-
Tell a friend
-
Topics
-
Posts
-
By நியாயத்தை கதைப்போம் · Posted
இந்த தாக்குதல் சிறிது காலத்தில் இலங்கை இராணுவம் ஒபரேசன் லிபரேசனை தொடங்கி வலிகாமம் வடக்கு மக்களை தெல்லிப்பளைக்கு எல்லைக்கு வெளியில் அகதிகளாக அனுப்பி வைக்க வழிகோலியது. தாக்குதலை நடாத்திய புண்ணியவான்கள் தப்பி சென்றுவிட்டார்கள். ஆனால், இராணுவம், கடற்படையின் கடுமையான எறிகணை தாக்குதலில், உலங்கு வானூர்தி தாக்குதலில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள், காயம் அடைந்தார்கள். மக்களுக்கு அன்று இரவு தொடங்கிய அவலம்தான்... காங்கேசன்துறை இன்று சுடுகாடு ஆகியுள்ளது. அழகிய, அமைதியான பூமி இன்று இராணுவத்தின் கைவசம். -
பையன்26 எதிர் நீச்சல் போட்டு சுவை அண்ணாவ பின்னுக்கு தள்ளி மீண்டும் முதல் இடத்தை பிடித்து விட்டார் லொல் ஹா ஹா 😀😁
-
துணை வேந்தர் நலமுடன் திரும்பவும் தனது பணிகளை ஆற்றுவார் எனும் நம்பிக்கை எனக்குள்ளது. அதற்கு இறைவன் துணை புரிவார். (திடீரென வருவதுதான் நெஞ்சுவலி. ஆனால் இந்த பத்திரிகையாளர்களின் எழுத்து முறை சகிப்பதற்கில்லை ☹️)
-
அட நீங்கள் கருத்தில் அல்ல ஒரு எழுத்தில் தொங்க்கிகொண்டு நிற்பவரென்று இப்போதுதான் எனக்குப் புரிகிறது. (அமெரிக்கன், பிரிட்டிஷ், அவுஸ்திரேலிய ஆங்கிலத்தில் அல்லது பிரெஞ்ச், ஜேர்மனில் வெளுத்துவாங்கினால்தான் தமிழ் மக்கள் தலையில் தூக்கிக் கொண்டாடுவார்கள் என்ற உண்மை கிருபனுக்குத் தெரியாவிட்டால் அதற்கு நானென்ன செய்ய முடியும். இந்த மாயை தென் இந்தியக் கண்டத்திற்குரிய அடிமை குணாம்சம் என்று எப்போது உணர்ந்துகொள்வீர்கள் கிருபன். Theory,practice இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் இதுதான். ☹️ நானென்ன உங்களைப்போல வாசிப்புப் பழக்கதோசம் உள்ளவரா இல்லையே. அப்படி உங்களைப்போல வாசிக்கும் பழக்கதோசம் இருந்திருந்தால் போராளி கருணாவுக்கும் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த முரளீதரனுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாது நடுவில் நின்று ததிங்கிணத்தோம் பாடிக்கொண்டிருந்திருப்பேன். நல்லகாலம் தப்பித்தேன். (பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு plumbing emergency call ஒன்றுக்காக ஒரு appartment unit ஒன்றுக்கு போகவேண்டி ஏற்பட்டது. Unit ன் உள்ளே காலடி எடுத்து வத்தால் வீடு முழுவதும் புத்தகங்கள் மலை போல அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. குடியிருப்பவரோ நடுத்தர வயதினன், வெள்ளை இனத்தினன். மாதக் கணக்கில் சவரம் செய்யப்படாத முகம். மிக மிக எளிய வாழ்க்கை. குளித்து பல நாட்கள் என யூகித்தேன் ஆனால் அவரின் முகத்தில் ஒரு நிறைவு தெரிந்தது. தோற்றத்தில் ஒழுங்கின்மை தெரிந்தது. ஆள் அரவமற்ற Library போல தூசின் மணம் unit எங்குமே நிரம்பி நாசியை துழைத்தது. ஓரிரு வார்த்தைகள்மட்டும் பேசினார். போகும்போதும் வெளியேறும்போதும் அவர் புத்தம் ஒன்றை வாசித்தபடியிருந்தார். சுவர் எங்குமே விஞ்ஞானம் கணிதத்துடன் தொடர்புடைய posters இடைவெளி இல்லாமல் ஒட்டப்பட்டிருந்தன. கால் வைத்து நடக்க முடியாதபடி எங்குமே புத்தகங்கள். சமயலறையிலும் புத்தகம், கழிவறையிலும் புத்தகம். கட்டிலிலும் புத்தகம். மொட்டை மாடியிலும் புத்தகம். யன்னல் ஓரங்களிலும் புத்தகம். மேசை கதிரை எங்கும் புத்தகம் புத்தகம் புத்தகம். அதே போன்று புத்தகங்கள் மீது தூசு நிரம்பவே படிந்திருந்தது. மழைக்காலக் காட்டில், ஒத்தையடிப் பாதை எங்கும் விரிந்து கிடக்கும் மரங்களின் இடையே நடப்பது போல ஒவ்வொரு அடியாக, மிகக் கவனமாக தூக்கித் தூக்கி வைத்து உள்ளே செல்ல வேண்டி இருந்தது. சிறிது தட்டுப்பட்டாலும் புத்தகமலை சரிந்து விழுந்துவிடும் அபாயம். தட்டுப்பட்டால் நிச்சயமாக என்னால் அடுக்கி வைக்க முடியாது. அதற்குப் பல நாட்கள் ஆகலாம். புத்தகங்கள் அடுக்கி வைக்கப்ப்ட்டுள்ள ஒழுங்கும் எனக்குத் தெரியாது. மிக மிகச் சிரமப்பட்டு வேலையை முடித்தாயிற்று. வரும்போது நன்றி கூறினார் ஆனால் சிரிக்கவில்லை. என்னுடைய வேலையை நிறைவாகச் செய்திருந்தாலும் வழமையாக ஏற்படும் திருப்தி அன்று முழுவதும் எனக்கு ஏற்படவில்லை ஏன் திருப்தியில்லாமலிருக்கிறது என்று அன்று முழுவதும் யோசித்தேன். படுக்கைக்கு செல்லும் போதும் குழப்பமாக இருந்தது. மெலிதாகக் கண்ணயர்ந்தபோது திடீரென ஒரு கனவு போல appartment unit ல் குடியிருந்தவரின் முகம் வந்து போனது. திடுக்கிட்டு எழும்பினேன். படுக்கைக்குச் செல்லும்போது இருந்த குழப்பம் ஏதும் இல்லாமல் மனம் தெளிவாக இருந்தது. )
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.