Jump to content

பேரீச்சம் பழத்துக்குப் போகுது வணங்காமண் கப்பல்.

Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு முயற்சி எடுத்து அதில் தோற்றுப்போய்விட்டால் இப்படியா சேற்றை வாரி பூசுவது?

இது உண்மையான கவலையில் எழுதப்பட்டதாக தெரியவில்லை. உண்மையான வருத்தம் தொனிக்கவில்லை.. நக்கல்தான் தென்படுகிறது தலைப்பு உட்பட...

'பாத்தியா நான் சொன்னன் இவைக்கு நல்லா வேணும்' என்பது போல

தயவு செய்து குறை நினையாதேங்கோ. ஆக்க பூர்வமா எதுவும் எழுத/"படைக்க" இயலா விட்டால் பேனாவுக்கு ஓய்வு கொடுப்பது ஒன்றும் வெட்கப் பட வேண்டிய விஷயமல்ல. பெரிய எழுத்தாளர்களுக்கே இது நடந்திருக்குது. உங்கட குழப்பங்கள் தீரும் வரை கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு வாங்கோ, புண்ணியமாப் போகும்!

Link to post
Share on other sites
 • Replies 76
 • Created
 • Last Reply

சாந்தி அக்கா,

தவறுகள் சுட்டிக் காட்டப் படும் விதம், மீண்டும் அந்த தவறுகள் அடுத்த முயற்சியின் போது இடம்பெறக் கூடாது எனும் விதத்தில் அமைய வேண்டும். வெறும் காழ்புணர்ச்சியும் நக்கலும் எந்தவிதமான ஆரோக்கியமான பின் விளைவுகளையும் தரப் போவதில்லை. மாறாக இன்னும் இன்னும் பிளவுகளைத்தான் உருவாக்கும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாந்தி எழுதிய விடயத்தில் சில கசப்பான உண்மைகள் இருக்கத்தான்

செய்கிறது. அதை மறுக்கமுடியாது.

(மறுத்தால் அது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதுதான்)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

.... தயவு செய்து களம் நோக்கி நோக்கி செல்லுங்கள். அதுவரைக்கும் யாழ்களத்தை இயன்ற அளவிற்கு நாம் பார்த்து கொள்கின்றோம்

:D:D தயவுசெய்து களத்திற்க்கு போக சொல்லாதையுங்கோ.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

:D:D தயவுசெய்து களத்திற்க்கு போக சொல்லாதையுங்கோ.

களமா அப்படியென்றால்?

முடியல்லை இப்பவே கண்ணைகட்டுது. :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பு முதல் இறுதி வரை ஏதோ சிங்களவன் பகிடி பண்ணுவது போல எழுதப்பட்டிருக்கிறது. ஓரு விடயத்தை செய்து பார்த்தால் தான் அதிலுள்ள சிரமங்கள் புரியும். இருந்த இடத்தில் குறை கூறுவது மிக சுலபம். இவ்வளவு கேவலமாகத்தலைப்பு போட எப்படி மனம் வந்தது?..ஆக்கபூர்வமாக ஏதாவது சொல்வீர்கள் என்று பார்த்தால்.....கட்டுரை முழுவதும் நஞ்சு............

30 ஆண்டுப்போராட்டத்தில் நாம் இழந்ததை விட......வேண்டாம்..2009 இல்...நாம்..இழந்ததை விட அதிகம் இழந்து விட்டோமா...இந்தக்கப்பலில்........அ

து புறப்பட்ட நேரத்தில்....தவிட்டைக்கரைத்து

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா,

தவறுகள் சுட்டிக் காட்டப் படும் விதம், மீண்டும் அந்த தவறுகள் அடுத்த முயற்சியின் போது இடம்பெறக் கூடாது எனும் விதத்தில் அமைய வேண்டும். வெறும் காழ்புணர்ச்சியும் நக்கலும் எந்தவிதமான ஆரோக்கியமான பின் விளைவுகளையும் தரப் போவதில்லை. மாறாக இன்னும் இன்னும் பிளவுகளைத்தான் உருவாக்கும்.

நிழலி நீங்கள் கருத்துரையிட்டிருப்பது உண்மை தான் ! நான் ஆமோதிக்கிறேன்

Link to post
Share on other sites

சிறிலங்கா அரசாங்கம் கப்பலை அனுமதிக்காது என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.

ஆனால் வணங்கா மண் கப்பல் மூலம் பாரிய பரப்புரை முன்னெடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது. பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று பலர் இணைந்து வணங்காமண் கப்பலில் பயணிப்பார்கள் என்று சொல்லப்பட்டது. அப்படி எதுவும் நடைபெறாமல் போய் விட்டது.

ஆகக் குறைந்தது கப்பலை தமிழ்நாட்டிற்காவது திருப்பியிருக்கலாம். அங்கே உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்காவது கொடுத்திருக்கலாம். இப்படி செய்யும்படி சிலரால் ஆலோசனை சொல்லப்பட்டது. கடைசியில் அதுவும் நடைபெறவில்லை.

கலைஞருக்கு சங்கடம் கொடுக்க வேண்டாம் என்று நினைத்தார்களோ தெரியவில்லை

இலங்கை என்ற வல்லரசோடு இந்தியா வம்புக்கு போகாது. :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பேரீச்சம் பழத்துக்குப் போகுது வணங்காமண் கப்பல்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்ட விடயம் வணங்காமண் கப்பல். ...

10.06.09

அவதானமாகப்பர்போம்

எவ்வளவு சிரமமான கற்பனைகெட்டாத செயலை எம்மவர் செய்ய செய்யமுயற்சித்துள்ளார்கள்

ஒன்று கூடி, மக்கள் நம்பிக்கை பெற்று, பொருட்களும் மருந்துகளும் சேர்தது, பாதுகாப்பாக வைத்துவிட்டு, கப்பல் தேடி வாடைக்கு கிடைக்காமல் போனதால் மனம் தளர்ந்து திட்டத்தைக்கைவிடாமல் மன உறுதியையும் ஆழ்நத செயற்படுத்தும் திறனையும் எடுத்துக்காட்டும் வண்ணம் ஒரு கப்பல் வாங்கி, மாலுமிகளையும் தள வேலையாளர்களையும் அமர்ததி, அந்தக்கப்பலை மத்தியதரைக்கடல் கடந்து சுஏஸ் கல்வாய் மூலமாக நகர்த்தி செங்கடல் அடைந்து பின் அராபியக்கடல் கடந்து இலங்கைத் துறைமுகம் வரை அந்த பொருட்களையும் மருந்துகளையும் பாதுகாப்பக கொண்டு சென்று சேர்த செயலாண்மை, "முயற்சியுடையோர் இகழ்சியடையார்" என்ற பெரியோர் கூற்றிக்கிணங்க, (அவர்கள் யாராக இருந்தாலும்) நிச்சியமாக பராட்டத்தகதும் பராட்டவேண்டியதுமாகும்.

தவறினால் எமது வருங்கால சமுதாயம் தன்நம்பிக்கை இழந்து உஙகள் விமர்சனங்களக் கேட்டு கேட்டுப்பேதைகளாகி தவளைகளாகவும் முயல்களாகவும்மாறி பல உளவியல் பரிசோதனைகளுக்கும் உள்ளகாகி சோம்பேறிகளாகி கள்ளு சாராயம் எல்லாம் குடித்து மணைவிமக்களை அடித்து நொருக்கி இனத்தின் தன்னியக்க அழிப்பை தொடங்கி விடுவார்கள், ஆஃகவே "முயல்வோரை இகழ்வது தவிர்க்க".

மீண்டும் ,

வணங்காமண் எம்மைப்போன்ற சிறிய மக்களின் சுதந்திரமாக வாழத்துடிக்கும் உணர்சசியையும் செயற்படுதிறனையும் எடுத்துக்காட்டும் ஒரு செயல். இந்த பொருட்களும் மருந்துகளும் கொழும்புத்துறைமுகக் கதவிற்கப்பால் செல்லவில்லை என்றால் அங்கு இயங்கவேண்டிய குழுவில் ஒருவரும்மில்லை போலும், மதகுருமார்கள் அல்லது எதிர்கட்சியில் மனிதாஅபிமானம் உள்ளவரிடம் உதவி கேட்டிருக்கலாம் . . .

மேலும்,

இத்தோல்வி இலங்கை அரசாங்கத்தின் குழந்தைதனமாக வினைபிடிக்கும் பொறுப்பற்ற போக்கையும், போர் முடிந்து பலநாட்களான பின்பு கூட அதன் மனிதாஅபிமானமற்ற இறுமாப்பான போக்கையும் உலகத்திற்கு எடுத்துக்காட்டமுடிந்தது, ஆஃகவே இதுவும் ஒரு வெற்றியே. ..

இறுதியக,

கல்கத்தா கப்பல் மயாணத்தில் அந்தக்கப்பலையும் பொருட்களையும் ஏலத்தில் விற்று ஒருபகுதி செலவை திரும்பப் பெற முயற்சிக்கிறார்கள் என்று கூறுகிறீர்கள், அது அந்தக்குழுவினரின் பொறுப்புள்ள இயங்கு தன்மையையும் என்நிலமையையும் சமளிக்கும் திறனையும் எடுத்துக்காட்டி அவர்களின் மேல்லிருக்கும் மதிப்பை மேலும் ஒரு மடங்கு ஓங்கவைத்துள்ளது.

ஆஃகவே,

உங்களுடன் சேர்நது எமது அருமையாண மதிப்பற்ற உதாரணமாண வணங்காணமண் குழுவிற்கு எமது ஆதரவையும் பாராட்டுக்களையும் தெருவிப்போமாக!

"ஒன்று படாவிட்டால் உண்டு நரகம்"

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள அரசின் தடை முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ள தங்களின் தாயக உறவுகளை காப்பாற்ற மருந்து மற்றும் உணவுப் பொருட்களைச் சேகரித்து "வணங்காமண்' கப்பலை வன்னிக்கு அனுப்பி வைத்தனர் புலம் பெயர்ந்த தமிழர்கள். இந்த கப்பலை சிறைபிடித்த கோத்தபாய ராஜபச்சே, வன்னிக்குச் செல்ல அனுமதிக்காமல் மீண்டும் பிரான்சுக்கே திருப்பி அனுப்பிவிட்டார். நிவாரணப் பொருட்களை எடுத்துக்கொண்டு மீண்டும் பிரான்சுக்கே செல்வது பயனில்லை என்பதாலும் அப்படிச் செல்வதால் செலவினங்களும் கூடும் என்பதாலும் தமிழகத்தின் உதவியை நாடி சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளது வணங்காமண்.

தமிழக அரசை தொடர்புகொண்ட இதன் நிர்வாகிகள், ""தமிழக அகதிகள் முகாம்களில் உள்ளவர்களுக்காவது இந்தப் பொருட்களைக் கொடுத்துவிடுங்கள்'' என்றனர். இந்தத் தகவலை அறிந்த முதல்வர் வட்டாரம், ""அகதிகள் முகாம்களில் உள்ளவர்களுக்கு தி.மு.க. ஆட்சியில் அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. ஈழ அகதிகளின் தேவையை தி.மு.க. அரசு பார்த்துக்கொள்ளும்'' என்று கூறிவிட்டது. அதேசமயம் இந்த நிவாரணப் பொருட்களை ஈழத்தமிழர்களுக்கு கிடைக்கும் வகையிலான முயற்சியை மத்திய அரசோடு தொடர்புகொண்டு எடுத்து வருகிறது தமிழக அரசு.

-நக்கீரன்-

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் மற்றவனை நக்கல் பண்ணிப் பண்ணியே காலத்தைப்போக்காட்டுவம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணங்கா மண் கப்பலின் இன்றய நிலையை கோடிட்டு காட்ட

சகோதரி இட்ட தலைப்பு மிகவும் வேதனை தருகிறது......

இந்த தலைப்பு சிங்களவனுடன் அவன் திருப்பி அனுப்பியது

சரி என்ற தொணிப்பில் எழுதப்பட்டதாகவே தெரிகிறது!!!!!!

எற்கனவே ஒரு உறவு எழுதியது போல இது அனுதாபத்தில் எழுதவில்லை

ஏதோ முன் கோவத்தில் எழுதியது போல் உள்ளது.........

தமிழர்களாகிய நாம் முடிந்தவற்ரையே மும்மரமாக மணித்துளிகளை

செலவு செய்து அலட்டிக் கொண்டிருப்பதில் நேரத்தைப் போக்குகிறவர்கள்

மட்டுமல்ல மற்ரவனை சீண்டியும் பார்கிற இனமாக இருந்து வருகிறோம்

அதனால் இவாகள் எல்லோரும் அதில் அடங்குவார்கள் என மனதை ஆற்றிக்

கொள்ள வேண்டியது தான்..........

நாங்கள் எதையும் சொல்லலாம் எழுதலாம்........ஆனால் அதை நடை முறைப்படுத்துகிறவர்களுக்கு தான் அதன் கஷ்டம் தெரியும்........

எங்கட பொடியள் எவ்வளவு உறுதியோடையும் வீரத்தோடையும் வன்னி மண்ணில

இறுதி வரை நிண்டு போராடினவங்கள்........இது இப்படி இருக்க இப்ப சொல்லினம்

என்னண்டால் தங்களால ஏலாது எண்டு தெரிஞ்சால் விட்டிட்டு காட்டுக்குள்ள போயிருக்கலாமே எண்டு.......

இதையே அவங்கள் செய்திருந்தால் விட்டிட்டு ஒடீட்டாங்கள் எண்டு சனம் வசை பாடும்.......

இப்படித்தான் உலகம்

எல்லோரையும் எல்லோராலும் திருப்திப் படுத்த முடியாது..........அதானால் ஓரளவு நடு நிலமையுடன் ஏற்றுக் கொள்ள பழகி கொள்ள வேண்டும்.............

அத்தோடு இப்படியான தப்பு இனி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேணும்.......

கப்பல் பற்றி சர்வதேசம் வாய் திறக்கவில்லை என ஆதங்கப்படும் உறவுகளே!!!!!

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்!!!! அதாவது வெள்ளைக்காரன் எதையும்

வீணாக அலட்டி நேரத்தை வீணடிக் மாட்டான் (எங்களைப் போல்) அவன் ஒவ்வொரு

தரவுகளையும் சரியாக பதிந்து வைத்து விட்டு அதை உரிய நேரத்தில் சரியாக பயன்படுத்திக் கொள்வான்!!!!!!. அவனே தன் மனிதாபிமான உதவிகளை சட்டத்தின் கீழ் கொண்டு போக எவ்வளவு முயற்சி எடுத்தும் இன்னும் முடியவில்லை........

ஆனால் வணங்கா மண் போய் வந்திருக்கிறது!!!!!. அதனால் எப்போதும் நல்லவற்ரையே

சிந்தியுங்கள்.......!!!!!

இனியும் நீங்கள் கொடுத்த பணமும் பொருளும் வீணாக போய்விட்டது என மனம் நொந்தவர்களாக இருக்கிறீர்கள் என்றால்................ உங்கள் மனதை தேற்றிக் கொள்ள

சில வழி முறைகள்.......

1) அடிக்கடி நீங்கள் எடுக்கும் விழாக்களில் நீங்கள் குப்பைக்குள் கொட்டும்

உணவாக எண்ணிக் கொள்ளுங்கள்........

2)கொண்டாட்டங்களில் குடித்துவிட்டு போகும் முhத்திரமாக எண்ணிக் கொள்ளுங்கள்

3)விழாவுக்கு ஒரு புது உடுப்பு வாங்கி அதை ஒரு நாள் உடுத்திப் போட்டு தூக்கி

போட்டது போல எண்ணிக் கொள்ளுங்கள்..............

வட்டிக்கு குடுக்க போய் ஏமாந்த பணமாக எண்ணிக் கொள்ளுங்கள்.........

சீட்டு புடிச்சு சீட்டு சீட்டாய் கிழிஞ்ச பணமாக எண்ணிக் கொள்ளுங்கோ............

இப்படி தினம் தினம் எவ்வளவை கொட்டி துலைக்கிறியள்.......

அது மட்டுமல்லாமல் அந்த தாய் மண்ணில உள்ள அப்பாவி சனத்தின்ர புண்ணியத்தால தான்

உப்புடி சொகுசாய் இருந்து கொண்டு கொஞ்சத்தை கிள்ளி குடுத்திட்டு குத்தி முறியிறியள்.....

அதால அதுகளுக்கு நிங்கள் செய்த சிறு புண்ணியம் அனால் போகேல எண்டு நினையுங்கோ......

போற போக்கை பார்த்தால் எங்கட பொடியள் தோற்றுப் போனாங்கள்

அதால இவ்வளவு நாளும் செய்த உதவிப் பணம் எவ்லாம் திருப்பி தாங்கோ எண்டு

கேட்டாலும் கேப்பியள் போல............ கவனம் நாறிப் போடுவியள்.............

ஏனெண்டால் கக்குhசை கிண்ட வேண்டி வந்திடும்...........

அங்க தானே நீங்கள் குடுத்த பணத்தில வாங்கின றோல்ஷ் றொட்டி சோறு...... எண்டு எல்லாம்

கிடக்குது............

முயல் nஐயிக்கும்

ஆமையும் nஐயிக்கும்

ஆனால் முயலாமை nஐயிக்காது........

எனவே வணங்கா மண் கப்பல் முயற்சி தான் அதுவும் வெற்றி என்றே சொல்லலாம்........

என் இனத்தை நான் இழிவு செய்வதால்.......

என்னை நானே இழிவு செய்கிறேன்

அன்புடன்

தமிழ்மாறன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணங்கா மண் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோதே எழுந்த கேள்வி 'இது சரிப்பட்டு வருமா?' என்பதுதான். இது ஒன்றும் பெரிய விவேகமான கேள்வி என்று சொல்ல முடியாது ஏனெனில் எந்த மனிதருக்கும் இயல்பாக எழுகின்ற கேள்வியிது. ஏற்பட்டாளர்களுக்கும், இந்தப்பணியில் அயராது உழைத்த நூற்றுக்கணக்கான தமிழ் மற்றும் பிற இன ஆர்வலர்களுக்கும், இப்படியொரு கேள்வி எழவில்லை, அதனால் அவர்கள் முட்டாள்தனமாக முயற்சியில் இறங்கினார்கள் என யாராவது நினைத்தால் அதை வி்ட வடிகட்டிய முட்டாள்தனம் வேறெதுமில்லை.

வணங்கா மண் செயற்திட்டம் இரண்டு நோக்கங்களைக் கொண்டதாகவிருந்தது:

1) வன்னி மக்களுக்கு தேவையான உணவு, மருந்து, உடை உட்பட்ட மனிதாபிமான உதவிகளை வழங்குவது

2) தமிழ் மக்களின் நலன்களை அந்தச் சமுதாயமே கவனித்துக் கொள்கிற அளவு சக்தியை அது கொண்டிருக்கிறது. ஆனால் அத்தகைய முயற்சிகளுக்கு சிறிலங்கா அரசு தடையாகவிருப்பதே இன்றய சிக்கல்களுக்கு பிரதான காரணமாக அமைகிறது. என்கிற அரசியல் செய்தியை சர்வதேசப்பரப்பில் எடுத்துரைப்பது.

இதனை இத்திட்டத்திற்காக இரவு பகலாக உழைத்தவர்கள் நன்கு அறிந்தே செயற்பட்டார்கள். ஒரு கப்பலை எந்த விதமான தடையுமில்லமல் முல்லைத் தீவு கடற்பரப்புக்குச் கொண்டு சென்று பொருட்களை இறக்க முடியும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் சர்வதேச அரசியல் நிலைப்பாடுகள் இந்த திட்டத்தின் நோக்கத்தை நிறை வேற்ற உதவும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

பல்வேறுபட்ட சிக்கல்களை எதிர்நோக்கியதால் கப்பற் பயணம் தாமதமானது. இந்நிலையில் ஏற்கனவே காழ்ப்புணர்ச்சியில் மிதந்து கொண்டிருந்தவர்கள் தங்கள் கைவண்ணத்தைக் காட்ட ஆரம்பித்தரர்கள். இது ஏமாற்று வேலை, பணம் சுருட்டும் தந்திரம், ஆயுதம் கொண்டுபோகும் முயற்சி, முட்டாள்தனம் என விமர்சிக்க ஆரம்பித்தார்கள. பல்வேறு இராசதந்திர தொடர்பாடல்களில் ஈடுபட்டிருந்த இந்த செயற்தி்ட்ட ஏற்பாட்டாளர்கள் அமைதி காக்க வேண்டியிருந்ததால், அவர்களும் எதுவித தகவல்களையும் வெளியிடவில்லை, இது மெல்லிற வாய்க்கு அவல் கொடுத்த நிலையை ஏற்படுத்தியது.

எனக்குகூட இவ்விடயத்தில் சந்தேகமேற்பட்டபோது, இக்கப்பலில் ஒரு பணியாளராகச் சென்ற வெண்புறா நிறுவன தொண்டரை அணுகியிருந்தேன், அவர் விடயத்தை நன்கு விளக்கினார். அந்த தொண்டர் தனது உயிரையும் பொருட்படுத்தாது இப்பயணத்தில் பங்கேற்றது மட்டுமல்லாமல், மக்கள் வழங்கிய அன்பளிப்புகளை பொது செய்வது, பிரித்தானிய அதிகாரிகள் மீளப் பொதி செய்யுமாறு உத்தரவி்ட்டபோது, மீளப் பொதி செய்தமை போன்ற பல பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியிருந்தார்.

வணங்காமண், தனது நோக்கங்களில் பிரதானமான ஒன்றை நிறைவேற்றவில்லை என்பது உண்மைதான். ஆனால் அரசியல் ரீதியாக அது சொல்லவேண்டிய செய்தியை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறது. அதனை பதிவு செய்ய வேண்டியவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுத்து விட முடியாது. உதாரணத்திற்கு ஒன்று, கப்பல் சிறிலங்கா கடற்படையால், கடலில் தடுத்து வைக்கப்ட்டபோது, அதனை விடுவிக்குமாறும், அது கொண்டு சென்ற உதவிப் பொருட்களை தமிழ் மக்களிடம் சேர்ப்பிற்குமாறும் சிறிலங்கா அரசை பிரித்தானிய வெளிநாட்டு அபிவிருத்தி அமைச்சு கடித மூலம் கேட்டிருந்தது. ஒரு பேரிச்சம்பழ விவகாரத்தில் பிரித்தானிய வெளிநாட்டு அபிவிருத்தி அமைச்சு தலையிடும் என யாரும் எண்ணிவிடமுடியாது..

இறுதியாக, இந்த செயற்திட்டத்தில் பிரித்தானியாவிலும் மற்றய நாடுகளிலும் வாழும் பல தமிழ் மக்கள் பங்கேற்றிருக்கிறார்கள். நான் அறிந்து ஒரு மூதாட்டி, அங்குள்ள மக்கள் உடனடியாக உண்ண வசதியாக, அரிசியை பொரி செய்து மாவாக அரைத்து பொதி செய்து கொடுத்திருந்தார். அவரது நோயையும் பொருட்படுத்ததாது, பல நாட்கள் சிரமப்பட்டு ஒரு தொகை பொதிகள இந்த திட்டத்திற்கு வழங்கினார். ஆகவே அவர்களுக்கெல்லாம் தங்கள் எண்ணம் நிறைவேறவில்லை என்பது வருத்தம்தான். (அதைவிட பெரிய துயரம் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது.)

ஒரு முயற்சியை செய்பவர்களுக்குத்தான் அதன் வலியும் வேதனையும் தெரியும். சும்மா உங்கள் மளதில் அவ்வப்போது எழும் கோபதாபங்களை எழுத்தில் வடித்து மனித மனங்களை ரணப்படுத்தாதீர்கள். இந்தக் கேலியும் எக்காளமும்தான் யாழ் களத்தில் தொடரப்போகிறது என்றால். அது ஏற்கனவே இதற்கென இருக்கிற சாக்கடை இணையதளங்களின் வரிசையில் யரழ்களத்தையும் சேர்த்துவிடுவதாகவே அமையும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோசன்!!!

உங்கள் கருத்துப் பகிர்வுக்கு!!!

மற்றும் எம்17 உறவு அவர்களும் உண்மைகளை உரைத்திருக்கிறார்

நன்றி உறவே....

இவ்வளவு நாட்களும் எத்தனை மில்லியன் ருhபாய்களை இலங்கை பயங்கர

வாத அரசாங்கத்திற்கு நாங்கள் புலத்தில் இருந்து அள்ளிஅள்ளி கொடுத்தும்

இன்னும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம் இவை எல்லாம் ஒவ்வொரு

வினாடியும் அப்பாவி உயிர்களை இன்றும் பலி எடுத்துக் கொண்டிருக்கிறது.........

இப்ப கொஞ்சம் உங்கட மனச்சாட்சியை தட்டி கேட்டுப் பாருங்கோ............

வணங்கா மண் போய் வந்ததில் நாங்கள் பயனற்ரவர்களா????இ

அல்லது எங்கள் இனத்தையே கொல்ல நாங்களே துணை போய் கொண்டிருக்கிறோமே

அது மனிதம் நிறைந்த செயலா?????????????

உங்கள் உங்கள் மனச்சாட்சிகளை பேச விட்டுப் பாருங்கள்..........

அதன் பின் உங்களுக்கு எல்லாம் புரியும்

Link to post
Share on other sites

சாந்தி அக்காவின் கருத்தினை பார்த்தால் அவரும் வணங்காமண் கப்பல் திட்டத்தில் வேலை செய்து இருக்கிறார். அவர் கப்பலை அனுப்பாமால் வேறு வ்ழியில் உணவு அனுப்புவதாக கூறி பணத்தினை சுருட்ட திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் எனைய‌ எற்பாட்டளார்கள் இவரின் திட்டத்திற்கு இடம் அளிக்கமால் கப்பலை அனுப்பிவிட்டர்கள். இந்த ஏமாற்றத்தில் இதனை எழுதியுள்ளார். பாவம் அவரை மன்னித்து விடுங்கள்.

எங்களில் 85 சதவீதமானேர் என்ன வேலை திட்டத்தினை முன் எடுத்தாலும் இணைய தளத்தில், கடைத் தெருவில் அல்லது பொது நிகழ்வுகளில் வந்து அறிவுரை கூறுவார்கள் அல்லது விமர்சிப்பர்கள். அல்லது நிகழ்வுகளில் முன்னுக்கு நின்று தங்கள்தான் எற்பாட்டளார்கள் போல போஸ் கொடுப்பார்கள். இது புலத்தில் மட்டும் அல்ல தாயகத்திலும் உண்டு. இவரிகளினால் தான் பலர் மனமுடைந்து ஒதுங்கியிருக்கிறார்கள்.

5 சதவீதமானேர் தான் எந்த நிகழ்வுகளிலும் இரவு பகலாக வேலை செய்கிறார்கள்.

எங்களுடைய சமூகத்தில் ஒரு இறந்த நிகழ்வு நடத்திவதிலேயே ஒற்றுமை இருப்பதில்லை. பந்தலில் இருந்தில் பாடை வரைக்கும் பிழை கண்டுபிடிப்பார்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்காவின் தலைப்பு தவறுதான். அதை மறுக்க முடியாது.

மேலும், இந்த திட்டத்தின் ஆரம்பத்திலேயே இலங்கை அரசிடம் அனுமதி கோரியிருந்தால் அன்றைய சூழலில் அது கட்டாயம் மறுக்கப்பட்டிருக்கும். ஆனால் கப்பல் அண்மித்தபிறகு கேட்டால் வெளி நாட்டு அரசுகள் (பிரித்தானிய அரசு செய்தது) மூலம் அனுமதி பெறலாம் என்ற நம்பிக்கை இருந்தது. மேலும் கப்பல் கரையில் நிற்கும் போது அதிக அழுத்தம் கொடுக்கலாம். என்ன எதற்கும் அசைந்து கொடுக்காத சிங்கள அரசு அனுமதி தரவில்லை. ஆனால் உலகம் பூராக எமது முயற்சியும் இலங்கை அரசின் கொடுமையும் பதிவு செய்யப்படுகிறதே.

தமிழக அரசாவது கொஞ்சம் மனுதாபிமானத்தோடு நடந்திருந்தால் அங்குள்ள எம்மவருக்காவது கிடைத்திருக்கும். தமிழனுக்கு தலைவிதி அப்படி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாந்தி அக்காவின் கருத்தினை பார்த்தால் அவரும் வணங்காமண் கப்பல் திட்டத்தில் வேலை செய்து இருக்கிறார். அவர் கப்பலை அனுப்பாமால் வேறு வ்ழியில் உணவு அனுப்புவதாக கூறி பணத்தினை சுருட்ட திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் எனைய‌ எற்பாட்டளார்கள் இவரின் திட்டத்திற்கு இடம் அளிக்கமால் கப்பலை அனுப்பிவிட்டர்கள். இந்த ஏமாற்றத்தில் இதனை எழுதியுள்ளார். பாவம் அவரை மன்னித்து விடுங்கள்.

எங்களில் 85 சதவீதமானேர் என்ன வேலை திட்டத்தினை முன் எடுத்தாலும் இணைய தளத்தில், கடைத் தெருவில் அல்லது பொது நிகழ்வுகளில் வந்து அறிவுரை கூறுவார்கள் அல்லது விமர்சிப்பர்கள். அல்லது நிகழ்வுகளில் முன்னுக்கு நின்று தங்கள்தான் எற்பாட்டளார்கள் போல போஸ் கொடுப்பார்கள். இது புலத்தில் மட்டும் அல்ல தாயகத்திலும் உண்டு. இவரிகளினால் தான் பலர் மனமுடைந்து ஒதுங்கியிருக்கிறார்கள்.

5 சதவீதமானேர் தான் எந்த நிகழ்வுகளிலும் இரவு பகலாக வேலை செய்கிறார்கள்.

எங்களுடைய சமூகத்தில் ஒரு இறந்த நிகழ்வு நடத்திவதிலேயே ஒற்றுமை இருப்பதில்லை. பந்தலில் இருந்தில் பாடை வரைக்கும் பிழை கண்டுபிடிப்பார்கள்.

சிலர் போதையில் பாடையில் தான்தான் போவேன் என்றும் அடம்பிடிப்பார்கள். :):):(

உமை நீங்க சொன்னது கூட யோசிக்கவேண்டிய விடயம்தானுங்க.சாந்தி என்பவரும் அவங்களோடை சேந்து வேலை செய்து பணத்தை சுருட்ட நினைச்சிருக்கலாம்..ஆனா மெத்தத்தையும் தாங்களே சுருட்டிக்க முடிவுசெய்து வணங்காமண் ஏற்பாட்டாளருங்க சாந்தியை வெளியேத்திட்டு மிகுதி மொத்தத்தையும் அமுக்கியிருக்கலாம்...அவங்க சுருட்டின தொகையை கணக்குபார்த்திட்டு . தனக்கு ஒண்ணுமே கிடைக்கலியே எண்ணு கோபத்திலையும் சாந்தி இதை எழுதியிருக்கலாம்... ஏனெண்ணா இந்த நிகழ்வை ஒழுங்கு செய்தது ஒரு தனி உதவி நிறுவனம்தானுங்களே அவங்க இது வரைக்கும் தங்களிற்கு இந்தத் திட்டத்திற்கு எவ்வளோ பணம் சேந்தது.. எவ்வளோ..செலவு பண்ணிணோம் என்கிற கணக்கு விபரம் எதையுமே தெரிவிக்கலையே??

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணங்கா மண் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோதே எழுந்த கேள்வி 'இது சரிப்பட்டு வருமா?' என்பதுதான். இது ஒன்றும் பெரிய விவேகமான கேள்வி என்று சொல்ல முடியாது ஏனெனில் எந்த மனிதருக்கும் இயல்பாக எழுகின்ற கேள்வியிது. ஏற்பட்டாளர்களுக்கும், இந்தப்பணியில் அயராது உழைத்த நூற்றுக்கணக்கான தமிழ் மற்றும் பிற இன ஆர்வலர்களுக்கும், இப்படியொரு கேள்வி எழவில்லை, அதனால் அவர்கள் முட்டாள்தனமாக முயற்சியில் இறங்கினார்கள் என யாராவது நினைத்தால் அதை வி்ட வடிகட்டிய முட்டாள்தனம் வேறெதுமில்லை.

வணங்கா மண் செயற்திட்டம் இரண்டு நோக்கங்களைக் கொண்டதாகவிருந்தது:

1) வன்னி மக்களுக்கு தேவையான உணவு, மருந்து, உடை உட்பட்ட மனிதாபிமான உதவிகளை வழங்குவது

2) தமிழ் மக்களின் நலன்களை அந்தச் சமுதாயமே கவனித்துக் கொள்கிற அளவு சக்தியை அது கொண்டிருக்கிறது. ஆனால் அத்தகைய முயற்சிகளுக்கு சிறிலங்கா அரசு தடையாகவிருப்பதே இன்றய சிக்கல்களுக்கு பிரதான காரணமாக அமைகிறது. என்கிற அரசியல் செய்தியை சர்வதேசப்பரப்பில் எடுத்துரைப்பது.

இதனை இத்திட்டத்திற்காக இரவு பகலாக உழைத்தவர்கள் நன்கு அறிந்தே செயற்பட்டார்கள். ஒரு கப்பலை எந்த விதமான தடையுமில்லமல் முல்லைத் தீவு கடற்பரப்புக்குச் கொண்டு சென்று பொருட்களை இறக்க முடியும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் சர்வதேச அரசியல் நிலைப்பாடுகள் இந்த திட்டத்தின் நோக்கத்தை நிறை வேற்ற உதவும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

பல்வேறுபட்ட சிக்கல்களை எதிர்நோக்கியதால் கப்பற் பயணம் தாமதமானது. இந்நிலையில் ஏற்கனவே காழ்ப்புணர்ச்சியில் மிதந்து கொண்டிருந்தவர்கள் தங்கள் கைவண்ணத்தைக் காட்ட ஆரம்பித்தரர்கள். இது ஏமாற்று வேலை, பணம் சுருட்டும் தந்திரம், ஆயுதம் கொண்டுபோகும் முயற்சி, முட்டாள்தனம் என விமர்சிக்க ஆரம்பித்தார்கள. பல்வேறு இராசதந்திர தொடர்பாடல்களில் ஈடுபட்டிருந்த இந்த செயற்தி்ட்ட ஏற்பாட்டாளர்கள் அமைதி காக்க வேண்டியிருந்ததால், அவர்களும் எதுவித தகவல்களையும் வெளியிடவில்லை, இது மெல்லிற வாய்க்கு அவல் கொடுத்த நிலையை ஏற்படுத்தியது.

எனக்குகூட இவ்விடயத்தில் சந்தேகமேற்பட்டபோது, இக்கப்பலில் ஒரு பணியாளராகச் சென்ற வெண்புறா நிறுவன தொண்டரை அணுகியிருந்தேன், அவர் விடயத்தை நன்கு விளக்கினார். அந்த தொண்டர் தனது உயிரையும் பொருட்படுத்தாது இப்பயணத்தில் பங்கேற்றது மட்டுமல்லாமல், மக்கள் வழங்கிய அன்பளிப்புகளை பொது செய்வது, பிரித்தானிய அதிகாரிகள் மீளப் பொதி செய்யுமாறு உத்தரவி்ட்டபோது, மீளப் பொதி செய்தமை போன்ற பல பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியிருந்தார்.

வணங்காமண், தனது நோக்கங்களில் பிரதானமான ஒன்றை நிறைவேற்றவில்லை என்பது உண்மைதான். ஆனால் அரசியல் ரீதியாக அது சொல்லவேண்டிய செய்தியை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறது. அதனை பதிவு செய்ய வேண்டியவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுத்து விட முடியாது. உதாரணத்திற்கு ஒன்று, கப்பல் சிறிலங்கா கடற்படையால், கடலில் தடுத்து வைக்கப்ட்டபோது, அதனை விடுவிக்குமாறும், அது கொண்டு சென்ற உதவிப் பொருட்களை தமிழ் மக்களிடம் சேர்ப்பிற்குமாறும் சிறிலங்கா அரசை பிரித்தானிய வெளிநாட்டு அபிவிருத்தி அமைச்சு கடித மூலம் கேட்டிருந்தது. ஒரு பேரிச்சம்பழ விவகாரத்தில் பிரித்தானிய வெளிநாட்டு அபிவிருத்தி அமைச்சு தலையிடும் என யாரும் எண்ணிவிடமுடியாது..

றுதியாக, இந்த செயற்திட்டத்தில் பிரித்தானியாவிலும் மற்றய நாடுகளிலும் வாழும் பல தமிழ் மக்கள் பங்கேற்றிருக்கிறார்கள். நான் அறிந்து ஒரு மூதாட்டி, அங்குள்ள மக்கள் உடனடியாக உண்ண வசதியாக, அரிசியை பொரி செய்து மாவாக அரைத்து பொதி செய்து கொடுத்திருந்தார். அவரது நோயையும் பொருட்படுத்ததாது, பல நாட்கள் சிரமப்பட்டு ஒரு தொகை பொதிகள இந்த திட்டத்திற்கு வழங்கினார். ஆகவே அவர்களுக்கெல்லாம் தங்கள் எண்ணம் நிறைவேறவில்லை என்பது வருத்தம்தான். (அதைவிட பெரிய துயரம் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது.)

ஒரு முயற்சியை செய்பவர்களுக்குத்தான் அதன் வலியும் வேதனையும் தெரியும். சும்மா உங்கள் மளதில் அவ்வப்போது எழும் கோபதாபங்களை எழுத்தில் வடித்து மனித மனங்களை ரணப்படுத்தாதீர்கள். இந்தக் கேலியும் எக்காளமும்தான் யாழ் களத்தில் தொடரப்போகிறது என்றால். அது ஏற்கனவே இதற்கென இருக்கிற சாக்கடை இணையதளங்களின் வரிசையில் யரழ்களத்தையும் சேர்த்துவிடுவதாகவே அமையும்.

நீங்கள் எழுதியவைகளை நீங்களே ஒரு தடைவை படித்துப்பாருங்க.. அதக்காக என்னோடை கோவிக்காதீங்க..உங்களோடை கருத்தை பாத்தால் அந்தக் கப்பல் போய் சேராதெண்னே தெரிந்தும் அனுப்பினமாதிரி எழுதியிருக்கீங்க.. அப்ப முதல்லையே வானொலிகளிலும் தொ.காட்சிகளிலும் ஏன் உங்களோடை பத்திரிகையிலும் கூட இந்தக்கப்பலில் போகும் எந்த உணவும் மருந்தும்மக்களிடம் போய் சேராது எண்னு பகிரங்கமாகவே பொது மக்களிட்டை சொலீட்டு அதைசெய்திருக்கலாமே..

Link to post
Share on other sites

அந்தக் கப்பலுக்குக் கோமாளித்தனமான பெயரை வைத்து விளம்பரஞ்செய்து பேய் வேலையளப் பார்க்காமல் ஒரு சர்வதேச உதவி நிறுவனத்துடைய அனுசரணையோட சேர்த்த சாமான்னகளை அனுப்பியிருந்தால் அது உரியமுறையில் போய்ச் சேர்ந்திருக்கும். இந்த நாடகத்தனந்தான் எல்லாத்தையும் கெடுத்தது. டான்ஸ் ஆடி ஆடிப் பிச்சை போடப்போனதுபோல புதினங்காட்டியிருக்கத் தேவையில்லை. இதுபற்றிய கருத்தை ஆரம்பத்திலேயே எழுதியும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

*வணங்காமண் கப்பலில் உள்ள மனித நேய பொருட்களை உடனடியாய் ஈழத்தமிழ் மக்களுக்கு

கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் - தமிழக முதல்வர் இந்திய வெளியுறவுத்துறை

அமைச்சருக்கு கடிதம்*

வணங்காமண் - போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்காக உலக தமிழர்களால்

அனுப்பி வைக்கப்பட்ட 884 டன் உணவுப் பொருட்களையும், உயிர்காக்கும்

மருந்துகளையும் எம.வி.கேப்டன் அலி என்ற கப்பல் மூலம் லண்டனை மையமாகக் கொண்டு,

செயல்படும் மெர்ஸ்சி மிசன் என்ற அரசு சாரா நிறுவனத்தின் மூலம் இலங்கைக்கு

அனுப்பப்பட்டது. இக்கப்பலை முழுதுமாய் இலங்கை கப்பற்படை சோதனையிட்டு, உணவுப்

பொருட்களும், உயிர்காக்கும் மருந்து பொருட்களும் இருக்கிறது என

தெரிந்தபின்பும், அற்ப காரணங்களை கூறி, பொருட்களை எடுக்காமல் திருப்பி அனுப்பி

விட்டது. கப்பல் சென்னையை நோக்கி கொண்டுவரப்பட்டது.

*கப்பலில் உள்ள பொருட்களை பாதுகாப்பாய் வைக்க தமிழகத்திலிருந்து இயங்கும்

மனிதம்-மனித உரிமை அமைப்பின் செயல் இயக்குநர் அக்னி சுப்பிரமணியத்திடம்

கேட்டுக் கொள்ளப்பட்டது.* மனிதம்-மனித உரிமை அமைப்பு எடுத்த நடவடிக்கையால்,

இன்று காலை சென்னையிலிருந்து வெளிவரும் ஆங்கில இதழின் 3ம் பக்கத்தில் இது

குறித்து செய்தி வெளியிடப்பட்டது. டெல்லியை மையமாய் கொண்டு இயங்கும் nஉறட்லயன்ஸ

டூடே என்ற தொலைக்காட்சி நிறுவனமும் செய்தியை வெளிக்கொண்டு வந்தது. இச்செய்தி

வரும் அதே சமயம், தமிழக முதல்வருக்கும் இக்கப்பலைக் குறித்த செய்திகள் அரசு

அதிகாரிகள் வழியே சென்றது. தமிழக முதல்வர் உடனடியாய் இந்திய அரசின்

வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. கிருஷ்ணாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் அவர்:

1. மனித நேய அடிப்படையில் தமிழ் மக்களால் சேர்க்கப்பட்ட உணவு மற்றும் உயிர்

காக்கும் மருந்துகளையும் சுமந்து வந்துள்ள வணங்காமண் என்ற எம.வி.கேப்டன் அலி

என்ற கப்பலில் உள்ள பொருட்கள் போரினால் பாதிக்கப்பட்டு உள்நாட்டில் இடம்

பெயர்ந்துள்ள ஈழத்தமிழ் மக்களுக்கு 884 டன் பொருட்கள் இருக்கிறது.

2. மக்களின் மறுவாழ்விற்காக மனித நேய அடிப்படையில் பொருட்களை சேகரிப்பது உலக

மக்கள்pன் நேயமாகும். பன்னாட்டு முகமைகள் போர் நிகழுமிடங்களில் உணவுப்

பொருட்களை வழங்குவது நடைமுறையில் இருப்பது ஒன்றாகும்.

3. ஆதனால், இந்திய மத்திய அரசு இந்த சமயத்தில் உடனடியாய் தலையிட்டு பொருட்களை

இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும். அப்பொருட்களை பன்னாட்டு முகமையான

செஞ்சிலுவை சங்கத்தின் கண்காணிப்பு மூலம் கொண்டு சேர்க்க உதவ வேண்டும். இதை

நான் முழுமையாக மனித நேய அடிப்படையில் கேட்டுக்கொள்கிறேன்.

4. இந்த செயலை வெற்றிகாமாய் நிறைவேற்றுவீர்கள் என நான் முழுமையாக நம்புகிறேன்

5. இக்கடிதத்தை தமிழக உயர்கல்வி அமைச்சர் திரு. பொன்முடி அவர்கள் நேரிடையாக

உங்களை சந்தித்து கொடுப்பார்கள்.

இவ்வாறு அவசர கடிதத்தை முதல்வர் இந்திய வெளியுறவுத்துறைக்கு அனுப்பியுள்ளார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எழுதியவைகளை நீங்களே ஒரு தடைவை படித்துப்பாருங்க.. அதக்காக என்னோடை கோவிக்காதீங்க..உங்களோடை கருத்தை பாத்தால் அந்தக் கப்பல் போய் சேராதெண்னே தெரிந்தும் அனுப்பினமாதிரி எழுதியிருக்கீங்க.. அப்ப முதல்லையே வானொலிகளிலும் தொ.காட்சிகளிலும் ஏன் உங்களோடை பத்திரிகையிலும் கூட இந்தக்கப்பலில் போகும் எந்த உணவும் மருந்தும்மக்களிடம் போய் சேராது எண்னு பகிரங்கமாகவே பொது மக்களிட்டை சொலீட்டு அதைசெய்திருக்கலாமே..

சிவாஜினி இரா,

உங்களுக்கு தேவையானவற்றை கோடிட்டு மகிழ்ந்திருக்கிறீர்கள். ஒன்று நன்றாகப்புரிகிறது 'வணங்கா மண்' தனது நோக்கததை நிறைவேற்றிவிடக்கூடாது என்ற எண்ணத்துடன் நீங்கள் இருக்கிறீ்ர்கள் என்பது . அந்த எண்ணத்துடன் இருந்தால் எதை எழுதினாலும் இப்படித்தான் இருக்கும். வணங்கா மண் திட்டத்தின் நோக்கம் பற்றி எழுதியிருந்தேன், அதில் ஒன்று பிழைத்தாலும் மற்றொன்று நிறைவேறும் என்றும் எழுதியிருந்தேன். எந்த இடத்திலும் கப்பல் போய் சேராது என தெரிந்து கொண்டு அனுப்பியதாக எழுதவில்லை. ஆனால் இத்திட்டலிருந்த ஆபத்துகளை முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதை மறைக்கத் தேவையில்லை.

ஒரு நாடில்லாத தேசிய இனம், அதுவும் எண்ணி்க்கையில் குறைந்த மக்கள் தொகுதி, ஒரு திட்டத்தை நிறைவேற்றுவது என்பது அத்தனை இலகுவானதல்ல. அதுவும் செயற்திறனுடைய பத்துப்பேரையும் சாய்மனைக்கதிரை விமர்சகர்கள் 100 பேரையும் வைத்துக் கொண்டு செய்வது மிகவும் கடினமானது.

"As you may have seen, I have also written to the Sri Lankan High Commissioner calling on Sri Lanka to allow the Captain Ali mercy ship to unload its cargo of humanitarian aid. This ship was not allowed to dock in Sri Lanka. The Government of Sri Lanka said this was due to problems with its papework, but given the terrible conditions in the internment camps, I think an exception should be made."

மேற்கண்டவை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் எழுதிய கடிதத்திலிருந்தவை. இது போல வேறும் சில பிரித்தானிய அரசியல் தலைவர்களும். தொண்டு நிறுவன அதிகாரிகளும் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடத்தார்கள். இவ்விதம் கப்பலில் மனிதாபிமான உதவி அனுப்பது ஒரு முட்டாள்தனமான விவகாரம் என அவர்கள் கருதியிருந்தால், அவர்கள் தங்கள் நேரத்தை வீணடித்திருக்க மாட்டார்கள்.

கருணாநிதி கூட இதுவிடயத்தில் தனது அக்கறையை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். சொந்த சகோதரர்களின் துன்பத்திலும் இன்பம் காண்கிற வக்கிரப்பேர்வழிகளை விட, இந்த அரசியலவாதிகளே மேல் எனக் கூறலாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவாஜினி இரா,

அந்தக் கப்பலுக்குக் கோமாளித்தனமான பெயரை வைத்து விளம்பரஞ்செய்து பேய் வேலையளப் பார்க்காமல் ஒரு சர்வதேச உதவி நிறுவனத்துடைய அனுசரணையோட சேர்த்த சாமான்னகளை அனுப்பியிருந்தால் அது உரியமுறையில் போய்ச் சேர்ந்திருக்கும். இந்த நாடகத்தனந்தான் எல்லாத்தையும் கெடுத்தது. டான்ஸ் ஆடி ஆடிப் பிச்சை போடப்போனதுபோல புதினங்காட்டியிருக்கத் தேவையில்லை. இதுபற்றிய கருத்தை ஆரம்பத்திலேயே எழுதியும் யாரும் கண்டுகொள்ளவில்லை..

இராசா, கப்ரின் அலி என்ற அந்தக் கப்பலின் பெயர் எந்த வகையில் கோமாளித்தனமானது என்று தெரியவில்லை . உங்களைக் கேட்டிருந்தால் 'கடல்தாய் சபதம்' என்று கவிதை்தனமாக வைத்திருப்பீர்கள். அப்படித்தானே?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சரி, நடந்தது நடந்துவிட்டது. கப்பலை திருப்பி, இந்தியாவில் முகாம்களில் உள்ள எம்மவருக்கு கொடுக்கலாமே. அவர்களும் எம்மவர் தானே. அவர்கள் போர்க்களத்தில் இல்லை தான், ஆனால் அங்கும் வசதி வாய்ப்புகள் இன்றி கஷ்டப்படுகிறார்கள்.

ஈஸ்! மிக நல்லதொரு விடயம். அதையாவது செய்யலாம்.

ஆனாலும் வணங்காமண் கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பும் அல்லது வில்லங்கமாக ஏதாவது பண்ணும் என்று தெரிந்துதான் அனுப்பியிருந்தார்கள்.சர்வதே

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

*வணங்காமண் கப்பலில் உள்ள மனித நேய பொருட்களை உடனடியாய் ஈழத்தமிழ் மக்களுக்கு

கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் - தமிழக முதல்வர் இந்திய வெளியுறவுத்துறை

அமைச்சருக்கு கடிதம்*

வணங்காமண் - போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்காக உலக தமிழர்களால்

அனுப்பி வைக்கப்பட்ட 884 டன் உணவுப் பொருட்களையும், உயிர்காக்கும்

மருந்துகளையும் எம.வி.கேப்டன் அலி என்ற கப்பல் மூலம் லண்டனை மையமாகக் கொண்டு,

செயல்படும் மெர்ஸ்சி மிசன் என்ற அரசு சாரா நிறுவனத்தின் மூலம் இலங்கைக்கு

அனுப்பப்பட்டது. இக்கப்பலை முழுதுமாய் இலங்கை கப்பற்படை சோதனையிட்டு, உணவுப்

பொருட்களும், உயிர்காக்கும் மருந்து பொருட்களும் இருக்கிறது என

தெரிந்தபின்பும், அற்ப காரணங்களை கூறி, பொருட்களை எடுக்காமல் திருப்பி அனுப்பி

விட்டது. கப்பல் சென்னையை நோக்கி கொண்டுவரப்பட்டது.

*கப்பலில் உள்ள பொருட்களை பாதுகாப்பாய் வைக்க தமிழகத்திலிருந்து இயங்கும்

மனிதம்-மனித உரிமை அமைப்பின் செயல் இயக்குநர் அக்னி சுப்பிரமணியத்திடம்

கேட்டுக் கொள்ளப்பட்டது.* மனிதம்-மனித உரிமை அமைப்பு எடுத்த நடவடிக்கையால்,

இன்று காலை சென்னையிலிருந்து வெளிவரும் ஆங்கில இதழின் 3ம் பக்கத்தில் இது

குறித்து செய்தி வெளியிடப்பட்டது. டெல்லியை மையமாய் கொண்டு இயங்கும் nஉறட்லயன்ஸ

டூடே என்ற தொலைக்காட்சி நிறுவனமும் செய்தியை வெளிக்கொண்டு வந்தது. இச்செய்தி

வரும் அதே சமயம், தமிழக முதல்வருக்கும் இக்கப்பலைக் குறித்த செய்திகள் அரசு

அதிகாரிகள் வழியே சென்றது. தமிழக முதல்வர் உடனடியாய் இந்திய அரசின்

வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. கிருஷ்ணாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் அவர்:

1. மனித நேய அடிப்படையில் தமிழ் மக்களால் சேர்க்கப்பட்ட உணவு மற்றும் உயிர்

காக்கும் மருந்துகளையும் சுமந்து வந்துள்ள வணங்காமண் என்ற எம.வி.கேப்டன் அலி

என்ற கப்பலில் உள்ள பொருட்கள் போரினால் பாதிக்கப்பட்டு உள்நாட்டில் இடம்

பெயர்ந்துள்ள ஈழத்தமிழ் மக்களுக்கு 884 டன் பொருட்கள் இருக்கிறது.

2. மக்களின் மறுவாழ்விற்காக மனித நேய அடிப்படையில் பொருட்களை சேகரிப்பது உலக

மக்கள்pன் நேயமாகும். பன்னாட்டு முகமைகள் போர் நிகழுமிடங்களில் உணவுப்

பொருட்களை வழங்குவது நடைமுறையில் இருப்பது ஒன்றாகும்.

3. ஆதனால், இந்திய மத்திய அரசு இந்த சமயத்தில் உடனடியாய் தலையிட்டு பொருட்களை

இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும். அப்பொருட்களை பன்னாட்டு முகமையான

செஞ்சிலுவை சங்கத்தின் கண்காணிப்பு மூலம் கொண்டு சேர்க்க உதவ வேண்டும். இதை

நான் முழுமையாக மனித நேய அடிப்படையில் கேட்டுக்கொள்கிறேன்.

4. இந்த செயலை வெற்றிகாமாய் நிறைவேற்றுவீர்கள் என நான் முழுமையாக நம்புகிறேன்

5. இக்கடிதத்தை தமிழக உயர்கல்வி அமைச்சர் திரு. பொன்முடி அவர்கள் நேரிடையாக

உங்களை சந்தித்து கொடுப்பார்கள்.

இவ்வாறு அவசர கடிதத்தை முதல்வர் இந்திய வெளியுறவுத்துறைக்கு அனுப்பியுள்ளார்.

நெடுமாறன் ஈழத்தமிழர்களிற்கு சேகரித்த உணவுப்பொருளுங்களையும் மருந்துகளையும் ஈழத்திற்கு அனுப்ப விடாமல் தடைசெய்து விட்டு பின்னர் நெடுமாறன் அவங்க உண்ணா விரதம் இருந்தப்போ பொருட்களை ஈழத்திற்கு அனுப்ப ஒரு வார காலத்தில் ஒழுங்கு செய்யிறோமின்னு சொல்லி வாக்குறுதி கொடுத்திட்டு அப்படியே கிடப்பில் போட்டவரும்.. பின்னர் தானே 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்திட்டு இலங்கையில் போர் முடிந்து விட்டது என்னு அறிக்கை விட்ட கருணாநிதியை பத்தித்தானே இங்கு எழுதியிருக்கீங்க.. அவரு நிச்சயம் ஏதாவது செய்வார்..அப்படியே எதிர்பாத்து காத்திருந்தே செத்துப்போயிடுங்க..

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.