Jump to content

இன்று ஐ.நா இப்படித்தான்!


Recommended Posts

குறுகுறுப்பு, படபடப்பு எதுவும் இல்லை. ஐ.நா. சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனை இனிய முகத்துடன் இலங்கையில் வர வேற்றார் மகிந்தா ராஜபக்ஷே. ஒரு மினி டூர் ஏற்பாடு செய்திருந்தார்கள். 24 மணி நேரம். அனுமதிக்கப்பட்ட பகுதி கள் மட்டுமே காண்பிக்கப்பட்டன. எரிந்து போன கார் டயர்களையும் குப்பைக் கூளங்களையும் போர்க் களத்தில் பார்த்து இருக்கிறார் பான் கீ மூன். முகாம்களில் வழிய வழியத் தமிழர்கள். திரும்பிச் செல்லும்போது, வீதி முழுவதும் ராஜபக்ஷேவின் சிரிக்கும் கட்-அவுட்கள்.

'இதுவரை இப்படிப்பட்ட கொடுமையான காட்சியை நான் கண்டதில்லை!' என்று பான் கீ மூன் கருத்துத் தெரிவித்த பிறகும், உதவிப் பணிகள் புரிவதற்குக்கூட ஒருவரையும் உள்ளே அனுமதிக்கவில்லை இலங்கை. காரணம், ஐ.நா. குறித்த பயம் இலங்கைக்கு இல்லை.

p29a.JPG

'எங்களுக்கு எதிராக ஐ.நா. எப்படிப்பட்ட தீர்மானத்தைக் கொண்டுவந்தாலும், நாங்கள் பயப்பட மாட் டோம். தீர்மானம் முறியடிக்கப்படும்!' என்கிறார் ஐ.நா-வுக்கான இலங்கையின் சிறப்புப் பிரதிநிதி தயன் ஜெயதிலகா. அவர் சொன்னதுதான் நடந்தது. இலங்கை தன்னைத்தானே விசாரணை செய்துகொள்ள வேண்டும் என்ற அற்புதமான யோசனையை ஐ.நா. வழங்கியுள்ளது.

ஐ.நா. தலையிட்டு இலங்கைத் தமிழர்களுக்கு ஈழம் பெற்றுத் தரும் என்று நம்பியவர்களும், குறைந்தபட்சம் மகிந்தா இழைத்த போர்க் குற்றங்களுக்குத் தண்டனையாவது பெற்றுத் தரும் என்று எதிர்பார்த்தவர்களும் கடும் ஏமாற் றத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர். ஆனால், ஐ.நா-வின் கடந்த கால வரலாற்றை அறிந்தவர்களுக்கு இதில் அதிர்ச்சி எதுவும் இல்லை.

ஐ.நா. தொடங்கப்பட்டது 1945-ம் ஆண்டில். உருவாக்கியவர்கள் இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்ற நேச நாடுகளின் அணியைச் சேர்ந்த அமெரிக்கா, பிரிட் டன், பிரான்ஸ், சோவியத் யூனியன், சீனக் குடியரசு ஆகிய நாடுகள்.

இன்னொரு யுத்தத்தைத் தாங்கும் திராணி யாரிட மும் இல்லை. ஆகவே, இனி ஒரு போர் கூடவே கூடாது. உலக நாடுகளுக்கு இடையே, வேறுபட்ட சமூகங்களுக்கு இடையே ஒற்றுமை பூக்க வேண்டும். ஒரு சர்வாதிகார நாடு தன் மக்களை ஒடுக்குவதை, அழிப்பதை அனுமதிக்கக் கூடாது. ஏழ்மையில், இயற்கைச் சீற்றத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்குப் புனரமைப்பு.

ஐக்கிய நாடுகள் என்னும் பெயரை முதலில் பயன்படுத்தியவர்கள் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட். தொடக்கத்தில் 50 நாடுகள் உறுப்பினர்களாக இருந்தனர். இன்று 192 நாடுகள். மொத்தம் ஐந்து பிரிவுகள். விஷயங்களை விவாதித்து முடிவெடுக்க ஜெனரல் அசெம்பிளி. உலக அமைதி பேண பாது காப்பு கவுன்சில். இதில் மொத்தம் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகிய ஐந்தும் நிரந்தர உறுப்பினர்கள். எந்தத் தீர்மானத்தையும் தடுக்கும் வீட்டோ அதிகாரம் இவர்களுக்கு உண்டு. மூன்றாவதாக, பொருளாதார, சமூக நல கவுன்சில். நான்காவது, செயலகம் (செக்ர டேரியேட்). ஐ.நா-வுக்குத் தேவைப்படும் புள்ளி விவரங்களை, அறிக்கைகளைத் தயாரித்து அளிக்கும் பிரிவு. ஐந்தாவதாக, சர்வதேச நீதிமன்றம். நாடு களுக்கு இடையிலான சச்சரவுகளைச் சட்ட ஆலோசனைகள் மூலமாகத் தீர்த்துவைக்கும் பிரிவு.

இவை போக, ஐ.நா-வின் அதிகாரபூர்வ அமைப்புகள் பல உள்ளன. ஒரு நாட்டில் நடைபெறும் போர்க் குற்றங்களை விசாரித்துத் தண்டனை வழங்க, சர்வதேச கிரிமினல் நீதிமன்றம். இது பாதுகாப்பு கவுன்சிலின் பரிந்துரையை ஏற்றுச் செயல்படும். இனப் படுகொலை, போர்க் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை சர்வதேச நீதிமன்றம் எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு நல்ல நாளில் வேலையை ஆரம்பித்தது ஐ.நா. சில வாரங்கள்தான் கழிந்திருக்கும். லிட்டில் பாய், ஃபேட் மேன் என்னும் இரு அணுகுண்டுகளைத் தயாரித்து ஜப்பான் மீது வீசியது அமெரிக்கா. 'ஐயோ!' என்று மக்களோடு மக்களாகச் சேர்ந்து ஐ.நா-வும் அலறியது. அதற்கு மேல் எதுவும் செய்ய முடியவில்லை. ஐ.நா-வின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா நிரந்தர உறுப்பினர். ஐந்து வல்லரசுகள்கொண்ட கூட்டணி அது என்றாலும், பிற உறுப்பினர்களைவிட அமெரிக்கா பொருளாதாரரீதியில் முன்னணியில் இருந்தது. ஆகவே, ஐ.நா-வில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக அமெரிக்கா மாறிப்போனது.

வால் பிடித்தது போல் மற்ற நாடுகள் அணுகுண்டு பரிசோதனைகளில் ஒன்றன்பின் ஒன்றாக இறங்கியபோது, ஐ.நா. மேற்கொண்ட அதிகபட்ச நடவடிக்கை அறிக்கைக் கண்டனங்களை அச்சடித்து அனுப்பியதுதான்.

அமைப்புரீதியாகவும் ஐ.நா. பலவீனமடைய ஆரம் பித்தது. பாதுகாப்பு கவுன்சில் ஒன்றுசேர்ந்து பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது ஐ.நா-வின் அரசியல் சாசனம். பிறகு ஒருநாள் இந்த விதிமுறையை ஐவர் குழு உடைத்தது. 'பாதுகாப்பு கவுன்சிலின் நிரந் தர உறுப்பினர்கள் கூடிப் பேசி முடிவெடுக்கிறோம். அதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும். ஐவரில் மூவர் ஒப்புதல் கொடுத்துவிட்டால், தலைவர் ரெடி!'

பனிப் போரின் முடிவில், 1991-ல் சோவியத் யூனியன் சிதறியபோது, எஞ்சியிருந்த ஒரே பெரும் வல்லரசான அமெரிக்காவின் பின் பதுங்கிக்கொண்டது ஐ.நா. உலக விஷயங்களைத் தன்னிச்சையாக ஆராய்ந்து, விவாதித்துத் தீர்வு காணும் வழக்கம் ஒழிந்துபோனது. 1994-ல் ருவாண்டாவில் மூண்ட இன மோதலில் 10 லட்சம் பேர்கொல் லப்பட்டனர். 1998 தொடங்கி 2002 வரை காங்கோவில் நடைபெற்ற உள் நாட்டு யுத்தம் 50 லட்சம் மக்களைப் பலி வாங்கியது. சூடான், டாஃபர்இனப் படுகொலை பல ஆயிரக்கணக்கான மக்களைச் சீரழித்தது. இஸ்ரேல், பாலஸ் தீனம் மீது தொடர் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்திக்கொண்டு இருக்கிறது. காஸா முனை விட்டுவிட்டு எரிகிறது. மார்ச் 2003-ல் சர்வதேசத் தீவிரவாதத்துக்கு எதிரான போரின் ஒரு பாகமாக ஜார்ஜ் புஷ் ஆப்கானிஸ்தானையும் இராக்கையும் ஆக்கிரமித்தார். சதாம் ஹ§சேன் தூக்கிலிடப்பட்டார். இராக் இன்று வரை விடுவிக்கப்படவில்லை.

ஐ.நா. என்ன செய்துகொண்டு இருக்கிறது? எண்ணற்ற விவாதங்களை நிகழ்த் தினார்கள். டன் கணக்கில் தீர்மானங்கள் கொண்டுவந்தார்கள். பெரும் செலவில் நிறைய மாநாடுகள் நடத்தப்பட்டன. ஆக்கிரமித்த நாடு, ஆக்கிரமிக்கப்பட்ட நாடு. இரு தரப்பினரையும் சந்தித்துக் கைகுலுக்கினார்கள். தேநீர் அருந்தினார்கள். ஆக்கிரமிப்பாளர்களுக்குக் கொஞ்சம் அட்வைஸ். 'இனி இதுபோல் செய்யாதீர்கள். சீரழிந்த மக்களுக்கு ஏதாவது பார்த்துப் போட்டுச் செய்துகொடுங்கள். வரட்டுமா?'

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் வழியே உணவுப் பொட்டலங்கள்; காயம் அடைந்தவர்களுக்கு ஆம்புலன்ஸ் வண்டிகள்; நிலைமை முற்றினால், அமைதி காக்கும் படைகள். இவ்வளவுதான்! ஐ.நா-வால் எந்த ஒரு போரையும், எந்த ஓர் இனப் படுகொலை யையும், எந்த ஓர் ஆக்கிரமிப்பு யுத்தத்தையும் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதுதான் நிஜம்.

நிலைமை இவ்வாறிருக்க, மகிந்தா ராஜபக்ஷே மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்கும் என்று எப்படி நாம் எதிர்பார்க்கலாம்? ஐ.நா-வில் உறுப்பினராக இருக்கும் ஒவ்வொரு நாடும் தன் தோட்டத்தில் ஒரு கல்லறையைக் கட்டிப் பராமரித்து வருகிறது. ஒவ்வொரு நாட்டின் மீதும் ரத்தக்கறை படிந்து உள்ளது. இலங்கை மட்டுமல்ல... அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, சீனா, ரஷ்யா, இஸ்ரேல் என்று அத்தனை நாடுகளும் போர்க் குற்றங்கள் செய்திருக்கின்றன. இலங்கை குற்றவாளி என்றால், இவர்களும் குற்றவாளிகளே! எனவே, இவர்கள் யாரும் இலங்கையை விட்டுக்கொடுக்கப்போவது இல்லை. எனவே, வழக்கம்போல ஐ.நா. அமைதி காக்கிறது!

விகடன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.