Jump to content

நான் ரசித்த விளம்பரம் .

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nilmini said:

அம்மா செய்யும் மூலிகை கோப்பி: கொத்தமல்லி, சீரகம், ஓமம், மிளகு, வேர்க்கொம்பு, ஓரிரு கராம்பு, ஏலக்காய் எல்லாம் கருக வறுத்து, விரும்பினால் கொஞ்ச கோப்பியையும் வறுத்து நன்றாக அரைத்து ஆறவைத்து போத்தலில் போட்டு வைத்தால் 6 மாசம் வரை இருக்கும். கருப்பட்டியுடன் குடிக்கலாம். அல்லது தேன் சேர்க்கலாம்

animiertes-kaffee-bild-0024.gif Black-coffee GIFs - Get the best GIF on GIPHY animiertes-kaffee-bild-0053.gif

நில்மினி.... இதே முறையில், முன்பு அம்மா செய்வார்கள்.நல்ல வாசமாக இருக்கும். 😋
அத்துடன் தடிமன், இருமல் இருந்தாலும்... இதனை குடிக்க நல்ல பலன் கிடைக்கும். 🙂

இந்தக் கோப்பி.... "கந்தர்மடம் ஸ்பெஷல்" போலுள்ளது. 😂
இப்படி  கோப்பி அரைக்கும் முறையை, காப்புரிமை  (Copyright) எடுத்து வைக்க வேணும். 😎
இல்லாட்டி...
மற்ற ஊர்க்காரர், தங்கடை ஊர் கோப்பி என்று உரிமை கொண்டாடுவார்கள். 😜 animiertes-lachen-bild-0116.gif

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

வெரி சொறி தமிழ்சிறி & நில்மினி ....இது ஏற்கனவே "நல்லூர் கோப்பி" என்னும் பிராண்டில் காப்புரிமை, மோதிர உரிமை எல்லாம் பெற்றாகி விட்டது ...... எனது "சதி" இப்படித்தான் செய்து யூரோப் முழுதும் இருக்கும் தனது, எனது சகோதரங்களுக்கு எல்லாம் அனுப்பி வைக்கிறவ......அவர்களும் இங்கு வரும்போது மறக்காமல் கோப்பிகொட்டை பைக்கற்றுகளுடன் வருவார்கள்........!   😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி.... இதே முறையில், முன்பு அம்மா செய்வார்கள்.நல்ல வாசமாக இருக்கும். 😋
அத்துடன் தடிமன், இருமல் இருந்தாலும்... இதனை குடிக்க நல்ல பலன் கிடைக்கும். 🙂

இந்தக் கோப்பி.... "கந்தர்மடம் ஸ்பெஷல்" போலுள்ளது. 😂
இப்படி  கோப்பி அரைக்கும் முறையை, காப்புரிமை  (Copyright) எடுத்து வைக்க வேணும். 😎
இல்லாட்டி...
மற்ற ஊர்க்காரர், தங்கடை ஊர் கோப்பி என்று உரிமை கொண்டாடுவார்கள். 😜 

அய்யய்யயோ நாங்கள் கந்தர்மடம் காப்புரிமை எடுக்க முதல் சுவி வீட்டில் இருந்து யூரோப் முழுவதும் பிரபல்யம் ஆகி விட்டதே (தோட்டுரிமையோட😂) ஆனால் உண்மையிலேயே உடையார் ஒழுங்கை நாவலர் குடும்பம் எல்லோரும் சேர்ந்து அப்பம்மாவின் வளவில் ஆறு மாதத்துக்கு போதுமான தூள் சம்பல் இடிப்பித்து எல்லாக்குடும்பக்களிடையும் பிரித்து எடுத்ததைப்போல நான் வேறெங்கும் பார்க்கவில்லை. நாலு மா இடிக்கும் பெண்கள் விடியவே வந்து கடலைப்பருப்பு, உளுந்து, பயறு, செத்தல் மிளகாய், கருவேப்பிலை எல்லாம் வறுத்து கல்லுரலில் அருவல் நெருவலாக இடிப்பார்கள். நிறைய தேங்காய் துருவி கருக வறுத்து கொஞ்ச தூள் சம்பலுக்கு அதையும் சேர்த்து செய்வார்கள். இது,தென் இந்தியாவில் செய்யும் இட்லி தோசை பொடி மாதிரி இருக்கும். தோசை, சோறு, பால் சோறு எண்டு எல்லாத்துக்கும் அதையும் சேர்த்து சாப்பிடலாம்

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/9/2021 at 15:35, suvy said:

கோடாலித் தைலம் மட்டும் என்ன குறைஞ்சதோ......!   😂 

நாங்கள் எல்லோரும் இப்பவும் பாவிக்கிறோம். சிங்கப்பூரில் வாங்குவது மிகவும் விசேஷமாக இருக்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nilmini said:

நாங்கள் எல்லோரும் இப்பவும் பாவிக்கிறோம். சிங்கப்பூரில் வாங்குவது மிகவும் விசேஷமாக இருக்கும்.

கோடாலித்தைலம் என்னத்துக்கு நல்லது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

கோடாலித்தைலம் என்னத்துக்கு நல்லது?

எது தசை பிடிப்பு, மூட்டு நோ, தசை- எலும்பு பொருந்தும் இடம், விளையாட்டின் போது வரும் சின்ன அசௌகரியங்கள் இவற்றிற்கான உடனடி நோவை குறைக்கும் மருந்து. இது உடனடி நிவாரணத்துக்கு உதவுவதோடு மட்டும் இல்லாமல் தசை, மூட்டு சம்பந்தமான காயங்கள் ஆறுவதை துரிதப்படுத்தும். ஐரோப்பா, அமெரிக்கா,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் விற்பது ஸ்ட்ரோங் மிகவும் குறைந்தது (இறக்குமதி கட்டுப்பாடுகளினால்) இத வேண்டி பாவித்தால் நல்ல பலன் கிடைக்கும் (Menthol formula by Leung Kai Fook, Singapore.) எனது மகனுக்கு விலா எலும்புகள் நெஞ்சில் சேரும் இடத்தில் நோ இருக்கிறது. அடிக்கடி சிங்கப்பூர் தான் பூசுகிறார்.

ஆர்தரைடிஸ் நோ, நிணநீர் போக்கு இவற்றுக்கு இந்த கல்லால் - Guesha stone கோடாலித்தைலம் சேர்த்து உருவலாம்.

Edited by nilmini
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

கோடாலித்தைலம் என்னத்துக்கு நல்லது?

விக்ஸ் பாவிக்கிற தலையிடி, காச்சல், தடிமன் போன்றவைக்குத்தான் இதையும் பாவிப்பது......ஆனால் இது கொஞ்சம் காரம் கூட, குழந்தைகளுக்கு ஆகாது.......விக்ஸ் சலாட் அரியும் கத்தி என்றால் கோடரித்தைலம் சாட்சாத் கோடாலியேதான்.......!  😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nilmini said:

எது தசை பிடிப்பு, மூட்டு நோ, தசை- எலும்பு பொருந்தும் இடம், விளையாட்டின் போது வரும் சின்ன அசௌகரியங்கள் இவற்றிற்கான உடனடி நோவை குறைக்கும் மருந்து. இது உடனடி நிவாரணத்துக்கு உதவுவதோடு மட்டும் இல்லாமல் தசை, மூட்டு சம்பந்தமான காயங்கள் ஆறுவதை துரிதப்படுத்தும். ஐரோப்பா, அமெரிக்கா,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் விற்பது ஸ்ட்ரோங் மிகவும் குறைந்தது (இறக்குமதி கட்டுப்பாடுகளினால்) இத வேண்டி பாவித்தால் நல்ல பலன் கிடைக்கும் (Menthol formula by Leung Kai Fook, Singapore.) எனது மகனுக்கு விலா எலும்புகள் நெஞ்சில் சேரும் இடத்தில் நோ இருக்கிறது. அடிக்கடி சிங்கப்பூர் தான் பூசுகிறார்.

ஆர்தரைடிஸ் நோ, நிணநீர் போக்கு இவற்றுக்கு இந்த கல்லால் - Guesha stone கோடாலித்தைலம் சேர்த்து உருவலாம்.

15 minutes ago, suvy said:

விக்ஸ் பாவிக்கிற தலையிடி, காச்சல், தடிமன் போன்றவைக்குத்தான் இதையும் பாவிப்பது......ஆனால் இது கொஞ்சம் காரம் கூட, குழந்தைகளுக்கு ஆகாது.......விக்ஸ் சலாட் அரியும் கத்தி என்றால் கோடரித்தைலம் சாட்சாத் கோடாலியேதான்.......!  😂 

தகவல்களுக்கு நன்றி. மூட்டு நோக்களுக்கு சிலோன் மின்சார தைலம் பாவித்தேன் சரிவரவில்லை.

Link to comment
Share on other sites

2 minutes ago, குமாரசாமி said:

தகவல்களுக்கு நன்றி. மூட்டு நோக்களுக்கு சிலோன் மின்சார தைலம் பாவித்தேன் சரிவரவில்லை.

முடக்கத்தான் மூட்டு நோக்களுக்கு நல்லது என கூறுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

தகவல்களுக்கு நன்றி. மூட்டு நோக்களுக்கு சிலோன் மின்சார தைலம் பாவித்தேன் சரிவரவில்லை.

விந்து விட்டார்

நொந்து கெட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோடாரி தைலம் (Axe Oil) அன்று முதல் இன்று வரை..! | Tamil Micset Singapore

கோடாரி தைலம் உருவான வரலாறு | History of Axe oil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

தகவல்களுக்கு நன்றி. மூட்டு நோக்களுக்கு சிலோன் மின்சார தைலம் பாவித்தேன் சரிவரவில்லை.

கு சா அண்ணா, கோடாலித்தைலத்தை பற்றி பதில் போட்டுவிட்டு, வேலைக்கு வந்து பார்த்தால் என்ர மேசையில உங்கட ஊர் ICE Eau de Colongne இருக்கு. 

Yarl.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு நன்றி தெரிவித்து உடனே அமோசானில அனுப்பியிருக்கிறார்.......நான் இப்ப வாசலைப் பார்த்துக் கொண்டு இருக்கிறன்......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

உங்களுக்கு நன்றி தெரிவித்து உடனே அமோசானில அனுப்பியிருக்கிறார்.......நான் இப்ப வாசலைப் பார்த்துக் கொண்டு இருக்கிறன்......!  😂

பார்ஸல் வந்திட்டுதா? 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விளம்பரம் எப்படி இருக்கு. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 1 month later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/reel/6161050333979173/?s=single_unit  👈

👆 என்றும் அழியாத குங்கும பொட்டு. 
இந்த விளம்பரத்தை, கடைசி வரை பார்க்கவும். 😂

 காணொளியின்,   animiertes-lautsprecher-bild-0055.gif ஒலியை... கூட்டி  வைத்து கேட்கவும். 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, street and text

தம்பீ... பின்னாலை பாரப்பு.  😂
கொஞ்சம் அங்காலை  தள்ளி நில்லப்பா.   🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 2
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

The Silent Shift

When unique people come together, great things happen. One such example is ‘The Silent Shift’ run by 8 specially-abled staff at the SB Road Pune Station, India. With grit, determination, and encouragement from our customers, these champions have created a movement that truly fills hearts with hope.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.