Jump to content

பாதை தெரியாத சுவடுகள். ......


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

பாதை தெரியாத சுவடுகள். ............

புத்தமதத்தை மிகவும் கண்ணியமாககடைபிடிக்கும் லங்காபுரியின் கிழக்கு மாகாண வைத்ய சாலை ஒன்றில் பாக்கியம் ...இரு கால்களும் இழந்த தன் கணவனை பராமரிக்கும் பணியில் ஈடு பட்டிருந்தாள். வெளியில் கையிழந்த ...ஒரு கால் இழந்த ....சிறுவர்கள் சிறு விளையாடு முயாற்சியில் ஈடு பட்டு இருந்தார்கள். பாக்கியம் அறுபதுவயதின் ஆரம்பத்தில் இருப்பவள். கணவன் ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலைபர்த்துகொண்டிருந்த போது ...அண்மையில் வன்னியில் நடைபெற்ற இன அழிப்பின் இரு கால்களையும் இழந்து ..கப்பல் மூலம் திருமலைக்கு அனுப்பபட்டிருந்தான் .அவனும் ...இளைப்பாறும் வயது ..அவர்களது பிள்ளைகள் நேரத்துடன். வெளி நாடு ஒன்றில் அகதி கோரிக்கையில் ...சென்று இருந்தனர்..

.பாக்கியம் என்னை ஏன் காப்பற்ற முயற்சி எடுத்தாய்....என்று வலியில்..புலம்புவான். ஐயா ...நீ ...காலில்லாவிடாலும்...இந்த கட்டை வேகும் வரை துணையாய் இருக்க வேணும் ...அல்லது நாம் இருவரும் ஒன்றாய் போய் விட வேண்டும் என்பாள். கணவனின் பணிவிடை முடிந்த நேரங்களில் ..அயலில் உள்ள ....வார்டு இல ஒரு சிறுமி ..பெயர் அரசி ............ஆச்சி ஆச்சி என்று ....இவளுடன் மிகவும் அன்பாக இருப்பாள்.அவளுக்கு இவளும் அந்த ஏழுவயது சிறுமிக்கு அவளுமாக இவர்கள் வாழ்கை கடந்த இரு மாதங்களாக போய் கொண்டு இருக்கிறது. அந்த சிறுமிக்கு யாரும் இல்லை

த ற்போது ...எப்ப அம்மா அப்பா என்னை பார்க்க வருவினம் என்று கேட்பாள் .

சிறுமியின் ஒரு கால் முழங்க்காலுடனும் மற்றியது கணுக்காலுடனும் அகற்ற பட்டு விட்டது ....தாதிகளின் ஏனோ தானோ என்ற புறக்கணிப்பின் மத்தியிலும் ஆச்சி தான் இவளுக்கு துணை. தன் பேரப் பிள்ளியாகவே கவனித்து வருகிறாள். காலயில்முகம் கழுவி சுத்தமாக இருக்க உதவி செய்வாள். கணவனின் உணவில் சிறிது இவளுக்கும் ஊட்டி விடுவாள். அந்த குழந்தை அடிக்கடி தாய் தந்தையை கேட்பாள்... வெளியில் விளையாட முயார்சிக்கும் குழந்தை களை ஏக்கத்துடன் பார்ப்பாள்.எத்தனை மட்டும் ஆசுபத்திரி கட்டிலே தஞ்சம் என்று இருப்ப்து. இவர்களது கல்வி போய் எதிர் காலமே கேள்விக்குறியாக உள்ளபோது ....அதைக்கூட சிந்திக்க தெரியாத இவர்கள்.........

பாக்கியம் இப்போதெலாம் அழுவதில்லை...மனம் மரத்து போய் விட்டு இருந்தது . ஒரு காலாத்தில் எம்மை ...போக சொன்னால் ...என்....ஐயா வையும் (கணவனை இப்படி தான் அழைப்பாள்) இந்த குழந்தையையும் கூடவே கொண்டு போக வேணும்....இப்பவே தாய் தந்தை யை கேட்கும் குழந்தை ...அவர்களுக்கு நடந்த அனார்த்த்தில் இருவரும் ..சதை துண்டங்களாக சிதறிபோனார்கள் ...........எனற உண்மையை எப்படிசொல்வேன் ....?எப்படி த்தாங்குவாள் ? இவளின் மூத்த இரு சகோதரர்களை எங்கே தேடுவேன் .....?. . .

குழந்தை ....பாத்ரூம் (சிறு நீர் ) போவதற்காக .....ஆச்சியை அழைத்தது ...சோகத்தின் எல்லையில் வைத்திய சாலை சுவரில் சாய்ந்து சஞ்சரித்து கொண்டவளின் சிந்தனை கலைந்தது ....இவர்களின் எதிர்காலாம்.....எதிர்பார்பாக......

.நீண்ட

........முடிவு தெரியாத வானம் போல ..........இப்படி இன்னும் எத்தனை மனிதர்கள் ......

கதை உண்மை ........பெயர்கள் கற்பனை

Link to comment
Share on other sites

உண்மை நிலையை படம் பிடித்துக் காட்டி உள்ளீர்கள் மிகவும் நன்றி.இவர்களின் எதிர்காலம் எம் நாட்டில் இருக்கும் வரைக்கும் ??? தான்.உங்களின் கதையை வாசித்து விட்டு அழுவதைத் தவிர வேறு ஓண்டுமே தோன்றவில்லை. :(

பிரியமுடன்:யாயினி கனா.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நன்றி .....யாயினி .நீண்ட நாளாக மனதில் உறைந்து கிடந்த சோக கதை ..

என் இனம் படும் பாடு எழுத்தில் வடிக்க முடியாதவை ..

Link to comment
Share on other sites

நன்றி அக்கா .. கண்ணிலை கண்ணீர் வர வைத்து விட்டீர்கள்... இப்படி எத்தனை குழந்தைகளோ

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுஜி .........உங்கள் பாராடுக்கு .

Link to comment
Share on other sites

யார் யாருக்கு ஆறுதல் கூறுவது என்று தெறியாத நிலையில் இப்படியான பல சோக கதைகள் ஒவ்வொறு

ஈழதமிழன் மணதிலும் புதைந்து கிடக்கு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பாதை தெரியாத சுவடுகள். ............

பாதைதெரியாத சுவடுகள் எம்மண்ணில் நீளமாகிக் கிடக்கிறது....துயரம் முட்டிய வாழ்வும் அவலம் நிரம்பிய நாட்களுமாக நிலாமதி யார் யாரைத் தேற்றுவதென்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புத்தமதத்தை மிகவும் கண்ணியமாககடைபிடிக்கும்

சோகங்கள்......இதற்கு ஒரு முடிவு எப்ப வருமோ?புத்த மதம் ......மதங்களின் பெயரால் மரணித்தவர்கள் பலர்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கிளி டைகர் .......சாந்தி .......புத்தன் ...........என நன்றிகள் உங்கள் கருத்து பகிர்வுக்கு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இன்றைய எமது உறவுகளின் கண்ணீர் கதையை கண்முன் காட்டிய விதம்

அழகு .....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • வடக்குத் தலைவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்?  சம்பந்தனையும் சாணக்கியனையுமா.. வடக்கில் தலைவர்கள் என்று தற்போது ஒருவரும் இல்லையே..  🤣
  • உது நடக்கிற காரியமா ? 250 என்பதை 25000 என்று தவறுதலாக வாசித்துவிடுவார்கள்.  🤣
  • 1950 முதல் மற்ற அனைத்து அரசாங்கங்களையும் விட தற்போதைய அரசு 20 மடங்கு அதிக பணத்தை அச்சிட்டுள்ளது : ரஜித் கீர்த்தி தென்னக்கோன்       (சி.எல்.சிசில்) தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ரூ. 149,905 கோடி அச்சிடப்பட்டதால் அன்றாட வாழ்க்கையில் பயன்படும் அனைத்து பொருட்களும் நம்ப முடியாத அளவுக்கு விலைகள் அதிகரித்து வருவதாக ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களுக்கான முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் முதல் 25 நாட்களில் அரசு ரூ. 15,704 கோடியை அச்சிட்டுள்ளது. ஜனவரி முதல் டிசம்பர் 2021 வரை மட்டும், அரசாங்கம் ரூ. 67,833 கோடி (678.33 பில்லியன்) அச்சிட்டுள்ளது. அதில் டிசம்பர் 31 அன்று அச்சிடப்பட்ட 66,500 மில்லியன் ரூபாவும் அடங்கும். அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கியாக நியமிக்கப்பட்ட பின்னரே ரூ. 28,942 கோடி அச்சிடப்பட்டுள்ளது. கப்ரால் ஆளுநராக பதவியேற்ற போது, மத்திய வங்கியின் அரசாங்கப் பத்திரங்களின் முகப் பெறுமதி ரூ. 1284.37 பில்லியனாகும். அது இன்று ரூ. 1574.79 பில்லியன் ஆகும். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் (ஜனவரி 2020) இன்று வரை ரூ. 149,905 கோடி (ரூ. 1,499.05 பில்லியன்) அச்சிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் பத்திரங்களின் முகப்பெறுமதி (ஜனவரி 25, 2022 இல்) ரூ. 1,573.79 பில்லியன் ஆகும். திறைசேரியின் செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க, மத்திய வங்கியின் ஆளுநர் பணத்தை அச்சிடுகிறார். இலங்கை மத்திய வங்கி ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் வரை ரூ. 7474 கோடி மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது.எளிமையாகச் சொன்னால், மத்திய வங்கி அதன் தொடக்கத்திலிருந்து 2020 வரை அச்சிடப்பட்ட பணத்தைப் போல் கடந்த 25 மாதங்களில் 20 மடங்கு அதிகமாக அச்சிட்டுள்ளது. “பணம் அச்சிடுவது கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெளிவாகிறது. 1950 முதல் இன்று வரை மத்திய வங்கியின் 14 ஆளுநர்களின் கீழ் அச்சிடப்பட்ட தொகையை விட தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 20 மடங்கு அதிகமாக அச்சிட்டுள்ளனர். “பணத்தை அச்சடிப்பதால், உலகிலேயே அதிக விலைவாசி உயர்ந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியுள்ளது. திறைசேரியின் செயலாளரும் மத்திய வங்கியின் ஆளுநரும் மத்திய வங்கியின் சிரேஷ்ட பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக பணத்தை அச்சிடுகின்றனர்” என தென்னக்கோன் மேலும் தெரிவித்துள்ளார். Thinakkural.lk  
  • ரஸ்யாவின் டாங்கிகளை இலக்குவைப்பதற்காக விசேடமாக உருவாக்கப்பட்ட ஜவலின் ஏவுகணைகளை உக்ரைனிற்கு வழங்கியது அமெரிக்கா       உக்ரைனிற்கு அமெரிக்கா வழங்கியுள்ள டாங்கிஎதிர்ப்பு ஏவுகணைகள் உக்ரைனை சென்றடைந்துள்ளன- புட்டினின் படைகள் உக்ரைன்மீது படையெடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தால் அவர்களிற்கு பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய அதிநவீன ஆயுதங்களை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகின்றது – இறுதியாக இந்த ஏவுகணைகளை வழங்கியுள்ளது. 50மில்லியன் டொலர் பெறுமதியான 300 ஜவலின் ஏவுகணைகளுடன் விமானமொன்று உக்ரைன் தலைநகரை சென்றடைந்துள்ளது-   File written by Adobe Photoshop? 5.2     எவ்ஜிஎம் – 148 ஜவலின் என்பது டாங்கிகளை அழிப்பதற்காக கேர்வ்போல் தாக்குதலை இணைத்து உருவாக்கப்பட்ட ஏவுகணை அதாவது இது இலக்குகளின் மீது மேலே இருந்து இறங்கி தாக்ககூடியது ஜவலின் ஏவுகணைகள் ஒவ்வொன்றினதும் பெறுமதி 175.000 அமெரிக்க டொலர்கள்- 1990இல் உருவாக்கப்பட்ட ஜவலின்கள் 1996 முதல் பயன்பாட்டில் உள்ளன. இரண்டாவது ஈராக் யுத்தத்தின் போது ரஸ்யாவில் தயாரிக்கப்பட்ட ரி-72 டாங்கிகளிற்கு எதிராக இதனை அமெரிக்க படையினர் பயன்படுத்தியிருந்தனர் – அவ்வேளை ஜவலின்கள் மிகச்சிறப்பாக செயற்பட்டுள்ளன. ரஸ்யா தற்போதும் ரி72 டாங்கிகளை பயன்படுத்துகின்றது- உக்ரைன் எல்லையில் அந்த டாங்கிகளை ரஸ்யா பெருமளவில் குவித்துள்ளது.சதாமின் காலத்தின் பின்னர் இவை பல மாற்றங்களிற்கு உட்பட்டிருந்தாலும் இந்த வகை டாங்கிகள் ஏவுகணைகளை எதிர்கொள்ளும் திறன் குறைந்தவையாகவே காணப்படுகின்றன என்ற கருத்து நிலவுகின்றது. ஜவலின்கள் அகச்சிவப்பு அமைப்புகளை பயன்படுத்தி தங்கள் இலக்குகளை குறிவைக்கின்றன. இதன் காரணமாகபடையினர் டிரிகெரை அழுத்திய பின்னர் தொடர்ந்தும் இலக்கினை குறிவைக்கும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டியதில்லை. ஏவுகணை ஏவப்பட்டவுடன் அது சிறிய மின்னூட்டத்தை பயன்படுத்தி வெளியேறுகின்றது-இதன் காரணமாக முக்கிய ரொக்கட் வெடிப்பதற்கு முன்னர் அதனை வரையறுக்கப்பட்ட இடத்திற்குள் ஏவலாம். ஜவலின்கள் மேல்நோக்கி 490 அடி சென்று பி;ன்னர் இலக்கை நோக்கி கீழே இறங்கிவருகின்றன.இதனை கேர்வ்போல் சொட் என்கின்றனர். ரஸ்யாவின் ரி72 டாங்கிகளில் 850மில்லிமீற்றர் கவசம் பொருத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.ஜவலினால் 800 மில்லிமீற்றர் வரையே உள்ளே ஊடுருவ முடியும்.எனினும் ரஸ்ய டாங்கிகளின் கவசம் மெல்லியது என்பதால் ஜவலினால் அதனை இலகுவாக உடைத்துக்கொண்டு செல்ல முடியும். புட்டினின் ஜெனரல்கள் பொதுவாக இது குறித்து கவலை கொண்டுள்ளனர்- கடந்த நவம்பர் மாதம் ஜவலினை முறியடிப்பதற்கான வித்தியாசமான குடைபோன்ற அமைப்புடன் டாங்கிகள் உக்ரைன் எல்லையில் காணப்பட்டன. இந்த கவசம் பயனளிக்க கூடியதா என்பது இன்னமும் உறுதியாகவில்லை.மேலும் இதன் இயங்கும் திறன் மற்றும் சுடும்திறனில் என்னை தாக்கம் இதனால் ஏற்படும் என்பதும் தெளிவாக தெரியவில்லை. எனினும் கடந்த சில வாரங்களாக உக்ரைன் எல்லையில் காணப்பட்ட இந்த டாங்கிகள் இந்த வகை கவசம் பொருத்தப்பட்டவையாக காணப்படவில்லை இதனால் அவற்றின் பலவீனம் தொடர்ந்து நீடிக்கின்றதுஎன கருத முடியும். ஜவலின்களை இரண்டரை மைல் தூரத்திற்கு மரபுவழி ஆயுதங்களை போல பயன்படுத்தலாம் – இதன் அர்த்தம் என்னவென்றால் அவற்றை கட்டிடங்களை தகர்ப்பதற்கும் பதுங்குழிகள் சுரங்கப்பாதைகளிற்குள் உள்ள படையினரை தாக்குவதற்கும் பயன்படுத்தலாம். குறைந்த உயரத்தில்பறக்கும் ஹெலிக்கொப்டர்களை தாக்குவதற்கும் அவற்றை பயன்படுத்தலாம். இவை சிறியவை பாரம் குறைந்தவை என்பதால் தோளில் சுமந்துசெல்ல முடியும் Thinakkural.lk
  • பணம் திருடப்பட்ட சம்பவம்: பிரதமரின் ஊடக செயலாளர் பதில்       பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கிலிருந்து பெருமளவிலான பணம் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரை முறைப்பாடு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். பிரதமரின் முன்னாள் செயலாளராகப் பணியாற்றிய ஒருவர்,  பிரதமரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கை அணுகக்கூடிய ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி மில்லியன் கணக்கான பணத்தை எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. மேலும், பணம் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த நபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ரொஹான் வெலிவிட்ட , இவ்வாறானதொரு சம்பவம் குறித்து பிரதமர் அலுவலகம் அறிந்திருக்கவில்லை. மேற்படி சம்பவம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் எனக்குத் தெரிந்த வகையில் தவறானவை என்றார்.   Tamilmirror Online || பணம் திருடப்பட்ட சம்பவம்: பிரதமரின் ஊடக செயலாளர் பதில்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.