Jump to content

புலிச்சின்னம் வரைந்து கொடுத்த ஓவியர் நடராசா மரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓவியர் நடராசா ஐயாவிற்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

ஓவியர் நடராஜா அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்..

Link to comment
Share on other sites

அவர் மறைந்தாலும் எங்கள் ஈழத்துக்காக அவர் வரைந்த ஓவியம் எங்கள் வரலாற்றில் எப்பொழுதும் மறையாமல் இருக்கும்.

அதனூடே அவரது நினைவுகளும்.....

எமது கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

சீறிப் பாயும் புலியை அடக்கவோ, அடிமைப் படுத்தவோ முடியாது என்பதிற்கு இணங்கி, தலைவரின் உணர்வுக்கு மெருகூட்டி, தமிழரின் விடுதலைக்கு உயிர் கொடுக்கும் எமது தேசியக் கொடியை வரைந்த பெரியவருக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறேன்.

ஐயா பெரியவரே... நீங்கள் ஈழத் தமிழருக்காக வரைந்த கொடி, இன்று இல்லாவிட்டலும் என்றாவது ஒருநாள் ஐ.நா வில் ஈழத தமிழரின் கொடி பெருமையுடன் பறந்தது உங்கள் பெயருக்கும் பெருமை சேர்க்கும், அதை நீங்கள் மேலிருந்து பார்ப்பீர்கள் என்பதில் ஐயமில்லை [R.I.P]

Link to comment
Share on other sites

ஐயா நடராசா அவர்களின் மறைவுக்கு எனது இரங்கல்கள்..! அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓவியர் நடராஜா அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

ஐயா உங்கள் உடல் மறைந்தாலும் புகழ் எங்கள் புலிக் கொடியுடன் எம் மனதில் என்றும் நீங்காமல் வாழும்.. உங்களுக்கு எனது சிரம் தாழ்த்தி அஞ்சலிக்கின்றேன். உங்களை இழந்து தவிக்கும் உங்கள் உறவுகளுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழனத்தின் வீர வரலாற்றிலே உங்கள் பெயரும் பொன் எழுத்துக்களால் பதியப்படும்.

ஜானா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓவியர் நடராஜா அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

அவர் விருப்பபடி அவர் தம்பி இருக்கும் இடம் தேடி சென்றுவிட்டார்... அவரும் ஆயிரமாய் வீரமரணமடைந்த மாவீரர்களும் நிச்சயம் அவர் தம்பியிடம் துணையாக நிற்பார்கள். அய்யா நீங்கள் உடலைவிட்டுத்தான் பிரிந்துள்ளீர் இனி ஒவ்வொரு நேரமும் தேசிய கொடியினை காணும் போது உங்களை இந்த தமிழ் சமூகம் வணங்கும்.

Link to comment
Share on other sites

மதிவதனி! பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 7 ஆண்டு களுக்கும் மேலாக படுத்த படுக்கையாகக் கிடக்கும் 69 வயது முதியவரான நடராசா, ""பிரபாகரன், மதிவதனி அவங்க பெத்த பிள்ளைகளையெல்லாம் சாகடிச்சுட்டதா நாளுக்கொரு கதை விடுது சிங்கள ராணுவம். இத நெனச்சா என் ரத்தமெல்லாம் கொதிக்குது. அந்தக் குடும்பம் எப்பேர்ப்பட்ட தியாகம் பண்ணிக்கிட்டிருக்கு தெரியுமா? அவங்களுக்கெல்லாம் சாவே கிடையாது தெரியுமா?''

வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டு உதடுகள் துடிக்கப் பேசுகிறார். ஒரே படுக்கையில் ஒன்றாகப் படுத்துறங்கி, பிரபாகரனைப் பின்னால் உட்கார வைத்து மதுரை வீதிகளில் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்த அந்தநாள் நினைவுகளில் மூழ்கிப் போகிறார்.

""ஓவியனான எனக்கு 30 வருடங்களுக்கு முன் அறிமுகமானார் தம்பி. ஒரு அலுவல் விஷயமாக இலங்கையிலிருந்து சிவகாசி வரை வந்த தம்பி, அப்படியே என்னையும் சந்தித்தார்''. 1977 களில் பயணித்து 2009 வரை வந்து விட்ட அவருக்கு பேசும் போது மூச்சு வாங்கியது.

""டீ, காபி குடிப்பதையே கெட்ட பழக்கம் என்பார் தம்பி. யார் கொடுத்தாலும், எந்தச் சூழ்நிலையிலும் எப்படி வற்புறுத்தி னாலும் "டீயோ, காபி யோ வேண்டவே வேண்டாம்' என்று தவிர்த்து விடுவார். புகைப்பது, மது அருந் துவதென்றால் அவருக்கு ஆகவே ஆகாது. "பெண் கள் விஷயத்தில் ஒழுக் கத்தோடு இருக்க வேண் டும்' என்று தன்னைப் போலவே இயக்கத் தினரும் நடந்து கொள்ள வேண்டும் என்பதில் அத்தனைக் கண்டிப்புக் காட்டுவார். நான் கூட ஒரு சமயத்தில் பேச்சுவாக்கில் "ஆண்-பெண் என்றால் ஈர்ப்பு இருக்கத்தானே செய்யும். இயற்கைக்கு மாறாக நீங்கள் கடைப்பிடித்து வரும் கட்டுப்பாட்டில் எனக்கு உடன் பாடில்லை'' என்றேன். அதற்கு அவர் "இலங்கைத் தமிழர்களுக்காக தனி இயக்கம் கண்ட பலரும் இதுபோன்ற பலவீனங்களால், சுயநலங்களால் கொள்கை மாறிப் போனதை நான் அறிவேன். அவர்களைப் போலவே நானும் அதே தவறுகளை செய்யத் துணிந்தால் தமிழீழத்தை அடையத் துடிக்கும் என் லட்சியம் என்னாவது?' என்று என் வாயை அடைத்து விடுவார்.

பிரபாகரனை பிடிவாதக்காரர் என்று ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது. தனக்கு முரண்பாடான கருத்துக்கள் என்றாலும் அந்த நேரத்தில் மிகச் சரியென்று பட்டால் தயங்காமல் ஏற்றுக் கொள்வார். திருமண பந்தத்தில் அவர் தன்னை இணைத்துக் கொண்டதும் கூட அப்படித்தான். சிங்கள அடக்குமுறைகளுக்கு எதிராக யாழ்ப் பாணம் பல்கலைக்கழகத்தில் சாகும் வரை உண்ணாவிரதமிருந்த மாணவிகளில் ஒருவர்தான் மதிவதனி. புன்கூடு தீவு பிரதியா கேம்பஸ் விவசாயக் கல்லூரியில் "அக்ரி' படித்த அவரோடு வினோஜா, லலிதா, ஜெயா ஆகிய மாணவி களும் தொடர் உண்ணாவிரதமிருந்து சாவின் விளிம்பைத் தொட்டுவிட, அவர்களைக் காப்பாற்றும் நோக்கத்தோடு ரகு என்பவர் அந்த நால்வரையும் பிரபாகரனிடம் அழைத்து வந்தார்.

அவர்களிடம் தகித்த தமிழீழ விடுதலை வேட்கையே இயக்கப் பணிகளில் அவர்களை ஈடுபட வைத்தது. இலங்கைத் தமிழ் மக்களுக்காக பட்டினி கிடந்து சாகவே துணிந்த பெண் போராளி மதிவதனி மீது பிரபாகரனுக்கும் மரியாதை ஏற்பட்டது. சமையலிலும் கை தேர்ந்த மதிவதனியை அவருக்கு ரொம்பவே பிடித்து விட்டது. மணவாழ்க்கை காண தம்பி தயாராகி விட்டதை அறிந்த சுகுமார் என்பவர் என்னிடம், "தம்பி கல்யாணம் பண்ணிக்கப் போறது தெரியும்ல' என்று குறைபட்டுச் சொல்ல... நான் தம்பியிடம் "இந்தப் போராட்ட வாழ்க்கைல இதெல்லாம் எதுக்கு?' என்று நேரடியாகவே கேட்டுவிட்டேன். தம்பியோ நிதானமாக "அண்ணா... நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவரல்ல. அப்படியாரும் என்னை நினைத்து விடக்கூடாது. எல்லோரையும் போல நானும் சாதாரண மனிதன்தான்' என்று யதார்த்தமாகச் சொன்னார்.

பிற்பாடுதான் மதிவதனியின் அருமை பலருக்கும் தெரிந்தது. போர்முனையிலும் கூட பிரபாகரனுக்கு எத்தனை உறுதுணையாக இருந்தாரென்று. அது என்ன வாழ்க்கை? காடுகளிலும், மலைகளிலும் அங்கும் இங்குமாக அலைந்து கடைசியில் சென்னையில்தான் சார்லஸையும், துவாரகாவையும் பெற்றார் மதிவதனி. இக்கட்டான தருணங்களில் கூட பதற்றமே இல்லாமல் இன்முகத்துடன் ஒவ்வொரு சூழ்நிலையையும் அவர் சமா ளித்த விதம் "பிரபாகரனின் போராட்ட வாழ்க்கைக்கு எத்தனை பொருத்தமாக இருக்கிறார்!' என்று பலரையும் வியக்க வைத்தது.

ஒருமுறை, துவா ரகா பெரியவளானதை அறிந்து அவளுக்காக வெள்ளிக் கொலுசு வாங்கிக் கொண்டு சிலோன் சென்றேன். அப்போது நான் கொடுத்த கொலுசை ஆசை, ஆசையாகப் போட்டுக் கொண்டு தரையே அதிரும் விதமாக ஜல் ஜல்லென்று அவள் நடந்த காட்சி இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. அப்போது தம்பியிடம், "என்ன உங்க மக இப்படி நடக்குறா?' என்று விளையாட்டாகக் கேட் டேன். மகள் நடக்கும் அழகை மனைவியோடு சேர்ந்து ரசித்த தம்பி, "எம் பொண்ணு ஸ்கூல்ல அட்வான்ஸ்ட் லெவல் முடிச் சிருக்கா. கடல்ல 15 கி.மீ. தூரம் சளைக்காம நீச்சலடிப் பாண்ணா...' என்று பூரிப் பாகச் சொன்னார்.

வாழ்க்கை முழுக்க எதிர்நீச்சலே போட்டுக் கிட்டிருக்கும் தம்பிக்கு "நீச்சலிலும் புலி'யாக மகள் இருப்பது அவருக்கு பெருமை சேர்க்கக்கூடிய விஷயம்தானே' என்று எண்ணிக் கொண்டேன். அந்த நேரத்தில் வீட்டுக்கு வெளியே "பூமராங்' தட்டு வீசிக்கொண்டிருந்தான் தம்பி யின் இளைய மகன் பாலச்சந்திரன். அவனுடன் சேர்ந்து விளையாட வேண்டும் போல எனக்கு ஆசை வந்தது. அவன் பக்கத்தில் சென்றேன். அப்போது அவன் பிரபாகரனிடம், "என்ன இவரு இப்படி கதைக்குறாரு' என்று கேட்டான். "மட்டக் கிளப்புல பேசுற மாதிரி பேசுறாருன்னு பார்க்குறியா? இவரு தமிழ்நாட்டுலயிருந்து வந்துருக்காரு. என்னோட நண்பர்' என்று மகனுக்கு என்னை அறிமுகப்படுத்தினார். உடனே அவன் "தமிழ்நாடுன்னு சொல்லாதீங்கப்பா... இந்தியான்னு சொல்லுங்க...' என்றான். பிறகு அவன் என்னை நெருங்கி வந்து "ஓ... நீங்க ஜெயலலிதா ஊரா?' என்று கேட்டுவிட்டு ஓடியே போனான். அவனது அந்தப் பேச்சைக் கேட்டு நானும் பிரபாகரனும் எக்கச்சக்கமாகச் சிரித்தோம்.

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? விரிப்பு கூட இல்லாம கட்டாந்தரையிலதான் படுத்து தூங்குவாரு தம்பி.

என் வீட்டுக்கு வந்தாலும் அப்படித் தான். அதுக்கு அவரு சொன்ன விளக்கம் - "காட்டுல மேட்டுல திரியுறப்ப கண்ட இடத் துலயும் படுக்க வேண்டியிருக்கும். கொஞ்சம் சொகுச அனுபவிக்கப் பழகிட்டாலும் அப்புறம் அது இல்லாம தூக்கம் வராது. கட்டாந்தரைதான் எனக்குச் சரியா இருக்கும்' என்பார்.

இந்த உலகத்துல பிரபாகரன் மாதிரி என் உள்ளத்துல இடம்பிடிச்சது யாரும் கிடையாது. நடக்க முடியாம நான் சிரமப்படுறேன்னு தெரிஞ்சு தம்பி எனக்கு கொடுத்த கைத்தடி இது'' -அந்தத் தடியை உறுதியாகப் பற்றிக்கொண்டு பேசியபோது அவரது உடம்பும் முறுக்கிக் கொண்டது.

"இலங்கைத் தமிழர் களின் துயரம்கண்டு இந்தத் தள்ளாத வயதிலும் துடிக் கின்றீர்களே...'

நாம் கேட்ட மாத்திரத்தில் அவரிடமிருந்து தெறித்து விழுந்தது பதில்.

""1972 டூரிஸ்ட்டாதான் இலங்கைக்குப் போனேன். பிறகு 1977-லயும் சும்மா போனேன். அப்போது அங்கே தமிழ்ப் பெண்களின் மார்பகங்களை அறுத்து குச்சிகளில் கட்டித் தொங்கவிட்டு "இங்கே தமிழன் கறி மாமிசம் கிடைக்கும்' என்று எழுதி போர்டு வைத்திருந்தார்கள். ஒரு ஊரில் ஒரு தமிழ்ப் பெண்ணின் பிறப்புறுப்பில் பச்சை குத்தி சிங்கள முத்திரையைப் பதித் திருந்தார்கள். அந்தப் பெண்ணிடம் "உன்கிட்ட இனி எந்தத் தமிழ்ப் புருஷன் படுப்பான்?' என்று சிங்களக் கொடியவர்கள் கேவலப் படுத்தியிருந்ததை அந்தப் பெண் சொன் னபோது எழுந்த துடிப்புதான்... இன்னும் அடங்கவேயில்லை.

எனக்கே இந்தத் துடிப்பு என்றால், நாளும் நடக்கும் கொடுமைகளைக் கண்டு தம்பி எப்படியெல்லாம் துடித்திருப்பார்?'' அதனால்தான் ஆயுதமேந்தி இலட்சியப் போராட்டத்தை நடத்தினார்.

இலட்சியவாதியான பிரபாகரனுக்கு சாவே கிடையாது என உறுதியான குரலில் சொல்லிவிட்டு, தன்னிடமிருந்த பிரபாகரனின் பழைய படங்களைப் பார்த்தபடியே பெருமூச்சு விட்டார் அப்பெரியவர்.

நக்கீரன்

Link to comment
Share on other sites

பிரபாகரனே பிரமாண்டமாய்...!

திகதி: 07.06.2009 -தமிழீழம்

புலிச்சின்னம் வரைந்து பிரபாகரனின் பிரியத்துக்குரிய அண்ணாவான ஓவியர் நடராசா "தம்பிக்கும் எனக்கும் உள்ள தோழமையை உலகறியச் செய்து விட்டது நக்கீரன்' என்று தனது பேட்டி வெளியான இதழை தலைமாட்டில் வைத்துக் கொண்டுஇ அதில் உள்ள பிரபாகரன் படத்தைத் தடவித் தடவிப் பார்க்கிறார்.

""இந்த உடல்ல ஒட்டிக்கிட்டிருக்குற உயிரால யாருக்கு என்ன பிரயோஜனம்? அது இந்த உலகத்துல எங்கோ ஒரு கண்காணாத இடத்துல தமிழீழங்குற ஒரே லட்சியத்துக்காக மூச்சு விட்டுக்கிட்டிருக்குற தம்பிக்கிட்ட போய்ச் சேரட்டும். அது அடுத்து அவரு எடுத்து வைக்கப் போற ஒவ்வொரு அடிக்கும் வலு சேர்க்கட்டும்'' என்று முனகியபடியே இருக்கிறார்.

""இன்னும் ஏதோ சொல்ல நினைக்கிறார்'' என்று அவர் வீட்டிலிருந்து நமக்குத் தகவல் கிடைக்க விருதுநகர் அருகிலுள்ள மல்லாங்கிணற்றுக்கு விரைந்தோம். அங்கே அவரைப் பார்க்க வந்திருந்தார் யாழ்ப்பாண நண்பரொருவர். அவர் நம்மிடம்இ ""இப்போது பிரபாகரன் மட்டும் இவர் முன்னால் வரட்டும். நடராசாவுக்கு எல்லாம் சரியாகிவிடும்'' என்று சொல்லஇ புன்முறுவலோடு மெதுவாகத் தலையசைத்தார் பெரியவர்.

உடனே அந்த நண்பர் ""இலங்கைல கொடூரமா நடக்குற தமிழினப் பேரழிவைத் தடுத்து நிறுத்தணும். அதுக்காக இங்கே தமிழகத்துல நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போறேன்னு சொல்லி வழக்கமாச் சாப்பிடுற மருந்துஇ மாத்திரையை வேண்டாங்குறாரு. எந்திரிச்சு உட்காரக்கூட முடியாத நெலமைல போராடப் போறேன்னு சொல்றாரு'' என்று வருத்தப்பட்டார்.

"அய்யா...' என்று பெரியவரின் அருகில் சென்றோம். அவரோ உணர்ச்சிக் கொந்தளிப்பில்இ ""தேசப் பற்றோடு தமிழ்நாட்டுல கலெக்டரைச் சுட்டுக் கொன்ன வாஞ்சி நாதன் வரலாற்றுல இடம் பிடிச்சிருக்கான். விடுதலைக்காக புரட்சி செய்த பகத்சிங் புகழை நாம் பாடறோம். பிரபாகரனும் சாதாரண மனுஷன் இல்ல. ஒரு இனத்தோட விடுதலைக்காக போராடிக்கிட்டிருக்கான்'' என்று அடிக்குரலில் பேசினார்.

பிறகு கண்ணை மூடிக்கொண்டு மீண்டும் பழைய நினைவுகளை அசை போட்டார். ""பிரபாகரனுக்கு பைக் ஓட்டத் தெரியாது. நாஞ் சொன்னேன். என்னோட புல்லட்டத் தர்றேன்இ நீங்க பைக் ஓட்டக் கத்துக்கணும்னு. அதுக்கு தம்பி சொன்னாருஇ "எங்கட நாட்டுல பெட்ரோல் கிடைக்காது. சிங்கள ராணுவத்தோட கண்ணுல மண்ணைத் தூவிட்டு சத்தமில்லாம பயணிக் குறதுக்கு சைக்கிள்தான் சரியா இருக்கும்.

எங்கட மக்களுக்குப் பயன்படாத ஒரு விஷயத்த நான் கத்துக்கிட்டு என்ன ஆகப் போகுது அண்ணா... சிங்களத்தான் மிகக் கொடியவன். அவனை எதிர்த்து நிக்கணும்னா துப்பாக்கி சுடத்தான் தெரியணும். அதனாலஇ துப்பாக்கிப் பயிற்சிதான் எங்கட இயக்கத்தோட தேவையே. அதைத்தான் மத்தியஇ மாநில அரசோட ஒத்துழைப்புல இங்கே பண்ணிக்கிட்டிருக்கோம்'னாரு.

போராடணும் போராடணும்னு துப்பாக்கி மீது தம்பிக்கு கிறுக்கே பிடிச்சிருச்சு. துருப்பிடிச்சு ஒண்ணுக்குமே உதவாத துப்பாக்கியா இருந்தாக்கூடஇ அத வாங்கி மண்ணெண்ணெய் ஊத்திக் கழுவித் துடைச்சுஇ அக்கக்காப் பிரிச்சு அதன் செயல்பாட்டத் தெரிஞ்சுக்குவாரு. இந்த ஆர்வத்துலதான் எந்தத் துப்பாக்கியா இருந்தாலும் அதைச் சிறப்பா கையாளுற நுட்பம் அவருக்கு அத்துபடியாச்சு.

நேதாஜியத்தான் மானசீக ஆசான்ம்பாரு. நேதாஜியப் படிச்சுப் படிச்சுத்தான் விடுதலை வேட்கைல தனக்குள்ள ஒரு தெளிவு வந்துச்சுன்னு சொல்வாரு. இந்திய தேசியப் படையின் பிரிவுகளுக்கு நேதாஜி வச்சிருந்த பெயர்களையும்இ அவரு படை திரட்டுன விதத்தையும் அத்தனை விரிவாப் பேசுவாரு. எதையும் தீர்க்கமா சிந்திச்சுஇ திட்டம் தீட்டி ஒரு காரியத்தை முடிக்குற வரைக்கும் அதே சிந்தனையாத்தான் இருப்பாரு.

என் வீட்டுல தங்குறப்ப எப்பவுமே ஜன்னல் பக்கமா படுக்க மாட்டாரு. ரொம்பவும் முன்னெச்சரிக்கையா இருப்பாரு. சில நேரங்கள்ல ஒரு வாரம் கூட தங்குவாரு. ஆனாஇ வீட்டுல இருக்குறவங்களுக்கே தம்பி மாடில இருக்குறது தெரியாது. அந்த அளவுக்கு அவரோட நடவடிக்கைகள் சைலண்ட்டா இருக்கும். புலி பதுங்கிப் பாயுங்குறது தம்பி விஷயத்துல ரொம்பவும் பொருந்தும்.

இப்பவும் பதுங்கித்தான் இருக்காரு. அது உயிர் வாழணும்குற ஆசையில இல்ல. தமிழினம் நாதியத்துப் போயிடக் கூடாதுங்குற வெறில... சமைக்குறதுக்காக அறுக்குற கோழியக் கூட ஒரேயடியா அறுத்துடணும். முனை மழுங்கிய கத்தியால ரொம்ப நேரம் அறுத்து அதைச் சித்திரவதை பண்ணக் கூடாதும்பாரு. இப்படித்தான் ஒரு தடவை என் மனைவியோட பிறந்த நாளன்னைக்கு கோழிய அறுக்கப் போன அவகிட்டயிருந்து கத்தியை வாங்கி "உங்களோட பிறந்த நாளான இன்னைக்கு உங்க கையால ஒரு உயிரு சாகணுமா? நான் அறுத்துத் தர்றேன்'னு அவரே அறுத்தாரு.

எதிரிக்கு சிம்ம சொப்பனமா இருக்குற அவருக்குள்ள இப்படி ஒரு சாந்தமான குணமும் இருக்குறது எனக்கு ஆச்சரியமா இருக்கும். ஒருநாள் ஏதோ ஒரு கவலைல நான் இருந்தப்பஇ "அண்ணா... குவிச்சு வச்சிருக்குற என் கை விரலப் பாருங்க. இடைவெளி இல்லைல்ல. இப்படியிருந்தா நல்லதுன்னு சொல்வாங்கள்ல...' என்று உற்சாகமாகச் சொல்ல... நானோஇ "இத்தனை குழந்தைத் தனம் உள்ள ஒரு மனிதனை சிங்களனுங்க போராளி ஆக்கிட்டானுக' என தம்பியின் தனிப்பட்ட வாழ்க்கையை எண்ணி வருத்தப்பட்டேன்.

தம்பியோ "அடப் போங்கண்ணா... என் அப்பாஇ என் அம்மாஇ என் சொந்தக்காரங்கன்னு எல்லாரு மாதிரியும் எனக்கும் சாதாரண வாழ்க்கை அமையணும்னா நெனக்குறீங்க. என் நாடுஇ என் தமிழினம்னு ஒருநாள் வாழ்ந்தாக் கூட போதும்ணா. அப்படித்தாண்ணா... சுயநலமே இல்லாத ஒரு பெரும்படையே நம்ம இயக்கத்துல சேர்ந்து இனத்துக்காக ரத்தம் சிந்தி உயிரை விட்டுக்கிட்டிருக்கு'ன்னு தான் வாழ்வதற்கான அர்த்தத்தையே எனக்கு விளக்கிட்டாரு.

கண்ணகியின் கற்பு கூட இங்கே பேசப்படுது. பிரபாகரன் சுத்தமான தமிழ் வீரன். தமிழ் இனத்தோட அடையாளம்'' என்று ரொம்பவே உணர்ச்சி வசப்படஇ இயல்புக்கு மாறாக அவர் உடல் நடுங்கியது. உடல் நலிவையும் பொருட்படுத்தாது நீண்ட நேரம் உரையாடிய பெரியவரிடம்இ ""சற்று ஓய்வு எடுத்துக்கங்க...'' என்றார் அந்நண்பர். அவரைக் கைத்தாங்கலா படுக்க வைத்துவிட்டுஇ கரம் கூப்பி நாம் விடைபெற்ற போது நம் விரல்களை அழுத்தமாகப் பற்றிக் கொண்டார்.

""நக்கீரன்ங்குற பேருக்கு ஏத்த மாதிரியே தமிழ் உணர்வோட நெறய கட்டுரைகள் எழுதுறீங்க. தம்பி பிரபாகரனைப் பத்தி பலருக்கும் பல விஷயம் தெரியும். ஆனாலும்இ எனக்குத் தெரிஞ்சதயும் உலகத்துக்குச் சொல்ல வச்சிட்டீங்க. ரொம்பவும் மனநிறைவா இருக்கு'' என்று கண்கலங்கினார். மறுநாளும் பெரியவரின் வீட்டிலிருந்து தொலைபேசியில் நம்மைத் தொடர்பு கொள்ள... "அய்யா அழைக்கிறாரா?' என்றோம்.

எதிர்முனையில் பதிலெதுவும் கூறாமல் அமைதி காத்தார்கள். அதுவே வலியாக நமக்குள் ஊடுருவ... ""அய்யா நம்மையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டாருய்யா...'' என்று பெருங்குரலெடுத்து அழுதார்கள். தனக்குள் பிரம்மாண்டமாக 32 ஆண்டுகளாக உறைந் திருந்த பிரபாகரனை கடந்த இரண்டு இதழ்களின் வாயிலாக வாசகர்களின் இதயத்தில் இறக்கி வைத்த அவர் அசையாத ஓவியமாக கண்ணாடிப் பேழைக்குள் காட்சியளிக்க... வாசகர்களின் சார்பில் அம்மாமனிதருக்கு அஞ்சலி செலுத்தினார் ஆசிரியர்.

நன்றி: நக்கரன் (07.06.2009)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.