Jump to content

கடுப்பேத்தும் செயல்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

:huh: சிறி அண்ணா ஊரில உங்களுக்கு கடித்ததை வாசித்து விட்டு கொடுக்கும் போஸ்ட்மன்...

- அவசர அலுவலாய் வந்து விட்டு, வீட்டை விட்டு ரெண்டு கிழமைக்கு வெளிக்கிடாத உறவினர்கள்...

என்று அனுபவங்கள் இல்லையா?

அங்க தங்களுக்கு விடிஞ்சிட்டு எண்டா போல இஞ்ச போன் அடிச்சு நாலாஞ் சாமத்தில - "என்ன நித்திரையே இன்னும்?!" :lol: என்று கேக்கிற சனமும் இருக்கு, நேர வித்தியாசங்கள் தெரிஞ்சும்...!

இளையபிள்ளை , கடவுளே என்று சொந்தக்காரர்களால் ஒரு தொல்லையும் இது வரை ஏற்படவில்லை . :huh:

ஆனால் தொலைபேசி எடுத்து விட்டு தங்களின் பெயரை சொல்லாமல் ....... தங்களை யார் என்று கண்டுபிடிக்கச் சொல்லி குவிஸ் வைப்பது .

தொலை பேசி எடுத்தவர்கள் என்ன புதினம், என்று எம்மையே கேட்பதுடன் நில்லாமல் வேறை ஒண்டும் இல்லையோ ......என்று கிண்டிக் கொண்டிருப்பது .

இரவு ஒன்பது மணிக்கு பிறகு தொலைபேசி எடுக்கும் உள்ளூர் வாசிகள் .

முன்பே அறிவிக்காமல் திடீரென்று வந்து அழைப்பு மணியைஅடித்து வருபவர்கள் . வந்தவுடன் இதாலை ஒரு அலுவலாய் போனனாங்கள் கையோடை உங்களையும் எட்டிப் பாப்பம் என்று வந்தனாங்கள் நீங்கள் ஏதாவது அலுவலா இல்லைதானே என்று கேட்டு விட்டு இரவு சாப்பாட்டையும் முடித்துக் கொண்டு போன அலுவலை விட்டு தங்கள் வீட்டிற்கு திரும்பி செல்பவர்களை கண்டால் கடுப்பு வரும் .

அதெப்படி நீங்கள் 'அங்கை' பார்க்காமல், அவர் 'அதை' இழுத்து மூடுவதை மட்டும் காணுவது?

(எல்லாப் பயல்களும் என்னை மாதிரித்தான் போல)

அது தானே ......... மாட்டுப்பட்டுப் போனனோ ......... :wub::icon_mrgreen::lol::huh:

(முடிந்தால், மோகன் அண்ணாவின் கருத்தும், கடுப்பு ஏறி இருபார்... கெதியில எனக்கு

smiley-angry015.gif இருக்கு....) கருத்துக்களும் எதிர் பார்க்கப்டுகிறது...

smiley-angry015.gif குட்டி, மோகன் அண்ணா மற்றும் மட்டுறுப்பினர் குழுவினர்smiley-angry015.gif எனது கருத்தை வெட்டும் போது சரியான கடுப்பு வரும் .smiley-angry015.gif :D

Link to comment
Share on other sites

  • Replies 165
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை பேசும் நெடுக்ஸா இப்படி சொல்வது.. இல்லவே இல்லை. speak up boy!! :lol:

கருத்துக்களத்தில் காரசாரமா பதில் எழுதினா அதை மறுதரப்புக்கள் கடுப்பாகி எழுதிறாங்க அப்புடின்னு நினைச்சுக்கிறாங்க. ஆனால் எப்பவும் வரும் பதிலுக்கு ஏற்ப தான் பதில் எழுதுவன். அவங்க கடுப்பாகிக் காட்டினா.. அவங்களுக்கு புரிய பதிலுக்கு எழுதுவன். ஆனா நிஜத்தில கடுப்பாகினது கிடையாது. நான் காரசாரமா கருத்தாடினவங்களில சிலரை நேரில சந்திச்சிருக்கன். அப்ப யாரும் யாரையும் கடுப்பேத்தல்ல. சகஜமாவே இருந்தாங்க. நல்ல நண்பர்களாக..!

ஆனால் சிலரின் தொடர்சியான சில நடத்தைகள் எனக்குப் பிடிப்பதில்ல. அதனால சிலரை சந்திக்க விரும்புறதில்ல. அப்படிச் சந்திப்பது அநாவசியம் என்று நினைச்சுக்குவன்.

கருத்துக்களத்தில் உள்ள எழுத்துக்களின் அடிப்படையில் ஆட்களின் குணத்தை எடைபோடுவது தவறு. சிலர் நல்லா எழுதுவாங்க. ஆனால் நிஜத்தில் கொடுமையான ஏமாற்றுப் பேர்வழிகளாகக் கூட இருக்கலாம்.. நல்லவன்னு அல்லது நல்லவள்ளுன்னு காட்டிக்க அப்படி நடிக்கலாம் இல்லையா...??! சில பேர் கடுப்பாகி கருத்து எழுதிறது போல இருக்கும். ஆனால் அவங்க தங்கட நியாயம் மறைக்கப்பட்டிடுமோ என்ற ஆதங்கத்ததை தான் வெளிப்படுத்திக்கிட்டு இருப்பாங்க. ஆனால் மற்றவங்க அதைக் கடுப்பாகிட்டான் என்று பழிச்சிட்டு இருப்பாங்க. இவைதான் உண்மையில் பொறுமையை சோதிக்கும் விடயங்கள். :icon_mrgreen:

நாங்க பொதுவா கெட்டவங்க என்று தோற்றம் காட்டிறதுதான் வழமை. ஏன்னா யாரும் கிட்ட வரமாட்டாங்க. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செம கடுப்பேத்துவது இதுதான்..

1. உங்களுக்கு இந்தி தெரியாதா? என கேட்கும் சில கூமுட்டைக் கே**** இந்திய & அயல்நாட்டவர்கள்.

2. உங்கள் நாடு எது? என்று கேட்கும் தமிழ் மொழியறியா இந்திய & அயல்நாட்டவர்களிடன் நான் எப்பொழுதும் பகர்வது, "என் நாடு, தமிழ்நாடு".

உடனே அவர்கள் கேட்கும் அடுத்த கேள்வி, "அப்போ, கடவுச்சீட்டில் மட்டும் ஏன் இந்தியன்?"

வரும் கடுப்பில், ஆத்திரத்தில் விழும் சொற்கள்.... இங்கே பதியக்கூடாதவை....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் நாடு தமிழ்நாடு என்று முகத்தில் அறைவதுபோல் உங்களை விழிக்கும் ராஜவன்னியனே வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் நாடு தமிழ்நாடு என்று முகத்தில் அறைவதுபோல் உங்களை விழிக்கும் ராஜவன்னியனே வணக்கம்.

வணக்கம் அரசி...

தமிழனுக்கென எல்லைக்கோடுகளுடன் உள்ள ஒரே இடம் தற்பொழுது தமிழ்நாடுதான். நாமே அதை சொல்லவில்லையெனில், காலப்போக்கில் நம் அடையாளத்தையே இழந்துவிடுவோம். இப்போதிருக்கும் அரசியல்'வியாதிகள்', தமிழனையும், நாட்டையும் விற்று, கடைசியில் தமிழனின் கோவணத்தையும் உருவிவிடுவான்கள். மொழியென்பது நம் கருத்தை பரிமாறவுதவும் ஒரு கருவி மட்டுமே என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அது எம் தாய்க்குச் சமம். அன்னை தாய்ப்பாலுடன் ஊட்டிய உணர்வமுதத்தையும், இத்தாய்வீட்டையும் மறப்பவன் அல்லது சொல்ல மறுப்பவன், சோரம் போன மிருகமே.

Link to comment
Share on other sites

... கடவுளே என்று சொந்தக்காரர்களால் ஒரு தொல்லையும் இது வரை ஏற்படவில்லை . :huh:

ஆனால் தொலைபேசி எடுத்து விட்டு தங்களின் பெயரை சொல்லாமல் ....... தங்களை யார் என்று கண்டுபிடிக்கச் சொல்லி குவிஸ் வைப்பது .

....

இரவு ஒன்பது மணிக்கு பிறகு தொலைபேசி எடுக்கும் உள்ளூர் வாசிகள் .

முன்பே அறிவிக்காமல் திடீரென்று வந்து அழைப்பு மணியைஅடித்து வருபவர்கள் . வந்தவுடன் இதாலை ஒரு அலுவலாய் போனனாங்கள் கையோடை உங்களையும் எட்டிப் பாப்பம் என்று வந்தனாங்கள் நீங்கள் ஏதாவது அலுவலா இல்லைதானே என்று கேட்டு விட்டு இரவு சாப்பாட்டையும் முடித்துக் கொண்டு போன அலுவலை விட்டு தங்கள் வீட்டிற்கு திரும்பி செல்பவர்களை கண்டால் கடுப்பு வரும் ...

ஒரு தொல்லையும் தராத சொந்தக்காரர்களா??? smiley-think005.gif சிறி அண்ணா நீங்கள் தமிழ் தானே?

நம்பவே ஏலாமல் இருக்கு... :icon_mrgreen:

எனக்கு, முன்னறிவிப்பு இல்லாமல் வரும் நண்பர்கள், உறவினர் வீடுக்கு வந்து இப்படி ஏதும் சொனால்... அதுதான் வந்துடீங்களே... வாங்கோ வாங்கோ என்று சொல்லேக்க அசடு வழிய smiley-laughing018.gif என்று மின்சாரம் பாவிக்காமலே ஒளி பரவும்....

அதன்பிறகு, வீட்டுக்கு வாறம் என்று முன்னறிவித்தல் தாரதா நினைச்சு வீடு வாசல நிண்டு போன் பண்ணுவினம்... இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வாறதுக்கு இருக்கிறம் எண்டுவினம்... சரி என்று போன் வைக்க முதல் கதவு தட்டு சத்தம் கேட்கும்... இதெல்லாம் எப்படித் தான் யோசிக்குதுகளோ... எப்படித்தான், எங்கட முனோர்கள் சொந்தங்களைச் சமாளிச்சு போனார்களோ தெரியாது...ஸ்ஸ்ஸ்.... smiley-confused013.gif

smiley-angry015.gif குட்டி, மோகன் அண்ணா மற்றும் மட்டுறுப்பினர் குழுவினர்smiley-angry015.gif எனது கருத்தை வெட்டும் போது சரியான கடுப்பு வரும் .smiley-angry015.gif :huh:

:lol::huh::wub: இதுக்கு நான் பதில் சொல்லப் போக... எனக்கு smiley-computer012.gif நிச்சயம்... :lol:

Link to comment
Share on other sites

anbu anna,

yaro 2 per unga kitta nirayya pesunanga, illa enga thalaivar nu sollikira sila per namma makkali kappathamudiyalai nu katha sonnathukkaga ellathyum thallatheenga anna, engaluku romba kutra unarchiya irukku anna. ungal mel engalukku nirya anbu irukku anna.

ungal

rama thevan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடுப்பேத்திர விடயங்கள் என்று உங்கட எல்லாற்ற கடுப்பேறின கதைகளை படிக்கும் போதும்.... ஒரு மணித்தியாலயத்திற்கு 10ரூபா கொடுத்து புரவுசிங் சென்ரர் வந்து கடுப்பேறின உங்கட கருத்துக்களை படிக்கும் என்மேல பயங்கரமாய் கடுப்பு வருது........

சும்மா பகிடிக்கு கோவிக்காதீங்க.....

Link to comment
Share on other sites

அவர் இப்படியாம் மற்றவர் அப்படியாம்... அடுத்தவங்களை பற்றி கதைப்பது... சும்மா துருவி துருவி கதை கேட்பது.... சிலர் போன் பிசியாக இருந்தால் திரும்ப எடுத்து கேட்பது யார் கூட கதைத்தனீர்கள்... அவள் புருசன் கூடதவனாம் இவள் புருசன் குடியாம் இப்படி கதைப்பது.... இப்படி எல்லாம் யாரும் பேசினால் நான் எல்லை இல்லாத கோபத்துக்கு ஆள் ஆகி விடுவன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்னுமே புரியல... ஓரே கடுப்பா இருக்கு....

Link to comment
Share on other sites

.... சிலர் போன் பிசியாக இருந்தால் திரும்ப எடுத்து கேட்பது யார் கூட கதைத்தனீர்கள்...

free ஆக வைத்தால் நீங்கள் எடுப்பியளே... :lol: அது தான் பிஸி ஆக வைத்தேன் என்று சொல்லி கேட்பவரைக் கடுப்பெத்த வேண்டியது தானே... :lol:

Link to comment
Share on other sites

free ஆக வைத்தால் நீங்கள் எடுப்பியளே... :lol: அது தான் பிஸி ஆக வைத்தேன் என்று சொல்லி கேட்பவரைக் கடுப்பெத்த வேண்டியது தானே... :lol:

இப்படித்தான் சிலவேளை சொல்வது விவஸ்தை கெட்டதுகள் சிலர் குட்டி ......திரும்ப திரும்ப எடுத்து தொல்லை பண்ணுவது....

முகம் தெரியாமல் போன் பண்ணுவார்கள்... போன வருடம் எனக்கு இப்படி புத்தாண்டு பிறக்க போகும் நேரம் 12 மணிக்கு ஒரு போன் வந்தது... அது மாறி வந்து விட்டதா தெரிய வில்லை....போன் எடுத்த எருமை மாடு... ராசத்தி நீ வாழணும் என்று பாடல் போட்டது... போட்ட எருமை ஆணா பெண்ணா என்று கூட தெரிய வில்லை... வந்த கடுப்புக்கு கொலையே பண்ணி இருப்பன் நேரில் அந்த ஆள் வந்து இருந்தால்

Link to comment
Share on other sites

இப்படித்தான் சிலவேளை சொல்வது விவஸ்தை கெட்டதுகள் சிலர் குட்டி ......திரும்ப திரும்ப எடுத்து தொல்லை பண்ணுவது....

கேட்டல் பதில் சொல்வது அழகுதான்... இருந்தாலும் சில நேரங்களில silent ஆக இருந்தால் புரிந்தது கொள்ளுவினம்...

...போன் எடுத்த எருமை மாடு... ராசத்தி நீ வாழணும் என்று பாடல் போட்டது... போட்ட எருமை ஆணா பெண்ணா என்று கூட தெரிய வில்லை... வந்த கடுப்புக்கு கொலையே பண்ணி இருப்பன் நேரில் அந்த ஆள் வந்து இருந்தால்

நல்ல பட்டுத்தானே போட்டு வாழ்த்தி இருக்கினம்... :lol: இதுக்கு எதுக்குக் கொலைவெறி :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகம் தெரியாமல் வாழ்த்தி இருக்கிறார்கள். .........வேறு யாரும் அல்ல உங்க கூட பழகுபவர்கள் தான் அவர்களுக்கு எப்படி உங்க நம்பெர் தெரிந்தது.?...... எப்பவும் சீரியஸாக இராமல் கொஞ்சம் பகிடியாகவும் எடுங்க. பின்பு கதையை குடுத்து ஆளைகண்டு பிடிக்கிறது தான் யார் என்று ......? .

Link to comment
Share on other sites

முகம் தெரியாமல் வாழ்த்தி இருக்கிறார்கள். .........வேறு யாரும் அல்ல உங்க கூட பழகுபவர்கள் தான் அவர்களுக்கு எப்படி உங்க நம்பெர் தெரிந்தது.?...... எப்பவும் சீரியஸாக இராமல் கொஞ்சம் பகிடியாகவும் எடுங்க. பின்பு கதையை குடுத்து ஆளைகண்டு பிடிக்கிறது தான் யார் என்று ......? .

அக்கா கதை குடுத்தும் ஆளை கண்டு பிடிக்க முடியாமல் போனது மன வருத்தம்... இந்த ஆண்டும் வர போகும் யார் எனக்கு போன் எடுத்தது என்று இன்று வரை தெரியாது...

கேட்டல் பதில் சொல்வது அழகுதான்... இருந்தாலும் சில நேரங்களில silent ஆக இருந்தால் புரிந்தது கொள்ளுவினம்...

நல்ல பட்டுத்தானே போட்டு வாழ்த்தி இருக்கினம்... :lol: இதுக்கு எதுக்குக் கொலைவெறி :lol:

நல்ல பாடல்தான் ஆனால் விடிய விடிய போனை கட் பண்ண பண்ண திரும்ப எடுப்பது அழகு இல்லை தானே... இதனால் நான் போனை silent போட்டு விட்டேன் திரும்ப காலையிலும் வந்தது.... வேற பாடல்களுடன்...இதுக்குத்தான் கொலைவெறி

Link to comment
Share on other sites

.... பின்பு கதையை குடுத்து ஆளைகண்டு பிடிக்கிறது தான் யார் என்று ......? .
:blink::lol: அட இதா இஞ்ச நடக்குது... :( கனபேரைக் கண்டு பிடிச்சிருபியள் போல இருக்கு... :lol:
Link to comment
Share on other sites

என்னைப் பொறுத்தளவில் கடுப்பேத்துவது என்று நான் பழக்கப்படவில்லைப்போலும். மிகப் பொறுமைசாலி என்று என்னை நான் நினைக்கின்றேன். மிக மிக குறைவு நான் கடுப்படைவது. குறிப்பாக சொல்லப்போனால் இல்லை என்றே சொல்லலாம். தெரிந்தளவிற்கு நான் கடுப்படைந்ததே இல்லை என்று சொல்லாம்.(வரப்போகின்ற மனைவி கொடுத்து வைத்தவா என்று நீங்கள் கூறுவது கேட்கின்றது.... வரப்போகின்றவா என்ன பண்ணுவாவோ என்று நான் நினைப்பது உங்களுக்கு எங்கே கேட்கப்போகின்றது. ஏதோ அவாவும் என்னைப் போல இருந்தால் நல்லது).

ஆனால் எனக்கு சலிப்பை ஏற்படுத்திய விடயங்களை உங்களிடம் பகிருகின்றேன்.

ஒட்டுமொத்மாக சொல்லப்போனால் நெகரிவ் சிந்தனையாளர்களது நடவடிக்கைகள்.(அவர்கள் தங்களிற்கு தெரியாமலே அதிகமானவர்கள் அப்படி நெகரிவாக செயற்படுகின்றார்கள். என்னைப் பொறுத்தளவில் அவர்களை பொசிற்றிவான வழியில் கருத்துக்களைக் கூறி அவர்களுடன் அன்பாக நடப்பதால் அவர்கள் அனைவரும் என்னுடன் நன்றாகத்தான் இருக்கின்றார்கள். ஆகவே எவரும் அப்படி கடுப்பேத்த நினைப்பதில்லை. எல்லோரும் நல்லவர்களே. ஆனால் நாமும் நம்மை சூழ உள்ள உலகமுமே அவர்களை அப்படி நடக்க வைக்கின்றது என நினைக்கின்றேன். ஆகவே நாமும் பொசிற்றிவாக இருந்தால் அடுத்தவர் எங்களை கடுப்படைய வைப்பது மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.)

1.விருந்தினர்கள் வந்திருக்கும்போது அவர்களையும் இருத்திவைத்துக் கொண்டு தொலைக்காட்சி பார்ப்பது. அதாவது நாம் ஒரு வீட்டிற்கு சென்றால் எல்லோரும் வரவேற்றுவிட்டு அதே நேரத்தில் தொலைக்காட்சி வேலை செய்து கொண்டிருக்கும். எம்மையும் அங்கே இருக்கவிட்டுவிட்டு எம்முடன் சற்று நேரம் கதைத்துவிட்டு தொடர்ந்து தொலைக்காட்சியையும் பார்த்து பார்த்து எம்முடனும் கதைப்பது. - எனது அன்பான வேண்டுகோள் உறவினர் நண்பர்கள் எவராயினும் வருகை தரின் தயவு செய்து தொலைக்காட்சி அல்லது வானொலியை நிறுத்துங்கள். தற்செயலாக நிறுத்த முடியாவிடின் அந்த உங்களுக்குப்பிடித்த நிகழ்ச்சி முடிந்தவுடன் அதனை நிறுத்தி விட்டு அவர்களுடன் கதைத்து விட்டு அவர்கள் சென்றபின்னர் அல்லது அவர்களும் தொலைக்காட்சி பார்க்க ஆசைப்பட்டால் மாத்திரம் அதனை இயக்குங்கள். என்னைப் பொறுத்தளவில் யார் இதனைச் செய்வதையும் அல்லது எங்கள் வீட்டில் இது நடப்பதையும் நான் விரும்புவதில்லை. வந்தோரை வரவேற்று உபசரிப்பதற்கே நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

வெளிநாட்டு தமிழர்களிடம் பிடிக்காமல் போன அந்த விடயமே தற்போது என்னால் சொல்லக் கூடியதாக இருக்கின்றது. மற்றும்படி ஏதேனும் உணர்ந்தால் இங்கே பரிமாறுகின்றேன். (நீங்களும் இப்படிச் செய்திருந்தால் என்மீது கடுப்படைந்துவிடாதீர்கள்...lol)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையபிள்ளை , கடவுளே என்று சொந்தக்காரர்களால் ஒரு தொல்லையும் இது வரை ஏற்படவில்லை . :)

இது எந்த விதத்தில நியாயம்?! :( எனக்கு நினைவு தெரிஞ்சு அலுப்பு தராத உறவினர் இல்லை எனலாம்... ஒன்று இல்லாட்டிலும் இனொன்று சுழற்சி முறையில் உபத்திரவம் தந்து கொண்டு தானே இருக்குதுகள்....

ஆனால் தொலைபேசி எடுத்து விட்டு தங்களின் பெயரை சொல்லாமல் ....... தங்களை யார் என்று கண்டுபிடிக்கச் சொல்லி குவிஸ் வைப்பது .

:D "நீங்கள் யாரென்று ஜோசிச்சு கண்டு பிடிச்சு நானே உங்களுக்கு எடுக்கிறன்...அதுவரை பொறுங்கோ..!" என்று போட்டு ரிசீவரை டோங் என்று வைத்து விடலாம் அடுத்தமுறை!!

முன்பே அறிவிக்காமல் திடீரென்று வந்து அழைப்பு மணியைஅடித்து வருபவர்கள் . வந்தவுடன் இதாலை ஒரு அலுவலாய் போனனாங்கள் கையோடை உங்களையும் எட்டிப் பாப்பம் என்று வந்தனாங்கள் நீங்கள் ஏதாவது அலுவலா இல்லைதானே என்று கேட்டு விட்டு இரவு சாப்பாட்டையும் முடித்துக் கொண்டு போன அலுவலை விட்டு தங்கள் வீட்டிற்கு திரும்பி செல்பவர்களை கண்டால் கடுப்பு வரும் .

அவசர அலுவலாய் போகேக்க தான் போற வழியென்று எங்கட வீட்டுக்கு சனம் முந்தி வந்தால் அதுகள் வெளிக்கிட இரண்டொரு கிழமை எடுக்கும்.... :( !!

அது தானே ......... மாட்டுப்பட்டுப் போனனோ ......... :blink::lol::D:lol:

ஓம் அங்க தான் பார்வை இருந்தது ஆனால் புலன் பிள்ளையாரான வேற எங்கேயோ தான் என்று பொய் சொல்லி தப்ப தெரியாத பச்சை பிள்ளையா இருக்கிறீயல்... ச்சா :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படிக்கேள்விகேட்டா கடுப்பாய் இருக்கும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி நீங்கள் 'அங்கை' பார்க்காமல், அவர் 'அதை' இழுத்து மூடுவதை மட்டும் காணுவது?

(எல்லாப் பயல்களும் என்னை மாதிரித்தான் போல)

அப்ப நாங்கள் எல்லாம் ஒரே மட்டையில் ஊறிய குட்டைகள்தான் :lol::(

'Ilayapillai'

ஓம் அங்க தான் பார்வை இருந்தது ஆனால் புலன் பிள்ளையாரான வேற எங்கேயோ தான் என்று பொய் சொல்லி தப்ப தெரியாத பச்சை பிள்ளையா இருக்கிறீயல்... ச்சா

1079_0655.jpg

இனிமேல் இப்படித்தான் பார்க்க வேணும் போலை ...........

:lol::blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்சிறி இதிலுள்ள சின்ன வாண்டு நீதானே தம்பியா? என்ன பார்வை தமிழ்சிறியின் பார்வை இந்தப்பார்வை அந்தப்பார்வை..

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான்,

நீங்கள் சட்டத்துறையுக்க போய் ஜமாய்ச்சு இருக்கவேணும். தவறுதலாக தெரியாமல் உயிரியல் துறையுக்க போயிட்டீங்கள். ஆகக்குறைஞ்சது அரசியலுக்கையாவது போய் இருக்கலாம். காலம் இன்னும் கடக்கவில்லை. இனியாவது உந்த பூச்சி, பூரான்களை ஆராயுறதை விட்டுப்போட்டு எதிர்காலத்தில ஓர் அரசியல்வாதியாய் வருவதற்கு முஸ்தீபு போடப்பாருங்கோ. எங்கையோ போயிடுவீங்கள். :(

கருத்துக்களத்தில் காரசாரமா பதில் எழுதினா அதை மறுதரப்புக்கள் கடுப்பாகி எழுதிறாங்க அப்புடின்னு நினைச்சுக்கிறாங்க. ஆனால் எப்பவும் வரும் பதிலுக்கு ஏற்ப தான் பதில் எழுதுவன். அவங்க கடுப்பாகிக் காட்டினா.. அவங்களுக்கு புரிய பதிலுக்கு எழுதுவன். ஆனா நிஜத்தில கடுப்பாகினது கிடையாது. நான் காரசாரமா கருத்தாடினவங்களில சிலரை நேரில சந்திச்சிருக்கன். அப்ப யாரும் யாரையும் கடுப்பேத்தல்ல. சகஜமாவே இருந்தாங்க. நல்ல நண்பர்களாக..!

ஆனால் சிலரின் தொடர்சியான சில நடத்தைகள் எனக்குப் பிடிப்பதில்ல. அதனால சிலரை சந்திக்க விரும்புறதில்ல. அப்படிச் சந்திப்பது அநாவசியம் என்று நினைச்சுக்குவன்.

கருத்துக்களத்தில் உள்ள எழுத்துக்களின் அடிப்படையில் ஆட்களின் குணத்தை எடைபோடுவது தவறு. சிலர் நல்லா எழுதுவாங்க. ஆனால் நிஜத்தில் கொடுமையான ஏமாற்றுப் பேர்வழிகளாகக் கூட இருக்கலாம்.. நல்லவன்னு அல்லது நல்லவள்ளுன்னு காட்டிக்க அப்படி நடிக்கலாம் இல்லையா...??! சில பேர் கடுப்பாகி கருத்து எழுதிறது போல இருக்கும். ஆனால் அவங்க தங்கட நியாயம் மறைக்கப்பட்டிடுமோ என்ற ஆதங்கத்ததை தான் வெளிப்படுத்திக்கிட்டு இருப்பாங்க. ஆனால் மற்றவங்க அதைக் கடுப்பாகிட்டான் என்று பழிச்சிட்டு இருப்பாங்க. இவைதான் உண்மையில் பொறுமையை சோதிக்கும் விடயங்கள். :lol:

நாங்க பொதுவா கெட்டவங்க என்று தோற்றம் காட்டிறதுதான் வழமை. ஏன்னா யாரும் கிட்ட வரமாட்டாங்க. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்,

நீங்கள் சட்டத்துறையுக்க போய் ஜமாய்ச்சு இருக்கவேணும். தவறுதலாக தெரியாமல் உயிரியல் துறையுக்க போயிட்டீங்கள். ஆகக்குறைஞ்சது அரசியலுக்கையாவது போய் இருக்கலாம். காலம் இன்னும் கடக்கவில்லை. இனியாவது உந்த பூச்சி, பூரான்களை ஆராயுறதை விட்டுப்போட்டு எதிர்காலத்தில ஓர் அரசியல்வாதியாய் வருவதற்கு முஸ்தீபு போடப்பாருங்கோ. எங்கையோ போயிடுவீங்கள். :lol:

எதிர்காலத்தில் அரசியல் நீரோட்டத்தில் கலக்கலாம் என்று தான் இந்த நீரோடையில் நீச்சலடிச்சுப் பழகிறன்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சில கடுப்பாக இருக்கும் விடயங்கள் ஆள்பாதி ஆடை பாதியாக வருவது வந்த பின்பு நம்ம பசங்கள் ஒரு பார்வை பார்த்தால் என்னை பார்க்கான் உனக்கு அம்மா இல்லையா ,அக்கா இல்லையா என்று கேட்பது :(

நம்ம பசங்கள் காஞ்ச மாடுகள் தெரியதாதா என்ன இவங்களுக்கு :lol::):lol:

பேந்து கூசுது கூச்சமா இருக்கு என்று பிலா விடுகிற ஆட்களை [பெண்களை] பார்த்தால் கடுப்பாகுது :blink:

எப்படித்தான் வேலை செய்யும் இடத்தில் கஸ்ரப்பட்டு வேலைசெய்வோம் அந்த வேலையில் வந்து கடைசியில் வந்து பெயர் வாங்கிற ஆட்களை கண்டால் ஒரேகடுப்புத்தான் :lol:

Link to comment
Share on other sites

எனக்கு சில கடுப்பாக இருக்கும் விடயங்கள் ஆள்பாதி ஆடை பாதியாக வருவது வந்த பின்பு நம்ம பசங்கள் ஒரு பார்வை பார்த்தால் என்னை பார்க்கான் உனக்கு அம்மா இல்லையா ,அக்கா இல்லையா என்று கேட்பது :lol:

அனுபவமோ முனிவர் அண்ணா? :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை.  சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன்.
    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.