Jump to content

"நலமாக இருக்கிறோம்"


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னிப் பகுதியில் இலங்கை ராணுவம் நடத்திய இறுதிநாள் போரில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள், பாஸ்பரஸ் குண்டுகளால் படுகொலை செய்யப்பட்டனர். சுனாமியால் நிகழ்ந்த மனிதப் பேரவலங்களைவிட இலங்கை ராணுவம் நடத்திய இந்தப் படுகொலைகள் அதிக கொடூரமானவை.

இந்தப் படுகொலைகள் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உலகத் தின் புலனாய்விலிருந்து இதன் சாட்சியங் களையும் அடையாளங்களையும் அழிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு ராணுவத்தினரை முடுக்கிவிட்டார் ராஜபக்சே. அந்த பணிகளை முழுமையாகச் செய்து முடித்துவிட்டதாக ராணு வத்தினர் தற்போது தெரியப்படுத்தியுள்ளனர். இத னை அடுத்து, முப்படைகளை கௌரவிக்கும் வைபவத்தை நடத்தி முடித்துதான் அதன் அணி வகுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் ராஜபக்சே.

இந்த வைபவம் குறித்து பாதுகாப்புத் துறையில் விசாரித்தபோது, ""போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசு அறி வித்ததை அடுத்து, முகாம்களில் (திறந்த வெளி சிறைக் கூடங்கள்) தஞ்சமடைந் துள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அரசு மேற் கொள்ள வேண்டுமென உலக நாடுகள் வலியுறுத்தின. இதனை ஏற்று அதனை மேற்கொள்ள வன்னிப் பகுதி ராணுவத் தினருக்கு உத்திரவிடப்படும்னு நினைத் தோம். ஆனால் இதற்கு மாறாக, இறுதி நாளில் நடந்த "நிகழ்வுகளின்' சாட்சியங் களை முற்று முழுதாக அழித்துவிட வேண்டுமென கொழும்பு தலைமையகத்தி லிருந்து கட்டளைப் பிறப்பிக்கப்பட்டது. இந்த பணிகளை ராணுவத்தினர் செய்து முடிக்கும் வரையில் முப்படைகளுடனான வைபவத்தை நிறுத்தி வைத்திருந்த அரசு, தற்போது அந்தப் "பணிகள்' முடிந்துள்ள நிலையில் கொண்டாடியுள்ளது'' என்று, கடந்த 10 நாட்களாக வன்னிப் பகுதியில் ராணுவத்தினர் மேற்கொண்ட "பணிகளை' விவரித்தார் வைபவத்தில் கலந்து கொண்ட அதிகாரி ஒருவரே.

இந்த நிலையில், வன்னிப் பகுதியில் அரசு அமைத்துள்ள "முகாம்'களுக்கு (திறந்தவெளி சிறைக்கூடங்கள்) விசிட் அடித்த இலங்கையின் தலைமை நீதிபதி சரத் என் சில்வா, இலங்கை அரசின் கொடூரங்களைப் பகிரங்கப்படுத்தி யிருப்பது, மனசாட்சி உள்ளவர்களை உலுக்கியுள்ளது.

நீர்க்கொழும்பு மாவட்டத்தில் மாரவில் பகுதியில் அமைக்கப்பட்ட நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட தலைமை நீதிபதி சரத் என் சில்வா, ""வன்னிப் பகுதியில் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள "நிவாரண முகாம்'களுக்குச் சென்று வந்தேன்.

அங்கு தமிழர்கள் படும் துன்பங்களையும் வேதனை களையும் வார்த்தைகளில் என்னால் விவரிக்க இயலவில்லை. செட்டிக்குளம் முகாமிற்குச் சென்றபோது, அங்குள்ள தமிழர்களின் நிலை மிக பரிதாபமாக இருந்தது. ஒருவேளை கஞ்சிக்காக அவர்கள் ஏக்கத்துடன் இருந்தனர்.

இயற்கை உபாதைகளைக் கழிக்கக் கூட, 50 பேர், 60 பேர் நீண்ட வரிசையில் நின்று காத்திருக்க வேண்டியிருக்கிறது. முள்கம்பிகளால் சூழப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ள அந்த மக்கள், ஒரு பிரட் துண்டுக்காக பல நாட்கள் காத்துக் கிடப்பது கொடுமை.

மிகப் பிரமாண்டமான கட்டிடங்களையெல்லாம் நாம் கட்டியெழுப்புகிறோம். ஆனால், போரினால் இடம்பெயர்ந்த தமிழர்கள், மிகச் சிறிய கூடாரங்களுக்குள் அடைக்கப் பட்டுள்ளனர். ஒரே கூடாரத்தில், 10 பேர் திணிக்கப்பட்டிருக் கிறார்கள். அந்தக் கூடாரத்தில் இந்த 10 பேரும் நிற்கத்தான் முடியும். உட்காரக் கூட முடியாது. கூடாரத்தை விட்டு வெளியே செல்ல முயன்றால், அவ்வளவு எளிதாக வெளியேறி விட முடியாது. அவர்கள் கழுத்து உடைந்துவிடும்.

மொத்தத்தில், வார்த்தைகளால் விவரித்து விட முடியாத கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர் அவர்கள். அவர்களுக்குப் போதுமான அளவில் நிவாரணம் வழங்க வேண்டும். உரிய நிவாரணங்களை அளிக்காவிட்டால் நாம் குற்றம் செய்தவர்களாகி விடுவோம். அந்தப் பழியை நாம்தான் ஏற்க வேண்டும்.

நமது நாட்டின் சட்டத்தின் மூலம் தமிழர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது. தமிழர்களின் துயரங்கள் நீதிமன்றத் தின் முன் கொண்டு வரப்படவே இல்லை. "இலங்கையில் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்று இரண்டு இனம் இல்லை. ஒரே இனம்தான் இருக் கிறது' என்று நாம் சொல்லிக் கொண்டிருப்பதெல் லாம் பச்சைப் பொய்கள். இதனையெல்லாம் நான் பகிரங்கமாகவே வெளிப்படுத்துகிறேன். இப்படிச் சொல்வதன் மூலம் இலங்கை அதிகாரிகளால் நான் தண்டிக்கப்படலாம். கவ லையில்லை'' என்று வன்னி முகாம்களின் நிலைமைகளை புட்டு புட்டு வைத்திருக்கிறார் தலைமை நீதிபதி.

விழா முடிந்து வெளியேறும்போது சக நீதிபதிகளிடம் மனம் திறந்த தலைமை நீதிபதி, ""முகாம்களில் உள்ள இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவதும், இளம்பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்படுவதும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை வெவ்வேறு இடங்களுக்கு பிரித்து, அவர்களை ஒன்றிணைய விடாமல் தடுப்பதும் பற்றி அந்த மக்கள் விவரிக்கும் போது, என் நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது'' என்று தன் வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

வன்னி "முகாம்' அவலங்களை தலை மை நீதிபதியே பகிரங்கப்படுத்தியிருப்பது இலங்கை அரசின் கோரமுகத்தை அம்பலப்படுத்தியிருப்பதாகவே கொழும்பு பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், ""பிரபாகரனை கொன்று விட்டதாக இலங்கை அரசு அவிழ்த்துவிடும் பொய்களை சிங்களவர் கள் நம்பலாம். தமிழர்களாகிய நாங்கள் நம்பவில்லை. கடைசி நாள் போரின் போது அங்கு என்ன நடந்தது என்பது அந்தப் பகுதியில் இருந்த மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், தனி முகாம் களில் அடைந்து கிடக்கும் அவர்கள் யாருடனும் எதுவும் பேச முடியாத நிலையில் இருக்கிறார்கள். தனி முகாம்க ளில் உள்ள அவர்களோடு கருணாவின் ஆட்கள் ஊடுருவியிருப்பதால், பிரபா கரனைப் பற்றிய எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் மௌனத் தையே கடைப்பிடித்து வருகின்றனர்'' என்று வன்னிப் பகுதியிலிருந்து கிடைக் கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, பிரபாகரன் பற்றிய பொய்யான தகவல்களை பரப்புவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ள இலங்கை அரசு, புலிகளின் புலனாய்வுப் பிரிவு (உளவுத்துறை) தலைவர் பொட்டு அம்மான் குறித்த தேடுதல் வேட்டை யைத் துவங்கியுள்ளது.

பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக பொய்யான செய்தியை இலங்கை ராணுவம் அறிவித்த சமயத்தில் "புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடற்படை தளபதி சூசை உள்பட முக்கிய தளபதிகள் அனைவரும் கொல்லப் பட்டு விட்டனர்' என்று கொக்கரித்தது ராணுவம். இதையே, பத்திரிகையாளர்களிடமும் வெளிப்படுத்தினார் ராணுவ பேச்சாளர் உதயநாணயக்கார.

இதனை அடுத்து, பொட்டு அம்மான், சூசை உள்ளிட்டவர்களின் உடல்களைத் தேடி அலைந்தது ராணுவம். ஆனால் கிடைக்கவில்லை. "யாரோ ஒருவர் உடலைக் காட்டி இதுதான் பிரபாகரனின் உடல்' என்று கூறியது போல, இவர்களுக்காகவும் அப்படி உடல்களை காட்டுவோமா என்று கோத்தபாய ராஜபக்சே அதிகாரிகளோடு விவாதித்தார். ஆனால் இதனை அறிந்த ராஜபக்சே ""கூடாது'' என்று தடுத்து விட்டதால், அந்த நிகழ்வு நடக்கவில்லை. அதனால் பொட்டு அம்மானை பற்றி தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டார் ராஜபக்சே.

இந்த நிலையில், (20-க்கும் மேற்பட்ட ஊடறுப்பு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டு பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் பத்திரமாக வெளியேறிய சம்பவங்களை "பிரபாகரன் உயிருடன் உள்ளார்' என்ற தலைப்பில் வெளியான நக்கீரன் இதழில் விரிவாகவே எழுதியிருந்தோம்).

தீவிர தேடுதல் வேட்டையில் இலங்கை ராணுவம் மட்டுமல்ல இலங்கை உளவுத்துறையும் இந்தியாவின் புலனாய்வு அமைப்பான "ரா'வும் ஈடுபட்டது. இந்த உளவு அமைப்பினர் "பொட்டு அம்மான் தப்பித்து விட்டார், அவர் கொல்லப்படவில்லை' என்று அறிந்து அதனை ராஜபக்சே விடம் தெரிவித்தனர். இதனை அடுத்துதான், பத்திரிகையாளர்களை சமீபத்தில் மீண்டும் சந்தித்த உதயநாணயக்கார, ""பொட்டு அம்மான் கொல்லப் பட்டதாக சொல்லப்பட்ட தகவல்கள் உண்மை அல்ல. அவரை தேடி வருகிறோம்'' என்று ஒப்புக் கொண்டார். இலங்கை பாதுகாப்புத் துறையும் இதனை வெளிப்படுத்தி யது. ஆனால், பொட்டு குறித்த எந்தத் தகவல்களும் அதற்கு மேல் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

இந்தச் சூழலில் பொட்டு அம்மான் குறித்து நாம் விசாரித்தோம். கடந்த 10 நாட்களாக அமைதியாக இருந்த பொட்டு, செவ்வாய்க்கிழமை தனது உளவுத்துறையின் கீழ் சர்வதேச அளவில் செயல்படுபவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, ""நலமாக இருக்கிறோம், பிறகு பேசுவோம்'' என்று கதைத்துள்ளார். பொட்டுவின் குரலை கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்ட புலிகளின் உளவுப்பிரிவினர் தலைவர் பிரபாகரனைப் பற்றிக் கேட்டபோது, ""நானே நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் போது தேசிய தலைவர் இருக்க மாட்டாரா? நிம்மதியாக இருங்கள்'' என்று தெளிவுபடுத்தியுள்ளார் பொட்டு அம்மான் என்பதாக நமக்கு வரும் தகவல்கள் சொல்கின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், புலிகளின் சர்வதேச தொடர்புகளுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தொடர்ந்து தான் அளித்துவரும் பேட்டிகளில் "பிரபாகரன் இல்லை' என்பது போலவே பதிவு செய்து கொண்டு வருகிறார். இது உலகத் தமிழர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டி ருக்கிறது.

இதுபற்றி புலிகளின் சர்வதேச தொடர்புகளில் நாம் விசாரித்தபோது, ""சர்வதேச நாடுகளில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. புலிகளின் செயல்பாடு களுக்கு இது மிகப் பெரிய தடை. அதனால் தான் அந்தத் தடை நீக்கப்பட தற்போது உலகத் தமிழர்கள் ஒருமித்த குரலில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். பிரபாகரன் இல்லை என்று அவர்கள் நம்பினால்தான் இந்தத் தடையை நீக்க உலக நாடுகள் முன்வரும். இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டு, சுமுகமான சூழல் உலகம் முழுவதும் பரவுகிற நேரத்தில் திடீரென பிரபாகரன் தோன்றுவார் என்று சுட்டிக் காட்டுகின்றனர்.

நன்றி நக்கீரன்

Link to comment
Share on other sites

அய்யொ அய்யோ ஐயோ...... உந்த நக்கீரனுக்கு அப்படி என்னதான் கோவம் நம்ம சாத்திரி, சாந்தி அண்ட் கோ மேல?? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1691.jpg

இதனை அடுத்து, பொட்டு அம்மான், சூசை உள்ளிட்டவர்களின் உடல்களைத் தேடி அலைந்தது ராணுவம். ஆனால் கிடைக்கவில்லை. "யாரோ ஒருவர் உடலைக் காட்டி இதுதான் பிரபாகரனின் உடல்' என்று கூறியது போல, இவர்களுக்காகவும் அப்படி உடல்களை காட்டுவோமா என்று கோத்தபாய ராஜபக்சே அதிகாரிகளோடு விவாதித்தார். ஆனால் இதனை அறிந்த ராஜபக்சே ""கூடாது'' என்று தடுத்து விட்டதால், அந்த நிகழ்வு நடக்கவில்லை. அதனால் பொட்டு அம்மானை பற்றி தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டார் ராஜபக்சே.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யொ அய்யோ ஐயோ...... உந்த நக்கீரனுக்கு அப்படி என்னதான் கோவம் நம்ம சாத்திரி, சாந்தி அண்ட் கோ மேல?? :lol:

உவங்களும் அலசி ஆராய்கிறவர்கள் என்று சொல்கிறீரா டண்கிளாஸ் பாவம் ஒரு பேப்பர் காறாள் எங்கு தலையை முட்டிக்கொண்டு திரியுராரோ :rolleyes::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நக்கீரன் பத்திகையின் பத்திஎழுத்தாளர் எதுவும் கூறிவிட்டுப் போகட்டும் தமிழனாகப் பிறந்தவன் ஒவ்வொருவரும் தமது கடமைதனைச் செய்தாலேயே எமது இறுதி இலக்கினை அடையலாம். அதைவிடுத்து இந்த கிச்சுக் கிச்சுமூட்டும் செய்திகளைக் கண்டு யாரும் மயங்கி மீண்டும் கனவுலகில் சஞ்சரிக்க வோண்டாம்.

எமது தலைவர் முப்பது வருடமாக இப்போராட்டத்தை கொண்டு நடாத்தி குறிப்பிட்ட தருணத்தில் மக்கள் கைகளில் ஒப்படைத்திருக்கிறார் . இப்போது எமது வேலை உலகமெங்கும் பரந்து வாழ்ந்து கொண்டிக்கும் அனைத்துத் துறைகளிலுமுள்ள புத்திஜீவிகளை வலிந்தேனும் அழைத்து ஒரு மிகப்பெரிய அறிஞர் குழுவொன்றினைப் புலம்பெயர் தேசங்களில் அமைக்க வேண்டியதும் அதை தாயகம்நோக்கிய பயணத்துக்காக பயன்படுத்துவதுமே.

தவிர எமது எதிர்கால தமிழ் சமுதாயத்தை பொறியியலாளர் வைத்தியர் எனும் கனவுகளுடன் வளர்த்து விடாது அனைத்துத் துறைகளிலும் மிகப்பெரிய அறிஞர்களாக வளர்த்து உலக அரங்கினில் ஜனநாயக விழுமியங்கள் மட்டுமல்ல மனிதமேம்பாடு தொடர்பான முன்னேற்றகரமான மாற்றங்கள் உலகில் எந்தமூலையில் நடந்தாலும் அதில் ஈழத்தமிழனது பங்களிப்பு இணைந்தே காணப்படும் எனும் மாற்றத்திற்கான வழிகளை நாம் கண்டுகொண்டு தாயக விடுதலைநோக்கி நாம் முன்னேறுவோம்

இதின் முன்னுதாரணமாக் இந்தியாவின் கொள்கை சம்பந்தமாக முடிவெடுக்கும் எந்தவொரு இலாகாவிலும் மலையாளிகளது ஆதிக்கம் நிறையவே உண்டு ஆனால் அதேநாட்டில் பணம்புளக்கம் கூடுதலாக இருக்கும் துறைகளில் மாத்திரமே தமிழர்கள் அதிக அக்கறை காட்டுவதை தாங்கள் அனைவருமஇ அறியலாம் இதுவே தமிழனுடைய சாபக்கேடு இதனை நாம் முதலில் மாற்றுவதற்க்கு முயலவேண்டும்

Link to comment
Share on other sites

இதனை அடுத்து, பொட்டு அம்மான், சூசை உள்ளிட்டவர்களின் உடல்களைத் தேடி அலைந்தது ராணுவம். ஆனால் கிடைக்கவில்லை. "யாரோ ஒருவர் உடலைக் காட்டி இதுதான் பிரபாகரனின் உடல்' என்று கூறியது போல, இவர்களுக்காகவும் அப்படி உடல்களை காட்டுவோமா என்று கோத்தபாய ராஜபக்சே அதிகாரிகளோடு விவாதித்தார். ஆனால் இதனை அறிந்த ராஜபக்சே ""கூடாது'' என்று தடுத்து விட்டதால், அந்த நிகழ்வு நடக்கவில்லை. அதனால் பொட்டு அம்மானை பற்றி தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டார் ராஜபக்சே.

1691.jpg

தலைவரின் உடலாகக் காட்டப்பட்டது கொழும்பில் காணாமல் போனதாகக் கூறப்படும் வர்த்தகருடையதாகவிருக்கலாம்.?µிடயம் வெலியில் வராமல் இருக்க மகனை புலனாய்வு படை சுட்டுகொன்றதெனலாம் கூட(இது எனது ஊகம் மட்டும் தான்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

எமது தலைவர் முப்பது வருடமாக இப்போராட்டத்தை கொண்டு நடாத்தி குறிப்பிட்ட தருணத்தில் மக்கள் கைகளில் ஒப்படைத்திருக்கிறார் . இப்போது எமது வேலை உலகமெங்கும் பரந்து வாழ்ந்து கொண்டிக்கும் அனைத்துத் துறைகளிலுமுள்ள புத்திஜீவிகளை வலிந்தேனும் அழைத்து ஒரு மிகப்பெரிய அறிஞர் குழுவொன்றினைப் புலம்பெயர் தேசங்களில் அமைக்க வேண்டியதும் அதை தாயகம்நோக்கிய பயணத்துக்காக பயன்படுத்துவதுமே. தவிர எமது எதிர்கால தமிழ் சமுதாயத்தை பொறியியலாளர் வைத்தியர் எனும் கனவுகளுடன் வளர்த்து விடாது அனைத்துத் துறைகளிலும் மிகப்பெரிய அறிஞர்களாக வளர்த்து உலக அரங்கினில் ஜனநாயக விழுமியங்கள் மட்டுமல்ல மனிதமேம்பாடு தொடர்பான முன்னேற்றகரமான மாற்றங்கள் உலகில் எந்தமூலையில் நடந்தாலும் அதில் ஈழத்தமிழனது பங்களிப்பு இணைந்தே காணப்படும் எனும் மாற்றத்திற்கான வழிகளை நாம் கண்டுகொண்டு தாயக விடுதலைநோக்கி நாம் முன்னேறுவோம்

இதின் முன்னுதாரணமாக் இந்தியாவின் கொள்கை சம்பந்தமாக முடிவெடுக்கும் எந்தவொரு இலாகாவிலும் மலையாளிகளது ஆதிக்கம் நிறையவே உண்டு ஆனால் அதேநாட்டில் பணம்புளக்கம் கூடுதலாக இருக்கும் துறைகளில் மாத்திரமே தமிழர்கள் அதிக அக்கறை காட்டுவதை தாங்கள் அனைவருமஇ அறியலாம் இதுவே தமிழனுடைய சாபக்கேடு இதனை நாம் முதலில் மாற்றுவதற்க்கு முயலவேண்டும்

ஒருவர் உத்தியோகம் பார்த்து , ஓய்வெடுத்தாலே ....... 30 வருடங்களில் பென்சன் கிடைக்கும் . அதற்கு யாரும் விதிவிலக்கல்ல ,

அடுத்த தலைமுறைக்கு தான் இப்போது வேலை ஆரம்பித்திருக்கின்றது .

இனியும் நான் பெரிசு , நீ ..... பெரிசு எண்டு சொறிஞ்சு கொண்டு நிக்காமல் ஆக வேண்டிய காரியத்தை மட்டும் பார்ப்போம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் உடலாகக் காட்டப்பட்டது கொழும்பில் காணாமல் போனதாகக் கூறப்படும் வர்த்தகருடையதாகவிருக்கலாம்.?µிடயம் வெலியில் வராமல் இருக்க மகனை புலனாய்வு படை சுட்டுகொன்றதெனலாம் கூட(இது எனது ஊகம் மட்டும் தான்)

நீலப் பறவை,

நீங்கள் மேற்குறிப்பிட்ட விடயங்களைப் பற்றி ...... பலர், பல தலைப்புகளில் , பலவாறாக விவாதித்துள்ளார்கள் . நிற்க .

இப்போது ஏற்பட்டுள்ளது ஒரு தலை முறை இடை வெளி ...... அதனை நிரப்ப இளையோரும் , அறிவு உள்ளவர்களும் எமது மண்ணையும் , மக்களையும் காப்பாற்ற முன் வர வேண்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் உத்தியோகம் பார்த்து , ஓய்வெடுத்தாலே ....... 30 வருடங்களில் பென்சன் கிடைக்கும் . அதற்கு யாரும் விதிவிலக்கல்ல ,

அடுத்த தலைமுறைக்கு தான் இப்போது வேலை ஆரம்பித்திருக்கின்றது .

இனியும் நான் பெரிசு , நீ ..... பெரிசு எண்டு சொறிஞ்சு கொண்டு நிக்காமல் ஆக வேண்டிய காரியத்தை மட்டும் பார்ப்போம் .

எங்களது தலைமுறையோடு எமது விடுதலை நிறைவிற்கு வந்துவிடும் கடைசிகாலத்தில் ஏதோ பழைய நினைவுகளை மீட்டவாறு அந்த மாவீரத்தெய்வங்களின் ஆலயங்களைப் பூசித்தவாறு நிமிர்ந்தோம் என்று கண்மூடலாம் என்றுதான் இருந்தேன். ஆனால் கல்லெறிபட்ட தேன் கூடுபோல கலைந்ததென்னவோ கூடுதானேயொளியக் கனவுகளல்ல. கனவுமெய்ப்பட அனைவரும் இணைவோம். இப்போதும் நான், எனது என்றில்லாமல் எமது என ஒன்றாவோம்.

Link to comment
Share on other sites

நக்கீரனின் வியாபார தந்திரத்திரத்திற்கு ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இப்போ கிடைத்த அவல். நக்கீரன் கோபாலுக்கும் கருணாநிதிக்குமான உறவு பற்றி தமிழக நண்பர்களிடம் கேட்டுப் பார்த்தால் புரியும்

உவங்களும் அலசி ஆராய்கிறவர்கள் என்று சொல்கிறீரா டண்கிளாஸ் பாவம் ஒரு பேப்பர் காறாள் எங்கு தலையை முட்டிக்கொண்டு திரியுராரோ :rolleyes::lol::lol:

ஓம் ஓம்.... ஈழத் தமிழர்களின் பத்திரிகைகளை விட தமிழக பத்திரிகைகள் மேல் என்ற நினனப்பு பலரிற்கு இருக்கு. திரிஷாவின் குளியல், நயந்தாராவின் கள்ள காதலன் போன்ற விடயங்களைப் போன்று தான் தமிழக வர்த்தக பத்திரிகைகளுக்கு ஈழத் தமிழர்களின் போராட்டமும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நக்கீரனின் இந்தச் செய்தி உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனால் 1989 இல் இந்திய அரசால் கொல்லப்பட்ட பிரபாகரனை உலகுக்கு முதலில் உயிரோடு காட்டியது நக்கீரன் என்பதை மறப்பதற்கில்லை.

நக்கீரன்.. வெறும் நடிகைகளின் கொசிப் எழுதிக் கொண்டு மட்டும் இருக்கிறது என்பதை ஏற்க முடியவில்லை. ஆனால் புலம்பெயர் தேசங்களில் நடத்தப்படும் பத்திரிகைகள் ஒரு சிலரை மட்டும் வைத்து குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பதைக் காட்டினும் நக்கீரம் எவ்வளவோ தேறும்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நக்கீரனின் வியாபார தந்திரத்திரத்திற்கு ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இப்போ கிடைத்த அவல். நக்கீரன் கோபாலுக்கும் கருணாநிதிக்குமான உறவு பற்றி தமிழக நண்பர்களிடம் கேட்டுப் பார்த்தால் புரியும்

தற்போதைய உலகில் வியாபாரத் தந்திரம் எங்கு இல்லை . ஒரு தாய் தன் பிள்ளைக்கே முலைப்பால் கொடுப்பது வழமை , அதனையே ...... கட்டாயம் கொடு என்று விளம்பரம் செய்யும் காலத்தில் இருக்கும் போது ........ நக்கீரனும் , விகடனும் , குமுதமும் விதி விலக்கல்ல .

கருணாநிதிக்கும் , நக்கீரனுக்கும் உள்ள தொடர்பை எமக்கு அறிய வேண்டிய அவசியமில்லை .

ஓம் ஓம்.... ஈழத் தமிழர்களின் பத்திரிகைகளை விட தமிழக பத்திரிகைகள் மேல் என்ற நினனப்பு பலரிற்கு இருக்கு. திரிஷாவின் குளியல், நயந்தாராவின் கள்ள காதலன் போன்ற விடயங்களைப் போன்று தான் தமிழக வர்த்தக பத்திரிகைகளுக்கு ஈழத் தமிழர்களின் போராட்டமும்....

இதனைப் பற்றி பிறிதொரு நாளில் விவாதிதிக்க மிகவும் ஆவலாக உள்ளேன் .

Link to comment
Share on other sites

அய்யொ அய்யோ ஐயோ...... உந்த நக்கீரனுக்கு அப்படி என்னதான் கோவம் நம்ம சாத்திரி, சாந்தி அண்ட் கோ மேல??

Link to comment
Share on other sites

கருத்துக்கள் மற்றவர்களுக்குக் காட்டிக்கொடுத்தும் விடும். மௌனமாக இருப்பதே நலம். நலமாக இருப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் இந்த இணையத்ளங்களும் கருத்துக்ளங்களும் ஒரு வேளை இல்லாமல் இருந்திருந்தால் எமது போராட்டம் இப்படி பின்னடைவை சந்தித்து இருக்காது என்று. <_<

Link to comment
Share on other sites

நக்கீரனின் இந்தச் செய்தி உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனால் 1989 இல் இந்திய அரசால் கொல்லப்பட்ட பிரபாகரனை உலகுக்கு முதலில் உயிரோடு காட்டியது நக்கீரன் என்பதை மறப்பதற்கில்லை.

நக்கீரன்.. வெறும் நடிகைகளின் கொசிப் எழுதிக் கொண்டு மட்டும் இருக்கிறது என்பதை ஏற்க முடியவில்லை. ஆனால் புலம்பெயர் தேசங்களில் நடத்தப்படும் பத்திரிகைகள் ஒரு சிலரை மட்டும் வைத்து குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பதைக் காட்டினும் நக்கீரம் எவ்வளவோ தேறும்..! <_<

அப்பிடி போடு தலைவா <_<

Link to comment
Share on other sites

அய்யொ அய்யோ ஐயோ...... உந்த நக்கீரனுக்கு அப்படி என்னதான் கோவம் நம்ம சாத்திரி, சாந்தி அண்ட் கோ மேல??

:D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலி செலுத்திய ஆகவேண்டும் என்று அடம்பிடிக்கும் உறவுகளுக்கு. எதிரானது இந்த கட்டுரை என்பதை மட்டுமே புரிந்து கொள்ள கூடியாதாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலி செலுத்திய ஆகவேண்டும் என்று அடம்பிடிக்கும் உறவுகளுக்கு. எதிரானது இந்த கட்டுரை என்பதை மட்டுமே புரிந்து கொள்ள கூடியாதாக உள்ளது.

இப்போ போராட்டமே அதுக்குத்தானே.....

ஓமா?

இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் அமைதியாக இருங்கள் இனிமேல்தான் எமது பத்தி எழுத்தாளர்கள் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கப்போகிறார்கள் பத்தாக்குறைக்கு அடுத்தடுத்து சில இராணுவமுகாமகளில் வெடிச்சத்தம் கேட்குது இனி என்ன குசால்தான்!!!!!!!!

நல்ல ரஜனி படம் பார்த்த மாதிரிக் காட்சிகள் அமையப்போகுது. கி கி கி கி கி கி கீ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.