Jump to content

எங்களுக்கு ஆணையிட நீங்கள் யார்?:


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு ஆணையிட நீங்கள் யார்?: இந்தியாவிடம் சிறிலங்கா கேள்வி

[சனிக்கிழமை, 06 யூன் 2009, 08:16 பி.ப ஈழம்] [சி.கனகரத்தினம்]

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வும் சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த இந்திய அரசாங்கத்துக்கு எந்த அதிகாரம் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியிருக்கிறது. இந்தியா அதன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்றும் சிறிலங்கா எச்சரித்திருக்கின்றது.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் இந்தியாவிற்கு எதிராக இத்தகைய எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது.

கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய நண்பரும் கட்டுரையாளருமான எல்.ஜெயசூர்ய என்பவரால் எழுதப்பட்டிருக்கும் கட்டுரையில் இந்தியாவைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டிருக்கின்றது.

இலங்கையில் வாழும் தமிழர்கள் உட்பட அனைத்து சமுதாயத்தினருக்கும் அதிகாரம் சம உரிமையும் அளிப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கான அடிப்படை காரணங்களை போக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா கூறியிருப்பதற்கு அக்கட்டுரையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

Link to comment
Share on other sites

இலங்கையை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும் நோக்குடன்தான் நீங்கள் விடுதலைப் புலிகளை உருவாக்கினீர்கள். நீங்கள் உருவாக்கியதை நாங்கள் அழித்து விட்டோம். நிலவை கூட நீங்கள் இந்தியாவுடன் இணைத்து விடலாம். ஆனால் இலங்கையை இணைக்க முடியாது.

childish.gifchildish.gif

Link to comment
Share on other sites

எருமை மாட்டுக்கு மேலே எவ்வளவு மழைபெய்தாலும் அதற்கு சுரணை இருக்காது.

Link to comment
Share on other sites

ஆகா! தொடங்கீட்டாங்கையா! வாழ்க!! இந்திய இராஐதந்திரம் இப்பிடி வாங்கிக்கட்டுமென அவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழக இந்தியா வளர்க இந்திய இந்தியா

ஆமா உங்களுக்கு சூடு சொரனை என்டு ஏதாவது இருக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ுஸ்ணாவிடம் நாங்கள் கேட்பது என்னவென்றால், தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று எங்களுக்குக் கூற நீங்கள் யார்? இறையாண்மை உள்ள நாடான சிறிலங்காவுக்கு ஆட்சி எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியும். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருங்கள்.

அப்பாடா ஆப்பு துவங்கியிருக்கு பெரிய பெரிய ஆப்பெல்லாம் காத்துக்கொண்டிருக்கு. வேணுமடா இந்தியா நாய்களா உங்களுக்கு . எங்களின் தேசத்தை சின்னாபின்னமாக்கி

பிணக்காடாக்கினீர்களே, உங்களுக்கு எனிமேல்தான் தெரியும் தமிழனின் அருமை , ஆனால் பஸ் போய்விட்டதடா நாyகளா.

Link to comment
Share on other sites

வாழக இந்தியா வளர்க இந்திய இந்தியா

ஆமா உங்களுக்கு சூடு சொரனை என்டு ஏதாவது இருக்கா

சூடு சொரணை என்றால் என்ன? சப்பாத்தியும் ரொட்டியுமா? அதுதான் எங்களிடமிருக்க. ( கண்ட கண்ட நாய்களெல்லாம் ஒரு பிராந்திய வல்லரசின் பின்புறத்தில் தட்டுகிறது )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி நக்கலும் கிண்டலும் செய்யாமல்... ஈழம் தொடர்பாக இந்திய செய்தித் தளங்களில் இதன் ஆங்கில மூலத்தை இணைப்போம்....

Link to comment
Share on other sites

ஆகா சரியான ஆரம்பம். ஐ.நா வையே மலேரியாவுக்கு மருந்தடிக்கச் சொன்ன சிங்களவனுக்கு இந்தியாவெல்லாம் யுயுப்பீபீபீபீபீ.

Link to comment
Share on other sites

நெத்தியடி இனியாவது சிங்களவனின் உண்மை முகம் எருமைத் தோல் கொண்ட இந்திய அரசளும் கோமாளிகளுக்குத தெரியட்டும். இது ஆரம்பமே இன்னும் இருக்கு

ஜானா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவின் கபடத்தனத்தை இந்தியா உணர்ந்துகொள்ளும் என்று நம்பிக்கை இருக்கிறது ஆனால் தற்போதையநிலையில் இந்த செய்திகள் ஆறுதலை தரவில்லை

Link to comment
Share on other sites

இது இந்தியாவே சொல்லிக் கொடுத்து ஆடும் நாடகமாகக் கூட இருக்கலாம்.....

தமிழ்நாட்டில் இருந்து எழும் அழுத்தங்களை சமாளிக்க இந்தியாவும் இலங்கையும் இவ்வாறு நாடகம் ஆடமுடியாதா?!!

யோசியுங்கள் நண்பர்களே!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களை அதிகாரம் செய்ய நீங்கள் யார்? - இந்தியாவுக்கு இலங்கை கேள்வி!!

ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 7, 2009, 16:33 [iST]

சென்னை: 'இந்தியாவுக்கு இலங்கை தந்துள்ள முதல் செருப்படி' என்று சர்வதேச மீடியாக்கள் வர்ணிக்கும் அளவுக்கு மிக மோசமாக இந்தியாவை விமர்சித்துள்ளது இலங்கை ராணுவம் மற்றும் அதன் செய்தி இணையதளம்.

இலங்கை விரைவில் இந்தியாவுக்கு தன் சுய ரூபத்தைக் காட்டும் என்றே நடுநிலையாளர்கள் சொல்லி வந்தனர். ஆனால் இத்தனை சீக்கிரம் அது நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை.

விடுதலைப்புலிகளை உருவாக்கி அவர்களை சர்வ பலம் பொருந்தியவர்களாக மாற்றுவதன் மூலம் இலங்கையை தனது காலடியில் அடிமையாக்க முயன்றது இந்தியா. நிலவைக் கூட இந்தியாவுடன் இணைத்து விடலாம்... ஆனால் இலங்கையை இணைக்கலாம் என்ற இந்தியாவின் கனவை தவிடுபொடியாக்கி விட்டோம், என அந்த தளம் சிறப்புக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.

இந்தக் கட்டுரையை எழுதியிருப்பவர் பெயர் எல் ஜெயசூர்யா. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் இந்த ஜெயசூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தக் கட்டுரையின் முக்கிய பகுதிகளை இங்கே தருகிறோம்...

“இலங்கையில் வாழும் தமிழர்கள் உட்பட அனைத்து சமுதாயத்தினருக்கும் அதிகாரம் சம உரிமையும் அளிப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கான அடிப்படை காரணங்களை போக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் உள்ள எல்லா அரசியல்வாதிகளும் தங்கள் லட்சணம் என்னவென்பதை உணராமல் இலங்கைக்கு ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கையில் வாழும் தமிழர்கள் உட்பட அனைத்து சமுதாயத்தினருக்கும் அதிகாரம் அளிப்பதன் மூலம் இனப் பிரச்சினைக்கான அடிப்படை காரணங்களைச் சரிசெய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

நீங்கள் யார் எங்களை அதிகாரம் செய்ய?

கிருஷ்ணாவிடம் நாங்கள் கேட்பதெல்லாம், தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று எங்களுக்குக் கூற நீங்கள் யார்? இறையாண்மை உள்ள நாடான இலங்கைக்கு ஆட்சி எப்படி செய்ய வேண்டும் என்பதும் தெரியும்.

உங்கள் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருங்கள். உண்மையிலேயே தேவையிருந்தால் கூட இங்கே மூக்கை நுழைக்கும் வேலையை வைத்துக் கொள்ளாதீர்கள்.

இத்தனை நாட்கள் இலங்கைக்கு எதிராகப் பேசி வந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை எப்படி ஒதுங்கிக் கொண்டாரோ அதேபோல் நீங்களும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கு மரியாதை.

இந்த இரண்டில் எந்த முடிவை மேற்கொள்வது என்ற உரிமையை உங்களுக்கே வழங்குகிறோம்.

இந்தியாவிற்கு மேலும் சில விஷயங்களைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். இலங்கைத் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் வழங்குவதாக இல்லை. ஏனெனில் தனிநாடு கோரி தமிழர்கள் போராட்டம் நடத்துவதற்கு அதுவே போதுமானதாக அமைந்து விடும்.

அது மட்டுமின்றி இந்தியாவால் எங்கள் மீது திணிக்கப்பட்ட இந்திய - இலங்கை உடன்படிக்கை விரைவில் செல்லாததாக்கப்பட்டு தூக்கி வீசப்படும். அதன் மூலம் இலங்கையில் உள்ள இந்திய ஆதிக்கத்தின் கடைசி அடையாளங்களையும் நாங்கள் துடைத்தெறிவோம். உங்கள் உடன்பாட்டுக்கு நாங்கள் ஏன் தலையாட்ட வேண்டும்!

விடுதலைப் புலிகளை உருவாக்கியது இந்தியாதான்!

இலங்கையை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும் நோக்குடன்தான் நீங்கள் விடுதலைப் புலிகளை உருவாக்கினீர்கள். நீங்கள் உருவாக்கியதை நாங்கள் அழித்து விட்டோம். நிலவை கூட நீங்கள் இந்தியாவுடன் இணைத்து விடலாம். ஆனால் இலங்கையை இணைக்க முடியாது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது எங்களுக்கு எதிராக வாக்களிக்காததற்காக இந்தியாவிற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியாவின் இந்த முடிவுக்கு மென்மையாக பேசும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் புத்திசாலித்தனம் தான் காரணம்.

அமெரிக்காவுக்கு ஓடியிருக்கும் இந்தியா...

இந்தியாவில் உள்ள பலர் எங்களுக்கு எதிராக வாக்களிப்பதையே விரும்பியிருப்பார்கள். அவ்வாறு இந்தியா வாக்களித்திருந்தால் ஆசியாவில் அதிலும் குறிப்பாக இப்போதிருக்கும் நிலப் பகுதியில் அண்டை நாடுகளுடன் சேர்ந்து இருப்பது இந்தியாவிற்கு மிகவும் சிக்கலானதாக இருந்திருக்கும்.

அத்தகைய சூழலில் இந்தியா அமெரிக்காவிற்கு அருகில் இடம்பெயர்ந்து சென்றிருக்க வேண்டியிருந்திருக்கும். அப்போது அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் இந்தியா இருந்திருக்கும் நிலை உருவாகியிருக்கும்.

இதையெல்லாம் அறிந்துதான் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருந்த ஜப்பான் நாடு கடைசி நேரத்தில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தது.. என்று வாய்க்கு வந்தபடி எழுதித் தள்ளியுள்ளார் ஜெயசூர்யா.

thatstamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.