Jump to content

பேரீச்சம் பழத்துக்குப் போகுது வணங்காமண் கப்பல்.


Recommended Posts

வணங்காமண் நிவாரணப் பொருட்களை தமிழ் மக்களிடம் சேர்க்க தற்போது கப்பல் முகவரிடம் சலுகையை எதிர்பார்த்து காலம் தாழ்த்துகிறது

இன்று 20:47 மணியளவில்

இலங்ககையில் நடந்த உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் சுமார் மூன்று லட்சம் பேர் மின்வேலி போடப்பட்ட முகாம்களில் அடைப்பட்டுள்ளனர். இவர்களின் பசியை போக்க, ஐரோப்பிய தமிழர்கள் வணங்காமண் நிவாரணப் பொருட்களை கப்பல் மூலம் அனுப்பி வைத்தனர்.

எத்தனையோ இடர்பாடுகளுக்கிடையில், ஜீலை 9-ம் தேதி, 27 கொல்கலன்களில் நிவாரணப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்தை அடைந்தது. ஆயினும் பலவகை காரணங்களை தொடர்ந்து கூறி, கடந்த ஒன்றறை மாதங்களாய், நிவாரணப் பொருட்கள் கொழும்பு துறை முகத்திலேயே கிடத்தப்பட்டு வருகிறது.

எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்பட்ட நிலையில், இலங்கை அரசின் எழுத்து பூர்வமான அனுமதியும் ஒரிரு நாளில் கிடைக்கும்பட்சத்தில், இலங்கை செஞ்சிலுவை சங்கம், தற்போது கப்பல் முகவரிடம் சலுகையை எதிர்நோக்கியிருப்பாதாய் செஞ்சிலுவை சங்கத்தின் துணை பொது இயக்குநர் தெரிவிக்கின்றார்.

அப்பர்-கிளாய்டு என்ற கப்பல் நிறுவனத்தின் 27 கொள்கலன்களில் தான் நிவாரணப் பொருட்கள் சென்னையிலிருந்து அனுப்பப்பட்டது. ஜீன் 9-ம் தேதியே நிவாரணப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்தை அடைந்துவிட்ட போதிலும், கொள்கலன்களில் உள்ள பொருட்களை சோதனையிடுகிறோம் என்று காரணத்தைக் கூறி, இதுவரை அக்கொள்கலன்களை கப்பல் முகவருக்கு கொடுக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால, இக்கொள்கலன்களின் வாடகை செப்டெம்பர் ஒன்றாம் தேதி வரை, இலங்கை ரூபாய் 20 லட்சம் ஆகியுள்ளது.

அனைத்து பிரச்சனைகளும் முடிந்துள்ள நிலையில், கப்பல் முகவர் கொள்கலனுக்கான வாடகையில் இலங்கை ரூபாய் 5 லட்சம் தள்ளுபடி அளிக்கப்பட வேண்டும் என கூறி, நிவாரணப் பொருட்களை அனுப்ப கால தாமதப்படுத்துகிறது, இலங்கை செஞ்சிலுவை சங்கம்.

இச்செயலை பார்த்து வரும் பொதுமக்கள், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தை நிர்வகிப்பவர்கள், சிங்கள இனத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால், வேண்டுமென்றே நிவாரணப் பொருட்கள் அல்லல்பட்டுவரும் தமிழர்களுக்கு கிடைக்க கூடாது என்ற நோக்கத்திலேயே செயல்படுவதாய் வருத்தப்படுகின்றனர்.

http://epaper.expressbuzz.com/NE/NE/2009/0...9_006_007.shtml?

Link to post
Share on other sites
  • 3 weeks later...
  • Replies 76
  • Created
  • Last Reply

வணங்கா மண் நிவாரணப் பொருட்களை கைகழுவி விடப்போவதாய் இலங்கை செஞ்சிலுவை சங்கம் அறிவிப்பு

வன்னியில் முள்வேலி முகாம்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக ஐரோப்பிய தமிழர்கள் வணங்கா மண் நிவாரணப் பொருட்களை சிறுக சிறுக சேகரித்து, பல இன்னல்கலுக்கு நடுவில் தமிழக அரசு மற்றும் இந்திய அரசின் ஆழுத்தங்கள் காரணமாய் கொழும்பு கொண்டு சேர்க்கப்பட்டது. இப்பொருட்களை விநியோகிக்க இலங்கை செஞ்சிலுவை சங்கம் முடிவெடுத்து, அதற்கான பணிகளில் நிவாரணப் பொருட்கள் கொழும்பு அடைந்ததிலிருந்து செய்து வந்தது.

இந்நிலையில் நேற்று இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் துணை இயக்குநர் சுரேன் பெரீஸ் 'டெய்லி மிரர்' என்னும் ஆங்கல நாளிதலுக்கு கொடுத்த செய்தியில், தங்களது சங்கத்தின் தலைவர் இலங்கை அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நிவாரணப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்தில் கிடப்பதால், அதற்கான வரி தொடர்ந்து ஏறிக் கொண்டு போகும் நிலையில், இவ்வரியை எப்படி எதிர்நோக்குவது என இலங்கை அரசு இதுவரை எவ்வித நிலைப்பாடும் எடுக்காமல் இருந்து வருகிறது. ஆதலால், வணங்கா மண் நிவாரணப் பொருட்களை தனது வசம் எடுத்து முள்வேலிக்கு பின்னுள்ள முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு தங்கள் சங்கம் விநியோகிக்கும் பொறுப்பிலிருந்து கைகழுவி விட எண்ணியுள்ளதாய் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், துறைமுக கட்டண தள்ளுபடிக்கான எழுத்து பூர்வமான ஆவணம் சென்ற வாரமே தங்களுக்கு துறைமுக அமைச்சகத்திடமிருந்து கிடைக்கப் பெற்றபோதிலும், இலங்கை அரசுக்கு வரி பாக்கி செலுத்த வேண்டியுள்ளது. இந்த வரிக்கான சலுகை பற்றி எவ்வித பயனுள்ள பதிலும் கிடைக்கப்பெறவில்லை. வாட் வரி மற்றும் தேசிய கட்டமைப்பு வரி (என்.பி.டி) கடந்த ஜீலை முதல் செப்டம்பர் 22ம் தேதி வரை சுமார் இருபது லட்ச ரூபாய் செலுத்தப்பட வேண்டியுள்ளது, என தெரிவித்தார்.

27 பெரிய பெட்டகங்களில் 884 டன் வணங்கா மண் நிவாரணப் பொருட்கள் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டது முதல் பல இடையூறுகளை சந்தித்து வந்திருக்கிறது. முதலில், சோதனை என்ற பெயரிலும், பின்னர் துறைமுக கட்டணம் என்ற பெயரிலும், இப்போது வரிக்காகவும் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்ட நிலையில், முள்வேலிக்கு பின் உள்ள தமிழர்களுக்கு அனுப்பப்படாமல் கிடப்பில் இருந்து வருகிறது.

தமிழக முதல்வர் இந்திய அரசை கேட்டுக் கொண்டதற்கிணங்கி, இலங்கையின் உயர்மட்ட குழு இந்தியா வந்தபோது உடன்பாடு ஏற்பட்டது. தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாய் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தமிழக முதல்வரும் இந்திய அரசிற்கு இதுவரை இரு முறை கடிதம் எழுதியும் வணங்காமண் நிவாரணப் பொருட்கள் தமிழர்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். இக்கடிதத்திற்கு பதில்ளிலிக்கு விதமாய் இந்திய பிரதமரும், தமிழக முதல்வருக்கு நிவாரணப் பொருட்களை இலங்கை செஞ்சிலுவை சங்கம் எடுத்துக்கொண்டுள்ளதாயும், அப்பொருட்கள் தமிழ் மக்களுக்கு விரைவில் விநியோகிக்க இலங்கை அரசு பார்த்து கொள்ளும் என கடிதம் எழுதியிருந்தார். வணங்கா மண் நிவாரணப் பொருட்களை தமிழர்களுக்கு விநியோகிக்க எவ்வித நடவடிக்கையையும் எடுக்காததை பார்க்கும் போது, இலங்கை அரசு உடன்பாடு செய்து கொண்டபடி இந்திய அரசையோ, தமிழக அரசையோ மதிப்பு கொடுப்பதாய் தெரியவில்லை. மனித நேய அடிபடையில் கூட முள்வேலிக்கு பின்னாள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்ற அக்கறையும் இல்லையென்பதே காட்டுகிறது.

இந்திய அரசு மீது இலங்கை அரசு மதிக்காததற்கு இந்தியாவில் உள்ள அமைச்சர்களின் மெத்தனப்போக்கும், அவர்கள் வடக்கில் வசந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தினால், கிடைக்கப்போகும் கமிசன் பணத்திற்காக இலங்கையிடம் கையேந்தி நிற்பதினால் தான் என டெல்லி உள்ள அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

--

www.manitham.net

manitham@manitham.net

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.