Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் இலங்கையில் மேலும் வன்முறை வெடிக்கும்: பான் கி மூன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் இலங்கையில் மேலும் வன்முறை வெடிக்கும்: பான் கி மூன்

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் இலங்கையில் மேலும் வன்முறை வெடிக்கும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கூறியுள்ளார்.

மனிதாபிமான பிரச்சினைகளுக்கு ஆற்றிய சேவையை பாராட்டி ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், நிழூயார்க் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டது. விருதை பெற்றுக்கொண்டு அவர் பேசியதாவது:

கடந்த மே 22 ந் தேதி 2 நாட்கள் பயணமாக நான் இலங்கை சென்றேன். 2 லட்சத்து 80 ஆயிரம் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு நேரில் சென்றேன். அங்குள்ள நிலைமை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.

தமிழர்கள் அனைவரும் அவர்களது வீடுகளில் குடியேற அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களுடன் சமாதானம் ஏற்படுத்தி இணக்கமாக செயல்பட வேண்டும். அவர்களை நோக்கி இலங்கை அரசின் கைகள் நீள வேண்டும்.

மனித உரிமை மீறல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று எனது இலங்கை பயணத்தின்போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்.இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காணாவிட்டால், இலங்கையில் மேலும் வன்முறை வெடிக்கும்.

இலங்கை மக்கள் உள்பட மனித உரிமை மீறல் குற்றங்களால் பாதிக்கப்படும் அனைத்து மக்களுக்காகவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன் என்றார்.

நன்றி .............நக்கீரன்

நெசமாய்....... தான் சொல்றீங்களா ?

Link to comment
Share on other sites

பதவி முடியும் மட்டும் இப்படியே அறிக்கைகளை விட்டு விட்டு அரசுகள் தருகிறவற்றை வாரிச் சுருட்டிக்கொண்டு வீட்டை போங்கோ. சிறுபான்மை இனமாவது மண்ணாங்கட்டியாவது. எல்லாம் எழுத்தில் மட்டும் தான். செயலில் சுழியம் தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாறாத வடுவை ஏற்படுத்திய கறுப்பு யூலையின் நினைவு நிகழ்வு கால்சுறு (Karlsruhe Germany) Posted on July 25, 2021 by சமர்வீரன்  38 0 என்றும் தமிழர்களின் உள்ளத்தில் மாறாத வடுவை ஏற்படுத்திய கறுப்பு யூலையின் 38ஆம் ஆண்டை முன்னிட்டு 24.07.2021 அன்று யேர்மனியில் பல்வேறு இடங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. அந்த வகையில் கால்சுறு (முயசடளசராந) நகரத்திலும் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் முன்னெடுக்கப்பட்டது. 24.07.2021 அன்று 16:30 மணிக்கு அகவணக்கத்துடன் உணர்வுப்பூர்வமாக ஆரம்பமானது. அகவணக்கத்தை தொடர்ந்து செயற்பாட்டாளர் ஒருவரால் கறுப்பு யூலை தொடர்பாகவும் தமிழீழத்தை வென்றெடுக் தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து தமிழர்கள் தொடர்ந்தும் விடுதலைக்காக போராட வேண்டுமென உரையாற்றப்பட்டது. கோவிட் 19 (ஊழஎனை 19) காலக் கட்டத்திலும் பல தமிழ் மக்கள் கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்து கொண்டார்கள். மேலும் எமது இளைய தலைமுறையினரும் கலந்து கொண்டு வேற்றின மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியும் விளக்கமளித்தும் தமது உணர்வுகளை வௌிப்படுத்தி நின்றது குறிப்பிடத்தற்கதாகும். காட்சிப்படுத்தல்களை வேற்றின மக்கள் பார்வையிட்டதோடு வாழிட மொழியில் ஒலிபரப்பாக்கப்பட்ட தமிழர்களின் வலிகளையும் உள்வாங்கினார்கள. இறுதியாக 18:38 மணிக்கு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்கவிடப்பட்டு வருகை தந்த தமிழுறவுகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்து தமிரின் தாரக மந்திரத்துடன் உணர்வுப்பூர்வமாக கறுப்பு யூலை நிகழ்வு நிறைவடைந்தது. https://www.kuriyeedu.com/?p=342830 983 யூலைப்படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் !-யேர்மனியில் நடைபெற்ற நிகழ்வுகள் Posted on July 25, 2021 by சமர்வீரன்  66 0 தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 38 ஆண்டுகள் நிறைவாகின்றன. சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் பல கோடிகள் பெறுமதியான மக்களின் வாழ்விடங்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எமது விடுதலைப் போராளிகளும்,மக்களும் குரூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் மக்கள் தென்னிலங்கையிலிருந்து வெளியேறி,பாதுகாப்புத் தேடி தமது பாரம்பரியத் தாயகப்பகுதியாகிய வட-கிழக்கில் தஞ்சம் அடைந்தனர். நமது தாயகமே நமக்கு பாதுகாப்பானது என்பதனை இந் நிகழ்வு உலகுக்கு உணர்த்தியது. நமது தாயக விடுதலைக்கான போராட்டமும் எழுச்சி கண்டது. சிறிலங்காவின் தமிழர் தேசத்தின் மீதான இன அழிப்பு எண்ணமும், நடவடிக்கைகளும் மிகத் தீவிரமடைந்திருக்கின்றனவேயன்றி எவ்வகையிலும் மாற்றமடைந்துவிடவில்லை என்பதனை 2009 ஆண்டு மே வரை நடந்தேறிய நிகழ்வுகள் மற்றும் இன்றும் எமது மக்கள் மீது சிங்கள பயங்கரவாத அரசு முன்னெடுக்கும் நிலப்பறிப்பு, ராணுவமயமாக்கல் ,கலாச்சார அழிப்பு எமக்கு இரத்தமும் சதையுமாக உணர்த்தி நிற்கின்றன. 1983 ஆம் ஆண்டு யூலையில் படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் வகையிலும் , தமிழின அழிப்பின் சாட்சியாக அமைக்கப்பெற்ற கண்காட்சியை முன் நிறுத்தி அனைத்துலக சமூகத்திடம் நீதி கோரி இன்றைய நாட்களில் யேர்மனியில் பல நகரங்களில் அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. . தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி https://www.kuriyeedu.com/?p=342769
    • நெடுக்ஸ் வைத்த கருத்தை நானும் வழிமொழிகிறேன். ஏதோ ஒரு நேரப்பற்றாகுறையால்தான் யாழுக்கு வருவதை குறைக்கிறார்கள். மீண்டும் வரும் போது சில உரிமைகள் இல்லை எனும் போது - மீண்டும் அப்படியே போய்விட வாய்புகள் கூட. முடிந்தளவு உறுப்பினர்களை தக்கவைக்கவும், எழுதவும் இந்த விதி தளர்த்தல் உதவும். இதை உண்மையாக எழுதி இருந்தால், துளிதுளியாய் பகுதியில் ஒரு திரி திறக்கலாம். நிச்சயம் என்னால் முடிந்த பங்களிப்பை செய்வேன். ஏனைய உறவுகளும் செய்வார்கள்.
    • இந்த தமிழ்பிபிசி காரருக்கு கொரனோ நேரமும் நல்லா பொழுது போகுது போல் உள்ளது .
    • இலங்கையில் அரசியல்வாதி என்றால் பிச்சைகாரன் தட்டில் இருந்து புடுங்கி தின்பவர்தானே🤣.
    • இல்லை ரஞ்சித். யாழ்பாணத்தவர் சக தமிழருக்கு செய்த அநியாயத்துக்கும், போராட்டம் அதன் போக்கு, ஒட்டு மொத்த தமிழருக்கும் நடக்கும் அநியாயங்களை ஒன்றாக இணைத்து அதன் பிரதிபலந்தான் இது என நிறுவுவோரை சொன்னேன். சொல்லப்போனால் யாழ்பாண மேலாதிக்க மனோநிலையை உள்ளிருந்து உடைக்க முற்பட்ட சக்தி, ஓரளவு 83-09 உடைத்த சக்திதான் போராட்டம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.