Jump to content

வியாபாரிகளால் வீழ்ந்த என்தலைவா...வீரவணக்கங்கள்.்


Recommended Posts

***

இன்று தலைவரின் பெற்றோர்கள் வவுனியா தடுப்பு முகாமில் இருப்பதாக அரசே உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் தமிழினியையும் கைது செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.

வல்வை சாகரா அக்காவின் பதிலில் சொன்னது போல, எமக்கிருக்கும் வரலாற்றுக் கடமையில் இருந்து எம்மை விலக்கி வைக்கவே திடீர் படையணி, திடீர் புலனாய்வு பிரிவெல்லாம் முளைத்தெழும்புகின்றன.

சாத்திரியின் கருத்துடன் 100% உடன்படுகின்றேன் என்று சொன்னதை கூட மோகன் நீக்கிவிட்டார். வாழ்க தமிழ் தேசிய தொண்டு..... இப்படியான நேரத்தில் கூட குறும் தேசிய பார்வை கொண்டு இருப்பவர்களை என்ன என்று சொல்வது

அப்ப அந்த 3லட்சம் பேரையும் சாக விடலாமா வசி ?

மோகனின் கத்தி உண்மைகள் சுடுகிறது என்பதை உரைக்கின்றன.

நிழலியின் கருத்திலிருந்து பல நீக்கம். மோகன் இன்னும் வெட்டிக்கொண்டு இருங்கோ விடிவு வரும்.

தவறுகளை இதுவரை யாரும் தட்டிக் கேட்காததன் பலனை முழுத்தமிழினமும் அனுபவிக்கிறது. சிலரைத் திருப்திப்படுத்த பலரது உண்மையான கருத்துக்களை வெட்டுங்கோ.

இதை எல்லாம் பார்க்கும் போது, வீணாக தமிழ் தேசியத்திற்காக மினக்கெடுவதை விட சும்ம இருக்கலலம் போல் இருக்கு

Edited by நிழலி
Link to post
Share on other sites
 • Replies 141
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் பிழைப்பு வாதம்...

பிழைப்புவாதம் சோர்வாதமாவதில் பலருக்குக் கவலை. உடல் நோக உழைக்கும் கள்ளத்தில் இப்படி வெட்டும் கத்தியும்....இதுதான் தமிழ்த்தேசியத்தொண்டு. வாழ்க தேசியத்தொண்டு,தொண்டர்கள்.

Edited by shanthy
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மோகனின் கத்தி உண்மைகள் சுடுகிறது என்பதை உரைக்கின்றன.

மோகன் இன்னும் வெட்டிக்கொண்டு இருங்கோ விடிவு வரும்.

தவறுகளை இதுவரை யாரும் தட்டிக் கேட்காததன் பலனை முழுத்தமிழினமும் அனுபவிக்கிறது. சிலரைத் திருப்திப்படுத்த பலரது உண்மையான கருத்துக்களை வெட்டுங்கோ.

உண்மை தான் அக்கா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அப்ப அந்த 3லட்சம் பேரையும் சாக விடலாமா வசி ?

சாந்தி அக்கா வார்த்தைகளால் கொல்ல வேண்டாம்... :wub:

இன்று ஐக்கிய நாடுகள் சபையிலே சொறிலங்கா பெற்ற வெற்றி அதன் எக்களிப்பு...

ஐநாவுக்கும் ஒபாமாவுக்கும் ஐரோப்பிய தலைவர்களுக்கும் கடிதங்கள் அறிக்கைகள் அனுப்பித் தள்ளினோம்..

சீனா முதல் கியூபா வரை. மற்றய நாடுகளுக்கு எங்கள் போராட்டத்தை எடுத்துச் சொல்ல யாரும் ஏன் அறிவுறுத்தவில்லை.

அரசியல் அறிவுள்ள பெரியவர்கள் யாராவது விளக்குங்கள்.

நாங்கள் என்னதான் தலைகீழாக நடந்து காட்டினாலும் சிங்கள அரசு தான் நினைத்ததையே செய்யும். செய்து கொண்டிருக்கும்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா ...... நீங்கள் ஏதோ கம்பராயணம் , ராமாயணம் மாதிரி எழுதி , இராவணன் வெட்டு விழுந்து போச்சோ ....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா நீங்கள் சொன்னது என்னை யோசிக்க வைத்துவிட்டது!!!

இனி எந்த ஆர்பாட்டத்துக்கோ பேரணிக்கோ நிகழ்வுகளுக்கோ செல்லாமல் விடுவது நல்லது என தோன்றுகிறது!

அங்கு உள்ள மக்களுக்கு நிம்மதியான வாழ்வாவது கிடைக்கும்!

தமிழ்சிறி இனி என்னுடைய முடிவையே நீங்களும் எடுப்பது நல்லது!

Link to post
Share on other sites

சாஸ்திரி உங்களிடம் எனது கேள்வி எதை வைத்து தலைவர் இறந்தார் என உறுதியாக சொல்கிறீர்கள்? பத்மநாதன் சொன்னதை தவிர உங்களிடம் வேறு ஆதாரம் உண்டா? தலைவர் இருக்குறார் என நான் உட்பட பலர் நினைக்கிறோம் அதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை ஆனால் நீங்கள் உட்பட தலைவர் இறந்து விட்டார் என சொல்பவர்கள் அவர் இறந்து விட்டதுக்கு என்ன ஆதாரம் வைத்துள்ளீர்கள்? உங்கள் கருத்தின் படி தலைவர் இறந்திருந்தால் கேபி சனல்4 வழங்கிய முதல் பேட்டியில் அதை ஏன் மறுத்திருந்தார்? தலைவர் எப்படி செத்தார்? மாற்று கருத்துகாரர் சொல்வதை போல சரணடைய போய் தலையில் சுடப்பட்டு இறந்தாரா? தலைவர் 30 வருடத்திற்கு மேலாய் சர்வதேசத்தையே விரல் விட்டு ஆட்டியவர் அவர் இறந்தது சிங்களவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஆனால் ஏன் அவரது பிரேதத்தை கொழும்பிற்கு கொண்டு வந்து மக்களுக்கு காட்டாமல் அவசரமாய் எரித்தார்கள்?

தலைவர் இருக்குறாரோ இல்லையோ புலத்தில் எங்கள் பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் அதற்காக தலைவர் இறந்திருக்க வேண்டும் என இல்லை அரசியல் நலன்களுக்காக மறைந்திருந்தாலும் நாங்கள் எமது பணியை தொடர்ந்து செய்வோம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரதி சொல்வது ஏற்புடைய கருத்து. ஆம்.. தலைவர் இல்லையென்பதை தலைவரே சொல்லும் வரை.. வீண் வதந்திகளை புறக்கணிப்போம். தொடர்ந்தும் பணிகளைச் செய்வோம்.

Link to post
Share on other sites

தலைவர் இருக்கிறார் என்பவர்களிட்டை சில கேள்விகள்...

 1. தமிழரின் இண்றைய நிலை என்னவாக இருக்கிறது..??
 2. இன்னும் ஒரு போரை எதிர்கொள்ள தாயக மக்களுக்கு திரணி இருக்கிறதா..?
 3. எப்படியான தீர்வு கிட்ட வளி இருக்கிறது..??
 4. எந்த வளிகளில் தீர்வை எடுக்க முடியும்..??

இந்த கடைசி கேள்விக்கு மட்டும் பதிலை தந்துவிடுகிறேன்... பிச்சை எடுப்பதின் மூலமே... அதாவது வெளிநாடுகளிடமும், சிங்களவர்களிடமும் எதையாவது கொடுங்கள் எண்று பிச்சை எடுப்பது மட்டுமே கூடிய ஒரு வளி...

இப்ப கடைசியாக ஒரு கேள்வி...

இப்படி பிச்சை எடுக்கும் நிலையில் எமது வல்லமை பொருந்திய தலைவர் வாழ வேண்டுமா...?? அல்லது வீரனாக வீழ்ந்து இருக்க வேண்டுமா...?? பதில் சொல்லுங்கள்...

இல்லை எப்போதும் வராமலே விடுவது நல்லதா...???

Edited by தயா
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த கடைசி கேள்விக்கு மட்டும் பதிலை தந்துவிடுகிறேன்... பிச்சை எடுப்பதின் மூலமே... அதாவது வெளிநாடுகளிடமும், சிங்களவர்களிடமும் எதையாவது கொடுங்கள் எண்று பிச்சை எடுப்பது மட்டுமே கூடிய ஒரு வளி...

இப்ப கடைசியாக ஒரு கேள்வி...

இப்படி பிச்சை எடுக்கும் நிலையில் எமது வல்லமை பொருந்திய தலைவர் வாழ வேண்டுமா...?? அல்லது வீரனாக வீழ்ந்து இருக்க வேண்டுமா...?? பதில் சொல்லுங்கள்...

இல்லை எப்போதும் வராமலே விடுவது நல்லதா...???

தலைவரை எதிரியிடம் போராடி சாகவேண்டும் என நினைக்கிறீங்கள்!

நீங்கள் எல்லாம் வீரம் கதைப்பதற்காக தலைவர் சாகவேண்டும் என நினைக்கிறீர்கள் அப்படித்தானே.?

அவ்வாறு அல்ல அதற்கும் மேலாய் தலைவரை எமது சக மனிதனாக எண்ணியே தலைவர் இன்னும் வாழவேண்டும் என நினைக்கிறேன்! ஏன் என்றால் அவரை நாங்கள் அந்த அளவுக்கு நேசிக்கிறோம்! அவர் மீண்டும் வந்து போராட வேண்டும் என்று எண்ணவே இல்லை.... அப்படி எண்ணினால் அதைப்போல கேவலம் வேறு எதுவும் இல்லை! அவர் திரும்ப வந்து இந்த கேவலம் கெட்ட தமிழனுக்காக போராட வேண்டாம்! எங்காவது உயிரோடு இருந்தால் போதும்! நாங்கள் மட்டும் நல்லா உல்லாசமா வாழவேண்டும் தலைவர் இறுதிவரை போராடி உயிர்விட வேண்டும்!

நல்ல மனம் வாழ்க!

Edited by வசி_சுதா
Link to post
Share on other sites

ரதி சொல்வது ஏற்புடைய கருத்து. ஆம்.. தலைவர் இல்லையென்பதை தலைவரே சொல்லும் வரை.. வீண் வதந்திகளை புறக்கணிப்போம்.

காவடி தலைவர் இறந்ததை தலைவரே வந்து சொல்ல வேண்டும் என இல்லை அவரோடு இருந்தவர்கள் அதாவது தளபதிகள் வந்து சொல்லலாம் தானே[உ+ம்]ஜெயம்,பானு போன்றவர்கள்.தமிழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு சர்வதேச ரீதியில் விரைவான ஓர் தீர்வைப் பெற இத் தளபதிகள் மறைந்து வாழ்ந்தால் ஏன் தலைவர் மறைந்து வாழக் கூடாது அது தான் என் கேள்வி .

Link to post
Share on other sites

தலைவரை எதிரியிடம் போராடி சாகவேண்டும் என நினைக்கிறீங்கள்!

நீங்கள் எல்லாம் வீரம் கதைப்பதற்காக தலைவர் சாகவேண்டும் என நினைக்கிறீர்கள் அப்படித்தானே.?

தமிழ் மக்களை பொறுத்த வரைக்கும் பிச்சை எடுத்து தரக்கூட தலைவர் வந்துதான் எடுத்து தர வேண்டும் எனும் நிலையில் இருக்கிறம்..

அவர் பட்டது போதும் நிம்மதியாக போக விடுங்கள்.... இல்லை இருக்கிறார் எண்றால் நிம்மதியாக வாழ விடுங்கள்... போதும் அவர் பட்டது..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
அவர் மீண்டும் வந்து போராட வேண்டும் என்று எண்ணவே இல்லை.... அப்படி எண்ணினால் அதைப்போல கேவலம் வேறு எதுவும் இல்லை! அவர் திரும்ப வந்து இந்த கேவலம் கெட்ட தமிழனுக்காக போராட வேண்டாம்! எங்காவது உயிரோடு இருந்தால் போதும்!
Link to post
Share on other sites

வணக்கம்,

தகவல் உண்மையாக இருக்கலாம் அல்லது பொய்யாக இருக்கலாம். ஆனால்.. தற்போது இதுபற்றி பேசுவதை தவிர்ப்பதே நல்லது என்று நான் நினைக்கின்றேன். தலைவன் ஓர் வரலாறு. அவன் இப்போது உயிருடன் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும்... யுகம் யுகமாக தமிழ் மக்களின் நெஞ்சங்களில் வைத்து போற்றப்படுவான். தலைவர் எப்போதும் விரும்பியது தமிழினம் தாயகத்தில் கெளரவத்துடன், உரிமைகளைப்பெற்று, பல சாதனைகளைப் படைத்து, சிறப்பாக வாழவேண்டும் என்பதே. என்னைப்பொறுத்தவரையில்.. தலைவன் உயிருடன் இருந்தால் என்ன அல்லது இல்லாவிட்டால் என்ன.. நாங்கள் தலைவனுக்கு கொடுக்கக்கூடிய மரியாதை - அகவணக்கம் - இந்த உயரிய இலட்சியம் எட்டப்படுவதற்கு நாங்கள் தொடர்ந்து போராடுவதே. அதற்கு எங்கள் பங்களிப்பை கொடுப்பதே.

நன்றி!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சுபாஸ் சந்திரபோசும் முன்பு இறந்த போது ,அவர் உயிருடன் இருக்கிறார் என்று பலர் அஞ்சலி செலுத்தாமல் இருந்தார்கள். கடைசியில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 60 வருடங்கள் ஆகி விட்டது. சுபாஸ் சந்திரபோசினை இன்னும் காணவில்லை.

தலைவன் வர வேண்டும் என்பது தான் எல்லோரும் விருப்பம். வீரமரணம் அடைந்த தலைவனுக்கு அஞ்சலி செலுத்தவிடாது பலர் புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கிறார்கள். கனடா உலகத்தமிழர் கழகம், தமிழ் நேசன் இணையத்தளம், ஜீரிவி போன்றவை தலைவனின் மறைவு கண்டு அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கும் பலர் தலைவன் இருக்கிறான் என்று நம்புவதினால் இவ்வூடகங்கள் மீது தொலைபேசியில் மிரட்டினார்கள். தமிழ்த்தேசிய ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த தயாமோகன், பத்மநாதனின் பேட்டிகள் பயம் காரணமாக ஒளிபரப்புச் செய்யவில்லை.

17ம் திகதியே புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள சில பொறுப்பாளர்களுக்கும் இச்செய்தி கிடைத்தது. சனத்துக்கு பயந்து மெளனமாக தங்களுக்குள் அஞ்சலி செலுத்துகிறார்கள். பல புலம் பெயர்ந்தவர்கள் மாவீரர் தினம் அன்று தலைவன் உரையாற்றுவான் என நினைக்கிறார்கள். அன்று தலைவன் வந்தால் சந்தோசம். ஆனால் அன்று வராவிட்டால் ?

போராளிகள், மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள் வீரவணக்கத்தை செலுத்திய நாங்கள், வாழ் நால் முழுவதும் ஈழத்துக்காக தியாகம் செய்த அந்த உயர்ந்த தலைவனுக்கு வீரவணக்கம் செய்யமுடியததற்கு காரணம் சிங்களவனும் எட்டப்பனுமல்ல. நாங்கள் தான்.

Link to post
Share on other sites

எனக்கொரு உதவி வேணும்... சனங்கள் எண்டைக்குத்தான் திருந்துமெண்டு யாராச்சும் சொல்லமுடியுமா???........................

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னமோ செய்யுங்க....

சாத்திரி அண்ணா ரொம்பவே அவசரப்படுகிறார் என்று தெரியுது. அது மட்டுமில்ல எதிரியை விட இங்கு சிலர் தவைரின் வீரச்சாவுக்காய் காத்திருப்பது போல தெரிகின்றது.

யாரையும் யாரும் துரோகி என்று சொல்லும் அதிகாரம் யாரிடமும் இல்லை அதே நேரம் முன்னுக்கு பின் முரணான அறிக்கைகளை விட்டு குழுப்பியது பத்மநாதனே அன்றி வேறு யாரும் அல்ல. அதே நேரம் தயாமோகன் அவர்கள் பி.பி.சிக்கு பேட்டியளிக்க முதல் கனடாவில் கீதவாணியில் பேட்டியளித்தார். அப்போது அவர் சொன்ன கருத்து "பத்மநாதன் எதை சொல்கின்றாரோ அதை ஏற்றுக்கொள்கின்றோம்" என்பதே அவர் நேரடியாக தலைவரின் வீரச்சாவை ஏற்றுக்கொள்ளவில்லை. அதே வேளை, தளபதி ராம் அவர்கள் இறுதி கணங்களில் தலைவருடன் தொடர்பில் இருந்தார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இங்கு எம் முன்னே இருக்கும் பாரிய இரு கேள்விகளுக்கு விடையை பத்திகள் எழுதும் சாத்திரியோ, வாய்கிழி தேசியம் பாடி இன்று தலைவருக்கு வீர வணக்க் செலுத்த முண்டியடிச்சுக்கொண்டிருக்க

Edited by Nitharsan
Link to post
Share on other sites

தலமை குறித்து வெளிவந்த காட்சிகளில் சிலர் சந்தேகங்களை எழுப்பியதால் பிரிவை நம்ப மனம் மறுக்கின்றது. அவர் பாதுகாக்கப்பட்டிருப்பார் என்ற நம்பிக்கையில் சராசரி உணர்வுகளுடன் நான் அவரது பிரிவை இதுநாள்வரை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போதும் என்னுள் குழப்பமே உள்ளது. ஒருநாள் அவர் மீள வருவார் என்ற எதோ ஒரு உணர்வு எந்த செய்திகள் படங்களையும் தாண்டி உறுத்துகின்றது. முன்பு பல தடவை இவ்வாறு யோசித்திருக்கின்றேன் ஒருநாள் இவ்வாறு ஒரு துன்பச்செய்தி வந்தால் அந்த நாள் எப்படி இருக்கும் என்று. அவ்வாறான ஒரு யோசனையே எப்பவும் அச்சமானது என்பதால் அதை தொடர்வதில்லை. இப்போது எல்லாம் சூனியமாக உள்ளது.

எனது அறிவுக்கு எட்டியவரை தமிழன் சுதந்திரமாக வாழ்ந்த சரித்திரம் இல்லை. அதை நான் பார்த்ததில்லை. மிகச் சிறு வயதில் எங்கோ தொலைவில் இருந்து இராணுவம் ஊருக்குள் நுளையும் போது நாம் எமது குடும்பம் எவ்வளவு நடுங்கியது என்று நினைவிருக்கின்றது. சிறுவயதில் குமுதினி படுகொலை வீடியோ பாடசாலையில் பார்த்து பல நாட்கள் அச்சத்தில் நடுங்கியது நினைவிருக்கின்றது. அந்தக் காலங்களை மறக்க முடியாது. அதன் பின்னர் தலைவன் காலத்தில் கொஞ்ச கிராமங்கள் நகரஙங்கள் தெருக்கள் என்றாலும் சுதந்திரமாக இருந்தது. அச்சம் இன்றி வாழ்ந்த கொஞ்சக் காலங்களையேனும் தந்தான் எம் பெரும் தலைவன். தலைவன் இல்லாத இன்றய நாட்கள் வல்லூறின் கால்களின் அகப்பட்ட கோழிக்குஞ்சுகளாக எம்மக்கள் உறவுகள் இனம் சனங்கள். நடைபிணங்களாய் ஊரை உறவை பிரிந்து பரிதவித்து துடித்தபடி. எத்தனை இளைஞர்கள் இராணுவ முகாம்களில் வதைபட்டு அலறுகின்றார்களோ எத்தனை யுவதிகள் வீரிட்டு கத்துகின்றார்களோ, என்ன கொடுமை. இந்த கொடிய பொழுதுகளில் தலைவன் பிரிவை எவர் எப்படி சொன்னாலும் ஏற்க முடியாதபடி மறுபடி பழைய அச்சங்கள் மனதை ஆக்கிரமிக்கின்றது. நம்பிக்கைகளை யாரோ சம்மட்டி கொண்டு அடித்து நொருக்குகின்றார்கள். வன்னி மக்களை அபாயத்தில் இருந்து ஏலுமானவரை மீட்க முயற்சித்தால் அதுவே அவருக்கு அஞ்சலியாகும். ஒரு விதத்தில் தலைவர் பிரிந்திருந்தாலும் அவர் தொடர்ந்து நம்பிக்கையாக வீரமாக தமிழர்களுடன் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார், வேறொரு துரும்பும் இல்லை பிடித்து தொங்குவதற்கு. அதனால் அஞ்சலிகள் செய்யவில்லையே என்று தலைவர் விடயத்தில் அதிகம் மனதை உடைக்கத் தேவையில்லை. இறந்தாலும் இருக்கின்றார் என்றிருப்பதும் ஒரு வகையில் அஞ்சலியை விட மேலானது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான கருத்து. எனக்கு தோன்றியதை எழுதினேன். இவ்வாறான ஒன்று எம்மை நாமே ஏமாற்றுவதாக தர்க்கிக்க முடியும். அதே நேரம் ஏமாற்றங்களை தவிர்ப்பதற்காகவும் இவ்வாறு உணர்வுகொள்ள முடியும்.

Link to post
Share on other sites

இப்பொழுது நாம் செய்ய வேண்டியது , வன்னி முகாமில் இருக்கும் அகதிகளை வெளியே கொண்டுவரும் முயற்சிதான். தொடர்ந்து பலன் கிடைக்குதோ இல்லையோ, நீங்கள் வாழும் நாடுகளின் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேணும்.

Link to post
Share on other sites

என்னமோ செய்யுங்க....

சாத்திரி அண்ணா ரொம்பவே அவசரப்படுகிறார் என்று தெரியுது. அது மட்டுமில்ல எதிரியை விட இங்கு சிலர் தவைரின் வீரச்சாவுக்காய் காத்திருப்பது போல தெரிகின்றது.

யாரையும் யாரும் துரோகி என்று சொல்லும் அதிகாரம் யாரிடமும் இல்லை அதே நேரம் முன்னுக்கு பின் முரணான அறிக்கைகளை விட்டு குழுப்பியது பத்மநாதனே அன்றி வேறு யாரும் அல்ல. அதே நேரம் தயாமோகன் அவர்கள் பி.பி.சிக்கு பேட்டியளிக்க முதல் கனடாவில் கீதவாணியில் பேட்டியளித்தார். அப்போது அவர் சொன்ன கருத்து "பத்மநாதன் எதை சொல்கின்றாரோ அதை ஏற்றுக்கொள்கின்றோம்" என்பதே அவர் நேரடியாக தலைவரின் வீரச்சாவை ஏற்றுக்கொள்ளவில்லை. அதே வேளை, தளபதி ராம் அவர்கள் இறுதி கணங்களில் தலைவருடன் தொடர்ப்pல் இருந்தார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இங்கு எம் முன்னே இருக்கும் பாரிய இரு கேள்விகளுக்கு விடையை பத்திகள் எழுதும் சாத்திரியோ, வாய்கிழி தேசியம் பாடி இன்று தலைவருக்கு வீர வணக்க் செலுத்த முண்டியடிச்சுக்கொண்டிருக்க

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி, இது என்ன முட்டாள்தனமான நடவடிக்கை?

தலைவர் இறந்து விட்டார் என்று பல விடயங்களை ஆராய்ச்சி செய்து அதை நிரூபித்து எதை சாதிக்க போகிறீர்கள்? ஏதாவது பட்டம் தரப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

உங்களுக்கு உறுதியாக தெரியும் பட்சத்தில் உங்கள் வீட்டினுள்ளேயே அஞ்சலி செலுத்திவிட்டு போங்களேன். யார் தடுத்தார்கள்? ஊர்கூடி ஒப்பாரி வைக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களா?

தலைவர் இறந்ததாக நம்புபவர்கள் செய்ய வேண்டியது, கண்ணீரை துடைத்துக்கொண்டு அடுத்து செய்ய வேண்டியது என்ன என்று ஆக்கபூர்வமாக ஆராய்ந்து அதில் ஈடுபட வேண்டியதுதான்.

தலைவர் இறக்க வில்லை என்று நம்புபவர்கள் அவர் வருவார் என்று திட நம்பிக்கையுடன் செயல் படட்டுமே! உங்களை போன்றவர்கள் பரப்பும் இது போன்ற உறுதிப்படுத்தப்படாத செய்திகளால் மன உறுதி உள்ளவர்கள் சமாளித்துகொல்லுவார்கள். மன உறுதி இல்லாதவர்கள் நொந்து மூலையில் உட்கார்ந்து விட மாட்டார்களா? இதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பத்தாயிரம் பேரவில் சரணடைந்துள்ள விபரம் இலங்கை பாதுகாப்பமைச்சு இணையத்தில் எடுக்கவில்லை நிதர்சன்.. கரித்தாஸ் என்கிற தொண்டரமைப்பு வவுனியாவிலும் மன்னாரிலும் உள்ள முகாம்களில் மக்களிற்கு சேவை செய்கிறார்கள் அதில் வேலை செய்யும் நண்பர்கள் மற்றும் தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் உறுதி செய்த தகவல்கள் தான் அவை..

மன்னிக்கனும் சாத்திரி, நீங்கள் சொல்வது உண்மையாக இருப்பதற்க்கு மிக கொஞ்ச சந்தர்பங்களே உள்ளன! ஏன் எனில் படைகளால் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் அனைவரும் புலிகள் அல்லரே! அது மட்டுமன்றி முன்னாள் போராளிகள், மற்றம் எல்லைப்படை, சிறப்பு எல்லைப்படையில் பணி புரிந்தோர், வானொலி பத்திரிகையில் பணியாற்றியோர், ஏன் இன்றும் சேரன் சோழன், பாண்டியனில் பணி புரிந்தோர் என்று எல்லாருமே புலிகள் என்ற அடிப்படையில் தான் அடக்கப்படுகின்றனர்.

எனவே அதில் எத்தனை சத வீதம் உண்மையான உறுப்பினர்கள் உள்ளனர் என்பது கேள்விக்கிடமானதே!

Edited by Nitharsan
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பு ஒரு பரப்புரையாக மாறிவிடாமல்.................

தொடர்ந்து புலம்பெயர் நாடுகளில் எம் பங்களிப்பை பலவழிகளில் செலுத்துவோமாக.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்போதே யார் தலைமை என்ற போட்டியில் இருக்கிறது தமிழினம்!....

உங்களது இக்கருத்தானது பல்லாயிரம் கேள்விகளுக்கான விடையை உள்ளடக்கியிருக்கிறது நிதர்சன்.

இங்கு வாதிட்டு வெல்வதில் பயனேதும் இருக்காது.

புதுவை இரத்தினதுரை, தமிழினி , தங்கன், யோகி , கரிகாலன் , பாப்பா இப்படிப் பல அரசியல்துறைசார்ந்த போராளிகள் 4ம்மாடியில் விசாணையென்ற பெயரில் தடுப்பில் இருக்கிறார்கள் என்பது பொய்யில்லை. வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு முகாமில் இளம்பருதி உட்பட பலபோராளிகள் இறுதிவரை தங்களை களத்தில் பணயம் வைத்தவர்களெல்லாம் சிறையிருக்கிறார்கள். இதையினி எவர் பார்த்தார் எவர் சாட்சியம் சொல்வார் என்று ஆராட்சி செய்வதிலும் பார்க்க அந்தப்போராளிகளை எப்படி மீட்பது அவர்களின் வாழ்வுக்கான உத்தரவாதத்தை நாம் மேற்கொள்வதே இப்போதைய தேவை.

இல்லை வானவில்லை வளைத்து வருங்காலம் படைப்போமென்ற வரட்டுப்பிடிவாதத்தைப் பிடித்து இவர்களையெல்லாம் சாகவிடுதலே இந்தச்சாமிக்கு விருப்பமெனில் விட்டுவிடுங்கள். சாகட்டும்.

Link to post
Share on other sites

சாஸ்திரி கவலைகளை விடுங்கள், தமிழீழப்போராட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்குத் தெரியும் நாம் ஏன் இன்னமும் பிந்தங்கி நிற்கின்றோம் என்பது. அது மட்டுமன்றி தலைவரே சொன்னதாக அடிகளார் சொன்னவசனம் "தமிழர்கள் மற்றவர்கள் மேல் சுமையைச் செலுத்திவிட்டு தாம் அமைதியாக இருக்கின்றார்கள், நானும் சாதாரண மனிதன் தான்..." சொல்லவந்த விடயம் நாமே தலைவர் எல்லாம் செய்வார் என்று எதிர்பார்க்காது நாமாக செய்யவேண்டும். அவரும் ஓர் சாதாரணமனிதன் போன்ற ஓர் மானிட வாழ்வியலுக்குள் உட்பட்டவர் தான். தலைவர் இருக்கின்றாரோ இல்லையோ என்பதை ஆராயாமல் நாம் என்ன செய்தோம்? என்ன செய்துகொண்டு இருக்கின்றோம்? என்பதை சொல்லிக்காட்டுவதிலும்விட செய்து காட்டுங்கள். தமிழினம் விடிவுபெற நான் உழைக்கவேண்டும் என்று நினைத்து செயற்படுங்கள்... அதுவே போதுமானது. . . முகத்திற் கரி பூசுவதையும், உடனே துரோகி பட்டம் சூட்டுவதையும் தவிருங்கள்... காரணமின்றி காரியங்கள் அரங்கேறா....

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.