Jump to content

மைக்கல் ஜாக்சன் காலமாகி விட்டார்?


Recommended Posts

பொதுவாக நான் மைக்கல் ஜக்சன் பாடல்களையும் நடனத்தையும் அதிகம் விரும்பி கேட்டதுமில்லை பார்த்ததும் இல்லை காரணம், இளையராஜா இசை மயக்கம் + ஜான் டென்வர் + லியோ செயர் + ரியோ + க்ளிஃப் ரிச்சர்ட் + ஃபில் காலின்ஸ் + சண்ட்டானா + பார்பரா + 3டிக்ரிஸ் + பில்லி ஜோயல் + எல்ட்டன் ஜான் + பீ ஜீஸ் + பீட்ல்ஸ் + இன்னும் பல கலைஞர்கள்.

அதில் அவர் மீது கூறிய குற்றச்சாட்டுகள் அவ்வப்போது வீசிவிட்டுப் போகும் எனவே புகழ் வந்தபின் அனைவரும் போடும் கூத்துக்களில் இவரின் கூத்து என்றே எண்ணினேன் நீதிமன்றத்தில் இவரை குற்றமற்றவர் என்று விடுவிக்கும் வரை.

அவருடைய மரணம் என்னை கருத்து எழுதும் அளவுக்கு கூட தூண்டவில்லை இருந்தும் அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றது முதல் அவருக்கு மரியாதை செய்து அவர் உடலை அனுப்பி வைத்தது முதல் தொலைக்காட்சியில் கண்டேன், காரணம் தமிழின அழிப்பின் வேதனை, உலக அரசுகளோ, இயற்கையோ ஏன் இறைவன் கூட கண் மூடி இருந்த வேதனை..

இப்போது ஏன் எழுதுகிறேனென்றால்...உண்மையில் தனி இடுகைதான் ஏற்படுத்த வேண்டும் என எண்ணினேன்...நேற்று மைக்கலின் “திஸ் இஸ் இட்” திரைப்படத்தை(உண்மை நடவுகள்)கண்டேன்...என்னை மறந்தேன்... அது தான் உண்மை...

லண்டன் நிகழ்சி 10 ஆண்டுகள் பிறகு எடுக்கும் அவரின் புதிய முயற்சி அதற்கு ஆத்மார்த்தமாக எப்படி தன்னை ஆட்படுத்தி வெள்ளோட்டம் செய்கிறார் என்பதை பார்த்து தன்னை மறக்காதவன் மனிதனாகவே இருக்க இயலாது.

நடன மற்றும் இசை நுணுக்கங்களை எப்படி மெருகேற்றுகின்றார் என்பதை பார்க்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்...

நிச்சயமாக அவரைவிட திறமையான (பாடல்+நடனம்+இசை)ஒரு கலைஞன் பிறப்பது அரிது.

ஒவ்வொரு முறை தன் இயக்குனரிடமோ குழுவினரிடமோ கருத்துக் கூறும் போது “வித் லவ், லவ் யூ, காட் ப்ளஸ் யூ” என்று சொல்லத் தவறுவதில்லை அவ்வளவு பண்பான கலைஞன் பற்றிய குற்றங்கள் யாவும் அவரின் செல்வத்தை குறிவைத்தே நடத்தப்பட்டது என்பதை உணரவைக்கின்றது. ஊடகங்கள் உண்மையை என்றுமே கூறுவதில்லை தனக்கு இலாபம் ஏற்படும் வரை.

இந்த மாபெரும் இசைக் கலைஞனை இப்போதாவது உணர்ந்தேனே என்று அவரின் மறைவு அவர் குழந்தைகளுக்கும், குடும்ப அங்கத்தவர்களுக்கும், “திஸ் இஸ் இட்” குழுவினருக்கும் மட்டுமல்ல எண்ணற்ற இரசிகர்களுக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் இழப்புதான். அவருக்கு என் வணக்கங்கள்.

குறிப்பு: முடிந்தவரை திரையரங்கில் சென்று அவரின் கடைசி முயற்சியை பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.