Jump to content

மைக்கேல் ஜாக்ஸனின் இறுதி ஊர்வலத்துக்கு பிரம்மாண்ட ஏற்பாடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மைக்கேல் ஜாக்ஸனின் இறுதி ஊர்வலத்துக்கு பிரம்மாண்ட ஏற்பாடு

இளவரசி டயனாவுக்கு அடுத்ததாக, உலகம் இதுவரை பார்த்திராத வகையில், அதிகம் பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக, மைக்கேல் ஜாக்ஸனின் சவ ஊர்வலம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள அவரது லட்சக்கணக்கான ரசிகர்களும், டி.வி.பார்வையாளர்களும் அதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை இளவரசி டயனாவின் சவ ஊர்வலத்தில் தான் அதிகம் பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள. 12 வருடங்களுக்கு முன் இறந்த டயனாவின் சவ ஊர்வலத்தில் கலந்து கொள்ள, சுமார் 2,50,000 பேர் ஹைடல் பார்க்கில் மட்டும் கூடி இருந்தார்கள். இது தவிர பிரபல அமெரிக்க பாடகர் எல்விஸ் பிரஸ்லே 1977 ல் இறந்தபோது 75,000 ரசிகர்கள் கூடியிருந்தார்கள்.

ருடால்ப் வேலன்டினோ என்ற அமெரிக்க நடிகர் 1926 ல் இறந்தபோது 40,000 பேர் கூடியிருந்ததாக சொல்லப்படுகிறது. இப்போது மைக்கேல் ஜாக்ஸனின் சவ ஊர்வலத்தில் டயனாவுக்கு அடுத்ததாக அதிகம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு வேளை மைக்கேல் ஜாக்ஸனின் சவ அடக்கத்தை குடும்ப நிகழ்ச்சியாக நடத்த தீர்மானித்தாலும் கூட ரசிகர்களின் வருகையை கட்டுப்படுத்த முடியாத நிலை தோன்றும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் மைக்கேல் ஜாக்ஸன் ரகசியமாக முஸ்லிமாக மாறி விட்டார் என்றும் கூறப்படுகிறது.

அப்படி அவர் முஸ்லீம் முறையில் அடக்கம் செய்யப்பட இருந்தால், இறந்த இரு நாட்களுக்குள் அடக்கம் செய்யப்பட வேண்டுமாம். அதற்கு வாய்ப்பு இல்லை. இன்னொரு செய்தியும் வெளிவருகிறது. அவரது உடல் அடக்கம் செய்யப்படாமல், பாடம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

தகவல்.......நக்கீரன்.

Link to comment
Share on other sites

எம் நாட்டில் இறந்துபோன பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஊர்வலம் நடந்ததா?இது என்ன பிரமாண்டம். பிரம்மை பிடித்து அலையும் பிள்ளைகள் எத்தனை? அதுதான் எமக்கு பிரமாமாமாமாமாமாண்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசையென்டால் மைக்கல் என்கிற அளவுக்கு இப்படி எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் மைக்கல் ஜாக்ஸன் இவரின் பிரிவு தாங்கமுடியாததுதான் பல பழிச்சொல்களால் அவர்அன்றே இறந்துவிட்டார். ஏழைமக்களுக்காக பல உதவிகளை செய்தவர் இவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இதில் ஆட்சேபனை இல்லை அவருக்கு எவ்வளவு பேர் அனாலும் வரட்டும்

எங்களுடைய மக்கள் அங்க இறந்தபோது

இங்கே நங்கள் லட்சம் பேர் கத்தினோம் ரோட்டில நிண்டு அதை பற்றி எவருமே கணக்கில கொள்ளவில்லை சொ எனக்கு இதில இல்லை வேற எந்த நாட்டில எது நடத்தலும் கவலயில்லை என் இனத்தை பட்டி கவலைப்படாத எந்த இனத்தையும் பற்றி நான் கவலைப் படப் போறது இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதில் ஆட்சேபனை இல்லை அவருக்கு எவ்வளவு பேர் அனாலும் வரட்டும்

எங்களுடைய மக்கள் அங்க இறந்தபோது

இங்கே நங்கள் லட்சம் பேர் கத்தினோம் ரோட்டில நிண்டு அதை பற்றி எவருமே கணக்கில கொள்ளவில்லை சொ எனக்கு இதில இல்லை வேற எந்த நாட்டில எது நடத்தலும் கவலயில்லை என் இனத்தை பட்டி கவலைப்படாத எந்த இனத்தையும் பற்றி நான் கவலைப் படப் போறது இல்லை

உண்மைதான். எனக்கும் அதே மனநிலைதான். நான் இங்கத்தையான் செய்திகளை கூட எனக்கு நேரடி பாதிப்பில்லாதெனில் பார்பதில்லை. ஆர் எக்கேடு கெட்டாலும் i don't care. :huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.