Jump to content

வசந்தம் தாய்மண்ணைத் தழுவாமல் போகிறது.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தம் தாய்மண்ணைத் தழுவாமல் போகிறது.

வாய்கள் பல இருந்தும் மௌனத்தில் நோகின்றன.

எரிக்கும் நெருப்படக்கி இனமொன்று வேகிறது

எதுவரைக்கும் தான் முடியும்?

எழும்போது உலகம் தெளியும்.

c0386a.jpg

வளவுக் குயில்கள் குரலிழந்து போயுளன.

வாசக் காற்றும் கந்தகத்துள் தோய்ந்துளது.

உப்புக்கடல் எழுந்த ஒப்பாரிப் பேரலைகள்

கொட்டிய மனித சாம்பலுடன் கரைந்துளன.

முற்றத்து மலர்களை முட்செடிகள் கிழித்துளன.

மூசிய பேய்க்காற்றில் ஊர்களெலாம் தீய்ந்துளன.

செத்தகூடுகள், சிதைந்த உறுப்புகள்

நச்சுக் காற்றினால் வீழ்த்திய மெய்களென

வல்லரக்கத் தனத்திற்கு வெள்ளோட்டம் முடிந்துளது.

எண்ணிப் பார்க்குமுன்னே ஏதேதோ நடந்துளன.

சொந்தமண் இப்போது சோகத்தில் தவித்துளது.

ஆறாப் பெருந்துயரில் அள்ளுண்ட பெருஞ்சனம்

பட்டிகளில் அடையுண்டு,…. மானுடம் மக்கி,

மண்தின்னக் கிடக்கின்றர்,

r3632161679098.jpg

கந்தகப் பெருமழையில் கலங்காத பெருநெஞ்சுகள்

கந்தலில் நைந்து கசங்கிக் கிடக்கின்றன.

விடுதலைக்கு முரசறைந்த மானிட வாழ்வு

பேரரசுப் போட்டிகளில் புண்பட்டு உழல்கிறது.

ஒரு சொட்டு நீருக்காய் ஓர்மச் சினம் ஒறுத்து

உறவுக் கொடியெல்லாம் மெய் கூனித் தவிக்கின்றர்

நெஞ்சக் கூட்டறைக்குள் பொத்திவைத்த அத்தனையும்

பித்தச்சுனை வெடித்த எரிமலையில் கரிகின்றன.

ஐ.நா அம்பலத்தில் அம்மணமாய் ஆடியதில்

இந்தியப் பெருநாடே இறுதிச் சுற்றில் நிலைத்தது.

இவற்றிற்கெல்லாம் தீர்வெழுத திராணியற்றதான

இயலாமை நடிப்பில்

ஒஸ்கார் விருதை உலகமே பெற்றுளது.

மனித நேய ஆடை மதிப்பற்றுக் கிடக்கிறது.

இனி ஒரு விதி செய்தல் எமக்குரித்தாயுளது.

இனத்தைக் கருவறுத்தால்… ஈழம் பிறப்பற்றுப் போகுமோ?

அனைத்தும் இழந்திழந்தே அன்றும் வலுவுற்றோம்.

இனத்தை கருவறுத்தால் இன்னும் பெருக்கெடுப்போம்.

banyantreeaerialroot.jpg

அகழான்கள் குடைந்தெடுத்தால்…

ஆடுகால் பூவரசும் அடிசெத்து போயிடுமோ?

விழுதுகள் இறங்கும்.,

குடைந்த இடமெல்லாம் வேர்பரப்பும் வேகத்தில்

அகழான்கள் வெளியேறும்.,

இல்லை அடியினில் நசுங்குண்டுச் சாகும்.

இனத்தை அழிக்க துணைபோன கோட்டான்களுக்கு

இந்திர விழா முடியத்தானே இழவுகள் புரிய வரும்.

கனத்த பெரு வெளியின் கானலை நம்பி

இருக்கும் எச்சிலையும் இழுத்துத் துப்பட்டும்.

அறுபது ஆண்டுகளாய் பட்டதெல்லாம்

இணைத்து இன்னும் ஆறுமாதத்திற்காகினும்

அவலத்தைச் சுமந்துதான் ஆகவேண்டும்.

19782.51808.file.eng.Gillian-s-friend-Guido-roman-rides-in-Horses-Inside-Out-style-.230.340.jpg

பந்தயக் குதிரைகள் ஓடிக் களைக்கட்டும்.

இரண்டு பரிகளில் கால்களைப் பரப்பிய

ஒற்றைப் பாகன் இடறி விழட்டும்

இல்லாவிடின்

ஒரு புரவி தடம் மாறட்டும்.

காட்சி மாறுகின்ற வேளைக்காய்

இன்னும் கொஞ்சம் வலிகளில் மூழ்குவோம்.

புதிதென்றால் அல்லவா

நாங்கள் பொலபொலவென்று அழுது தீர்க்க……,

பழகி விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகாரா அக்கா

இது உங்கள் வரிகளல்ல... கொதித்துப் போயிருக்கும் ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களும் சொல்லும் வார்த்தைகளாகவே நான் பார்க்கிறேன்..... மிக அருமையான வரிகள்... உங்கள் பணி தொடரவேண்டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாராக்கா,

உங்களின் கவிவரிகள் மிகவும் நன்றாக இருக்கிறது.ஏன்.....? படங்கள் கூடத்தான் நிஜத்தை எடுத்து வருகிறது.

யாயினி.

Link to comment
Share on other sites

அறுபதாண்டுச் சாபம் நீங்காமல்

ஆறாவடுக்களை நிரந்தரமாக்கிச் சென்றுளது தோழி....,

ஆறுமாதமோ அதற்கும் பின்னால் இன்னும் எத்தனை மாதங்களோ...?

காலமழை வருமுன் காலாற

ஊர்போக வேண்டும் என் உறவுகள்.

காலம் மாறுமென்ற காத்திருப்பு மட்டுமே

நம்பிக்கை தருகிறது.

ஓராறாய் அழுத கண்ணீர்

ஒற்றித் துடைத்து உள்ளோமெனச் சொல்ல

எவருமில்லாத் தனிமையில்

இதயம் வெறுமையாய்.....

எல்லாளன் போய்விட்ட பின்னர்

எல்லாம் இல்லாததாய் உணர்வு.....

எனினும் கடைசிச் சொட்டு நம்பிக்கையில்

கைகளை பற்றிப்பிடித்திருப்போம்.

Link to comment
Share on other sites

சகாரா அக்கா, உங்கடை கவிதைகள் இரண்டு extremeகளில எழுதப்பட்டு இருக்கிது. நடுவில நிண்டும் கவிதைகள் எழுதிப்பாருங்கோ. நடுவில நிக்கிற கவிதைகள்தான் இப்ப எங்களுக்கு அதிகம் தேவை.

அதாவது சோகம் எண்டால்... பெருஞ்சோகம் எண்டும் இல்லாமல்...

நம்பிக்கை என்றால் அதீத நம்பிக்கை என்றும் இல்லாமல்...

கிட்டத்தட்ட யதார்த்தத்துடன் பயணிக்கக்கூடியவாறான கவிதை. அப்பிடி கொஞ்சம் எழுதுங்கோ.

(பிறகு கோவிச்சுக்கொண்டு இயங்கு முயங்கு மயங்கு எண்டு ஏதாவது எக்கச்சக்கமாய் எழுதிப்போடாதிங்கோ :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவி, யாயினி, சாந்தி, கலைஞன் மற்றும் இக்கவிதையைப் பார்வையிட்டவர்களுக்கும் நன்றிகள்.

ஆமாம் சாந்தி

காலமழை வருமுன் காலற

ஊர்போக வேண்டும் என் உறவுகள்.

எல்லாத் திசையிலும் நாமிருந்தும்

எட்டா உறவுகளாய்....

என்றோ எழுதாமல் போட்டு வைத்த விதியின் பக்கங்களாய்

எவரெவரோ இழுக்கவும், ஈனப்படுத்தவும்

முடிவற்றதாய் நீள்கின்றன வதைமுகாம்களில் வாழ்வு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா அக்கா, உங்கடை கவிதைகள் இரண்டு extremeகளில எழுதப்பட்டு இருக்கிது. நடுவில நிண்டும் கவிதைகள் எழுதிப்பாருங்கோ. நடுவில நிக்கிற கவிதைகள்தான் இப்ப எங்களுக்கு அதிகம் தேவை.

அதாவது சோகம் எண்டால்... பெருஞ்சோகம் எண்டும் இல்லாமல்...

நம்பிக்கை என்றால் அதீத நம்பிக்கை என்றும் இல்லாமல்...

கிட்டத்தட்ட யதார்த்தத்துடன் பயணிக்கக்கூடியவாறான கவிதை. அப்பிடி கொஞ்சம் எழுதுங்கோ.

(பிறகு கோவிச்சுக்கொண்டு இயங்கு முயங்கு மயங்கு எண்டு ஏதாவது எக்கச்சக்கமாய் எழுதிப்போடாதிங்கோ :D )

தூரத்தில் எங்கோ தீனக்குரல்கள் கேட்கின்றன.

கூட்டமாக முகாம்களுக்குள் முடக்கப்பட்டவர்களின் குரல்களாம்.

காற்று வாக்கில் கேள்விப்பட்டது.

ஆயுதமும், அகிம்சையும் நீர்த்துப்போன அவர்களின் போராட்டத்தின் பலன்

மூன்று இலட்சம் மக்கள் அகதிமுகாம்களுக்குள்ளாம்.

நான் நடுநிலையில் நின்றுதான் எழுதுகிறேன்

அவை வதைமுகாம்கள் அல்ல அகதி முகாம்கள் மாத்திரமே…..

மகிந்த அரசின் சனநாயகப்பாதையில் அவர்களின் வாழ்வு

புத்தொளி வீசும் பொன்னாக்கப்படும்.

நம்பிக்கை கொள்வோம்.

தமிழர் வாழ்வு மறுக்கப்படவில்லை

சிங்களத்துடன் ஒற்றுமையாக வாழ அறிவுறுத்தப்படுகிறது அவ்வளவுதான்.

தமிழர்களே ஒன்றுபடுங்கள்.

நடுநிலைமையில் நின்று உங்கள் வாழ்வைத் தீர்மானியுங்கள்

அதீத நம்பிக்கையும், அதீத சோகங்களும் கொண்டு

இதுவரை அழியுண்டு போய்விட்டீர்கள்.

நடுநிலையில் நின்று முடிவெடுத்துச் சிங்களத்துடன்

சம பந்தியில் இல்லாவிட்டாலும்

காலடியில் இருந்தாகிலும் உங்கள் வாழ்க்கையை யாசியுங்கள்

அதுதான் இருக்கும் ஒரே வழி

இப்படி எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

கலைஞன் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள்?

உறவுக் கொடியெல்லாம் உயிர்வலிக்கக் கிடக்கும் போது......

இது அவர்களுக்காக விதிக்கப்பட்டது.

எழுவதும் விழுவதுமாக தமிழர் கூட்டம் பயணித்துக் கொண்டிருக்கிறது.

அவை அந்தக் கூட்டத்தின் தலைவிதி.

மாலையில் விழும் சூரியன் எழுவதை பூமியின் சுழற்சியே தீர்மானிக்கும்.

அழுகைக் குரல்கள் எங்கோ தூரத்தில் காற்றில் கரைந்தன.

நான் சாதாரண மனுசியாக உலகின் கண்களில் நடுநிலைவாதியாக இருக்கிறேன்

என்னுடைய இன்றைய நாளில் வாழ்வு

எனக்கு ஒளிக்கீற்றை செல்லவேண்டிய பாதையை

எனக்கு மட்டுமானதாகத் தந்துள்ளது.

எனது சுயத்திற்கான வசதிகளை கையிலெடுத்து

நானும் எனது கணவனும்

துய்த்த இன்பத்தில் விளைந்த உயிர்களும் வாழ்கின்ற உல்லாசத்தை

எங்கோ அழுகின்ற இனத்திற்காக தொலைக்க முடியாது.

என்று சம்பந்தமே இல்லாத மூன்றாம் மனுசியாக எழுதச் சொல்கிறீர்களா?

Link to comment
Share on other sites

இப்படி எழுதினால் நல்லாய் இருக்கும் என்று சொல்ல இல்லை. ஆனால் மேலே நீங்கள் எழுதியதில் கீழுள்ள வரிகள் பெரும்பான்மை தமிழருக்கு பொருத்தமானதாய் யதார்த்தமாய் இருக்கிது சகாரா அக்கா:

தூரத்தில் எங்கோ தீனக்குரல்கள் கேட்கின்றன.

கூட்டமாக முகாம்களுக்குள் முடக்கப்பட்டவர்களின் குரல்களாம்.

காற்று வாக்கில் கேள்விப்பட்டது.

ஆயுதமும், அகிம்சையும் நீர்த்துப்போன அவர்களின் போராட்டத்தின் பலன்

மூன்று இலட்சம் மக்கள் அகதிமுகாம்களுக்குள்ளாம்.

நான் நடுநிலையில் நின்றுதான் எழுதுகிறேன்

என்னுடைய இன்றைய நாளில் வாழ்வு

எனக்கு ஒளிக்கீற்றை செல்லவேண்டிய பாதையை

எனக்கு மட்டுமானதாகத் தந்துள்ளது.

எனது சுயத்திற்கான வசதிகளை கையிலெடுத்து

நானும் எனது கணவனும்

துய்த்த இன்பத்தில் விளைந்த உயிர்களும் வாழ்கின்ற உல்லாசத்தை

எங்கோ அழுகின்ற இனத்திற்காக தொலைக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மையினருக்குப் பொருத்தமாக இருக்கிறது என்பதற்காக என் எழுதுகோலின் உயிர்ப்பைத் தொலைக்க முடியாது கலைஞன்.

வெறுமைப்பட்டதான மானிட உணர்வை யதார்த்தம் என்று ஓடும் புளியம்பழமும்போல் விட்டேத்தியாக உணர்வை தள்ளி வைக்க முடியவில்லை.

காதலை ஆழமாக எழுதினால் அங்கு நடுநிலமையில் நின்று எழுதுங்கள் என்று யாரும் கேட்பதில்லை.

காமத்தை அழுத்தி எழுதினால் அங்கும் நடுநிலமையில் நின்று எழுதுங்கள் என்று யாரும் வேண்டுகோள் விடுப்பதில்லை.

அது என்ன இதுவரைகாலமும் நீதிக்கும் அநீதிக்கும் இடையில் நடுநிலமை என்பது எங்கு இருக்கிறது என்று கேள்விகளை வைத்திருந்த நாம் இப்போது மட்டும் முழுக்க முழுக்க உலகத்தரத்திலேயே எம்மினத்திற்கு அநீதி இழைக்கப்படும் நேரத்தில் நடுநிலை பேணவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறோம்? அப்படியானால் இவ்வளவு அழிவுகளையும் எங்களை நோக்கி, சிங்களம் முதல் அதனுடன் இணைந்து வழிநடாத்திய வல்லரசுகள் வரை திணித்தது நீதி என்கிறீர்களா? சொல்லுங்கள் நானும் நடுநிலை பேணி எழுத முயற்சிக்கிறேன். கவிதையை வாசிக்கும் மற்றவர்களுக்கு நடுநிலை என்று எதிலும் ஒட்டாத மாதிரி, எமக்காக குரல் கொடுக்க வேண்டிய அவசியமே எவருக்கும் இல்லை என்கிற மாதிரி, இல்லாவிட்டால் எம்மோடு ஒட்டாமலே எடுத்ததற்கெல்லாம் போராட்டத்தை முன் நடாத்திய போராளிகளையும், மாவீரர்களையும் பொட்டுத் தாக்கும் எதற்குமே லாயக்கு இல்லாத காகித, கணனி வீரர்கள் எல்லோரோடும் நடுநிலமை பேணி அங்கு வதைமுகாம்களுக்குள் இருக்கிற சனத்திற்கு விடிவே வர விடாமல் மாறி மாறிக் குழம்புவதற்கு ஆவன செய்ய முயற்சிக்கிறேன்

Link to comment
Share on other sites

பெரும்பான்மையினருக்குப் பொருத்தமாக இருக்கிறது என்பதற்காக என் எழுதுகோலின் உயிர்ப்பைத் தொலைக்க முடியாது என்கின்ற உங்கள் நியாயப்பாட்டை ஏற்றுக்கொள்கின்றேன். கருங்கல்லை வைச்சு சிற்பம் செய்யலாம் / செதுக்கலாம், வீடு கட்டலாம். ஆனால் கருங்கல்லில சட்டி, பானை செய்து சமைச்சு சாப்பிடுவது கடினமானது. extremeஆக இல்லாமல் யதார்த்தத்துடன் ஒன்றிப்போகின்ற கவிதைகளாய் கேட்டது எனது தவறுதான். மன்னிச்சுக்கொள்ளுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எழுதினால் நல்லாய் இருக்கும் என்று சொல்ல இல்லை. ஆனால் மேலே நீங்கள் எழுதியதில் கீழுள்ள வரிகள் பெரும்பான்மை தமிழருக்கு பொருத்தமானதாய் யதார்த்தமாய் இருக்கிது சகாரா அக்கா:

தூரத்தில் எங்கோ தீனக்குரல்கள் கேட்கின்றன.

கூட்டமாக முகாம்களுக்குள் முடக்கப்பட்டவர்களின் குரல்களாம்.

காற்று வாக்கில் கேள்விப்பட்டது.

ஆயுதமும், அகிம்சையும் நீர்த்துப்போன அவர்களின் போராட்டத்தின் பலன்

மூன்று இலட்சம் மக்கள் அகதிமுகாம்களுக்குள்ளாம்.

நான் நடுநிலையில் நின்றுதான் எழுதுகிறேன்

என்னுடைய இன்றைய நாளில் வாழ்வு

எனக்கு ஒளிக்கீற்றை செல்லவேண்டிய பாதையை

எனக்கு மட்டுமானதாகத் தந்துள்ளது.

எனது சுயத்திற்கான வசதிகளை கையிலெடுத்து

நானும் எனது கணவனும்

துய்த்த இன்பத்தில் விளைந்த உயிர்களும் வாழ்கின்ற உல்லாசத்தை

எங்கோ அழுகின்ற இனத்திற்காக தொலைக்க முடியாது.

பெரும்பான்மையினருக்குப் பொருத்தமாக இருக்கிறது என்பதற்காக என் எழுதுகோலின் உயிர்ப்பைத் தொலைக்க முடியாது என்கின்ற உங்கள் நியாயப்பாட்டை ஏற்றுக்கொள்கின்றேன். கருங்கல்லை வைச்சு சிற்பம் செய்யலாம் / செதுக்கலாம், வீடு கட்டலாம். ஆனால் கருங்கல்லில சட்டி, பானை செய்து சமைச்சு சாப்பிடுவது கடினமானது. extremeஆக இல்லாமல் யதார்த்தத்துடன் ஒன்றிப்போகின்ற கவிதைகளாய் கேட்டது எனது தவறுதான். மன்னிச்சுக்கொள்ளுங்கோ.

இந்த இடத்தில் ஒன்றை நீங்கள் அவதானிக்க வேண்டும் கலைஞன்.

இங்கு நீங்கள் பெரும்பான்மையினர் என்று குறிப்புக் காட்டியது புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தினரையே தவிர தாயகத்தில் உள்ளவர்களை அல்ல. இதில் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் ஒரு அங்கமாகத்தான் நாமும் இருக்கிறோம். இந்தக் கவிதையின் பொருத்தப்பாடு எப்படி அமைகிறது என்றால் மேலைநாட்டின் வசதியையும், வாழ்வையும் கொண்டு, இனத்தையும், தாய்நாட்டையும் பற்றிச் சிந்திக்காமல் மனிதநேயத்தையும் தொலைத்துவிட்டு (இதைப் பொருத்தமானவர்களுக்குப் போட்டுக் கொள்க), சுயநலத்தோடு வாழும் கூட்டத்திற்கு இதமாக வருடிக் கொடுக்க, முடிந்தால் அவற்றை நியாயப்படுத்த படைக்கப்பட்டிருக்கும் ஒரு படைப்பே. என்னைப் பொறுத்தவரை இப்படி ஒன்றுக்குமே பிரயோசனம் அற்று தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்யும் ஒரு சமூகத்திற்கு அதன் குரலாக வக்காளத்து வாங்கிக் கவிதை எழுத முடியாது.

இன்றைய நாட்களில் தாயகத்தில் தமிழர் வாழ்வு என்பது அதீத சோகங்களாலேயே சூழப்பட்டு இருக்கிறது. அச்சோகத்தின் கனதியை புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் உணரவேண்டும். அந்த உணர்வின் வெளிப்பாடே தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு வழிகோலும்.

ஆக சட்டி பானை வனைந்து சோறு சமைத்துச் சாப்பிடுவதோடு தமிழரின் தேவைகள் முற்றுப் பெற்றுவிடுமா? யதார்த்தம் என்று மனித நேயத்தை தொலைப்பதற்கு உடந்தையாக எழுதுகோல்கள் செயற்பட்டால் அவ்வெழுது கோல்களினால் சமூகத்திற்கு என்ன பயன்?

கலைஞன், உங்கள் கருத்துப் போன்று அதீத சோகமும் இல்லாமல், அதீத நம்பிக்கையும் கொள்ளாமல் ஒரு படைப்பிலக்கியத்தைச் செய்து ஒரு தனி மனித சிந்தனையோடு மட்டுப்படும்போது அச்சிந்தனையால் எங்கள் உறவுகளுக்கு என்ன நன்மைகள் விளையும் என்று தெளிவுபடுத்துங்கள்.

Link to comment
Share on other sites

சுயநலம் என்கின்றவகையில பார்க்கும்போது பெரும்பான்மையான தாயக மக்களுக்கும், பெரும்பான்மையான புலம்பெயர் மக்களுக்கும் இடையில எதுவித வேறுபாடுகளையும் என்னால காணமுடியவில்லை சகாரா அக்கா.

Link to comment
Share on other sites

பெரும்பான்மையினருக்குப் பொருத்தமாக இருக்கிறது என்பதற்காக என் எழுதுகோலின் உயிர்ப்பைத் தொலைக்க முடியாது என்கின்ற உங்கள் நியாயப்பாட்டை ஏற்றுக்கொள்கின்றேன். கருங்கல்லை வைச்சு சிற்பம் செய்யலாம் / செதுக்கலாம், வீடு கட்டலாம். ஆனால் கருங்கல்லில சட்டி, பானை செய்து சமைச்சு சாப்பிடுவது கடினமானது. extremeஆக இல்லாமல் யதார்த்தத்துடன் ஒன்றிப்போகின்ற கவிதைகளாய் கேட்டது எனது தவறுதான். மன்னிச்சுக்கொள்ளுங்கோ.

கலைஞனுக்கும் கவிதைச் சகாராவுக்கும் கருத்து யுத்தம் ! :lol:

கருத்துக்களை இருவருமு் கருத்துக்களால் வெல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுயநலம் என்கின்றவகையில பார்க்கும்போது பெரும்பான்மையான தாயக மக்களுக்கும், பெரும்பான்மையான புலம்பெயர் மக்களுக்கும் இடையில எதுவித வேறுபாடுகளையும் என்னால காணமுடியவில்லை சகாரா அக்கா.

கலைஞன் தற்கால வாழ்வில் சுயநலம் என்ற விடயத்தில் ஒரே தராசில் புலம்பெயர்ந்தோரையும், தாயக மக்களையும் நிறுத்து பார்த்தல் தவறானது.

Link to comment
Share on other sites

  • 10 years later...
On 7/14/2009 at 12:54 AM, வல்வை சகாறா said:

வசந்தம் தாய்மண்ணைத் தழுவாமல் போகிறது.

வாய்கள் பல இருந்தும் மௌனத்தில் நோகின்றன.

எரிக்கும் நெருப்படக்கி இனமொன்று வேகிறது

எதுவரைக்கும் தான் முடியும்?

எழும்போது உலகம் தெளியும்.

c0386a.jpg

வளவுக் குயில்கள் குரலிழந்து போயுளன.

வாசக் காற்றும் கந்தகத்துள் தோய்ந்துளது.

உப்புக்கடல் எழுந்த ஒப்பாரிப் பேரலைகள்

கொட்டிய மனித சாம்பலுடன் கரைந்துளன.

முற்றத்து மலர்களை முட்செடிகள் கிழித்துளன.

மூசிய பேய்க்காற்றில் ஊர்களெலாம் தீய்ந்துளன.

செத்தகூடுகள், சிதைந்த உறுப்புகள்

நச்சுக் காற்றினால் வீழ்த்திய மெய்களென

வல்லரக்கத் தனத்திற்கு வெள்ளோட்டம் முடிந்துளது.

எண்ணிப் பார்க்குமுன்னே ஏதேதோ நடந்துளன.

சொந்தமண் இப்போது சோகத்தில் தவித்துளது.

ஆறாப் பெருந்துயரில் அள்ளுண்ட பெருஞ்சனம்

பட்டிகளில் அடையுண்டு,…. மானுடம் மக்கி,

மண்தின்னக் கிடக்கின்றர்,

r3632161679098.jpg

கந்தகப் பெருமழையில் கலங்காத பெருநெஞ்சுகள்

கந்தலில் நைந்து கசங்கிக் கிடக்கின்றன.

விடுதலைக்கு முரசறைந்த மானிட வாழ்வு

பேரரசுப் போட்டிகளில் புண்பட்டு உழல்கிறது.

ஒரு சொட்டு நீருக்காய் ஓர்மச் சினம் ஒறுத்து

உறவுக் கொடியெல்லாம் மெய் கூனித் தவிக்கின்றர்

நெஞ்சக் கூட்டறைக்குள் பொத்திவைத்த அத்தனையும்

பித்தச்சுனை வெடித்த எரிமலையில் கரிகின்றன.

ஐ.நா அம்பலத்தில் அம்மணமாய் ஆடியதில்

இந்தியப் பெருநாடே இறுதிச் சுற்றில் நிலைத்தது.

இவற்றிற்கெல்லாம் தீர்வெழுத திராணியற்றதான

இயலாமை நடிப்பில்

ஒஸ்கார் விருதை உலகமே பெற்றுளது.

மனித நேய ஆடை மதிப்பற்றுக் கிடக்கிறது.

இனி ஒரு விதி செய்தல் எமக்குரித்தாயுளது.

இனத்தைக் கருவறுத்தால்… ஈழம் பிறப்பற்றுப் போகுமோ?

அனைத்தும் இழந்திழந்தே அன்றும் வலுவுற்றோம்.

இனத்தை கருவறுத்தால் இன்னும் பெருக்கெடுப்போம்.

banyantreeaerialroot.jpg

அகழான்கள் குடைந்தெடுத்தால்…

ஆடுகால் பூவரசும் அடிசெத்து போயிடுமோ?

விழுதுகள் இறங்கும்.,

குடைந்த இடமெல்லாம் வேர்பரப்பும் வேகத்தில்

அகழான்கள் வெளியேறும்.,

இல்லை அடியினில் நசுங்குண்டுச் சாகும்.

இனத்தை அழிக்க துணைபோன கோட்டான்களுக்கு

இந்திர விழா முடியத்தானே இழவுகள் புரிய வரும்.

கனத்த பெரு வெளியின் கானலை நம்பி

இருக்கும் எச்சிலையும் இழுத்துத் துப்பட்டும்.

அறுபது ஆண்டுகளாய் பட்டதெல்லாம்

இணைத்து இன்னும் ஆறுமாதத்திற்காகினும்

அவலத்தைச் சுமந்துதான் ஆகவேண்டும்.

19782.51808.file.eng.Gillian-s-friend-Guido-roman-rides-in-Horses-Inside-Out-style-.230.340.jpg

பந்தயக் குதிரைகள் ஓடிக் களைக்கட்டும்.

இரண்டு பரிகளில் கால்களைப் பரப்பிய

ஒற்றைப் பாகன் இடறி விழட்டும்

இல்லாவிடின்

ஒரு புரவி தடம் மாறட்டும்.

காட்சி மாறுகின்ற வேளைக்காய்

இன்னும் கொஞ்சம் வலிகளில் மூழ்குவோம்.

புதிதென்றால் அல்லவா

நாங்கள் பொலபொலவென்று அழுது தீர்க்க……,

பழகி விட்டது.

கந்தகப் பெருமழையில் கலங்காத பெருநெஞ்சுகள்

கந்தலில் நைந்து கசங்கிக் கிடக்கின்றன.

என்ற வரிகள் எல்லாவற்றையும் சொல்லி விட்டதே... மன வலிகளை சரியாக புலப்படுத்தியுள்ளீர்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.