Archived

This topic is now archived and is closed to further replies.

theeya

குருதியின் விம்பங்கள்

Recommended Posts

சிவப்பு ஒற்றை ரோஜாவை

பார்க்கும் போதெல்லாம்

என்னிடம் காதல்

வரவில்லை

என் அன்புத் தோழியே

என்னினம் சிந்திய

குருதியின் விம்பங்கள்

பட்டுத் தெறிக்கும்

இதை இனிமேல்

காதல் சின்னம் என்று

சொல்லாதீர்கள்

Share this post


Link to post
Share on other sites

"ரோஜாக்களை பார்க்கும் போது இனிக்காதல் வராது என இனம் சிந்திய ரத்தம் " என எண்ணும் தீயாவுக்கு ........ரோஜாவின் வாசத்தை மறக்கவேண்டாம் தமிழ் ஈழாத்தின் வாசம் என்றோ ஒரு நாள் வீசத்தான் .............போகிறது நானும் நீங்களும் இல்லாது போனாலும் நம் சந்ததி அதை நுகரும். .

Share this post


Link to post
Share on other sites

அழகான பூவிலும் எம் இனத்தின் அவலம் கண்ட தீயாவின் வரிகள் உங்கள் உள்மனதை சொல்கிறது.

பல்லாயிரம் மக்கள் உயிரிழந்து மண்ணில் ஓர் பேரவலம் நிகழ்ந்த தருணமும் துருக்கியின் கடல்கரை விடுமுறைக்கு காசு கூடப்போகிறது என்று நண்பர் கூட்டத்தை விரைவில் காசை செலுத்துமாறும் அப்பத்தான் குறைந்த விலையில் விடுமுறைக்கான விமான கடவுச்சீட்டைப் பெறமுடியும் என்று சொன்ன தமிழர்களும் என் கண்முன்னே திரிகிறார்கள்... இல்லை இல்லை அவர்கள் இப்போ விடுமுறையில் உள்ளார்கள். அவர்கள் இரத்தப் பெருகிலும் சந்தோசம் காண்பார்கள்.

மனம் மிகவும் வலிக்கிறது தீயா....

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • மதுரை மாணவி நேத்ராவை ஐநா கவுரவப்படுத்தியது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்   மதுரை மாணவி நேத்ராவை ஐநா கவுரவப்படுத்தியது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார். பதிவு: ஜூன் 05,  2020 12:26 PM மதுரை: மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர். மதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார். மோகனின் மகள் நேத்ரா, தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.  இக்கட்டான நிலையில் மக்களுக்கு மோகன் உதவிய சம்பவம் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மகள் படிப்புக்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்நிலையில் ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன்கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார்.  மேலும் நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் பேசவும் நேத்ராவுக்கு ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது.   தனது எதிர்கால கல்விக்காக சேமித்து வைத்திருந்த 5 லட்ச ரூபாயை ஏழைகளுக்காக நேத்ரா வழங்கியதை பாராட்டி கவுரவிக்கும் வகையில் இந்த சிறப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  முடி திருத்தும் தொழிலாளி மோகன் மகள் நேத்ராவுக்கு 1 லட்சம் ஊக்க தொகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது. "உலகத்திலேயே வறுமை இருக்க கூடாது என ஐ.நா.வின் நல்லெண்ண தூதரான மதுரை மாணவி நேத்ரா கூறி உள்ளார். மதுரை சிறுமி நேத்ராவை ஐநா கவுரவப்படுத்தியது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார். https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/05122603/The-UN-honored-Madurai-student-NetraThe-pride-of-the.vpf
    • 74ம் ஆண்டே முழுக்க முழுக்க சிங்கள ஆக்கிரமிப்பினுள் இருந்தபடி  தனியொருவனாக சிங்கள அரசபயங்கரவாதத்துக்கு எதிராக போராடி சிங்களவனால் கொல்லப்பட்ட  சிவகுமாரன்.. ஒருவேளை 80 பதுகளின் ஆரம்பத்திலும், 83  களின் இயக்கங்களின் எழுச்சி காலத்திலும்  உயிரோடு இருந்திருந்தால் இவர் பெயர் எடுப்பதா என்ற காழ்ப்புணர்வில்  நம்மில் யார் பெரியவர் என்ற போட்டியில்.. தாமதமாய் கொல்லப்பட்டிருப்பார்... சிங்களவனால் அல்ல தமிழ் இயக்கங்களினால். வரலாறுகள் நாம் விரும்பாவிட்டாலும் சாக்கடை கலந்த பன்னீரை தெளிப்பவை.
    • துலைக்கோ போறியள் 😂😂  
    • லண்டனில் தவிக்கும் தமிழர்கள்: விமான சேவை எப்போது? மின்னம்பலம்   சொந்த ஊர் திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என லண்டன் வாழ் தமிழர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால் உலக அளவில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்பமுடியாமல் தவித்தனர். இதைத் தொடர்ந்து, மத்திய அரசு அவர்களை மீட்பதற்காக 'வந்தேபாரத்' எனும் திட்டத்தின் கீழ் சிறப்பு மீட்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் தாயகம் திரும்ப வழிவகை செய்துள்ளது. அந்த வகையில் லண்டனில் உள்ள தமிழர்களை மீட்பதற்காக பேஸ் ஒன்றில் கடந்த மே 14ஆம் தேதி சென்னைக்குச் சிறப்பு விமானம் இயக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக சுமார் 300 பேர் வரை தாயகம் வந்தடைந்தனர்.   லண்டனில் இருந்து தமிழகம் திரும்ப இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் முறையாகப் பதிவு செய்துள்ள நிலையில், அவர்களை மீட்பதற்காக இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டமாக இயக்கப்பட வேண்டிய விமானங்கள் இயக்கப்படவில்லை. திடீரென மீட்பு விமான சேவை நிறுத்தப்பட்டதால் அங்கு வசிக்கும் தமிழர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இந்தியாவின் மற்ற நகரங்களுக்கும், குறிப்பாக தமிழகத்தை அடுத்துள்ள அண்டை மாநிலங்களுக்கும் லண்டனில் இருந்து இயக்கப்படும் மீட்பு விமானங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பயணிக்க முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.   இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு லண்டனில் இருந்து மீட்பு விமானங்கள் இயக்கப்படுவதை போல் தமிழகத்துக்கும் இயக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு லண்டன் தமிழர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்தவண்ணமுள்ளனர். இங்கிலாந்தில் சிக்கித் தவிக்கும் 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் தாயகம் திரும்ப ஏராளமான மனுக்களை எழுதியுள்ளனர். மேலும் லண்டனில் உள்ள இந்தியன் ஹை கமிஷன்(Indian High Commission) அலுவலகம் முன்பும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் செய்தனர். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. சிக்கித் தவிப்பவர்களில் பெரும்பாலோர் சுற்றுலாப் பயணிகளைத் தவிர, மருத்துவ சிகிச்சைக்காகவோ அல்லது தொழில் ரீதியாகவோ அங்கு சென்ற மாணவர்கள் மற்றும் மக்கள். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுடன் தொலைபேசியில் பேசிய வார்விக் நகரைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், "மதுரையில் வசிக்கும் எனது தந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், அவருக்கு வாழ இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன என்று மருத்துவர்கள் சொன்னார்கள். என் அம்மா உதவியற்றவராக இருக்கிறார். நான் இங்கே மாட்டிக்கொண்டேன். நாங்கள் திரும்பப் பெற நிறைய வழிகளை முயற்சி செய்தோம், ஆனால் எதுவும் செயல்படவில்லை" என வேதனை தெரிவித்துள்ளார். மேலும், இங்கிலாந்தில் உள்ள தங்கள் குடும்பத்தினரைப் பார்க்கச் சென்றவர்களால் தாங்கள் வழக்கமாக வாங்கும் மருந்துகளை வாங்க முடியவில்லை எனக் கூறுகின்றனர். தெற்கு ஹாம்ப்டனைச் சேர்ந்த 28 வயதான கசால், "என் தந்தையும் தாயும் என்னைப் பார்க்க வந்தார்கள். இருவரும் நீரிழிவு நோயாளிகள், இந்திய மருந்துகளின் அடிப்படையில் மருந்துகளைப் பெற முடியவில்லை. தற்காலிகமாக நாங்கள் இங்கு ஒரு மருத்துவரைச் சந்தித்தோம். ஆனால், அவர்கள் 14 நாட்களுக்கு மேல் மருந்துகள் கொடுக்க தயங்கினர். இருவரும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் நாளின் ஒவ்வொரு நிமிடமும் நான் அச்சத்தில் இருக்கிறேன். தமிழக அரசு ஏதாவது செய்ய வேண்டும்" என்று கூறினார். அண்மையில் லண்டன் வாழ் தமிழர்கள் ஆன்லைன் மூலம் தங்கள் மனுக்களை தொடர்ச்சியாக அனுப்பியும், வீடியோ வடிவில் கோரிக்கை விடுத்தும் தாங்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர். லண்டனைச் சேர்ந்த சியாமளா என்பவர் வெளியிட்ட வீடியோ பதிவில், "இங்கே இதய நோயாளிகள் இருக்கிறார்கள், சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள். அதே போல ஊரிலும் அப்பா, அம்மா என ரத்த உறவுகளும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். எங்களுக்கு அவர்களை சென்று பார்க்க வேண்டும். இங்கே ஒரு மீட்பு விமானமும் இல்லை. ஆனால், கொச்சின், விஜயவாடா, டெல்லி, மும்பை என மற்ற நகரங்களுக்கு விமானம் இருக்கிறது. எங்களுக்கு மட்டுமில்லை. இங்கிலாந்தில் இருக்கும் இந்தியர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு சென்று கொண்டிருக்கும்போது, தமிழர்கள் மட்டும் இங்கே மாட்டிக்கொண்டுள்ளோம். அது எந்த விதத்தில் சரி என்று எங்களுக்கு தெரியவில்லை. சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் என்பதை நாங்கள் உணர்கிறோம். எங்களுக்கும் பொறுப்புணர்வு இருக்கிறது. நாங்கள் யாரும் சென்னை வந்தவுடன் தனிமைப்படுத்தப்படாமல் வெளியே செல்வதற்கு தயாராக இல்லை. எங்களுக்கு ஒரே ஒரு மீட்பு விமானம் மட்டும் கொடுங்கள்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார். லண்டனைச் சேர்ந்த கிருஷ்ணா வெளியிட்ட பதிவில், "இந்திய தூதரகம் சென்னைக்கு விமான சேவை துவங்கினால் மட்டுமே எங்களை வெளியேற்றுவதைக் குறித்து ஆலோசிக்க முடியும் என கூறிவிட்டது. அண்டை மாநிலங்களுக்கு செல்வதற்கும் அனுமதியளிக்கவில்லை. எப்போது ஊர் திரும்புவோம் என தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம். எங்களை சீக்கிரம் இங்கிருந்து வெளியேற்ற உதவி செய்யுங்கள். நன்றி" எனக் கூறியுள்ளார்   https://minnambalam.com/public/2020/06/05/9/tamil-people-in-london-waiting-to-reach-their-home