• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
sathiri

வியாபாரிகளால் வீழ்ந்த என்தலைவா...வீரவணக்கங்கள்.்

Recommended Posts

prabakaran.jpg

இந்த மாதமாதம்..17..18..19.. ந்திகளில் இரவும் பகலும் எனது வீட்டுத்தொலைபேசி மணிஅடிக்கும் பொழுதெல்லாம் அவை மரணத்தின் மணிச்சந்தங்களாகவே இருந்தது..19 ந்திகதி மதியத்துடன் தொலைபேசி சத்தங்கள் மட்டுமல்ல நானும் சேர்ந்தே சோர்ந்து போனேன்..எங்கள் கனவு..எங்கள் உழைப்பு..எங்கள் தியாகங்கள்..போராளிகளுடன் இறுதிவரை உறுதுணையாய் நின்ற மக்கள் அவர்களின் நம்பிக்கைகள்..கொஞ்சம் கொஞ்சமாய் கட்டி வளர்த்த இயக்கம்..தளபதிகள் போராளிகள். எல்லவற்றிற்கும் அவன் இருக்கிறான் என்று நாங்கள் இறுமாப்பாய் சொன்ன எங்கள் தலைவன்..அவனது குடும்பம்.. என்று அத்தனையையுமே இழந்துவிட்டோம்..இனியென்ன எல்லாம் முடிந்து விட்டது.. இனி பத்திரிகைகளில் மட்டுமல்ல இணையத்தளங்களிலும் எழுதுவதில்லை அகதிமுகாம்களில் தங்கியிருக்கும் மக்களிற்கு ஏதாவது செய்தாலே போதும் என்று முடிவெடுத்து மூடிக்கொண்டு இருந்துவிட்டேன்..

ஆனாலும் முடியவில்லை..காரணம்.. இப்பொழுது பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று சர்ச்சையில் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் இரண்டாக பிரிந்து ஒரு சண்டை பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள்.. ஒருவர் மற்றவரை சாதாரணமாய் நலம் விசாரிப்பது போலவே அவர்களிற்குள் துரோகிகள் என்று கூறிவிட்டு போய்க்கொண்டிருக்கிறார்கள

Share this post

Link to post
Share on other sites

பத்மநாதன் மற்றும் தயாமோகனின் அறிக்கைகள் இடியாய் இறங்கியிருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை..

குழம்பிய குட்டையில் மீன் , பிடிக்க பலர் ....... தூண்டில் போடுகின்றார்கள் .

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites

என்ன செய்வதறியாது குழம்பும் சராசரி ஈழத்தமிழனில் நானும் ஒருவன்

Share this post

Link to post
Share on other sites

கறுப்பி என்னுடைய பதிவிலேயே இதற்கான பதிலை அழுத்தமாய் கூறியுள்ளேன்.. நெடுமாறன் மட்டுமல்ல.. திருமா கூட இன்று 5ம் கட்ட ஈழப்போர் வெடிக்கும் என்று கர்ச்சித்துள்ளார்...இனியும் இந்தியாவில் உள்ளவர்களின் வெட்டிப்பேச்சுக்களை நம்பாமல்.. உங்கள் உறவுகள் யாராவது வவுனியா அகதிமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்தால

Edited by sathiri

Share this post

Link to post
Share on other sites

இந்த பதிவை உண்மை என்று கூறி வாதிட இதை எழுதிய சாத்திரி என்பவர் கடவுள் இல்லை என்பதனை இதை வாசிப்வர்கள் புரிந்துகொண்டால் இதை நீக்க வேண்டிய எந்த அவசியமும் நிர்வாகத்திற்கு இல்லை.

காரணம் மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் இறந்துவிட்டார் என்பதற்கு எத்தனையோ பந்திகளை தந்தவர். அவர் இல்லை என்பதற்கு ஒரு வரியே தருகிறார். அதை தவிர தற்போதைய நிலையில் வேறு எதையும் யாராலும் தரமுடியாது என்பதே உண்மையும்.

பதிவாளரிடம் கேட்க நினைக்கும் கேள்விகள். அம்மாறைமாவட்ட அரசியில் துறையினது அனைத்து அறிக்கைகளும் வன்னியில் இருந்தே உலகிற்கு வெளியாகிகொண்டிருந்த நிலையில். பிபிசி க்கு திடிரென. அம்மாறை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளருடன் எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது? அப்போது பத்திரிகையாளர்களுடன் தொடர்வை பேணி வைத்திருக்க கூடிய ஒரு நிரந்தர நிலையில் அம்மாறை அரசியல் துறை உள்ளபோது. எதை வைத்து புலிகள் இயக்கம் அழிந்துவிட்டது என்று சொல்ல முனைகின்றீர்கள்? கிழக்கில் சில காலங்களுக்கு முன் எது நடந்ததோ அதுவே தற்போது வன்னியில் நடந்துள்ளது. அங்கே அரசியல் துறை இராணுவ துறை என்பதை ஏற்றுகொள்ளும் நீங்கள். எந்த அடிப்படையில் வன்னியில் ஏதும் இல்லை என்று நிராகரிக்கின்றீர்கள்?

Share this post

Link to post
Share on other sites

தலைவர் இறந்து விட்டார் என்பதை என்னால் ஜீரணிக்கமுடியாது. ஏற்றுக்கொள்ளவும் முடியாது. நல்லதையே விரும்பி எதிர்பார்க்கும் மனதுடன்....................

Share this post

Link to post
Share on other sites

எனக்கும் தான் அக்கா.

"ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே"

Share this post

Link to post
Share on other sites

என்னுடைய பதிவை தவறாக விளங்காமல் இருப்பவர்களுக்காக இந்த மீள் பதிவு .

பத்மநாதன் மற்றும் தயாமோகனின் அறிக்கைகள் இடியாய் இறங்கியிருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை..

ஏனென்றால் அவர்கள் தாயகத்தில் பலகாலம் தொடர்பில் இருந்த .............

தமிழ் நெற்ரையோ , தமிழ் தேசியத்துக்காக குரல் கொடுத்த வானொலி , தொலைக்காட்சிகளுக்கோ பேட்டி கொடுக்காமல் .......

ரமிலோசைக்கு பேட்டி கொடுத்தது தான் ஆச்சரியம் !!!!!!!!!

Share this post

Link to post
Share on other sites

prabakaran.jpg

சரி் அவர் பத்மநாதனின் அறிக்கையை வெளியான பின்னர் பிரபாகரன்உயிருடன்இருந்தும் பதில் அறிக்கைகள் விடாமல் இருக்கிறார் என்றால் அவரும் பத்மநாதனின் அறிக்கையை ஏதோ காரணங்களிற்காக ஏற்றுக்கொள்கிறார் என்பதுதானே அர்த்தம்..

-உண்மை. இதனால் தான் எது எவ்வாறு இருப்பினும், துவண்டு ஒரு மூலையில் குந்தி விடாமல் எமது கடமையை நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும்....

ஆனால் வெளிநாடுகளின் பொறுப்பாளர்கள் மட்டும் ஏற்கமறுப்பதற்கு அவர்கள் சொல்லும் சப்பைக்காரணம் வெளிநாடுகளில் உள்ள தமிழ்மக்கள் மனமுடைந்து விடுவார்களாம்..வெளிநாட்டு தமிழர்கள் மனமுடைந்து போனால் அதனை ஒட்டவைக்க ஆயிரம் வழிகளுண்டு இரண்டு நாள் அழுது விட்டு மூன்றாவது நாள் வழைமைக்கு திரும்பி விடுவார்கள்.

-இரண்டு நாள் அழுது விட்டு - ஈழப் போர் என்பது ஒன்று நடந்தது என்பதையே மறந்து விட்டு தன் தன் சோலியை பார்க்க போகும் சில சனம்..... விடுதலை போர் என்பதை எப்போதும் புலிகள் பார்த்து கொள்வார்கள் என்று தட்டி கழித்து விட்டு இருந்தவர்கள் இப்படி...

ஆனால் பிரபாகரன் மட்டும் தான் எம்மை வழி நடத்துவார் என்று இருந்த பலர் இன்று - தலைவரின் தியாகத்தின் தாற்பரியத்தை, விடுதலை என்ற இலக்கை மறந்து, "தலைமை" போயிட்டு என்று மட்டும் சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள்...இவர்களில் சிலர் தான் ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள், மனமுடைந்து தற்கொலை, வன்முறை, மனநோய் என்று போகும் நிலை... ஒரு விதத்தில் அது மிகை படுத்த பட்ட கூற்று அல்ல, உண்மையும் கூட - ஏன் என்றால் தலைவரை அந்த அளவிற்கு தூக்கி வைத்து இருந்தவர் பலர்.

அன்டன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன், நடேசன் போன்று மக்களின் மத்தியில் பரிட்சயமானவர் இல்லை பத்மநாதன் (ஆனால் அவரின் மூலமாக தான் இந்த அறிவித்தலை கேட்க வேண்டும் என்பது காலத்தின் நியதி). பாவம் அதற்காக அந்த மனுசனை பற்றி நன்கு அறிய முதலே - தந்த அறிவித்தல் ஏற்று கொள்ள கடினமாய் இருப்பதால் பலர் திண்டாடுகிறார்கள்... (Dont shoot the messenger because the news is bad!)

ஆனால் நீங்கள் சொன்ன கூற்று உண்மை, பத்மநாதன் சொன்னதில் தலைமைக்கு உடன்பாடு இல்லாவிடில் இதற்குள் ஆணித்தரமான அறிவித்தல் வந்து இருக்கும்.

ஆனால் இறந்து போன பிரபாகரனை இன்னமும் வாழ வைப்பதன் மூலம் மேலும் சட்டச்சிக்கல்களை உருவாக்கி வவுனியாவில் முட்கம்பிகளிற்கு பின்னால் நாளை என்ன நடக்குமென்றே தெரியாமல் எதிர் காலத்தை தொலைத்துவிட்டு நிற்கும் மூன்று இலட்சம் மக்களினது வாழ்வு மட்டுமல்ல இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பத்தாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள்..தனியாக சிறப்பு முகாம்களில் அடைக்கபட்டுள்ள 2300ற்கும் மேலான புலிகளின் இரண்டாம் மூன்றாம் கட்டத்தலைவர்கள் அரசியல் அமைப்பாளர்கள்.அவர்களது குடும்பங்கள் என்று நீளும் பட்டியலில் உள்ளவர்களின் எதிகாலம் என்ன???சிந்திப்பீர்களா??

-உண்மை. உண்மை. சிந்தித்த விடயம் தான்....ஆனால் பலரும் கருத்தில் வைத்து இருக்க வேண்டிய விடயம்.

இதற்குமேல் என்னால் வாழைப்பழத்தை உரித்து அவர்கள் வாயில்வைத்து.ஒரு தடியால் வயிற்றிலும் தள்ளிவிடமுடியாது..

-- இதென்ன கதை?! நீங்கள் பிளங்குவது தமிழருடன்....வைத்திட்குள் தடியால் தள்ளி விட்டால் மட்டும் போதாது, குடலையும் உருவி விட வேண்டும்!!!

Share this post

Link to post
Share on other sites

இந்த பதிவை உண்மை என்று கூறி வாதிட இதை எழுதிய சாத்திரி என்பவர் கடவுள் இல்லை என்பதனை இதை வாசிப்வர்கள் புரிந்துகொண்டால் இதை நீக்க வேண்டிய எந்த அவசியமும் நிர்வாகத்திற்கு இல்லை.

காரணம் மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் இறந்துவிட்டார் என்பதற்கு எத்தனையோ பந்திகளை தந்தவர். அவர் இல்லை என்பதற்கு ஒரு வரியே தருகிறார். அதை தவிர தற்போதைய நிலையில் வேறு எதையும் யாராலும் தரமுடியாது என்பதே உண்மையும்.

பதிவாளரிடம் கேட்க நினைக்கும் கேள்விகள். அம்மாறைமாவட்ட அரசியில் துறையினது அனைத்து அறிக்கைகளும் வன்னியில் இருந்தே உலகிற்கு வெளியாகிகொண்டிருந்த நிலையில். பிபிசி க்கு திடிரென. அம்மாறை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளருடன் எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது? அப்போது பத்திரிகையாளர்களுடன் தொடர்வை பேணி வைத்திருக்க கூடிய ஒரு நிரந்தர நிலையில் அம்மாறை அரசியல் துறை உள்ளபோது. எதை வைத்து புலிகள் இயக்கம் அழிந்துவிட்டது என்று சொல்ல முனைகின்றீர்கள்? கிழக்கில் சில காலங்களுக்கு முன் எது நடந்ததோ அதுவே தற்போது வன்னியில் நடந்துள்ளது. அங்கே அரசியல் துறை இராணுவ துறை என்பதை ஏற்றுகொள்ளும் நீங்கள். எந்த அடிப்படையில் வன்னியில் ஏதும் இல்லை என்று நிராகரிக்கின்றீர்கள்?

மருதங்கேணி இந்தமாதம் 17ந்திகதிக்குப்பின்னர்..நீங்க??் சொல்கின்ற அந்த வன்னி எதை மையப்படுத்தி சொல்கிறீர்கள் என்று குறிப்பிட்டுச்சொல்லமுடியு

Edited by sathiri

Share this post

Link to post
Share on other sites

............... உட்பட பெரும்பாலான அரசியல் பிரிவினர் சரணடைந்துள்ளனர்..

தமிழரின் , கடைசி துண்டுக்காணியான முள்ளிவாய்க்கால் வரை நின்று தானே ..... அவர்கள் சரணடைந்தார்கள் .

அவர்களுக்கு வேறு ஏதாவது தெரிவு இருந்தால் சொல்லுங்களேன் .

அத்துடன் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பற்றி இங்கு நீங்கள் விமர்சிப்பது , அழகாகவா உள்ளது .

அவர் இருக்கும் இக்கட்டு நிலைமையையும் யோசித்து கருத்துக்களை பரிமாறுங்கள்.

Share this post

Link to post
Share on other sites

தலைவரை வீழ்ந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ள நிலையில் புலம்பெயர்ந்த மக்கள் அடுத்த கட்டத்தை நோக்கி விரைவாக நகரவேண்டிய தேவை இருக்கிறது. எங்களுடைய தாயக மீட்புப் போராட்டம் தலைவருடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. எல்லோருக்குள்ளும் முளைவிட்ட விருட்சம். சற்று ஆடிப்போனோம் என்பதை மறுக்க முடியாது. இந்த நிலை எம்மை உடைத்துவிடலாகாது. எந்தத் தலைவரைப் பின்பற்றினோமோ, எந்தத் தலைவரை நேசித்தோமோ, அந்தத் தலைவர் தன் சிந்தனையின் மூலம் எங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பார். எங்கள் உறவுகளைக் காக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய தருணத்தில் மனம் சோர்ந்து உழன்று கொண்டிராது வதை முகாம்களுக்குள் எஞ்சியிருக்கும் எங்களின் உறவுகளைக் காக்க ஏதாவது முயற்சி எடுக்கவேண்டும்.

Edited by valvaizagara

Share this post

Link to post
Share on other sites

என்னுடைய பதிவை தவறாக விளங்காமல் இருப்பவர்களுக்காக இந்த மீள் பதிவு .

ஏனென்றால் அவர்கள் தாயகத்தில் பலகாலம் தொடர்பில் இருந்த .............

தமிழ் நெற்ரையோ , தமிழ் தேசியத்துக்காக குரல் கொடுத்த வானொலி , தொலைக்காட்சிகளுக்கோ பேட்டி கொடுக்காமல் .......

ரமிலோசைக்கு பேட்டி கொடுத்தது தான் ஆச்சரியம் !!!!!!!!!

அதுவும் புலிகளால் றோவின் கைக்கூலி என கூறப்பட்ட பீபீசீ ரமிலோசைக்கு..!!!!!!!!!

Share this post

Link to post
Share on other sites

சாத்திரி அண்ணாவில் சில கருத்துகளில் உடன் படுகிறேன்.

ஆனாலும் தலைவர் இறந்து விட்டார் அவர் யாருக்காக போராடினாரோ அவர்கலுக்கு ஒரு செய்தியும் சொல்லாம போய்ட்டார் அதையும் குமரன்( செல்வாராச) பத்மநாதன் தான் சொல்ல வேட்னிய நிலைக்கு விட்டு விட்டு போய்ட்டார் என்பதை நம்ப்ப முடிஅய்வில்லை.

2 வது புலிகளின் விழ்ச்சுக்கு உண்மை காரணம் என்ன என்று தேடினால் எல்லாத்துக்கும் விடை கிடைக்கும்.

தமிழினி அகதி முகமில் கைது

2500 க்கு மேல் கிழ் மட்ட தளபதிகள் உற்பட 10.000 போராளிகள் கைது ஏன் இவர்கல் இப்ப மட்டும் சரன் அடைந்ததர்கள்?

சந்திரிக்கா சண்டை பிடிக்கும் போது யாருமே சரன் அடடயவில்லை?

எல்லாத்துக்கும் பதில் கே பி யிடம் இருக்கு.

பிராபகரனை நம்பி தமிழ் மகக்ள் ஏமாந்தர்கள் என்று சொல்லும் கூட்டம் ஒரு பக்கம் கேபி என்ற தனி மனிதனை நம்பி புலிகள் என்ற அமைப்பே ஏமாந்து விட்டது என்ரு சொல்லுபவர்கள் ஒரு சிலர் தான்.

உண்மையில் புலிகளுக்கு 2004 ஆண்டுக்கு பின் ஒரு ஆயுதமும் அல்லது கப்பலோ வரவில்லை நம்ப கஸ்டம் ஆனால் உண்மையாக ஒரு கப்பலும் வரவில்லை ஆனல வந்ததாக சிங்கள ஊடகமும் இந்தியா ஊடகமும் செய்தி மட்டும் தான் வெளியிட்டன ஆனால் ஒன்றும் வரவில்லை.

கேபி அனிப்ப்பிய கப்பல் அனைத்தும் ஒன்றின் பின் ஒன்றாக அடிபட தொடங்கியது கேபியை சற்று ஓதுக்கி விட்டு வேர சிலர் எடுத்த முயற்சிதான் பல கைதுகலுக்க்கும் கப்பள் அடிகளும் காரனமாக அமைய வேரு வழி இல்லை மீண்டும் கேபி ஆனால் காலம் கடந்து விட்டது இது தான் பின் புலத்தில் உண்மை என்றால்

கேபிகள் யார்? குமரன் பத்மநாதன் அல்லது செல்வராச பத்மநாதன் புரியாத புதிர்க்கு விடை யர் சொல்வார்கள்?

Share this post

Link to post
Share on other sites

சாத்திரியும் யாருக்கிட்ட விலைபோயிட்டு இந்த கட்டுரையை எழுதினாரோ யாருக்குத்தான் தெரியும்.

சாத்திரி சொல்லுறமதிரி தலைவர் இப்ப இருக்கிறன் என்று சட்டலைட் தொலைபேசியில கதைச்சால். அடுத்த கணமே அந்த இடம் முற்றுகையிடப்படும். அல்லது தலைவர் இருப்பது உறுதி செய்யப்பட்டாலும் அதுவும் ஆபத்தாகவே முடியும். இப்ப நம்மளை போலவே சிங்களமும் தலைவர் இருக்கிறாரோ என்று குழம்பியிருக்கு. அப்படியே இருக்கட்டும்.

சாத்திரி தயவு செய்து உங்கள் கட்டுரையில் தலைப்பை மாற்றாவும். இல்லாட்டால் கஸ்டம். :wub:

உங்கள் கட்டுரையில் தலைவரை விட சொன்ன மற்றைய கருத்தை நான் புரிந்து கொண்டுள்ளேன்.

Share this post

Link to post
Share on other sites

34 ஆண்டுகள் ஒரு ஆயுத விடுதலைப்போராட்டத்தினை நடத்தி.. கொண்ட கொள்கைக்காக தன்னையே அர்ப்பணித்த ஒரு வீரனிற்கு ஒரு பூவினைப்போட்டு மனதார அஞ்சலி செலுத்தக்கூட விடாமல் மக்களை குழப்பியடித்து முரண்பாடான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் மாற்றுக்கருத்தாளர்களோ..இலங்

கையரசோ அதன் கூலிகளோ அல்ல..

சாத்திரியாரே! உங்கள் கருத்துக்கு எதிராக எதுவித மாற்று கருத்தும் இல்லை. உண்மையை தான் சொல்லி இருக்கின்றீர்கள். சாதரண ஒரு போராளி வீரமரணம் அடைந்த போது நாம் செலுத்திய அஞ்சலியை, நம் தேசியத்தலைவனுக்கு, நம்மை காவல் காத்த எம் காவல் தெய்வத்துக்கு ஒரு மெழுகுவர்த்தியாவது வைத்து ஒரு துளி கண்ணீராவது சிந்தி ஒர் அஞ்சலி செலுத்தமுடியாமல் பண்ணிவிட்டார்களே. இந்த செய்தியை அறிந்ததும் எமக்கு அருகில் இருந்த மாற்று இயக்கங்களை சேர்ந்தவர்களே மிகுந்த மனவேதனைப்பட்டு கொண்டிருக்கும் போது நாம் இந்த நபர்களின் கதைகளை நம்பி எடுத்த எடுப்பில் மறுத்து ஒரு மிகப்பெரும் துரோகத்தை எம் தலைவனுக்கு செய்துவிட்டோமே என்பதை நினைக்க என் கண் எல்லாம் கலங்குகின்றது.

Share this post

Link to post
Share on other sites

அதுவும் புலிகளால் றோவின் கைக்கூலி என கூறப்பட்ட பீபீசீ ரமிலோசைக்கு..!!!!!!!!!

ஓம் வசி , அதுதான் எனக்கு ஆத்திரமாக வருகின்றது .

நான் உண்மையில் இங்கு கருத்து எழுதும் பலருக்கு சிந்திக்கும் அறிவு உள்ளது என்று நினைத்தேன் .

Share this post

Link to post
Share on other sites

தமிழரின் , கடைசி துண்டுக்காணியான முள்ளிவாய்க்கால் வரை நின்று தானே ..... அவர்கள் சரணடைந்தார்கள் .

அவர்களுக்கு வேறு ஏதாவது தெரிவு இருந்தால் சொல்லுங்களேன் .

அத்துடன் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பற்றி இங்கு நீங்கள் விமர்சிப்பது , அழகாகவா உள்ளது .

அவர் இருக்கும் இக்கட்டு நிலைமையையும் யோசித்து கருத்துக்களை பரிமாறுங்கள்.

தமிழ்சிறி பாராளுமன்ற உறுப்பினர் சொன்னார் என்று சொல்வதற்கும்.. அவரது பெயரைப்பாவித்து விமர்சிப்பதற்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளது.. இங்கு நான் விமர்சிக்கவில்லை அடுத்ததாக சரணடைந்த அரசியல் போராளிகளைப் பற்றியும் தவறாக ஏதும் எழுதவில்லையோ..தலைவர் இல்லை என்று ஒரு முடிவினை ஒருமனதாகஎல்லாரும் எடுத்து அரசியல் போராட்டமாக மாற்றினால் .. இலங்கை இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் புலிகள் மீதான தடை நீங்கி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சரணடைந்த போராளிகளை மீட்கலாம் என்பதுதானே என்னுடைய விவாதம்.. தலைவர் இருக்கிறார் மீண்டும் யுதம் என்று என்று நாங்கள் அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொண்டிருக்கும் வரை அவனும் பிரபாகரனை தேடுறன் புலிகளை அழிக்கிறன் என்று இருக்கிற சனத்தையும் வெளியிலை விடமாட்டான்.. பிடிபட்ட போராளிகளிற்கும் நாளும் சித்திரவதைததான் இதைத்தான் விரும்புகிறீர்களா???

Share this post

Link to post
Share on other sites

உங்கள் கருத்துக்களை பார்த்து பொறுக்க முடியாமல் எழுதுகிறேன். இந்த பேட்டிகள் தாயக ஊடகங்கள் என்று செல்லப்படுபவைக்கும் கொடக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதை இருட்டடிப்பு செய்து விட்டார்கள். தாயாமோகன் முதலில் CMR ற்கு தான் பேட்டி கொடுத்தார் அதை அவர்கள் வெளியே விடவே இல்லை..

Share this post

Link to post
Share on other sites

தலைவர் இல்லை என்று ஒரு முடிவினை ஒருமனதாகஎல்லாரும் எடுத்து அரசியல் போராட்டமாக மாற்றினால் .. இலங்கை இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் புலிகள் மீதான தடை நீங்கி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சரணடைந்த போராளிகளை மீட்கலாம் என்பதுதானே என்னுடைய விவாதம்.. தலைவர் இருக்கிறார் மீண்டும் யுதம் என்று என்று நாங்கள் அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொண்டிருக்கும் வரை அவனும் பிரபாகரனை தேடுறன் புலிகளை அழிக்கிறன் என்று இருக்கிற சனத்தையும் வெளியிலை விடமாட்டான்.. பிடிபட்ட போராளிகளிற்கும் நாளும் சித்திரவதைததான் இதைத்தான் விரும்புகிறீர்களா???

சாத்து நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் சிங்களவன் தெளிவாக சொல்லிவிட்டானே இனி எந்த உடன்பாடும் இல்லை என்று.. இனி எவ்வாறு அரசியல் நடவடிக்கைகளை புலம்பெயர் நாட்டிலிருந்து மேற்கொள்ள முடியும்? நாம் எந்த பெயரில் செய்தாலும் கட்டாயம் புலி முத்திரை குத்தும் சிறீலங்கா அரசு.

மக்களை காப்பாற்றும்படி நடாத்திய போராட்டங்களே எடுபடாமல் போன நிலையில் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த போராளிகளை எவ்வாறு நாம் காப்பாற்ற முடியும் என நினைக்கிறீர்கள்??

Edited by வசி_சுதா

உண்மைதான் வக்தா.. தயா மோகன் ஒஸ்ரேலிய தமிழ்வானொலியுடனும் தொடர்பு கொண்டதாகத் தகவல்.. அது மட்டுமல்ல பத்மநாதனின் அறிக்கை கனடிய ஜரோப்பிய ஒஸ்ரேலிய தமிழ் ஊடகங்கள் அனைத்திற்கும் அனுப்பப் பட்டது. அனால் புலம் பெயர் மக்கள் மனது நொந்து போவார்கள் என்றுபோடவில்லையாம்..3 லட்டசம் மக்களின் உயிரா .. புலம் பெயர் மக்களின் மனதா பெரியது???

Share this post

Link to post
Share on other sites

***

இன்று தலைவரின் பெற்றோர்கள் வவுனியா தடுப்பு முகாமில் இருப்பதாக அரசே உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் தமிழினியையும் கைது செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.

வல்வை சாகரா அக்காவின் பதிலில் சொன்னது போல, எமக்கிருக்கும் வரலாற்றுக் கடமையில் இருந்து எம்மை விலக்கி வைக்கவே திடீர் படையணி, திடீர் புலனாய்வு பிரிவெல்லாம் முளைத்தெழும்புகின்றன.

Share this post

Link to post
Share on other sites

தலைவர் இல்லை என்று ஒரு முடிவினை ஒருமனதாகஎல்லாரும் எடுத்து அரசியல் போராட்டமாக மாற்றினால் .. இலங்கை இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் புலிகள் மீதான தடை நீங்கி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சரணடைந்த போராளிகளை மீட்கலாம் என்பதுதானே என்னுடைய விவாதம்.. தலைவர் இருக்கிறார் மீண்டும் யுதம் என்று என்று நாங்கள் அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொண்டிருக்கும் வரை அவனும் பிரபாகரனை தேடுறன் புலிகளை அழிக்கிறன் என்று இருக்கிற சனத்தையும் வெளியிலை விடமாட்டான்.. பிடிபட்ட போராளிகளிற்கும் நாளும் சித்திரவதைததான் இதைத்தான் விரும்புகிறீர்களா???

சாத்து நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் சிங்களவன் தெளிவாக சொல்லிவிட்டானே இனி எந்த உடன்பாடும் இல்லை என்று.. இனி எவ்வாறு அரசியல் நடவடிக்கைகளை புலம்பெயர் நாட்டிலிருந்து மேற்கொள்ள முடியும்? நாம் எந்த பெயரில் செய்தாலும் கட்டாயம் புலி முத்திரை குத்தும் சிறீலங்கா அரசு.

மக்களை காப்பாற்றும்படி நடாத்திய போராட்டங்களே எடுபடாமல் போன நிலையில் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த போராளிகளை எவ்வாறு நாம் காப்பாற்ற முடியும் என நினைக்கிறீர்கள்??

Share this post

Link to post
Share on other sites

மக்களை காப்பாற்றும்படி நடாத்திய போராட்டங்களே எடுபடாமல் போன நிலையில் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த போராளிகளை எவ்வாறு நாம் காப்பாற்ற முடியும் என நினைக்கிறீர்கள்??

அப்ப அந்த 3லட்சம் பேரையும் சாக விடலாமா வசி ?

***

இன்று தலைவரின் பெற்றோர்கள் வவுனியா தடுப்பு முகாமில் இருப்பதாக அரசே உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் தமிழினியையும் கைது செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.

வல்வை சாகரா அக்காவின் பதிலில் சொன்னது போல, எமக்கிருக்கும் வரலாற்றுக் கடமையில் இருந்து எம்மை விலக்கி வைக்கவே திடீர் படையணி, திடீர் புலனாய்வு பிரிவெல்லாம் முளைத்தெழும்புகின்றன.

மோகனின் கத்தி உண்மைகள் சுடுகிறது என்பதை உரைக்கின்றன.

நிழலியின் கருத்திலிருந்து பல நீக்கம். மோகன் இன்னும் வெட்டிக்கொண்டு இருங்கோ விடிவு வரும்.

தவறுகளை இதுவரை யாரும் தட்டிக் கேட்காததன் பலனை முழுத்தமிழினமும் அனுபவிக்கிறது. சிலரைத் திருப்திப்படுத்த பலரது உண்மையான கருத்துக்களை வெட்டுங்கோ.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • Trump: "This May Be The Last Time You'll See Me For A While" Authored by Paul Joseph Watson via Summit News, Remarks made by President Trump during a speech have prompted speculation after he referred to having a lot of rich enemies and told the audience, “This may be the last time you’ll see me for a while.”   The comments were made during an address Trump gave at the Whirlpool Corporation Manufacturing Plant in Clyde, Ohio. Trump's Comment Gets Heat On Social Media The context of the remarks was an executive order that will mandate U.S. government agencies purchase all essential drugs from American sources. Trump blamed the American political class for the fact that drugs are cheaper to buy in other countries Canada even if they are made by the same company. “So I have a lot of enemies out there. This may be the last time you’ll see me for a while. A lot of very, very rich enemies, but they are not happy with what I’m doing,”said Trump. In terms of who Trump was identifying as his “enemies,” the president made reference to wealthy anonymous “middlemen” who skim profits from pharmaceutical sales. “They are so wealthy. They are so wealthy,” said Trump. “Nobody has any idea who the hell they are or what they do. They make more money than the drug companies. You know, in all fairness, at least the drug companies have to produce a product, and it has to be good product.”     டிரம்ப்: "இது கடைசி நேரமாக இருக்கலாம், நீங்கள் என்னை சிறிது நேரம் பார்ப்பீர்கள்" பால் ஜோசப் வாட்சன் உச்சி மாநாடு மூலம் எழுதியவர், ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு உரையின் போது கூறிய கருத்துக்கள், அவர் ஏராளமான பணக்கார எதிரிகளைக் கொண்டிருப்பதைக் குறிப்பிட்டு, பார்வையாளர்களிடம், “இது நீங்கள் சிறிது நேரம் என்னைப் பார்க்கும் கடைசி நேரமாக இருக்கலாம்” என்று கூறிய பின்னர் ஊகங்களைத் தூண்டியுள்ளது. 070820trump.jpg ஓஹியோவின் கிளைடில் உள்ள வேர்ல்பூல் கார்ப்பரேஷன் உற்பத்தி ஆலையில் டிரம்ப் ஆற்றிய உரையின் போது இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. டிரம்பின் கருத்து சமூக ஊடகங்களில் வெப்பத்தை பெறுகிறது கருத்துக்களின் சூழல் ஒரு நிறைவேற்று ஆணையாகும், இது அமெரிக்க அரசாங்க நிறுவனங்களிலிருந்து அனைத்து அத்தியாவசிய மருந்துகளையும் அமெரிக்க அரசாங்க நிறுவனங்கள் வாங்க கட்டாயப்படுத்தும். அதே நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டாலும் கூட கனடா மற்ற நாடுகளில் கனடாவில் வாங்குவதற்கு மலிவானது என்று அமெரிக்க அரசியல் வர்க்கத்தை ட்ரம்ப் குற்றம் சாட்டினார். "எனவே எனக்கு அங்கே நிறைய எதிரிகள் உள்ளனர். நீங்கள் சிறிது நேரம் என்னைப் பார்ப்பதற்கான கடைசி நேரமாக இது இருக்கலாம். நிறைய, மிகவும் பணக்கார எதிரிகள், ஆனால் நான் என்ன செய்கிறேன் என்பதில் அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை, ”என்று டிரம்ப் கூறினார். "ஆனால் அதைச் செய்ய எங்களுக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன், வேறு எந்த ஜனாதிபதியும் நான் செய்வதைச் செய்யப்போவதில்லை. வேறு எந்த ஜனாதிபதியும் சாதகமான நாடுகள், தள்ளுபடி, மற்ற நாடுகளிடமிருந்து மிகக் குறைந்த செலவில் வாங்குவது போன்றவற்றைச் செய்ய மாட்டார்கள். யாரும் இல்லை. மேலும் மகிழ்ச்சியற்ற மக்கள் நிறைய பேர் உள்ளனர், அவர்கள் மிகவும் பணக்காரர்கள், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியற்றவர்கள், ”என்று அவர் கூறினார். டிரம்ப் தனது "எதிரிகள்" என்று யார் அடையாளம் காட்டுகிறார் என்பதைப் பொறுத்தவரை, மருந்து விற்பனையிலிருந்து இலாபத்தைத் தவிர்க்கும் பணக்கார அநாமதேய "இடைத்தரகர்களை" ஜனாதிபதி குறிப்பிட்டார். “அவர்கள் மிகவும் செல்வந்தர்கள். அவர்கள் மிகவும் செல்வந்தர்கள் ”என்று டிரம்ப் கூறினார். "அவர்கள் யார் அல்லது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் மருந்து நிறுவனங்களை விட அதிக பணம் சம்பாதிக்கிறார்கள். எல்லா நியாயத்திலும், குறைந்தது மருந்து நிறுவனங்கள் ஒரு பொருளை உற்பத்தி செய்ய வேண்டும், அது நல்ல தயாரிப்பாக இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். ”
  • நீங்கள் புலியில் இருந்து  பிரிந்து எங்களுடன் வந்து இணந்தீர்கள் என்றால், நீங்கள் சிறையிலிருந்தாலும் உங்களை வெல்ல வைப்போம் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு... என்னுடன் சிங்களவர் ஒருவர் பணிபுரிகின்றார் ... பிள்ளையான் வெற்றியடைந்து விட்டாராம் நல்லம், கருணா தோல்வியடைந்து விட்டார் பாவம்...என்றார்.... புலம்பெயர்ந்து 25 வருடமா வாழும் சிங்களவருக்கே கருணாவும் ,பிள்ளையானும் வெல்லவேணும் என்று நினைக்கிறார்கள் என்றால் .....அங்கு அரசியல் செய்யும் அவர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்.
  • சிறை செல்லாமல் குற்றம் இழைப்பவர்களும் பாராளுமன்றம் செல்வது நல்லதல்ல.
  • காதை மூடிக்கொண்டு படுத்திருந்திருப்பார். கோவிக்கக் கூடாது  நேரம் அப்பிடியான நேரம். எதிர்பாராத முடிவுகள் கேட்க சக்தி இருந்திருக்குமா. மாரடைப்பு வராமல் தப்பியதே பெரும் பிழைப்பு. இன்னும் ஐந்து வருடம் தேரோடவேண்டுமே? யமன் கண்ணில் தப்பி.