• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • ஒவ்வொரு சாம்ராஜ்யத்தின்  எழுச்சிக்கு பின்னும் இன்னொரு சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி இருக்கும் .1453 ல் கொன்ஸ்தாந்திநேபிள் ஓட்டமன் துருக்கியரால் கைப்பற்றப்பட்டது என்பதை ஒரு வரியில் கடந்து சென்றிருப்போம் அதன் பின் உள்ள ரத்தகளரியான வீரம்செறிந்த வரலாற்றை  சொல்வது தான் Rise of Empires : Ottoman (Netflix) (மெ(மு)ஹமட்-(II) VS கொன்ஸ்ரன்டைன் (XI))  மேற்கு வரலாற்றாசிரியர்களால் மெகமட் ன்  இந்த வெற்றியும் அவனின் சிறப்புகளும் எந்தளவுக்கு வரலாற்றில் சிறப்பாக கூறப்படிருக்கிறதோ தெரியவில்லை துருக்கியர்களால் இயன்றவரை அவரின் சிறப்புகள் புத்தி கூர்மை வீரம் என எல்லாம் சிறப்பாக காட்டப்பட்டிருக்கிறது  மெகமட் தாய் எந்த நாட்டவர் என இன்று வரை வரலாற்றாசிரியர்களால் தெளிவாக கூறமுடியவில்லை போலிருக்கிறது .சிறுவயதில் தாயைப்பிரிந்து தந்தையிடம் செல்லும் முகமட் அங்கு தனது தந்தையின் இரண்டாவது மனைவியினால்(சித்தி) வளர்க்கபடுகிறார்  அவரின் அறிவுரைகள் மற்றும்  வளர்ப்பு முறைகளே மிகச்சிறந்த ஒரு பேரரசனாக எதிர்காலத்தில் அவரை உருவாக்கியது.கிட்டத்தட்ட 12 மொழிகளை பேசக்கூடியதாக இருந்தார்  .12 வயதில் தந்தையிடமிருந்து சிம்மாசனம் இவரின் கைக்கு மாறுகிறது தனது கைக்கு வந்தவுடன் அவரின் முதல் இலக்காக அவர் குறி வைத்தது தந்தையால் பலமுறை முயன்றும் வெற்றி பெறமுடியாமல் போனதும்  1300 ஆண்டுகளாக எதிரிகளால் வெல்லப்படமால் இருந்ததும்  இரண்டு கடல்கள் சந்திக்கும் இடத்தில் அமைந்திருந்ததும் இரண்டுகண்டங்களின் சந்தியாக இருந்ததும் வெல்லமுடியாத கோட்டை சுவர்களை கொண்டிருந்ததுமான தங்க கொம்பு என்று அழைக்கப்படும் இயற்கை துறைமுகத்தை தன்னகத்தே கொண்டதுமான கொன்ஸ்தாந்திநேபிளை... தலைமை அமைச்சரிலிருந்து முழு அமைச்சரவையே அவரின் முடிவுக்கு எதிராக இருந்தது.இறுதியில் கொடுத்த அரசை தந்தை திரும்ப எடுத்து கொண்டு தனது பிரதிநிதியாக இருக்குமாறு தலைநகரிலிருந்து நீண்ட தொலைவில் உள்ள ஒரு பகுதிக்கு மஹ்மட்டை அனுப்புகிறார். தனது 21 ஆவது வயதில் தந்தையின் இறப்பின் பின் அரியணை ஏறும்  மஹ்மட் தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் நோக்கில் 70ஆயிரம் துருப்பினருடன் பயணமாகிறார் .. தனது தந்தையின் தோல்விகளிலிருந்து பாடம் கற்றிருந்த மஹ்மட் மிகப்பலம் வாய்ந்த உயரமான  கோட்டை சுவர்களை தகர்ப்பதன் மூலம் மட்டுமே  நகரத்தை கைப்பற்ற முடியும் என அதற்கான வழிகளை தேடுகிறார் ஹங்கேரிய நாட்டு டிசைனர்   ஒருவர் 8மீ நீளம் மற்றும் 2மீட்டர்.அளவான விட்டம் கொண்ட பீரங்கி தயாரிப்பதற்கான மாதிரி வரைபடத்தை அவர்முன் காட்ட அதை உருவாக்கி அதையே தனது இரகசிய ஆயுதமாக கொண்டு முற்றுகையை ஆரம்பிக்கிறார் .. முற்றுகை குறிப்பிட்ட காலத்திற்குள் முறியடிக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் ரோமிலிருந்த  போப்பின் உதவி வந்துவிடும் . மஹ்மட் இரகசிய ஆயுதம் பீரங்கிகளாக இருக்க கிழக்கு ரோமானியர்களின் ஆயுதமாக   இத்தாலிய கடல் கொள்ளை காரனும் மிகச்சிறந்த வாள் சண்டை வீரனும் கோட்டை களை பாதுகாப்பதில் வல்லவனுமான Giustiniani யையும் அவனின் படையையும் கோட்டையை பாதுகாக்கும்  பொறுப்பில் விடுகின்றார் கொன்ஸ்டன்டைன்-11 இடைவிடாது முழங்கும் பீரங்கிகளால் கோட்டை சுவர்கள் விரிசல் விழுந்தாலும் துருக்கியர்களின் ஒவ்வொரு தாக்குதல்களையும் giustiniani யும் அவரின் படையும் முறியடிக்கிறது முற்றுகை நாள்கள் நீள தொடங்குகின்றன. இறுதியில்  முற்றுகை தொடங்கி 8 வாரங்களின்  பின் தொடர் முற்றுகைகளினாலும் முகமட் இன் சில தாக்குதல் உத்திகளினாலும் கொன்ஸ்தாந்திநேபிள் துருக்கியர் வசமானது . எப்படி என்பதை நெட் ப்ளிக்ஸ் ல் பார்த்து மகிழுங்கள்  (1922 வரை அவர்கள் வசம் இருந்ததாக  வரலாறு சொல்கிறது) கொன்ஸ்தாந்திநேபிள் துருக்கியர் வசமானதன் பின்னரே மேற்கு நாடுகள் வேறு வழிகளை தேடி தமது பயணங்களை ஆரம்பித்தனர் . 1497 ல் அப்படி வந்த ஒரு ஐரோப்பிய நாட்டவன் தன் குழுவினருடன் கள்ளிகோட்டை ( கேரளா) துறைமுகத்தையும் (1505ல் காலி- இலங்கை  துறைமுகத்தையும் கண்டடைந்தததாக வரலாறு சொல்கிறது )
    • நாடளாவிய ரீதியில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள போலி வைத்தியர்களை இனங்கண்டு தண்டிக்க நடைமுறையில் சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவருமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாடுமுழுவதும் சுமார் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான போலி வைத்தியர்கள் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறான போலி வைத்தியர்களில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமானோரை அடையாளம் கண்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார். எனவே, அவ்வாறான போலி வைத்தியர்களை இனங்கண்டு, அவர்களைத் தண்டிக்க நடைமுறையில் சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவருமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/நாடளாவிய-ரீதியில்-சுமார்/  
    • தமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கை தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஞானசார தேரர்! சாய்ந்தமருதில் புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டதைப் போன்று, தமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இருக்கும் கல்முனையிலும் தனிப் பிரதேச செயலகத்தை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் “சாய்ந்தமருது தனி பிரதேச செயலக பிரிவாக பிரித்தமை உண்மையில் வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதுதொடர்பில் இன்று பலரும் அச்சமடைந்து, சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் எதிர்ப்பினை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால், அவ்வாறு அச்சமடையத் தேவையில்லை. இது மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடாகத்தான் நாம் கருதுகிறோம். அதேபோல், 30 வருடங்களாக கல்முனையில் தனிப் பிரதேச செயலகம் வேண்டும் என தமிழ் மக்கள் கோரிக் கொண்டிருக்கிறார்கள். இதுதொடர்பாக போராட்டங்களைக் கூட தமிழர்கள் மேற்கொண்டிருந்தார்கள். எனவே, சாய்ந்தமருது மக்களுக்கு செய்த சேவையைப் போல, இந்த தமிழ் மக்களுக்கான கோரிக்கைகையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் நாம் கேட்டுக் கொள்கிறோம். எனவே, கல்முனையில் தனியான பிரதேச சபை ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கையாக இருக்கிறது. சஹ்ரானின் சம்பவத்தை வைத்துக் கொண்டு இந்த விடயத்தில் சிலர் கருத்து வெளியிட்டாலும், அரசாங்கத்தின் தற்போதைய செய்றபாடு தொடர்பாக எவரும் குழப்பமடையத் தேவையில்லை” என அவர் கூறினார். http://athavannews.com/தமிழர்களின்-நீண்ட-காலக்/
    • வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய அமெரிக்கா முயற்சி எடுக்கும் – கூட்டமைப்பிடம் அமெரிக்க காங்கிரஸ் உறுதி! இலங்கை அரசாங்கமானது தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை உறுதிசெய்யும் வகையில் அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினரும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் வெளிவிவகார உபகுழுவின் தலைவருமான அமி பேரா இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து குழுவினரை தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன், தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பு உ ருவாக்கம் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார். ஆனால் தற்போதைய அரசாங்கம் வேறுவிதமான நிலைப்பாட்டினை கொண்டுள்ளதாகவும் பெருன்பான்மை மக்கள் அதிகாரபரவலாக்கத்திற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை எனவும் அத்தகைய சந்தர்ப்பத்தில் மாற்று வழிகளை யோசிக்க வேண்டும் எனவும் உண்மைக்கு புறம்பாக அறிக்கைகள் வெளியிடுவதனையும் சுட்டிக்காட்டினார். தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். அவை அனைத்தும் பதியப்பட்டவையாக உள்ளன எனவே இத்தகைய நிலையில் சர்வதேச சமூகம் ஐந்தே வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதனை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்த வாக்குறுதிகள் அனைத்தும் விடுதலைப்புலிகளின் காலத்தில் கொடுக்கப்பட்டவை எனவும் தற்போது விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்கிற காரணத்தினால் வாக்குறுதிகளில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்க முடியாது என்பதனையும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்க முடியாது என்பதனையும் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார். உலகின் பலவேறு பகுதிகளில் உள்ளவாறு ஒரு அதிகாரபரவலாக்கத்தின் மூலமான அரசியல் தீர்வொன்றினை நாம் எதிர்பார்க்கிறவம் என் வலியுறுத்திய இரா சம்பந்தன் அவர்கள், இலங்கை எனது நாடு இங்கே சம உரிமையுள்ள பிரஜையாக நான் மதிக்கப்படவேண்டும். அண்மையில் இலங்கை பிரதமருடனான ஊடக சந்திப்பில் இந்திய பிரமர் இலங்கை மக்கள் நீதியுடனும் சமத்துவத்துடனும் அமைதியுடனும் வாழ்வதற்கான சூழல் அமைய வேண்டும் என்பதனை வலியுறுத்தி இருந்தார் என்பதனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சுட்டிக்காட்டினார். நியாயமுள்ள அரசியல் தீர்வொன்றினை அடைய முடியாதே போனால் அது பாரிய பின்விளைவுகளை கொண்டுவரும் என தெரிவித்த இரா.சம்பந்தன், தமிழ் தலைவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிங்கள தலைவர்கள் மதிக்காதன் விளைவே விடுதலைப்புலிகளின் உருவாக்கத்திற்கு காரணம் என்பதனையும் சுட்டிக்காட்டினார். இதன்போது கருது தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் அவர்கள் 2012ம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய இராஜ்ஜியம் மனித உரிமை பேரவையில் முன்வைத்த பிரேரணையின் அமுலாக்கத்தின் அவசியம் குறித்து தெளிவுபடுத்தினார். மேலும் நிலையான அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றினை நிலைநாட்ட வேண்டுமெனில் பிரேரணையில் உள்ள விடயங்கள் அமுலாக்கப்படவேண்டும் எனவும் சுமந்திரன் வலியுறுத்தினார். இதற்கப்பால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமை தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படுவதன் அவசியத்தினை விளக்கிய திரு சுமந்திரன் அவர்கள் தம் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அறிந்துகொள்ளாமல் எந்தவொரு நஷ்ட ஈட்டிற்கும் எம்மக்கள் அணுமதிக்கப்போவதில்லை என தெரிவித்த சுமந்திரன், அரச படைகளிடம் கையளிக்கப்பட்டவர்கள் இருந்திருப்பின் அவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்ற உண்மை வெளிக்கொணரப்படவேண்டும் எனவும் தெரிவித்தார். உண்மையை கண்டறிந்து நஷ்ட ஈடு வழங்குவதில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலம் மற்றும் நஷ்ட ஈட்டு அலுவலகம் என்பன சேர்ந்து இயங்க வேண்டும் என தாம் எதிர்பார்த்ததாகவும் அது தற்போது நிகழ்வதற்கான சாத்தியங்கள் குறைவு எனவும் தெரிவித்த இரா.சம்பந்தன், எம்மால் இயலுமான அனைத்தையும் நாம் செய்து விட்டோம் இனிமேல் இலங்கை அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவனத்தை சர்வதசேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார். பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் கருத்து தெரிவித்த எம். ஏ. சுமந்திரன் அவர்கள் வேலைவாய்ப்பின்மையை குறைக்கும் முகமாக புதிய அபிவிருத்தி திட்டங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு தேவை என்பதனை சுட்டி காட்டினார். மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு ஒரு விசேட வேலைத்திட்டம் தேவை என்பதனையும் சுட்டிக்காட்டிய எம். ஏ சுமந்திரன் மீன்பிடித்துறை , விவசாயம், பண்ணனை வளர்ப்பு போன்ற துறைகள் நவீனமயப்படுத்தப்பட வேண்டியதன் அவைசியத்தினையும் சுட்டிக்காட்டினார். சர்வதேச சமூகத்தின் குரல் இலங்கை விடயம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் கேட்ட வேண்டும் எனவும் தமிழ் மக்களிற்கான ஒரு அரசியல் தீர்வு எட்டப்படும் பணியில் சர்வதேசத்தின் பங்களிப்பு அத்தியாவசியமானது எனவும் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார். http://athavannews.com/வாக்குறுதிகளை-நிறைவேற்-2/