-
Topics
-
Posts
-
இந்தியாவில் வர்க்க வேறுபாடு அதிகம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான் ...இறந்த பிரியங்கா பிராமணர் என்ற படியால் சட்டம் தன கடமையை விரைவாக செய்திருக்கலாம்… இவவை[ பிரியங்காவை ]கொலை செய்தது உயர் சாதியாய் இருந்திருந்தால் கேஸ் வேற மாதிரி போயிருக்கலாம்
-
வாழ்த்துக்கள் . மேலும் சாதிக்க வேண்டும்
-
By goshan_che · Posted
வரலாற்றில் வாழ்ந்தவர்களை அவர்கள் காலத்தில் இருந்து பார்ப்பது சரியே என்றபோதும், அவர்கள் தப்புக்களை வெளிக்கொணர்வதில் தப்பேதும் இல்லை. நாவலரின் நல்லவற்றை நினவுகூறும் அதே வேளை அவரின் கறுப்பு பக்கங்களையும் நினைவுகூர்ந்து அவற்றை மறுதலிப்பதுதான் அறிவார்ந்த போக்கு. -
இலங்கை,இந்தியாவில் இப்படியான என் கவுண்டர்கள் மூலம் உண்மையான குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பு இருக்குது...நான் இல்லை என்று சொல்லவில்லை. இந்தியாவோட ஒப்பிடுகையில் இலங்கையில் அரசியற் கொலைகளை தவிர இப்படியான கொலைகள் குறைவு சுவாதி கொலையின் பின்னணி வேறு அங்கு பாலியல் பலாத்காரம் இடம் பெறவில்லை...அவரது கொலைக்கு பின்னால் மத்திய அரசோ அல்லது அவர் வேலை செய்த ஹதராபாத் கொம்பனி சம்மந்தப்பட்டு இருக்குது என்று சொல்கிறார்கள்...அநியாயமாய் அப்பாவி ராம்குமார் மாட்டுப் பட்டுப் போனார். இந்த சம்பவம் பிரியங்காவின் கொலை நடந்து 8 யில் இருந்து 10 நாட்களுக்குள் செய்து முடித்து விட்டார்கள் . .அரசுக்குத் தெரியும் மணித் உரிமை ஆணைக்குழு கட்டாயம் ஆதாரங்கள் கேட்பார்கள் என்று , அதனால் ஹை வேயில் நடந்ததால் கட்டாயம் கமராக்கள் இருக்கும்.[ இதை செய்தவர்களும் போனில் வீடியோ பிடித்து வைத்து உள்ளதாக சொல்கிறார்கள்...அந்த வீடியோவை காட்டுங்கள் என்று கேட்பவர்கள் அதை பார்த்து ,ரசிக்கும் வக்கிர மனம் கொண்டவர்களாய்த் தான் இருப்பார்கள் ...அதை போலீஸ் வெளியில் விட வேண்டிய அவசியமில்லை .] டிஎன் ஏ ஆதாரம் இந்த 4 பேருடையதும் பொருந்தி போயிருக்கும். அதில் இருவர் 17 வயதுக்கு குறைந்தவர்கள்...அதில் ஒருவரது அப்பாவிடம் பிரியங்காவின் கொலை சம்மந்தமாய் கேட்ட போது ,அவனுக்கு 17 வயசு தானே சீக்கிரம் வெளியில் வந்திடுவான் என்று சொல்லி இருக்கிறார். நிர்பயாவின் வழக்கிலும் அந்த பெடியன் வெளியில் வந்து சுதந்திரமாய் இருக்கிறான் ....அவர்களுக்கு தாங்கள் செய்த பிழையினை உணர சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை . பிரியங்கா வழமையாக சுங்க சாவடிக்கு அண்மையில் தான் வாகனத்தை நிறுத்துவதாகவும் அந்த அன்று அங்கு விட அவர்கள் மறுத்ததாகவும் சொல்லப்படுகின்றது...யார் அவர்கள் ? ஏன் மறுத்தார்கள் என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் . லொறி டிரைவர்கள் கொஞ்ச பேர் தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதாக அவ தனது தங்கச்சிக்கு தொலைபேசியில் சொல்லி உள்ளார். மோ.சைக்கிளை கொண்டு போன பெடியனைக் காணவில்லை என்று தேடி அடித்து , அவனோடு கதைத்திருக்கிறா. போலீசிடம் அவர்களது உரையாடலை இருக்குது. எனக்கு இவர்கள் 4 பேரும் குற்றவாளிகள் என்பதில் சந்தேகம் இல்லை...ஆனால் இவர்களோடு சேர்ந்து வேறு யாரும் பெருந்தலைகள் இருக்கலாமோ என்ற சந்தேகமும் இருக்கு . இந்திய அரசியல்வாதிகள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை மாற்றாமல் இருப்பதற்கான காரணமே தாங்கள் தப்பிப்பதற்காகத் தான் . இந்த என்கவுண்டர் செய்த அதிகாரி நேர்மையானவாய் இருக்கலாம்...கோட் ,கேஸ் என்று போனால் இழுபடும் ...குற்றவாளிகள் வயதை காட்டி தப்பித்து விடுவார்கள் என்பதால் தங்கட மாநில அரசின் உதவியுடன் என் கவுண்டர் செய்திருக்கலாம். உண்மை எப்படியும் ஒரு நாள் வெளியில் வரத் தானே வேண்டும்
-