Jump to content

நித்திலா .....தாயாகிறாள் .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நித்திலா .....தாயாகிறாள் .

மானிட வாழ்வில் ஒரு பெண் ,திருமணமாகி தாய்மையடைவது இயற்கை தான் இதில் நித்திலா .......என் கதாநாயகி , அப்படி என்ன சாதித்து விடாள் என்று பார்க்கிறீர்களா ? அது தான் கதை ........கதையை வாசிக்க என்னுடன் தொடர்ந்து வாருங்கள்.

அழகான அமைதியான அந்த சிறு கிராமத்தில் ஒரே ஒரு செல்லமாக வளர்ந்தவள் தான் நித்திலா .....தாய் ...தலைமை ஆசிரியரான தந்தை இவர்களுக்கு குழந்தையாக சிறுமியாக ..செல்லமாக வளர்ந்தவள் தான் இந்த நித்திலா.....காலத்தின் கட்டளையோ , விதிவசமோ , கிராமத்தில் இருந்து ... இடம் பெயர்க்க பட்டு இலங்கையின் கொழும்பு மா நகரின் , ஒரு தொடர் மாடியில் வாழ்வை அமைத்து கொண்டார்கள். யாழ் இளம்பெண் கால ஓட்டத்தில் கல்வியில் தேர்ச்சி பெற்று ,வரு நாள் திருமண வயதை அடைந்ததும் அவளை தையல் சமையல் என்று அத்தனை கலைகளையும் பயிற்று வித்து அவளின் எதிர் காலம் வளமாக் அமைய காத்து இருந்தனர். பெற்றார். ஒரு நாள் மூவரும் கோவில் வழி பட்டு கொண்டு இருக்கையில் மகனுக்கு பெண் பார்த்து கொண்டு இருந்த

ராஜ ரத்னம் தம்பதிகள் இவளைக்கண்டதும் இவளே தமக்கு மூத்தமருமகள் என தீர்மானித்தனர் .அவளது தன்னடக்கம் பணிவு அழகான் தோற்றம் அவர்களை கவர்ந்தது ஒரு நாள் பழக்கம் வீட்டுக்கு அழைப்பது வரையில் போனது . இரு குடும்பமும் பேசி கலந்துரையாடி உறவுகளை வளர்த்து கொண்டனர். மூத்த மகனுக்கு நித்திலா நிச்சயம ஆனாள் அவனும் வந்து பெண் பிடித்து போகவே கலியாணம் கோலாகலமாக நடந்து .....அவன் கனடாவின் மொன்ரியல் பகுதிக்கு வதிவிட உரிமை பெற்று அழைத்து கொண்டான்.

அன்பான நட்பான் தம்பதிகளாக் வாழ்ந்து வந்தனர். சில நெருங்கிய உறவுகளின் விசேடங்களில் காண்பதுண்டு . எல்லோரும் எதிர்பார்த்து போலவே அவர்களும் எதிர் பார்த்தார்கள். மாதங்கள் வருடங்களாக ஓடிக்கொண்டு இருந்தது .அவளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவே இல்லை .அதுவே அவர்கள் வாழ்வில் பெரு ஏமாற்றமாக இருந்தது .வைத்திய உதவிகளும் நாடினார்கள். விசேடங்களில் கலந்து கொள்ளும் உறவுகளும் கேட்க தொடங்கி விடார்கள். இது நம்மவர் பழக்கமாச்சே . இதனாலோ என்னவோ . அவர்கள் விசேட நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் தயக்கம் காட்டினார்கள். அவர்களுள் ஒரு தாழ்வு மனப்பான்மை குடிகொண்டது .

என்ன குறையோ யார் குறையோ இதை நான் துருவி கேட்கவோ ஆராயவோ விரும்பவில்லை நீங்களும் கேட்க மாடீர்கள் தானே. அது அழகில்லை. அவனவனுக்கு ஆயிரம் பிரச்சினை. எல்லாவித வைத்திய உதவியையும் நாடியது உண்மை. சில சந்தர்பங்களில் ராஜ்குமார் நெருங்கிய உறவுகளிடம் "நான் அவளுக்கு குழந்தை அவள் எனக்கு குழந்தை என்பான் " ஆனாலு மனவருத்தம் அவர்களுக்கு இல்லாமலா இருக்கும் . இருவரின் பெறறா்களுக்கும் கவலை தான். சாடை மாடையாக கேட்டும் பார்த்தார்கள். இறுதியில் புரிந்தது கொண்டார்கள்.

இருவரும் தீர்மானித்தார்கள் கடந்த இரு வருடங்களுக்கு முன் முடிவெடுத்தார்கள் .அது தான் என்ன.....? கொழும்பில் ஒரு கிறிஸ்டியன் துறவிகள் நடத்தும் கைவிடப்பட்ட குழந்தைகளை நடத்தும் ஒரு நிறுவனமூலம் குழந்தை ஒன்றை தத்தெடுக்க ஆயத்தமானார்கள். சட்ட ஒழுங்குகள் ,அடிக்கடி கொழும்பு பயணம் என்று போய் வந்தார்கள். நான் கடைசியாக கண்டபொது ராஜ்குமாரின் தம்பி சொன்னான் "உங்களுக்கு ஒரு நல்ல சேதி எங்கள் குடும்பத்திலிருந்து வரும் " என்று உனக்கு கலியாணமா என்றேன் ...சிரித்து மழுப்பி விடான்.

எதிர் பாராமல் இரு வாரங்களுக்கு முன் வார விடுமுறையில் மொன்ரியல் புனித யோசெப் பேராலயத்துக்கு குடும்பத்துடன் போய் இருந்தேன். ஆலய வழிபாடின் போது ஒரு சிறு பெண் குழந்தையின் சிணுங்கல் என்னை திரும்பி பார்க்க வைத்தது . வழி பாடு நடந்து கொண்டு இருந்தது . இருந்தும் திரும்பி பார்த்து விடேன். அது ராஜ்குமார் .அவன் தோளில் ஒரு சிறு குழந்தை அருகில் நித்திலா பால் போத்தலை புகட்ட ஆயத்தமாகி கொண்டு இருந்தாள். வழி பாடு முடிய நேரில் கதைத்து உரையாடினோம் வரும்போது அவர்கள் வீடுக்கும் சென்று வந்தோம். எட்டு மாத குழந்தை ....என் மக்களுடனும் சேர்ந்து கொண்டது ...ராஜ் குமார் முகத்தில் மிகவும் மகிழ்வு காணப்பட்டது . நித்திலா எப்போதும் குழந்தையின் சிந்தனையாகவே இருந்தாள். கொடுத்து வைத்த குழந்தை நீரஜா ..........வரும் கார்த்திகை முதல் வாரம் வீட்டில் பிறந்த நாள் வைக்க இருப்பதாகவும் , நித்திலா அவளது தனியார் பாடசாலையில் இருந்து மகப்பேற்று விடுமுறையில் இருப்பதாகவும் சொன்னாள்அது ஒரு யாழ்ப்பாணத்து தமிழ் தாயின் ஆறாவது குழந்தை எனவும் ,குடும்ப வறுமை காரணமாக் ,வட பகுதி கன்னியர் மட உதவி கேட்டு .அக்குழந்தையின் நல்வாழ்வுக்கும் . குழந்தையற்ற தம்பதியரின் மகிழ்வுக்குமாக ...என்ற நல் நோக்கத்துக்கான முடிவு என்றும் சொனார்கள்.

இளம் பெற்றாருக்கு " இல்லை ஓர் பிள்ளை " என்ற குறை தீர்ந்தது . பெற்றால் தான் பிள்ளையா ? ....அன்போடும் பண்போடும் நல மனதோடும் பாசத்தை கொட்டி வளர்ப்பவளும் " தாய் " தான்.......

கதை உண்மை. பெயர்கள் கற்பனை ..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பதியினருக்கு எனது வாழ்த்துகள்...நன்றி நிலாமதி அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்மைக் கதை நன்று நிலாக்கா அந்தப்பிள்ளையும் பெற்றோரும் கொடுத்துவைத்தவர்கள் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

.........வரும் கார்த்திகை முதல் வாரம் வீட்டில் பிறந்த நாள் வைக்க இருப்பதாகவும் , நித்திலா அவளது தனியார் பாடசாலையில் இருந்து மகப்பேற்று விடுமுறையில் இருப்பதாகவும் சொன்னாள்.

கதை நல்லாய் இருக்கிது நிலாமதி அக்கா. மேல சொன்னதுதான் விளங்க இல்லை. யராவது குழந்தையை தத்து எடுக்கேக்க இஞ்ச மகப்பேற்று விடுமுறை எடுக்கலமோ? இல்லாட்டிக்கு தத்து எடுத்தபிறகு அவ கர்ப்பம் தரித்து குழந்தை பிறக்கப்போகிதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கு நன்றி . இல்லை மாப்பிள்ளை ...........உண்மை அவ ஒரு உள வளர்ச்சி குன்றிய பாடசாலையில் படிபிக்கிறா .மகப்பேற்று விடுமுறை கொடுத்தார்களாம் .விசாரித்து பாருங்கோ. குழந்தை சிறிது எனவே ஒருவருடம் கொடுத்தார்களாம்.

ரதி .............சேகு.........கருத்து பகிர்வுக்கு நன்றி ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த தம்பதிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.அதை விட நித்திலாவும் கணவரும் ஏற்கனவே ஒருவருக்கு ஒருவர் மாறி குழந்தையாய் இருந்திருக்கிறாhகள். உண்மையிலயே பாரட்ட வேண்டிய விடயம்.கருத்து ஒருமித்து முடிவுகள் எடுப்பதுதான் குடும்பத்துக்கு அழகு. ^_^:o

யாயினி.

Link to comment
Share on other sites

நிலாமதி அக்கா அந்த தம்பதியருக்கு என் மனம்மார்ந்த வாழ்த்துக்கள். குழந்தை இல்லை என்று தம் வாழ்வை வீணாக்காது இப்படிச் செய்ததன் மூலம் அவர்களுக்கும் அந்த குழந்தைக்கும் நல்ல எதிர்காலம் கிடைத்துள்ளது. இந்த நல்ல செய்தியை எம்முடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாய் இருக்கிது நிலாமதி அக்கா. மேல சொன்னதுதான் விளங்க இல்லை. யராவது குழந்தையை தத்து எடுக்கேக்க இஞ்ச மகப்பேற்று விடுமுறை எடுக்கலமோ? இல்லாட்டிக்கு தத்து எடுத்தபிறகு அவ கர்ப்பம் தரித்து குழந்தை பிறக்கப்போகிதோ?

Maternity தான் எடுக்க முடியாது ஆனால் 10 மாதம் Parental leave எடுக்கலாம். பொதுவா இங்கு பிள்ளை பெற்ற தாய்க்கு பிள்ளைபெறுவுக்கென 2மாத லீவும் பராமரிப்புக்கென 10 மாத லீவும் எடுக்கலாம். 10 மாத பராமரிப்பு லீவை பிள்ளைய தத்தெடுதவங்களும் எடுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சபேஷ் ..........(.Maternity leave ............) அல்ல .parental leave ......ஆக தான் இருக்க வேண்டும். அவவுக்கு தாய் தகப்பன் இங்கு இல்லை .

அவதான பார்க்கா நான் தான் PLe.ave ...விடுப்பை ..M.leave ......என்று மாறி சொல்லி விடேன் . விளக்கத்துக்கு ........நன்றி சபேஷ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி ......ஈழமகள்........சபேஷ் .......கறுப்பி .......நன்றி உங்கள் கருத்து பகிர்வுக்கு .

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை இல்லாதவர்கள் குழந்தை ஒன்றைத் தத்தெடுக்க வேணுமென்றால் , போரினால் பெற்றோர்களை இழந்த அனாதைக் குழந்தைகளை தத்தெடுத்தால் நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

நல்ல கதை நிலாமதியக்கா. அவர்களை உங்களுக்குத்தெரியுமானால், யாழ்கள நண்பர்கள் சார்பாக எங்கள் வாழ்த்துகளை தெரிவியுங்கள்.

மேலும், போரினால் பெற்றேரை இழந்த குழந்தைகளை தத்தெடுக்க அரசாங்கம் விடுகுதில்லை என்று அறிந்தேன். உண்மையா என்று தெரிந்தவர்கள் கூறுங்கள்.

Link to comment
Share on other sites

அக்கா உங்கள் கதைகளை படிக்கும் போதே அது உண்மைக் கதை எண்டு நல்லாய்

விளங்கிவிடும்!!!!!

அருமையான கதை குழந்தையும் அதிஸ்டசாலி பெற்றோரும் அதிஸ்டசாலி

அதானால் 3 பேருக்கும் வாழ்த்துக்கள்!!!!!!

Link to comment
Share on other sites

அட நானும் யாழ் கள நித்திலா தான் தாயாகிட்டானு ஒடி ஒடி வந்தன்

எனிவே கதை நல்லா இருக்குங்கோ.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கந்தப்பு ........தங்களால் என் கதை மீளவும புத்துயிர் பெறுகிறது. நீங்கள்நீண்டகால யாழ் உறவுகள் .

உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் என் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கந்தப்பு ........தங்களால் என் கதை மீளவும புத்துயிர் பெறுகிறது. நீங்கள்நீண்டகால யாழ் உறவுகள் .

உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் என் நன்றிகள்.

ஈஸ் .........உங்கள் கருத்து பதிவுக்கு நன்றி .....

மாறன் அண்ணா ................படிக்க மறந்துடியல் போல இது பல நாட்களுக்கு முன் எழுதியது .

உங்கள் கருத்துப்பகிர்வுக்கு நன்றி.......

Link to comment
Share on other sites

அட நானும் யாழ் கள நித்திலா தான் தாயாகிட்டானு ஒடி ஒடி வந்தன்

எனிவே கதை நல்லா இருக்குங்கோ.......

:)யோவ் சுண்டல் கோவில் திருவிழாக்கள் எல்லாம் முடிந்தும், என்ன களத்திலே காண முடியவில்லை ?? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் ..........வசம்பு ......... உங்கள் கருத்துப்பகிர்வுக்கு என் நன்றிகள். ,

Link to comment
Share on other sites

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு குழந்தைகளை தத்தெடுக்க முடியாதபடி சட்டம் ஒண்டு இருக்காம்.

என்னமோ... கதை தானே. . .

Link to comment
Share on other sites

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு குழந்தைகளை தத்தெடுக்க முடியாதபடி சட்டம் ஒண்டு இருக்காம்.

என்னமோ... கதை தானே. . .

போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைத்தான் தத்தெடுக்கமுடியாது என்ற் அறிந்தேன். மற்றபடி தத்தெடுப்பதில் சிக்கல் இராது என நினக்கிறேன்.

அது சரி சனியன்: ஏன் குண்டி கழுவுகிற வேலை செய்கிறீர்கள்? பிடிக்காவிட்டால் வேறு வேலையைத்தேடுவது தானே? :rolleyes:

Link to comment
Share on other sites

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு குழந்தைகளை தத்தெடுக்க முடியாதபடி சட்டம் ஒண்டு இருக்காம்.

என்னமோ... கதை தானே. . .

இல்லை இது தவறான செய்தி. இங்கு சுவிசிலேயே எனக்குத் தெரிய, இலங்கையிலிருந்து நம்மவர்களே தத்தெடுத்திருக்கின்றார்கள். அதற்கு முறையாக சில ஆவணங்களைக் கையாள வேண்டும். ஆனால் 50 வயதிற்கு மேற்பட்டோர் குழந்தைகளை தத்தெடுக்க முடியாதென்பது அநேகமான நாடுகளுக்குரிய பொதுவான கட்டுப்பாடு.

Link to comment
Share on other sites

வணக்கம் நிலாமதி அக்கா

நீங்கள் சொன்ன விடயம் சிறப்பு ......

அதை விட கதையை எழுதிய விதம் அழகு ...சொற்களை கோர்த்த விதம் இன்னும் அழகு .....உங்கள் எழுத்துக்கள் இன்னும் தொடர்ந்து வளர வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.