Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

இலங்கை இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கு தமிழர்கள், அதிபர் தேர்தல் முடியும் வரை காத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார் அதிபர் ராஜபக்சே.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு: இலங்கை இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கு தமிழர்கள், அதிபர் தேர்தல் முடியும் வரை காத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார் அதிபர் ராஜபக்சே.

விடுதலைப் புலிகளுடனான போருக்கு முன்பு ஒரு மாதிரி பேசி வந்தார் ராஜபக்சே. போர் முடிந்ததும், தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்தும் செய்யப்படும் என்றார். நாடாளுமன்றத்தில் பேசும்போது கூட தமிழர்கள் எங்களது சகோதரர்கள், அவர்களைக் காப்பது எங்களது கடமை என்றார்.

ஆனால் போர் முடிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னர் அதுகுறித்த எந்தத் திட்டத்தையும் இலங்கை அரசிடமிருந்து காணோம்.

மேலும் அதிகாரப் பகிர்வு, 13வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம், அரசியல் தீர்வு குறித்து இலங்கை அரசிடமிருந்து உறுதியான நடவடிக்கை எதுவும் இல்லை. இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருக்கும் 3 லட்சம் தமிழர்களை அவரவர் சொந்த ஊர்களில் குடியமர்த்தும் திட்டமும் இல்லை.

இந்த நிலையில், அதிபர் தேர்தல் முடியும் வரை அரசியல் தீர்வுக்கு தமிழ் மக்கள் காத்திருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் ராஜபக்சே.

இதற்கு முக்கிய காரணம், தற்போது ராஜபக்சேவின் அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை. சிங்கள கட்சிகள் மற்றும் தமிழ் கட்சிகளின் துணையுடன்தான் அவரது ஆட்சி உள்ளது.

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க சிங்கள இனவாத கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் அரசியல் தீர்வை இப்போது அறிவிப்பது சிக்கல்களை ஏற்படுத்தும் என அவர் நினைப்பதாக தெரிகிறது.

புலிகளை அழித்து விட்டதால் மக்கள் செல்வாக்கு கூடியிருப்பதாக கருதுகிறார் ராஜபக்சே. எனவே அதிபர் தேர்தலில் அபார வெற்றி பெற்றால், ஜாதிக ஹெல உருமயா, ஜனதா நிதஹால் சந்தன்யா போன்ற சிங்கள இனவெறிக் கட்சிகளின் ஆதரவு தேவைப்படாது. சுயேச்சையாக முடிவுகளை எடுக்க முடியும் என்பதால் அதிபர் தேர்தல் முடியும் வரை முக்கிய முடிவுகளைத் தள்ளி் போட அவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து அவர் கூறுகையில், யாருக்கு என்ன தர வேண்டும், என்ன தரக் கூடாது என்பது குறித்து எனக்குத் தெரியும். என்ன தர வேண்டும் என்பதை தருவதற்காக நான் காத்திருக்கிறேன். ஆனால் தேர்தல் முடியும் வரை காத்திருக்க வேண்டும். அதன் பிறகுதான் அரசியல் தீர்வு காண முடியும் என்றார் அவர்.

2005ம் ஆண்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானார் ராஜபக்சே. அப்போதைய தேர்தலில் தமிழர்களை தேர்தலைப் புறக்கணிக்குமாறு பிரபாகரன் கூறியிருந்ததால் அது ராஜபக்சேவுக்கு சாதகமாகி விட்டது. தமிழர்கள் மட்டும் அன்று வாக்களித்திருந்தால் ராஜபக்சே அப்போதைய தேர்தலில் ஜெயி்த்திருக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். எனவே 2011ம் ஆண்டுதான் அங்கு அதிபர் தேர்தல் வருகிறது. ஆனால் தற்போது கிடைத்துள்ள புதிய செல்வாக்கை மனதில் கொண்டு வருகிற நவம்பர் மாதமே தேர்தலை நடத்தி விட ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தகவல்.........தட்ஸ் தமிழ்

Link to comment
Share on other sites

இலங்கையில் சமஸ்டி முறைமைக்கு இடமில்லை இனப்பிரச்சினைக்குரிய தீர்வுக்கு எதனை வழங்க வேண்டும், எதனை வழங்க கூடாது என்பது தமக்கு தெரியும் மகிந்த:

இனப்பிரச்சினைக்குரிய தீர்வுக்கு எதனை வழங்க வேண்டும், எதனை வழங்க கூடாது என்பது தமக்கு தெரியும் எனவும் இதுதொடர்பில் கோருபவர்கள் தாம் வழங்குவதை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர்களுக்குத் தேவையானது இங்கு கிடைக்காது என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வெளியாகும் த இந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்கள் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் மிகவும் உயர்ந்த தரத்தில் இருக்கின்றன.

இந்த முகாம்களில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. எனினும் அந்த குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கழிவறை மலசல கூடங்கள் பிரச்சினைகள் நிலவுகின்றன. எனினும், அது அரசாங்கத்தின் குறையில்லை. மலசல கூட நிர்மாணங்களை மேற்கொண்டு வரும் ஐக்கிய நாடுகள் சபை இதில் மந்த கதியில் செயற்படுகிறது. இதற்கான நிதியினை வழங்குவதில், ஐக்கிய நாடுகள் சபை தாமதம் காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்துள்ள 3 லட்சம் வன்னி மக்களை, கூடுமான விரைவில் மீள குடியமர்த்தம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இடம்பெயர்ந்வர்கள் மீள குடியமர்த்தப்படுதவற்கு முன்னர், அவர்களின் சொந்த கிராமங்களில் அவர்கள் வாழ்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கிடையில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் இனங்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்கு, இனவாத போக்குக்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

சில இடைத்தங்கல் முகாம்களில் குறைபாடுகள் இருக்கின்றமையை அறிகின்றேன். அவை படிப்படியாக தீர்க்கப்பட்டு வருகின்றன. எனினும் சில முகாம்களில் குறைபாடுகள் இல்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேவேளை, முகாம்களில் உள்ள மக்கள், இருப்பிடம் தொடர்பில் திருப்தி கொண்டுள்ளனர். எனினும், நடமாடும் சுதந்திரம் தொடர்பில் அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக இதனை உடனடியாக தீர்க்க முடியாதிருப்பதாகத் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஒவ்வொரு அங்குலத்திலும், வன்னிப்பிரதேசத்தில் நிலக் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்; அவை அகற்றப்படாமல் பொது மக்களை குடியமர்த்த முடியாது. அவர்களுக்கு ஏதும் நிகழ்ந்தால் அதற்கு பொறுப்பு கூற வேண்டியவர் தான் எனவும் ஜனாதிபதி செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வீதி, மின்சார வசதி, நீர் விநியோகம் போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் அவர்களை அனுப்ப முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 13வது அரசியல் சாசனத் திருத்தம் அமுல்படுத்தப்படுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி, தமது மனதில் ஒரு தீர்வு யோசனை இருப்பதாகவும், அதனை, நாளை நினைத்தாலும் அமுல்படுத்த முடியும், ஆனால் அதனை பொது மக்களிடம் இருந்தே எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளை தேர்தல்களின் பின்னர் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இலங்கையில் முன்வைக்கப்பட வேண்டிய அரசியல் தீர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி மகிந் ராஜபக்ஷ, எதனை வழங்க வேண்டும், எதை வழங்க கூடாது என்பது தமக்கு தெரியும் எனவும் அந்த அதிகாரத்தை தனக்கு பொதுமக்கள் வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

எனினும், இது தொடர்பில் கோருபவர்கள், தாம் வழங்குவதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு தேவையானது இங்கு கிடைக்காது எனவும் அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சமஸ்டி முறைமைக்கு இடமில்லை, அனைத்து சமூகமும் ஒன்றித்த வகையில் வாழக்கூடிய ஒரு தீர்வு முறைமையே முன்வைக்கப்படும் எனவும் மகிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னரே தேசிய பிரச்சினைக்கான இறுதித் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் ‐ ஜனாதிபதி:

ஜனாதிபதி தேர்தலின் பின்னரே தேசிய இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மக்களிடம் கிடைக்கப் பெறும் ஆணையை கருத்திற் கொண்டே இறுதித் தீர்வுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமஷ்டி முறையிலான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படக் கூடிய சாத்தியம் இல்லை எனவும், மீள் குடியேற்ற நடவடிக்கைகளின் போது அனைத்து இன மக்களும் மீளக் குடியமர்த்தப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இனவாத சக்திகளுக்கு எவ்வித சந்தர்ப்பமும் வழங்கப்பட மாட்டாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் எந்தவொரு அகதி முகாம்களைவிடவும் இலங்கை அகதி முகாம்களில் அதிக வசதிகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சில குறைபாடுகள் காணப்பட்ட போதிலும், மெதுவாக அவ்வறாhன குறைகளை களைய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் பிரபல ஊடகமொன்றுக்கு அளித்த நீண்ட நேர செவ்வியின் போது ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டங்களை விரைவில் வழங்க முடியும் எனினும், மக்களின் பூரண ஆணையுடனேயே தீர்வுத் திட்டங்களை அமுல்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்பார்க்கும் தீர்வுத் திட்டங்கள் யதார்த்தமற்றவை என்பதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், நடைமுறைச் சாத்தியப்பாடுடைய தீர்வு குறித்த கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறுபான்மை மக்கள் என்று எவரும் இல்லை எனவும், நாட்டை நேசிக்கும் தரப்பினர், நாட்டிற்கு துரோகம் இழைக்கும் தரப்பினர் என இரண்டு பிரிவினர் மட்டுமே தற்போது உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news....11546&cat=1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தமிழ் அரசியல் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல்- அமைச்சரைப் பதவி விலகவைத்துப் பொறுப்புக்கூறும் தோற்றப்பாட்டை ஜெனீவாவுக்குக் காண்பிக்க முயற்சி கிளிநொச்சி அலுவலகத்தை நல்லிணக்கச் செயற்பாடு என்று பாராட்டிய ஆணையாளருக்கு மற்றுமொரு நம்பிக்கையா?       வடமத்திய மாகாணம் அநுராதபுரம் சிறைச்சாலையில் குடிபோதையில் சென்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. அமைச்சர் லொகான் ரத்வத்தயைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளன. ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பித்துள்ள நிலையில், 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.   வழமையாக தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான தாக்குதல்கள் மற்றும் அவர்களுடைய உண்ணாவிரதப் போராட்டங்கள் தொடர்பான செய்திகளை சிங்கள ஊடகங்கள் குறிப்பாக ஆங்கில ஊடகங்கள், நாளேடுகள் பிரசுரிப்பதேயில்லை. இந்தவொரு நிலையில், இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமை தொடர்பாக தமிழ் அரசியல் வட்டாரங்களில் சந்தேகம் எழுந்துள்ளன   சம்பவத்தையடுத்து சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கூறியுள்ளார். ஆனாலும் அமைச்சரை உடனடியாகப் பதவியில் இருந்து விலக்குமாறும் அவருடைய அமைச்சுப் பொறுப்புக்களுக்குரிய கடமைகளை அமைச்சின் செயலாளரிடம் கையளிக்குமாறும் பிரதமர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இத்தாலிக்குச் சென்றிருந்த மகிந்த ராஜபக்ச அங்கிருந்தே இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக கொழும்பில் உள்ள பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்பேற்றுத் தான் பதவி விலகுவதாக இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்ததாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள, ஆங்கில நாளேடுகள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. குறிப்பாக அமைச்சர் லொகான் ரத்வத்தைக்கு எதிராக பிரதமர் மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட நடவடிக்கைகள் அமைச்சருடைய பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்ட விடயங்கள் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பல சிங்கள அரசியல் கட்சிகள் கண்டித்த செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் கண்டித்ததுடன் அமைச்சர் லொகான் ரத்வத்த கைது செய்யப்பட வேண்டுமென விடுத்த வேண்டுகோள் தொடர்பான செய்திகளுக்கும் ஆங்கில செய்தி இணையத் தளங்கள் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளன. வழமையாக தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான தாக்குதல்கள் மற்றும் அவர்களுடைய உண்ணாவிரதப் போராட்டங்கள் தொடர்பான செய்திகளை சிங்கள ஊடகங்கள் குறிப்பாக ஆங்கில ஊடகங்கள், நாளேடுகள் பிரசுரிப்பதேயில்லை. இந்தவொரு நிலையில், இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமை தொடர்பாக தமிழ் அரசியல் வட்டாரங்களில் சந்தேகம் எழுந்துள்ளன. அதாவது அமைச்சர் லொகான் ரத்வத்தவைப் பதவியில் இருந்து விலகுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டதன் மூலம் அரசாங்கம் உடனுக்குடன் பொறுப்புக்கூறுகின்றது என்றவொரு தோற்றப்பாட்டை ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு வெளிப்படுத்தும் நோக்கில் தமிழ் அரசியல் கைதிகள் மீது திட்டமிடப்பட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஏனெனில் தற்போது ஐ.நா மனித உரிமைச் சபை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்ற 13 ஆம் திகதி ஆணையாளர் மிச்செல் பச்சலெற் இலங்கை குறித்த வாய்மொழிமூல அறிக்கையை வெளியிட்டிருந்தார். ஐ.நாவுடன் இணைந்து பொறுப்புக்கூறல் விடயத்தில் ஒத்துழைக்கவுள்ளதாகக் கடந்த யூன் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதிமொழியை ஆணையாளர் மிச்செல் பச்சலெற் தனது அறிக்கையில் பாராட்டியுமிருந்தார். அத்துடன் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கையளித்த 13 பக்க அறிக்கையில் உள்ளகப் பொறிமுறையே பரிந்துரைக்கப்பட்டுமிருந்தது.   அமைச்சரைப் பதவி விலக வைத்துப் பொறுப்புக்கூறலை மேலும் உறுதிப்படுத்தி இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறை மூலமாக உள்ளகப் பொறிமுறையைச் செயற்படுத்த ஜெனீவாவை இணங்க வைக்கும் ஒரு தந்திரோபாயமாக சிறைச்சாலைச் சம்பவம் திட்டமிடப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது   ஆகவே அந்தப் பொறுப்புக்கூறலை மேலும் உறுதிப்படுத்தி இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறை மூலமாக உள்ளகப் பொறிமுறையைச் செயற்படுத்த மனித உரிமைச் சபையை இணங்க வைக்கும் ஒரு தந்திரோபாயமாக இந்தச் சம்பவம் திட்டமிடப்பட்டிருக்கலாமெனக் கருதப்படுகின்றது. அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பில் உள்ள இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கணா சிங்கர் உடனடியாகவே கண்டனம் வெளியிட்டுள்ளார். வழமைக்குமாறாக தமிழ் அரசியல் கைதிகள் தாக்கப்படும் செய்திகளைக் கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகமோ அல்லது வெளிநாட்டுத் தூதரகங்களோ கண்டுகொள்ளாத நிலையில், இந்தச் சம்பவம் உடனடியாகவே ஐ.நா.வின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டமைக்கு ஆங்கிலச் செய்தி ஊடகங்களே காரணமாக அமைந்துள்ளன என்பது வெளிப்படை. ஆகவே இதன் பின்னணியில் இந்த சம்பவம் திட்டமிடப்பட்டிருக்கின்றது என்ற சந்தேகம் எழுவதோடு, அமைச்சர் லொகான் ரத்வத்தவைக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக மேற்கொண்ட குறைந்தபட்ச நடவடிக்கைகள் ஜெனீவா மனித உரிமைச் சபைக்குப் போதுமானவை என்ற கருத்தும் அரசாங்கத்திடம் இருக்கலாம். ஏனெனில் பெயர்பலகைகூட நாட்டப்படாமலும், யாருக்குமே தெரியாமலும் அவசர அவசரமாகக் கிளிநொச்சியில் திறக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலகம் பற்றி ஆணையாளர் மிச்செல் பச்சலெற் தனது அறிக்கையில் பாராட்டியுள்ளார். அத்துடன் அந்த அலுவலகம் நல்லெண்ண முயற்சியெனவும் புகழாரம் சூட்டியிருக்கிறார். இவ்வாறானதொரு நிலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த அமைச்சர் லொகான் ரத்வத்தயைப் பதவியில் இருந்து விலகுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டதையும் அமைச்சருடைய பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்டதையும் நிச்சயமாக ஆணையாளர் பாராட்டுவார். ஜெனீவா அமர்வின் முடிவில் இந்தப் பாராட்டு வெளிவரலாம் அல்லது இலங்கையின் நல்லதொரு முன்னேற்றமாக ஆணையாளரினால் குறிப்பெடுத்துக் கொள்ளப்படலாம். அதேவேளை, ஜெனீவா அமர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதால், தமிழ் அரசியல் கைதிகள் சிலரை விடுதலை செய்யும் நோக்கிலேயே, அமைச்சர் லொகான் ரத்வத்தயை அரசாங்கம் அங்கு அனுப்பியதாகவும், ஆனால் அமைச்சர் மதுபோதையில் இருந்ததால் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து அரசாங்கத்தின் திட்டத்தைக் குழப்பி விட்டாரெனவும் கொழும்பில் உள்ள சிங்கள ஊடக வட்டாரங்கள் கூறுகின்றன. அத்துடன் அமைச்சர் லெகான் ரத்வத்தையுடன் அமைச்சர் தரத்திலான மற்றுமொரு மூத்த உயர் அதிகாரியொருவர் சென்றதாகவும் இருவரும் இலங்கை விமானப்படையின் சிறப்பு கெலிகொப்ரரிலேயே அநுராதபுரத்துக்குச் சென்றிருந்தாகவும் சிங்கள ஊடகவியலாளர்கள் சிலர் கூறுகின்றனர். மற்றையவர் அதிகாரியல்ல அவரும் அமைச்சர் என்ற தகவலும் உண்டு. ஆகவே ஏதேவொரு நிகழ்ச்சித் திட்டத்தை அரங்கேற்ற இவர்கள் முயற்சித்திருக்கின்றனர் என்பது தெரிகிறது. ஆனால், எது எப்படி நடந்தாலும், ராஜபக்ச அரசாங்கத்தைப் பொறுத்தவரை அமைச்சர் லெகான் ரத்வத்தைய அமைச்சர் பதவியில் இருந்து விலக வைத்ததன் மூலம் பொறுப்புக்கூறல் தொடர்பான ஆரம்ப முயற்சியாக ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளரை நம்பவைத்துவிட்டனர் என்ற முடிவுக்கு வரலாம். இதற்காகத் தமிழ் அரசியல் கைதிகளின் பெறுமதிமிக்க உயிரைத் துணிவோடு பந்தாடியிருக்கிறார்கள். இன அழிப்பு மற்றும் அரசியல் விடுதலைக்கான பேச்சுக்கள் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களுமே ஆணையாளர் மிச்செல் பச்சலெறின் வாய்மொழி மூல அறிக்கையில் திசை திருப்பப்பட்டிருந்தன. போர்க்குற்ற விசாரணை என்று ஜெனீவா மனித உரிமைச் சபையின் மொழியில் சொல்லப்படும் விசாரணைக்கான கலப்புப் பொறிமுறை பற்றிய பேச்சுக்கூட அந்த அறிக்கையில் உருப்படியாக இல்லை.   ஜெனீவாவின் வார்த்தையில் கூறப்படும் போர்க்குற்ற விசாரணையை உள்ளக விசாரணையாக மாற்றியமைக்க இலங்கை ஒற்றையாட்சி அரசு 2015 ஆம் ஆண்டில் இருந்து நடத்தும் நாடகங்கள்   ஏனெனில், அந்தப் போர்க்குற்ற விசாரணையைத்தான் உள்ளக விசாரணையாக மாற்றியமைக்க இலங்கை ஒற்றையாட்சி அரசு 2015 ஆம் ஆண்டில் இருந்து நடத்தும் நாடகங்களை ஜெனீவா நம்புகின்றது. நம்புவதுபோலக் காண்பித்துச் சேர்ந்து விளையாடுவது  போலவும் தெரிகிறது. அதற்குத் தமிழ்த்தேசியக் கட்சிகளும் உடந்தையகின்றன. அத்துடன் ஜெனீவாவுக்கும் இந்தியா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் புவிசார் அரசியலுக்கு ஏற்பச் செயற்பட வேண்டிய சூழல் இருப்பதால், சிங்கள ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்தும் அறிக்கைகளை வெளியிடுகின்றது. இலங்கை சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது எனக் கூறினாலும் வல்லாதிக்க நாடுகளே ஈழத்தமிழர்களை அதிகமாக ஏமாற்றுகின்றன. அதற்காகவே தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சிலரையும் சில புலம்பெயர் அமைப்புகளையும் அந்த வல்லாதிக்கச் சக்திகள் விலைபேசியுமுள்ளன. இதேவேளை, அமைச்சர் லொகான் ரத்வத்தை குறித்த அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகினாலும், இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகவில்லையென கொழும்பில் உள்ள சிங்கள ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர். அதேவேளை. அமைச்சர் ரொகான் ரத்வத்தையைக் கைது செய்ய முடியாதெனவும் அவருக்கு எதிராக இதுவரை கைதிகளின் உறவினா்களிடம் இருந்தோ அல்லது அனுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்தோ எந்தவொரு முறைப்பாடுகளும் கிடைக்கவில்லையெனவும் இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிகால் தல்துவ கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். https://www.koormai.com/pathivu.html?vakai=4&therivu=1959&fbclid=IwAR1Jm4DWqBBOU-7PFZEfQBBCx1i3f-htH9d65P2yAGChg1XNlBh2DCiEw1A
  • தென் தமிழீழத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குட்பட்டிருந்த சில இடங்களான சம்பூர், மூதூர், இலக்கந்தை, மலைமுந்தல், தோப்பூர், ஈச்சிலம்பற்று, வெருகல் ஆற்றுப் பகுதிகள், கதிரவெளி, வாகனேரி, பனிச்சங்கேணி  மற்றும் வாகரை ஆகிய கோட்டங்களைக் காட்டும் வரைபடம்     "தமிழீழ மாமண்ணில் என்றென்றும் புலிவீரர் நடந்த கால்தட மிருக்கும் தமிழ் மாந்தர் உள்ளவரை என்றென்றும் அவர் நெஞ்சில் மாவீரர் படமிருக்கும்"     படிமப்புரவு: சமாதானச் செயலகத்தின் வலைத்தளம், 2006, dec   படிமப்புரவு: சமாதானச் செயலகத்தின் வலைத்தளம், 2006, dec
  • 2009ம் ஆண்டு மே மாதம் இறுதி யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால்??? 2009, ஏப்ரல் 9,Thursday அன்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் "தென்றல் வானொலிக்கு" அளித்த பேட்டி... கேள்வி: புலிகள் யுத்தத்தில் தோல்வி கண்டுள்ள நிலையில், அவர்களது கட்டுப்பாட்டுப் பிரதேசமெல்லாம் தற்போது இழக்கப்பட்டுள்ளது. புலிகளுடைய எதிர்காலம் மற்றும் புலிகளின் பிரமுகர்களாக பாராளுமன்றில் உள்ள தமிழ்க் கூட்டமைப்பின் எதிர்காலங்கள் எப்படி இருக்கப் போகிறது?   பதில்: இதிலே ரி.என்.ஏ - புலிகள் இவர்களுடைய எதிர்காலம் என்பதைக் காட்டிலும் நான் பார்ப்பது தமிழ் மக்களுடைய எதிர்காலம். ரி.என்.ஏக்கும் புலிகளுக்கும் எதிர்காலம் என்று கூறினால் புலிகளைப் பொறுத்தமட்டில் அவர்களுடைய சக்தி முழுதும் இராணுவத்திலேயே இருந்தது. இராணுவ ரீதியாக அவர்கள் தோற்கடிக்கப்படுகின்ற போது அவர்கள் ஒரு பலவீனமாக இயங்குவது அவர்களுக்கு மிகவும் கஸ்டமாக இருக்குமென்று தான் நான் நம்புகிறேன். முற்று முழுக்க இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணுவ ரீதியாக வளர்க்கப்பட்ட இயக்கம் புலிகள் இயக்கமாகும். ரி.என்.ஏவைப் பொறுத்தமட்டில் ரி.என்.ஏ புலிகளுடைய பினாமியாக, புலிகளால் தெரிவுசெய்யப்பட்ட, "புலிகள் தான் இலங்கையில் வாழுகின்ற தமிழ் மக்களுடைய ஏகப்பிரதிநிதிகள்" என்பதை சொல்வதற்காகவே வந்த ஒரு அமைப்பு. இப்போது நிச்சயமாக அறிகிறேன் ரி.என்.ஏயிலிருந்து சிலர் திரு.பசில் ராஜபக்சவுடனும் அரசுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்கள் சிறிது சிறிதாக "ஈழத்தின் தேசியத் தலைவர் பிரபாகரன்" என்ற அந்தக் கோசத்தைக் குறைத்துக் குறைத்து மற்றவளமாக வந்து திரு.ராஜபக்ச அவர்கள் இந்தப் பிரச்சினையை தீர்க்கப் போகிறாரென்று சொல்லுகின்ற ஒரு நிலைமை உருவாவதை காணக்கூடியதாக இருக்கின்றது. "புளொட் தலைவர் சித்தார்த்தன்"            
  • நீட் (யுஜி) 2021 முதன்முறையாக 13 மொழிகளில் பஞ்சாபி மற்றும் மலையாளத்தைச் சேர்க்கிறது. இப்போது வழங்கப்படும் மொழிகள் இந்தி, பஞ்சாபி, அஸ்ஸாமி, பெங்காலி, ஒடியா, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், உருது மற்றும் ஆங்கிலம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.