Archived

This topic is now archived and is closed to further replies.

கிளியவன்

கட்டாய தாலி கட்ட திட்டம்: பெண் போலீஸ் வேடமிட்டு மாணவியை கடத்திய வாலிபர்

Recommended Posts

கட்டாய தாலி கட்ட திட்டம்: பெண் போலீஸ் வேடமிட்டு மாணவியை கடத்திய வாலிபர்- பொதுமக்கள் தகவல் கொடுத்ததால் 15 நிமிடங்களில் பிடிபட்டார்

சென்னை, ஜூன். 24-

திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகே நேற்று மாலை 6 மணியளவில் ஏராள மானோர் பஸ்சுக் காக காத்து நின்றனர். அருகில் உள்ள பள்ளிக்கூடம் முடிந்து மாணவிகள் அந்த வழியாக வந்து கொண் டிருந்தனர்.

அப்போது டாடா சுமோ கார் ஒன்று மின்னல் வேகத்தில் அங்கு வந்தது. அதில் இருந்து பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மிடுக்காக இறங்கினார். அவர் ரோட்டில் நடந்து வந்த ஒரு மாணவியை பிடித்து இழுத்து காருக்குள் தள்ளினார்.

கார் உடனே அந்த இடத்தில் இருந்து பறந்தது. பெண் சப்-இன்ஸ்பெக்டர் மாண வியை தூக்கி சென்றதால் ஏதோ குற்ற வழக்கு தொடர் பாக மாணவியை அழைத்து செல்கிறார்கள் என்று அக்கம் பக்கத்தினர் நினைத்தனர்.

ஆனால் மாணவியை காரில் தூக்கி போடும் போது அவர் பயங்கரமாக அலறினார். கார் சென்ற போதும் அலறல் சத்தம் கேட்டு கொண்டே இருந்தது. எனவே அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் அங்கிருந்த ஒருவர் சாத்தாங்காடு போலீசை தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தை கூறினார்.

உடனே இன்ஸ்பெக்டர் ராபர்ட் ராஜா உஷார் அடைந்தார். அனைத்து போலீ சுக்கும் தகவல் கொடுத் தார். அந்த டாடா சுமோகார் அங்கிருந்து சுரங்கப் பாதை வழியாக செல்வதாக தகவல் கிடைத்தது. அதன் கடைசி முனையில் போலீஸ் செக்போஸ்ட் இருந்தது. அதற்கும் தகவல் கொடுத்தார்.

அங்குள்ள போலீசார் உடனே அங்கு தயாராக நின்றனர். டாடா சுமோ கார் வந்தது. சுற்றி வளைத்து மடக்கினார்கள். உள்ளே இருந்த பெண் சப்-இன்ஸ் பெக்டரை, கீழே இறங்கும் படி கூறினார்கள். அப் போது தான் அது பெண் சப்-இன்ஸ்பெக்டர் அல்ல. பெண் சப்-இன்ஸ்பெக்டர் வேடத்தில் இருந்த ஆண் எள்பது தெரியவந்தது. மாணவியை கடத்தி செல்வ தும் தெரிந்தது.

அவரையும் மாணவி யையும் போலீஸ் நிலையத் துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். தனது பெயர் முருகன் (24). என்று கூறிய அவர் மாணவியை கட்டாய திருமணம் செய்வதற்காக கடத்தி செல்வதாக தெரிவித்தார்.

அந்த மாணவியின் பெயர் சுகன்யா (17), பிளஸ்-2 படித்து வந்தார். திருவொற்றியூர் சண்முகாபுரத்தில் வீடு உள்ளது. தந்தை பெயர் ஜெயராமன்.

சுகன்யாவை ஒரு தலை யாக காதலித்து வந்ததாகவும் அவரது பெற்றோர் பெண் தர மறுத்ததால் கட்டாய திருமணம் செய்ய முயன்ற தாகவும் முருகன் தெரிவித்தார்.

இது பற்றி முருகன் போலீசில் முழுமை யாக கொடுத்துள்ள வாக்கு மூலத் தில் கூறி இருப்பதாவது:-

எனது சொந்த ஊர் ஆரணி அருகே உள்ள நரியம்பாடி. நான் 3-ம் வகுப்பு வரை படித்து உள்ளேன். சிறு வயதிலேயே சென்னைக்கு வந்து விட்டேன். முதலில் நுங்கம்பாக்கத்தில் குடியிருந் தேன். என் வீட்டு அருகே தான் சுகன்யா வீடு இருந்தது. அவள் அப்போது சிறுமியாக இருந்தாள். எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவாள். பார்க்க அழகாக இருப்பாள். எனவே அவள் மீது அப்போதே எனக்கு காதல் வந்து விட்டது.

பெரியவள் ஆனதும் நான் திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். அவள் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து செல்வேன். இது அவளது அக்காளுக்கு தெரிய வந்தது. என்னை கண்டித்தார். இதனால் அவரது செல்போனுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பினேன்.

இதனால் போலீசில் புகார் கொடுத்து விட்டார். என்னை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். ஜெயிலில் இருந்து வெளியே வந்தேன். ஆனால் சுகன்யாவை திருமணம் செய்யும் திட்டத்தை மட்டும் கைவிடவே இல்லை. முறைப் படி பெண் கேட்டேன். தர மறுத்து விட்டனர்.

எனவே கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்ய முடிவு செய்தேன். நான் கார் மெக்கானிக்காக இருப்பதுடன், டிராவல்ஸ்சும் நடத்தி வருகிறேன். இதில் வேலை பார்க்கும் டிரைவர் நாகராஜிடம், சுகன்யாவை கடத்த வேண்டும் என்று கூறினேன். அவரும் சம்மதித்தார்.

கடத்துவது சுலபமானது அல்ல. தந்திரமாகத் தான் கடத்த வேண்டும் என்று முடிவு செய்தேன். பெண் சப்-இன்ஸ்பெக்டர் வேடமிட்டு கடத்தலாம் என்ற திட்டம் உதயமானது.

அதற்காக பெரிய மேட் டுக்கு சென்று சப்-இன்ஸ் பெக்டர் உடைகள், தொப்பி, விக் ஆகியவற்றை வாங்கி னேன். நேற்று மாலை கடத்தலை அரங்கேற்ற முடிவு செய்தேன். நான் பெண் சப்-இன்ஸ்பெக்டர் உடைகளை அணிந்து கொண் டேன். டாடா சுமோ காரில் புறப்பட் டோம். நாகராஜ் காரை ஓட்டினார்.

திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகே அவள் வரும் வழியில் தயாராக இருந்தோம். அவள் வருவது தெரிந்ததும் காரை அருகில் ஓட்டி சென்று வலுக்கட்டாயமாக காரில் உள்ளே தள்ளி கடத்தினோம்.

காரில் செல்லும் போதே அவள் கழுத்தில் தாலி கட்டி விட வேண்டும் என்று தயாராக தாலி வாங்கி வைத்திருந்தேன். சில நிமிடங் களிலேயே போலீசார் மடக்கி விட்டதால் என் திட்டம் தோல்வி அடைந்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீசார் மடக்கிய போது டிரைவர் நாகராஜ் தப்பி ஓடி விட்டார். அவரை இன்று போலீசார் கைது செய்தனர்.

போலீசுக்கு தகவல் கிடைத்த 15 நிமிடத்திலேயே காரை போலீசார் மடக்கி விட்டனர். இதனால் விபரீதம் ஏதும் நடக்காமல் தடுக்கப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com/2009/06/2414492...0530240609.html

Share this post


Link to post
Share on other sites

தலைப்பைப் பார்த்தும், சென்னையில் தான் நடந்து இருக்கும் என்று நினைத்தது சரியாகவே இருந்தது.... ஆனால், 3 வயதிலிருந்து லவ் என்று நான் யோசிக்கவே இல்லை... இது கலிகாலம் இல்லை... அதுக்கும் மேல.... :)

Share this post


Link to post
Share on other sites

ஒரு பெண் பிடிக்கவில்லை என்று சொல்லி முடியவும் ஏன் இப்படி தொந்தரவு பண்ணனும்..குட்டி சொன்ன மாதிரி இந்தியாவிதான் கூடுதலா இது நடக்கிறது... ஆனால் இப்ப கொஞ்சம் வெளி நாடுகளில் சிலர் இப்ப இப்படித்தான் நடக்கிறாங்களோ என்று சின்ன சந்தேகம்

Share this post


Link to post
Share on other sites

குட்டி .......மூணு வயசில லவ் இல்லை மூணாவது வரை ........தான் படித்திருக்கிறார்.மீதி எல்லாம் நல்லா படித்திருக்கிறார். காதல் செய்யும் விளையாட்டு .....?

Share this post


Link to post
Share on other sites

அடங்கொய்யாலே, ஒரு தலையா ரொம்ப காதலிச்சதால எதையும் செய்ய துணிச்சிருக்கான் பயல்புள்ள, ஆண் ஒரு தலையா காதலிக்கிறது வரலாற்று குற்றம் எண்பதை அந்த பயப்புள்ள அறிந்திருக்கவில்லையா? சிறுவயதில் இருந்து லவ் பன்னி இருக்கான் இது கூட தெரியாமல் லவ் பன்னி இருக்கானே, வேனுமெண்டால் அவள் கூட பிரண்டா இருந்திருக்கலாமேப்பா? :huh:

இருந்தாலும் ஒரு விதத்தில அவனை பாராட்டவெண்டும், காறுக்க வழுக்கட்டாயமா இழுத்து போட்டிருக்கான், கடைசி வந்தும் அவள் கிடைக்கமாட்டாள் எண்டு தெரிஞ்சும் (பொண்ணுங்க ஒரு தடவை ஏதாச்சு சொன்னா அது 1000ம் தடவை சொன்னமாதிரியல்ல) காரால அடிக்காமல் காறுக்க தூக்கி போட்டிருக்கான். அங்க நிக்குது அவண்ட மனிதாபிமானம், அவன் நிஜமாத்தான் லவ் பன்னி இருக்கான் போல அவளை, அவள் தான் புரிஞ்சுக்கல்ல போல. காலம் புரியாவைக்கும் சில நேரம்.

பாதிக்கப்பட்டவர் இந்த கருத்தை பார்க்க சந்தர்ப்பம் இருந்தால் அவருக்காக ஒரு கேட்டதில் பிடித்த கவிதை ஒன்று:

உனை அழவைக்கும் உறவு

உன் உறவுக்குத் தகுதியற்றது

உன் அழுகைக்கு தகுதியான உறவு

உனை ஒருபோதும் அழ விடாது

உறவை நினைத்து அழாதே

Share this post


Link to post
Share on other sites

தலைப்பைப் பார்த்தும், சென்னையில் தான் நடந்து இருக்கும் என்று நினைத்தது சரியாகவே இருந்தது.... ஆனால், 3 வயதிலிருந்து லவ் என்று நான் யோசிக்கவே இல்லை... இது கலிகாலம் இல்லை... அதுக்கும் மேல.... :huh:

:D:rolleyes: என்ன மாதிரிக் கதையைக் கட்டுறாங்களடாப்பா.... அவர் படித்தது தான் 3ம் வகுப்பு வரை...காலம் கலிகாலம் தான் இப்படி கதை கட்டிட்டியலே குட்டி........ :unsure:

Share this post


Link to post
Share on other sites

கட்டாய தாலி கட்ட திட்டம்: பெண் போலீஸ் வேடமிட்டு மாணவியை கடத்திய வாலிபர்- பொதுமக்கள் தகவல் கொடுத்ததால் 15 நிமிடங்களில் பிடிபட்டார்

தனது பெயர் முருகன் (24)....

அந்த மாணவியின் பெயர் சுகன்யா (17)...

நான் 3-ம் வகுப்பு வரை படித்து உள்ளேன். சிறு வயதிலேயே சென்னைக்கு வந்து விட்டேன். முதலில் நுங்கம்பாக்கத்தில் குடியிருந் தேன். என் வீட்டு அருகே தான் சுகன்யா வீடு இருந்தது. அவள் அப்போது சிறுமியாக இருந்தாள். எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவாள். பார்க்க அழகாக இருப்பாள். எனவே அவள் மீது அப்போதே எனக்கு காதல் வந்து விட்டது.

.....

http://www.maalaimalar.com/2009/06/2414492...0530240609.html

6 என்று எழுதுவதற்கு பதிலாக தவறுதலாக 3 என்று எழுதினது எனது கவனக் குறைவு தான்.... (keyboard-இல் 3, 6, கீழும் மேலுமாக தானே இருக்கு... )

பார்க்கப் போனால்... ஒரு வயது என்று தான் சொல்லி இருக்க வேணும்... காரணம், அந்த நபருக்கும், அந்தப் பெண்ணுக்கும் 7 வயது வித்தியாசம்... அந்த நபர் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது அந்த பெண்ணுக்கு ஒரு வயசு கூட இருந்து இருக்காது...4 வயதில் முதலாம் வகுப்பில் சேர்ந்து இருந்தாலும், (இந்தியாவில் குறைந்த வயதிலையே பள்ளியில் சேர்த்துவிடுவார்கள்) மூன்றாம் வகுப்பு படிக்கும் போது அந்த நபருக்கு 6 வயது தான் இருந்து இருக்கும்... அப்போ அந்த பெண்ணுக்கு என்ன வயசு....?? இருக்கும்... இருக்கும்.... காதலிக்கிற வயசு தானாக்கும்... :mellow::wub:

Share this post


Link to post
Share on other sites