராட்டம் பற்றி வாய் திறப்பீங்களா??

Link to comment
Share on other sites

சிங்கத்தின்ட குகைக்குள்ள இருந்துகொண்டு சிங்கத்தை எதிர்த்து குரல் கொடு என்டு சொல்ல எங்களுக்கு என்ன அருகதை இருக்கு??...

உங்களை சிங்க குகைக்கை இருந்து ஓலமிடச்சொல்லி யாரும் கேட்க்க இல்லை... நீங்கள் எல்லாம் வாலை சுறுட்டி கொண்டு இருக்கிறதோடை நிப்பாட்ட வேணும்.. அப்படி இருக்காமல் பிறகு என்ன மயிருக்கு மனித உரிமை மண் எண்டு பினாத்துறவை...

வன்னி மக்களை புலிகள் வெளியிலை விட வேணுமாம் எண்டு கொழும்பிலை இருந்து சாணக்கியன் சொல்லுறார்... இது எப்பிடி...??

புலிகள் மக்களை தடுக்கவே இல்லை எனும் போது வெளியிலை விடு எனும் கோரிக்கை எப்பிடி...?? ஆகவே சிங்களவன் சொன்ன புலிகளின் பணயக்கைதிகளாக தமிழ் மக்கள் எனும் நிலையை நம்பி பிரச்சாரம் இல்லை.. புலிகள் ஓடி வர நினைக்கும் மக்களை தடுக்கிறார்கள் எனும் வகையில் பிரச்சாரம்... இது ஒரு சாணக்கியனைத்தான் உங்களுக்கு தெரியும் இப்படி லட்ச்ச கணக்கில் இருக்கிறார்கள் இலங்கை தலைநகரில்.....

இந்த பிரச்சாரதின் மூலம் சாணக்கியன் சொன்னது புலிகள் மக்களுக்காக போராட இல்லை மக்களை தங்களூக்காக கட்டாயப்படுத்துகிறார்கள் என்பது...

இண்டைக்கு வன்னி மக்கள் கூட சிங்களவன்ட முழு கட்டுப்பாட்டுக்க தான் இருக்கினம்...பான் கி மூன் வர சிங்க கொடி காட்டி வன்னி சிறுவர்கள் அவனை வரவேற்கினம் அதுக்காக அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்டு அர்த்தமா?? இல்லை அவர்கள் இதுவரை காலமும் விடுதலைக்காக தங்கட வாழ்க்கையையே இழந்த்தது பொய்யா??

சுதந்திரம் எண்டது உங்களுக்கு எல்லாம் பிரபாகரன் எண்ட ஒருவர் எடுத்து தர வேணும் என்பதுதான் போல... அப்படி எண்டாலும் சிங்களவனின் பிரச்சாரத்துக்கு துணை போய் கொண்டு தமிழீழம் கேட்க்கும் துணிவை பாராட்டத்தான் வேணும்...

மற்றவர் பெற்று தருவதுக்கு பெயர் சுந்ததிரம் இல்லை.... நீங்களாக பெற்று கொள்வதுதான் அது... மற்றவர்கள் பெற்று கொள்ளட்டும் நான் நாணல் போல இருந்து வளைந்து கொடுக்கிறேன் என்பதுக்கு பெயர் போராட நான் கஸ்ரப்படுகிறேன் என்பதல்ல... பச்சோந்தி போல இருக்கிறேன் என்பது... அப்படியானவர்களுக்கு தமிழீழ கனவு தேவையே இல்லாதது..

33 வருடமாக இவ்வளவு கட்டமைப்புக்களை வைத்து இருந்தும் உன்னதமான தலைமை இருந்தும் மக்களின் போதிய ஆதரவு இல்லாது தோற்கடிக்க பட்டது தமிழீழம் எனும் வரலாறு உங்களின்( நானும் அதில் அடக்கம்) அந்திமகாலத்தில் எழுதப்பட்டு இருக்கும் அப்போது உணர்ந்து கொள்வீர்கள்...

Link to comment
Share on other sites

அவர்கள் செய்யட்டும் எல்லாம் நல்லதுகே!!!

ஒரு நாள் எல்லாருக்கும் ஆப்பு வெப்பாங்க, இலங்கை மக்களுக்கு VISA இல்லைன்னு!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தெற்கிலும், வடக்கிலும்.... இந்திய உதவியுடன், வீடமைப்புத் திட்டங்கள்-பிரசன்ன ரணதுங்க. வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உத்தரவிற்கு அமைய தெற்கிலும் வடக்கிலும் இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள் துரிதப்படுத்தப்படவுள்ளதாக அறியமுடிகின்றது. அதற்கமைய ஹம்பாந்தோட்டையில் 24 வீடமைப்புத் திட்டங்களும், மாத்தறையில் ஒன்றும் மேற் கொள்ளப்படுகின்றதோடு... அம்பாந்தோட்டையில் மேலும் 26 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், தெற்கில் நிர்மாணிக்கப்படவுள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கை 1200 ஆகும். இந்தத் திட்டங்களுக்காக இந்தியாவிலிருந்து 600 மில்லியன் ரூபாய் பெறப்பட உள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதே வேளை வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மொத்த திட்டங்களின் எண்ணிக்கை 24 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1294330
    • நவம்பர் மாதம்... இலங்கை திரும்புகின்றார், கோட்டா! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜாக்ஷ, 90 நாள் தாய்லாந்து விசா முடிந்து நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டபாய ராஜாக்ஷ இன்று சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு இன்று தாய்லாந்துக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அங்கு 90 நாட்கள் தங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மனிதாபிமான அடிப்படையில் கோட்டபாய ராஜாக்ஷவிற்கு தாய்லாந்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என தாய்லாந்து பிரதமர் நேற்று கூறியியிருந்தார். பதவி நீக்கம் செய்யப்பட்ட ராஜபக்ஷவின் சார்பில் இலங்கை அரசாங்கம் தாய்லாந்திடம் இந்த விசா கோரிக்கையை முன்வைத்ததாக அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியது. அவர் நாட்டை விட்டு வெளியேறியதில் இருந்து அவருக்கான பல செலவுகளை அவரும் அவரது மகன் மனோஜ் ராஜபக்ஷவும் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரையும் அவரது மனைவியையும் ஏற்றிச் செல்ல விமானப்படை விமானத்தை தவிர வேறு எந்த அரச நிதியும் கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் தஞ்சம் கோருவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அதற்கு சாதகமான பதில் கிடைக்காத காரணத்தினால், கோட்டபாய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1294331
    • சாணக்கியன் போன்றவர்களுக்கு... கட்சிக்குள், முன்னுரிமை வழங்க வேண்டும் – பொது ஊழியர் சங்கம் வேண்டுகோள். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் சாணக்கியன் போன்ற இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசாங்க பொது ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அரசாங்க பொது ஊழியர்  சங்கத்தின் கல்முனை தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பு மேற்கொண்டு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , தமிழ் மக்கள் கூட தமிழ் தலைமைகளை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.காரணம் அநேகமாக மக்கள் பிரச்சினை தீர்க்கப்படாமை ஆகும். எதிர்கட்சி தலைவராக கடந்த காலங்களில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இருந்து கொண்டு ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆட்சிக்கு ஆதரவாக செயற்பட்டவர். இவ்வாறு தங்களது மாவட்டங்களில் அகதி வாழக்கை வாழந்து கொண்டிருக்கின்ற மக்களிற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்காத தலைவராக இருந்து கொண்டு இருப்பதனால் ஏனைய மாவட்டங்களை பற்றி சிந்திக்க மாட்டீர்கள். உங்களுக்கு வாக்களித்த மக்களையே மாவட்ட நிலையில் மறந்து வருகின்றீர்கள்.எனவே தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுக்கோப்பு இல்லாமல் போய் உள்ளது.இதற்கு காரணம் தலைமைத்துவம் தான்.சரியான வழிநடத்தல் இன்மையினால் தான் இந்நிலை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழரசுக்கட்சிக்கு மாத்திரம் உரித்தானது என கடந்த கால செயற்பாடுகள் சென்று கொண்டிருக்கின்றது. இனிவரும் காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒற்றுமையினை ஏற்படுத்துவது என்பது சிரமம்.இந்த பிரிவுகளை நீங்களாகவே ஏற்படுத்தி கொண்டுள்ளீர்கள்.20 வருடங்கள் நம்பி கெட்ட பின்னர் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சிக்கின்றோம்.கடந்த காலங்களில் தொழிலாளர் வர்க்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பினை நம்பி இருந்தது. ஏனெனில் கடந்த காலங்களில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக இருந்தீர்கள்.அக்காலத்தில் மக்கள் உங்களை அங்கீகரித்திருந்தார்கள்.நாங்களும் அச்சந்தர்ப்பத்தில் உங்கள் பின்னால் வந்தோம்.ஒழுங்கான வழிநடத்தல் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இன்மையால் தான் கடந்த 32 வருடங்களாக இணைந்து செயற்பட்ட நாம் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டோம். நாங்கள் உண்மையில் தமிழ் தேசியத்தை மதிக்கின்றவர்கள்.போராட்டங்களை மதிக்கின்றவர்கள்.அண்ணன் பிரபாகரனின் போராட்டங்களை கூட மதித்திருக்கின்றோம்.தமிழீழ விடுதலை புலிகளோ அல்லது பிரபாகரனோ தற்போது இருந்திருந்தால் எமது தொழிற்சங்க உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலோ அல்லது மாகாண சபையிலோ உறுப்பினர்களாக இருந்திருப்பார்கள். ஏனெனில் எமது பாதை சரியானது.இதனை நீங்கள்(தமிழ் தேசிய கூட்டமைப்பு)புரிந்து கொள்ளவில்லை.எங்களை போன்ற ஒரு தலைவர்களை வழிநடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கவில்லை.ஆகவே தான் உலக தமிழ் மக்களும் தொழிற்சங்கங்களும் தற்போது ஆதரவினை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்குவதை குறைத்து வருகின்றார்கள் என்பதே உண்மையாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்ளக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கி தமிழ் தேசிய கூட்டமைப்பினை வழிநடத்த வேண்டும்.சாணக்கியன் போன்ற இளைஞர்களுக்கு கட்சிக்குள் முன்னுரிமை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார். https://athavannews.com/2022/1294328
    • தமிழ் சமூகம், பொருளாதாரத்தில் மாத்திரமல்ல... அதைவிட பல இன்னல்களை எதிர் கொண்டுள்ளது – சாணக்கியன் கடந்த 2004ஆம் ஆண்டு 25 ஆக இருந்த வடகிழக்கு தமிழ் பிரதிநிதித்துவம் தற்போது வட கிழக்கு தமிழர்களுக்கு எதிரான பேரினவாத அரசியல் செயல்பாடுகளினால் குறைவடைந்து வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) நடைப்பெற்ற ஜனாதிபதியின் சிம்மாசன உரையின் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘நாட்டில் 74 வருடங்களாக ஆட்சி செய்த ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் பல உரைகளை பாராளுமன்றில் ஆற்றியிருந்தாலும் இந்த நாட்டினதும், நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை தீர்மானிப்பது பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஜனாதிபதி ஒருவர் என்பது சகலரும் அறிந்ததே  இலங்கையராக அனைவரும் ஒன்றினைந்து வாழ வேண்டும் என குறிப்பிட்டாலும் கூட ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிக்கு தமிழ் பேசும் ஒருவர் தெரிவு செய்யப்படவில்லை. விரும்பினாலும், விரும்பாவிடினும் பெரும்பான்மையாளரில் ஒருவரை தலைவராக தெரிவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எமது மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேரதலில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்க வேண்டிய நிலைப்பாடு இருந்தது. 2015ஆம் ஆண்டு பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தோம். அதே போலதான் தொடர்ச்சியாக தேர்தலில் இரு வேட்பாளர்களின் எவர் சிறந்தவர் என ஆராய்ந்து அவருக்கு ஆதரவு வழங்கியுள்ளோம். இதுவரையில் ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் அனைவரும் நாட்டு மக்களின் பொருளாதாரத்தை இல்லாதொழித்துள்ளார்கள். தமிழ் சமூகம் பொருளாதாரம் மாத்திரமல்ல அதற்கு அப்பாற்பட்ட பல இன்னல்களை எதிர்க்கொண்டுள்ளது. அவசரகால சட்டத்தை கொண்டு தற்போது தெற்கில் கைது இடம்பெறுகிறது. நாங்கள் 1979ஆம் ஆண்டு முதல் அவசரகால சட்டத்தை எதிர்த்து வருகிறோம். அவசர கால சட்டத்திற்கு எதிராக இன்று எதிர்தரப்பினர் குரல் கொடுக்கிறார்கள்.தமிழ் மக்கள் அவசரகால சட்டத்தினால் பல இன்னல்களை அனுபவித்துள்ளதை நினைவுப்படுத்த வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி முன்னேற்றத்திற்கு எந்த அரசாங்கமும் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்கவில்லை. தொடர்ச்சியாக தமிழ் சமூகம் ஏமாற்றப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்த அரசாங்கம் திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவில்லை. பாலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவில்லை, மாறாக எமது வளங்கள குறிப்பாக மண் வளம் சூறையாடப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கத்தில் குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் அமைச்சர் ஹெலிகொப்டரில் மன்னாருக்கு சென்றுள்ளார். மன்னார் மாவட்டத்தில் உள்ள வளங்களை சூறையாடுவதற்கான நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றன. குச்சவெளி பகுதியின் பெயரை மாற்றுவதற்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை, மறுபுறம் விவசாயிகளும் உரம் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த வருடம் வழங்கப்பட்ட அரச தொழில் நியமனத்தில் தமிழ் பேசுபவர்களில் 2000 பேருக்கு கூட தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. ஆகவே தமிழ் மக்களின் வாழ்வாதாரம் குறித்து சிந்திக்காத தலைவர்கள் நாட்டை ஆண்டுள்ளார்கள். வடக்கு மற்றும் கிழக்கு இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் இனி வரும் காலங்களில் தமிழ் பிரதிநிதித்துவத்தின் வீதம் குறைவடையும் நிலை ஏற்படும். மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நடுத்தரவர்க்கத்தினர் பெரிதளவில் பாதிக்கப்படுவார்கள். மாதம் 4 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட மின்கட்டணம் இனிவரும் காலங்களில் 6 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க கூடும். மின்கட்டணம் பன்மடங்கு அதிகரித்துள்ளதால் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் மோசமான பாதிப்புக்களை எதிர்க்கொள்வார்கள். நீர்க்கட்டணம் அதிகரிக்கவுள்ளது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதால் அனைத்து சேவைகளின் கட்டணமும் உயர்வடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியினை ஏற்படுத்தியவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை வழங்க வேண்டும். தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் இன்று மீண்டும் ஒன்றினைந்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியினை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து ஜனாதிபதி தனது சிம்மாசன உரையில் குறிப்பிட்டிருந்தால் அது மகிழ்வுக்குரியதாக அமைந்திருக்கும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1294309
    • ஒருவரைப் போல... ஆறு பேர், உலகில் இருப்பார்கள் என்று பகிடியாக சொல்வார்கள். 😜 அதில் ஒருவர்.... எண்ணை  வாங்க நிற்கிறார். 😂 சிலவேளை... அவர் தானோ, இவரோ தெரியாது.  எதுக்கும் உசாராக இருங்கள். 🤣
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.