Jump to content

பூரண சூரிய கிரகணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என்று பெரியவர்கள் சொன்னதை மீறி ........

நான் சில வருடங்களுக்கு முன் நான் வசிக்கும் நாட்டில் சூரிய கிரகணம் நடந்த போது ..... அதற்குரிய கறுப்பு கண்ணாடி அணியாமல் வெறும் கண்ணால் பார்த்து பட்ட சிரமத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது . கிரகணத்தை பார்த்து அரை மணித்தியாலத்தில் கண் எல்லாம் உருட்டிக்கொண்டு எரிச்சலாக , சிவந்து , நெடுக கண்ணீர் வந்தபடி இருந்தது .

பின் கண் வைத்தியரிடம் சென்று நடந்ததை கூறி மருந்து எடுத்தேன் . கண் வைத்தியர் சொன்னார் இதனால் பார்வை கூட பாதிக்கப் பட சந்தர்ப்பம் உள்ளதாக .

கண் வழமைக்கு திரும்ப ஒரு கிழமை எடுத்தது .

( அந்த ஒரு கிழமையும் இரவிலும் கூலிங் கிளாஸ் தான் போட்டுக் கொண்டிருந்தனான் . )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமானத்தில் பறந்தபடி சூரிய கிரகணம் பார்க்க வாய்ப்பு!

இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சூரிய கிரகணத்தை விமானத்தில் பறந்தபடி பார்க்க சிறப்பு சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமானத்தில் ஜன்னலோர சீட்டுக்கு ரூ. 70,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சூரிய கிரகணம், இன்று புதன்கிழமை தென்படுகிறது. இதைப் பார்க்க உலகம் முழுவதும் மக்கள் தயாராகி வருகின்றனர்.

மக்கள் மத்தியிலும், வானியல் நிபுணர்கள் மத்தியிலும் இந்த சூரிய கிரகணம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபக்கம், கிரகணத்தால் ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் என ஜோதிடர்கள் தங்கள் பங்குக்கு புரளிகளைக் கிளப்பி விட்டுக் கொண்டுள்ளனர். :D

ஆசியாவிலேயே பீகார் மாநிலத்தில்தான் நீண்ட நேரம் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியும்.

தெரங்கா என்ற இடத்தில்தான் சூரிய கிரகணம் முழுமையாகத் தெரியும் என நாசா தெரிவித்துள்ளதால், அங்கு மக்கள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், விமானத்தில் பறந்தபடி சூரிய கிரகணத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிராவல் ஏஜென்சியான காக்ஸ் அண்டு கிங்ஸ் இந்தி நிறுவனம் இந்த விமானத்தை இயக்க உள்ளது.

22ஆம் திகதி காலை 4.30 மணிக்கு டில்லியிலிருந்து இந்த விமானம் பீகாரில் உள்ள கயாவுக்கு புறப்பட்டுச் செல்லும்.

சூரிய கிரகணம் முழுவீச்சில் இருக்கும் போது இந்த விமானம் பாட்னா அருகே 41 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும்.

6.26 மணியளவில் இந்த விமானம் சூரிய கிரகண நிழலுக்கு நடுவே ஊடுருவிச் செல்லும். எனவே பயணிகள் சூரிய கிரகணத்தை நன்றாகப் பார்க்க முடியும்.

இந்த விமானத்தில் ஜன்னலோர இருக்கைகளுக்கான கட்டணம் ரூ.70 ஆயிரம் ஆகும். மற்ற சீட்டுகளுக்கு ரூ. 29,000 கட்டணமாம். கட்டணம் அதிகமாக இருந்தாலும், 80 சதவீத இருக்கைகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து காக்ஸ் அன்ட் கிங்ஸ் இந்தியா நிறுவனத்தின் இந்தியத் தலைவர் கரண் ஆனந்த் கூறுகையில்,

"எங்களது விமான சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வாழ்நாளில் மிகவும் அரிதான நிகழ்ச்சி என்பதால் மக்கள் கட்டணத்தைப் பெரிதாக பார்க்கவில்லை" என்றார்.

இந்த சேவைக்காக ஜெட் லைட் 737-700 விமானம் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது. மூன்று மணி நேரம் இந்த விமானம் வானில் சுற்றிக் கொண்டிருக்கும்.

இந்த விமானத்தில் பயணிக்க 70 வயது முதியவர் ஒருவரும் புக் செய்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இவர்தான் வயதில் மூத்த பயணியாம். மிகக் குறைந்த வயது பயணியாக 11 வயது சிறுமி ஒருவர் பயணிக்கின்றார்.

விமான பயணத்தின்போது மாஜிக் ஷோ, சூரிய கிரகணம் குறித்த விளக்கம் உள்ளிட்டவை காட்டப்படவுள்ளதாகவும் கேள்வி - பதில் நிகழ்ச்சி ஒன்றும் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தெரங்காவில் குவியும் கூட்டம்...

தெரங்கா இப்போது இந்தியாவின் முழுக் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த நகருக்கு தனிப்பெருமை உள்ளது.

1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆரியபட்டா இங்குதான் முகாமிட்டு தனது வானியல் ஆய்வுகளை மேற்கொண்டார் என்பது தனிப் பெரும் சிறப்பாகும். இங்கு தங்கியிருந்துதான் நட்சத்திரங்களின் நடமாட்டத்தை அவர் கண்காணித்து வந்தார்.

பாட்னாவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தெரங்காவில் சூரியகிரகணத்தைப் பார்க்க லட்சக்கணக்கானோர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஞ்ஞானிகள், ஆயவாளர்கள், சுற்றுலாப் பயணிகள் என 2 லட்சம் பேர் வரை வருவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தெரங்காவில் 3 நிமிடம் 48 விநாடிகளுக்கு சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும்.

மக்கள் கூட்டம் அதிக எண்ணிக்கையில் வரும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

சீனா நடத்தும் சோதனை

இதற்கிடையே முழு கிரகணத்தின்போது பூமியின் ஈர்ப்பு சக்தி குறையும் என்று கூறப்படுவது குறித்து 6 இடங்களில் இது குறித்த ஆய்வுகளை நடத்தத் தயாராகி வருகின்றனர் சீன விஞ்ஞானிகள்.

இந்தக் கூற்று உண்மையி்ல்லை என்றே கூறப்பட்டாலும் இதை யாரும் இதுவரை சோதித்துப் பார்த்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழி என்றால் நேரடியாக கடல் அல்ல அருத்தம்! சூழ்ந்த, வட்டமான, உருளும், சுழரும், ... என்பதே அருத்தம்

ஆனால் கருநிழல்...

உம்ககு நாக்காலடிக்க விரும்பாதலால் கூறவில்லை ...

முட்டையின் கருவில் ஒரு சிசு அந்த சிசுவிற்கொருநிழல் கருநிழலா !

நீர் சொல்லலும் கருநிழல் வந்து கரிநிழல் அல்லது கறுநிழலாக்ததான் இருக்க வேண்டும் ?

தவறு பெரியதவறு!!

சொல்லை யாரும்மாக்கக்கூடியதாக விடவேண்டும், சரியான எல்லோரிற்கும் விழங்கக்கூடிய சொல்லு தானாகவே நீண்டகாலம் வாழுந்து வழர்ந்து பலவேறு இணைப்புச்சொற்களையும் தரும்...

நான் கூறவில்லை ஒரு பண்டிதர் கூறுகிறார் ...

முதலில் அகநிழல் புறநிழல் என்றார் கிரகணப்படத்தை பர்துவிட்டு

பின்ப பந்தினதும் பாட்டியின் மரத்தின் படத்தையும் சித்தரித்ததால்

அடர்நிழல் என்றும் அரிநிழல் என்றும் கூறினார்! ...

தமிழ் சொற்கள் ஆங்கில்த்தில் போல வறண்ட வரையறுப்புகு உட்படாதது, உட்படுத்தமுடியாது, நாங்கள் கார்டீசியர்(1) அல்ல !

(1) வைச்சா குடும்பி அடிச்சா மொட்டை

ஆழி என்பதற்கு கடல் என்றும் தமிழில் அர்த்தம் இருக்கிறது. (இங்கு பார்க்கவும்..!)

ஆழிப்பேரலை என்பது தமிழீழத்தில் கூட பாவிக்கப்பட்டிருக்கிறது. கடற்கோள் என்பது இலக்கியங்களில் பாவிக்கப்பட்டுள்ளது.

கரு - என்பது முட்டையில் இருக்கும் கருவை மட்டுமல்ல. கருப்பையில் உள்ள கருமட்டுமல்ல. அணுவில் உள்ள கருவையும் தான் குறிப்பிடுகிறது. அதற்காக கரு (என்ற) கருமைக்கான பகுதியல்ல அது. தமிழில் ஒரு சொல்லிற்கு பல பொருள் உண்டு.

கருநிழல் என்பது ஏலவே இந்திய கோளாய்வு மைய அலுவலர் ஒருவரால் கூட பாவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தனக்கென்று ஒரு சொல்லிலக்கணத்தைக் கொண்ட மொழி. அதற்கமைய.. புதிய சொற்களின் சரியான அறிமுகம் அவசியமாகிறது. புலவர்கள் கற்பனையில் எழுதும் தமிழ் போன்றதல்ல அறிவியற் தமிழ். அறிவியற் தமிழ் காரணத்தமிழ் ஆகும். புலவர்களின் தமிழ் கற்பனைத் தமிழாகும்.. இலக்கணப் போலிகள் நிறைந்தவை.

நிழல் என்பார் அப்புறம்.. அடர் என்பார்.. கரு வராவிடில்.. அடர் இழந்து கருநிழல்.. நிழலாகி நின்றிருக்கும்..! இப்படியும் ஒரு புலவர் சொல்லுவார்..! :D

Link to comment
Share on other sites

சீனா நடத்தும் சோதனை

இதற்கிடையே முழு கிரகணத்தின்போது பூமியின் ஈர்ப்பு சக்தி குறையும் என்று கூறப்படுவது குறித்து 6 இடங்களில் இது குறித்த ஆய்வுகளை நடத்தத் தயாராகி வருகின்றனர் சீன விஞ்ஞானிகள்.

இந்தக் கூற்று உண்மையி்ல்லை என்றே கூறப்பட்டாலும் இதை யாரும் இதுவரை சோதித்துப் பார்த்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி

ஹொப்! பொப்!! பொப்!!! வீராகேசரி.... !?

... An interesting set of unexplained observations of gravity anomalies has been found on experiments carried out during solar eclipses. Most of these studies have been performed using paraconical pendulums, torsion pendulums or spring gravimeters. In the experiments with paraconical pendulums (a modified version of Foucalt’s pendulum, whose articulation consists in the contact between two planes via a sphere) the focus was on the orientation of the pendulum oscillation plane. During the solar eclipse in 1954 (at Le Bourget, France) Allais [2-4] found that the oscillation plane turned several degrees when the eclipse started (the first contact of the moon), stayed on this angle, and returned back at the end of the eclipse (the last contact of the moon). Similar type of anomalies was also reported by Savrov in eclipses in 1961 in Moscow [5], 1991 in Mexico City [6,7], and 1994 in Brazil [8], although effects were close to the limit of the instrument resolution. ...

மேலுமறிய இங்கே - ஆராச்சிக்கட்டுரையை (ஆங்கலத்தில்) தொலையிறக்கம் செய்ய இங்கே செல்க

inout-tide.gif

from home.hiwaay.net

A view of the tides at Halls Harbour on Nova Scotia's Bay of Fundy. This is a time lapse of the tidal rise and fall over a period of six and a half hours. During the next six hours of ebb the fishermen unload their boats on the dock. That's a high tide every 12 and 1/2 hours! There are two high tides every 25 hours.- மேலுமறிய இங்கே

here's a study from China .

Here's Natl. Geographic

Link to comment
Share on other sites

  • 5 months later...

இந்த வருடம் சூரியன் எங்கட பொங்கல பர்க்க மாட்டார் போல இருக்குது

தை தைமாதம் 15ஆம் நாள்

சந்திரனின் நிழல் செல்ல விருக்கும் பாதை

நேர யாழ்பபாணத்திற்கு மேலாகச் செல்கிறது !!

உடனுக்குடன் பூமிய அவதானிக்க

ats_0132010.gif

imag from www.eclipse.org.uk

எல்லோரிற்கும்

:wub: பொங்கல் வாழ்ததுக்கள் :(

!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தகவலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடம் சூரியன் எங்கட பொங்கல பர்க்க மாட்டார் போல இருக்குது

தை தைமாதம் 15ஆம் நாள்

சந்திரனின் நிழல் செல்ல விருக்கும் பாதை

நேர யாழ்பபாணத்திற்கு மேலாகச் செல்கிறது !!

மாட்டுப் பொங்கலுக்கு, சூரியன் வருவார் தானே ......

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.