Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

மனிதனின் உடலுக்குள் இருந்து 100 ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனின் உடலுக்குள் இருந்து 100 ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சீனாவிலுள்ள 46 வயதையுடைய Liu Lijian என்பவரினுடைய உடற்பாகங்களில 100க்கும் அதிகமான ஊசிகள் இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட நபர் தனக்கு எப்போதும் தாங்க முடியாத வலி உடற்பாகங்களில் ஏற்படுவதாக கூறியதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின் அவரது தலையைத் தவிர்த்து ஏனைய பாகங்களில் ஊசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட நபர் சிறுவயதில் ஊசிகளை வைத்து விளையாடும் பழக்கமுள்ளவர் எனவும் சில வேளைகளில் விளையாட்டு விளையாட்டாக அவற்றை விழுங்கி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப் படுகின்றது.

ஆனாலும் குறிப்பிட்ட நபருக்கு அவ்வாறு சிறு வயதில் தான் ஊசிகளை வைத்து விளையாடியதாக ஞாபகம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எது எப்படி இருப்பினும் குழந்தைகள் எவற்றை வைத்து விளையாடுகிறார்கள் என்பதில் பெற்றோர் அதிக கவனம் எடுக்க வேண்டும் என ஆலோசளைகள் கூறப்பட்டுள்ளது.

நன்றி ..............பதிவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள பெற்றோர் ஒரே ஒரு விசயத்திலதான் பிள்ளைகளில் மிகவும் கவனமாக இருக்கிறவையள்.கோயில்களில்,பல

்பொருள் அங்காடிகளில் இவற்றை கவனிக்கலாம்.பிள்ளைகள் சுத்தமான தமிழ் பேசுங்கள்.பெற்றோர் சுத்தமான தங்கிலிஸில் பேசுவார்கள்.அதுவும் இன்னுமொரு தமிழர் தற்செயலாக பக்கத்தில் நிண்டுவிட்டால் சொல்லவே வேண்டாம்.முகத்தில் சிறு புன்னகையைக் கூடக்காண ஏலாது.எதுவாக இருந்தாலும் பறவாயில்லை.பெற்றோர்களே தயவு செய்து உங்களின் பிள்ளைகளில் சற்றேனும் கவனம் எடுங்கள்.

கடந்தகிழமை நான் கண்ட காட்சி.இரண்டு மூன்று சிறுவர்,சிறுமியர்கள் ஒரு தொடர்மாடி கட்டிடத்தின் பக்கத்தில் விழையாடிக்கொண்டு நிண்டார்கள்.பக்கத்தில் ஒருபெரியவர்கள் கூட இல்லை.இந்தக் குழந்தைகள் மயிர்கொட்டியைப் பிடித்து மிகவும் சந்தோசமாக தமது கை களிலும் தோளிலுமாக ஊரவிட்டு வடிவு பார்த்துக் கொண்டு நிக்கிறார்கள்.மேலத்தேய நாட்டில் பிறந்த பிள்ளைகளிற்கு இவற்றினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் பற்றி தெரியுமா??? :lol:

எனவே பெற்றோரோ இவற்றிகெல்லாம் காரணிகள்!!! :lol:

பிரியமுடன்:யாயினி கனா. :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.