Jump to content

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் இலங்கையில் மேலும் வன்முறை வெடிக்கும்: பான் கி மூன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் இலங்கையில் மேலும் வன்முறை வெடிக்கும்: பான் கி மூன்

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் இலங்கையில் மேலும் வன்முறை வெடிக்கும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கூறியுள்ளார்.

மனிதாபிமான பிரச்சினைகளுக்கு ஆற்றிய சேவையை பாராட்டி ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், நிழூயார்க் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டது. விருதை பெற்றுக்கொண்டு அவர் பேசியதாவது:

கடந்த மே 22 ந் தேதி 2 நாட்கள் பயணமாக நான் இலங்கை சென்றேன். 2 லட்சத்து 80 ஆயிரம் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு நேரில் சென்றேன். அங்குள்ள நிலைமை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.

தமிழர்கள் அனைவரும் அவர்களது வீடுகளில் குடியேற அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களுடன் சமாதானம் ஏற்படுத்தி இணக்கமாக செயல்பட வேண்டும். அவர்களை நோக்கி இலங்கை அரசின் கைகள் நீள வேண்டும்.

மனித உரிமை மீறல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று எனது இலங்கை பயணத்தின்போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்.இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காணாவிட்டால், இலங்கையில் மேலும் வன்முறை வெடிக்கும்.

இலங்கை மக்கள் உள்பட மனித உரிமை மீறல் குற்றங்களால் பாதிக்கப்படும் அனைத்து மக்களுக்காகவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன் என்றார்.

நன்றி .............நக்கீரன்

நெசமாய்....... தான் சொல்றீங்களா ?

Link to comment
Share on other sites

பதவி முடியும் மட்டும் இப்படியே அறிக்கைகளை விட்டு விட்டு அரசுகள் தருகிறவற்றை வாரிச் சுருட்டிக்கொண்டு வீட்டை போங்கோ. சிறுபான்மை இனமாவது மண்ணாங்கட்டியாவது. எல்லாம் எழுத்தில் மட்டும் தான். செயலில் சுழியம் தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.