Jump to content

பெண்களிற்கு ஆண்களிடம் பிடித்த குணங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்களிற்கு ஆண்களிடம் பிடித்த குணங்கள் எனும் தலைப்பில் இணைக்கப்பட்டிருந்த ஒரு கட்டுரையை

லங்காஸ்ரீயி்ல் தொழிநுட்பமும் விஞ்ஞானமும் என்ற பகுதியில் வாசித்தேன்.

இந்த ஆய்வு எங்கும் பொருந்துமா பெண்கள் இவ்வாறு உள்ளார்களா என வியக்க வைத்தது.

அதை இங்கு இணைக்க முடியாது யென்பதால் இங்கு தரவில்லை.

நீங்களும் வாசித்து பாருங்கள். சிலர் வாசித்திருப்பீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல குடும்ப தலைவனாக இருப்பதையே ......

நல்ல வழி வந்த பெண்கள் விரும்புவார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கட்டுரை வாசிக்கவில்லை.

பெண்ணிடம் ஆணுக்கு பிடித்ததும், ஆணிடம் பெண்ணுக்கு பிடித்ததும் - அவரவர் தனிப்பட்ட, சூழலுக்கு ஏற்ப, கலாச்சாரத்திற்கு ஏற்ப எதிர்பார்ப்பாய் இருக்கும்..... அது

ஆளுக்காள் மாறுபட்டதாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

குடும்ப தலைவன் எப்பவும் ஆணாய் தானே இருக்கலாம் சிறி அண்ணை? ஆனால் குடும்பத்தை கொண்டு நடத்துபவர் தலைவியாக இருக்க கூடும் தானே?

நீங்கள்- பொழுது போகேல்லை, யாரையும் உசுப்பேத்தி வம்புக்கு இழுக்கலாம் என்று தானே இந்த ரெண்டு வசனத்தை மட்டும் மொட்டையா இப்படி போட்டனியள்?! :lol:

Link to comment
Share on other sites

பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்த குணங்கள்

ஆண், பெண் என்ற பிரிவெல்லாம் இப்போது போயே போச்சு! ஆணுக்குரிய அனைத்து வேலைகளையும் பெண்கள் செய்கின்றனர். ஆனால் பெண்ணுக்குரிய அனைத்து குணங்களையும் ஆண்கள் பெற்றிருக்கின்றனரா என்றால் அதுதான் இல்லை என்கிறது ஒரு உளவியல் ஆய்வு.

எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையையும் தனக்கு ஏற்றாற்போல் மாற்றிவிடும் பக்குவமும், திறமையும் பெண்களுக்கு மட்டுமே உண்டு. யாரையும் பார்த்த மாத்திரத்தில் அவர்களின் குணங்களை ஓரளவு புரிந்து விடும் ஆற்றலும் அவர்களுக்கு உண்டு. மற்றவர்களை கவர்ந்திழுக்கும் வசீகரமும் பெண்களிடம் இருந்தால் இன்னும் சிறப்பு.

அழகும், அறிவும், அடுத்தவர்களை புரிந்து கொள்ளும் குணங்களும், நல்ல பழக்க வழக்கங்களும் உள்ள பெண்களுக்கு எப்போதுமே முன்னேற்றம் என்பது தொட்டு விடும் தூரம்தான். அப்படி வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு முன்னேறும் ஸ்மார்ட் பெண்களின் சிறப்புக் குணங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்,

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 18 முதல் 33 வய துக்குரிய பெண்களிடம், 'எப்படிப்பட்ட ஆண்களைப் பிடிக்கும்' என்ற கேள்விக்கு நான்கு குணங்களை கொண்ட ஆண்களைப் பிடிக்கும் என்று பதில் கூறினர்.

அவர்கள் கூறிய நான்கு குணங்கள், குழந்தைகள் மீதான விருப்பம், ஆண்மைக்குரிய விஷ யங்கள், உடல் ரீதியான கவர்ச்சி, கருணை உள்ளம் இவையே பெண்கள் 'டிக்' செய்த குணங் கள். இயல்பாகவே குழந்தைகளுக்கு பெண்கள் என்றால் மிகவும் விருப்பமான விஷயம். அதே குணம் ஆண்களுக்கும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். மேலும் நீண்ட நேரம் ரொமான்ஸ் செய்யும் ஆண்களையும் பெண்களுக்கு பிடித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆர்ப்பாட்டமில்லாத ஆண்களையே பிடிக்குமாம்!

நிர்வாகத் திறன் என்பது பெண்களுக்கு இயல்பாகவே அமைந்துள்ளது. குடும்ப நிர்வாகம், அலுவலக நிர்வாகம் மற்றும் தொழில் நிர்வாகம் என்பது பொறுமை குணத்துடன் செயல்படும் பெண்களுக்கு கடவுள் கொடுத்த வரம் என்றும் சொல்லலாம்.

தலைமைப் பண்புக்குரிய குணங்களான பணிவு, துணிவு, கனிவு என மூன்றும் ஒருங்கே அமைந்துள்ளதால் பெண்கள் தலைமையை பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்றுக் கொள்கின்றன. இதை நீங்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள நிறுவனங்களில் கண்கூடாக பார்க்கலாம்.

பெண்கள் பார்வை என்பது மிகவும் கூர்மையானது என்கிறார்கள் கணவன்மார்கள். அவர்கள் ஒரு வீட்டையோ அல்லது மனிதர்களையோ ஒரு முறை பார்த்தாலே போதும், துல்லியமாக கணித்துவிடுகின்றனர்.

அதேபோல் தங்களுடைய கணவன்மார்களின் தவறுகளை... மனதில் இருக்கும் விஷயங்களை குறிப்புகளால் உணர்ந்து கொள்ளும் திறன் படைத்தவர்கள் பெண்கள். அதனால்தான் கல்யாணமான ஆண்கள், தங்கள் மனைவியிடம் மிகவும் ஜாக்கிரதையுடன் நடந்து கொள்கின்றனர்.

இன்றைய அவசர உலகில் சைக்கிள், டூவீலர், கார் மற்றும் இதர வாகனங்களையும் பெண்கள் இயக்குகின்றனர். இந்த வாகனங்களை ஆண்கள் ஓட்டும்போது அதிக வேகம், போதை, கவனமின்மை போன்ற காரணங்களால் 77 சதவீதம் விபத்துக்கான வாய்ப்பு இருப்பதாக கூறுகிறது ஒரு ஆய்வு. ஆனால் பெண்கள் இந்த வாகனங்களை ஓட்டும்போது விபத்து என்பது மிகமிக குறைவு என்பது பெண்களுக்கான போனஸ் குணம் என்கிறது அந்த ஆய்வு.

நிதி நிர்வாகத்திலும் இன்றைய பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். தற்போது வாங்கப்படும் லோன், கிரெடிட் கார்டு மற்றும் பிற நிதி விஷயங்களில் மிகச் சரியாக நடந்து கொள்கின்றனர் பெண்கள். வீட்டுப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களான ஆபரணங்கள் மற்றும் கார் வாங்குவதில் கூட துல்லியமாக கணித்து வாங்குவதில் பெண்கள் கில்லாடிகள்! தொலை நோக்குப் பார்வையில் பெண்களை ஆண்கள் மிஞ்ச முடியாது என்பதே நிதர்சன உண்மை.

இன்றைய நவநாகரீகப் பெண்கள் இணையதளம், ஈமெயில் போன்ற நவீன தொழில் நுட்பத்திலும் சிறந்து விளங்குகின்றனர் என்கிறது ஒரு லண்டன் சர்வே. அதுமட்டுமின்றி, ஷாப்பிங், பயணம் போன்ற அவசியமான விஷயங்களுக்கு மட்டுமே இவற்றை பயன்படுத் துகின்றனர் என்றும் கூறப்படுகிறது.சேமிப்பிலும் சிறந்தவர்களாக விளங்குகின்றனர் பெண்கள். சேமிப்பு குறித்த விஷயங்கள், ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் பெண்கள் முதலீடு வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர் நிதி முதலீட்டாளர்கள்.

உடல் ஆரோக்கியத்திற்கான விஷயங்களிலும் ஆண்களை விட பெண்களே சிறந்து விளங்குகின்றனர் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள். குறிப்பாக பற்கள் விஷயத்தில்... உணவுகளை மட்டுமே பெண்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு ஆரோக்கியம் கெடும் வாய்ப்பு குறைவு. மேலும் பெண்கள் எப்போதும் பற்களை சுத்தமாக வைத்திருக்கின்றனர் என்றும் கூறுகின்றனர் மருத்துவர்கள்.

எப்போதுமே பெண்களுக்கே முன்னெச்சரிக்கை உணர்வு அதிகம். மேலும் எதையும் நன்கு யோசித்து செயல்படும் குணம் கொண்ட பெண்கள் அவசரப்பட மாட்டார்கள் என்பதால், அவர்களுக்கு மன அழுத்தம் என்பதும் குறைவு. இதனால் அவர்கள் அடிக்கடி சின்னச் சின்ன சிக்கல்களில் சிக்கி முழிப்பதில்லை என்பதும் பெண்களுக்கான சிறப்பு.

கல்லூரியில் படிக்கும் பெண்கள், தங்களுடைய 'டிகிரியில்' கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். படிக்கும் விதத்திலும் ஆண்களைவிட பெண்கள் வித்தியாசப்படுகின்றனர். ஆண்கள் பெரும்பாலும் தேர்வுக்கு முன்னர் மட்டுமே நள்ளிரவு வரை, அதிகாலை என்று படிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால் பெரும்பாலான பெண்கள் அன்றைக்கு வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்களை, அன்று மாலையே படிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.

சரி... எப்படிப்பட்ட ஆண்களைப் பெண்களுக்கு பிடிக்காது?

பெண்களுக்குப் பிடித்தமான விஷயங்களில் மிகவும் முக்கியமானது சுத்தம், சுகாதாரம்.

ஆனால் ஆண்கள் அப்படியில்லை... பல நாட்கள் துவைக்காத ஜட்டி, கெட்ட வாடை வீசும் சாக்ஸ், அலசப்படாத தலை முடி மற்றும் உடை விஷயங்களில் அவ்வளவாக அக்கறை கொள்வதில்லை என்பதே பெண்களின் குற்றச்சாட்டு. இப்படிப்பட்ட ஆண்களை பொதுவாகவே பெண்கள் வெறுக்கின்றனர்.

பொது இடங்களில் கூடும்... பேசும் கூட்டங்களில் பெண்களின் பேச்சு மிகவும் தெள்ளத்தெளிவாக இருப்பதாக கூறுகின்றனர் உளவியல் ஆய்வாளர்கள். பெற்றோர்- ஆசிரியர் கூட்டம், வாடிக்கையாளர் சந்திப்பு என பல தரப்பட்ட இடங்களில் பெண்களின் பேச்சும், செயலும் நாளுக்குநாள் மேம்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது பெண்களின் உடல் நலம் மற்றும் மன உறுதி.

அனைத்து விஷயங்களையும் திறந்த மனதுடன் பேசுகிறேன் என்று கூறிக் கொண்டு, தேவையில்லாத நபரிடம், தேவையில்லாமல் பேசும் பலவீனம் பெண்களுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக புகை, மது, சூது போன்ற கெட்ட விஷயங்களிலும் பெண்களுக்கு நாட்டமில்லாததால் இவர்களுடைய முன்னேற்றத்திற்கு எந்த தடையும் இல்லை.

இப்படி கல்வி, விளையாட்டு, தொழில் மற்றும் வேலை என எந்த துறையாக இருந்தாலும் அதில் தனி முத்திரை பதித்து வருகின்றனர் பெண்கள்.

http://ularuvaayan.blogspot.com/2009/07/blog-post_2070.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு நன்றி நுனாவிலன்.

இந்த கட்டுரையில் ஏற்று கொள்ள கூடிய விடயங்கள் பல இருக்கு. ஆனால் எல்லாருக்கும் அது பொருந்தாது. ஆய்வாளர்களின் "sample" - படித்து பட்டம் பெற்று, உயர் பதவிகளில் வசிக்கும் பெண்களை மட்டும் கொண்டதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு விடயம் - இந்த கட்டுரையில் உள்ளபடி நிலைமைகள் மாறி கொண்டு தான் வருகிறன.

ஆண் செய்யும் எல்லா வேலையும் பெண்ணும் செய்யலாம் - என்றால், ஒரு கருத்தை நிலை நாட்டுவதற்கு மட்டும் ஏற்றுக்கொள்ள கூடிய விடயம் அது.

ஆண்கள் பிரசவமாகி பிள்ளை பெறும் நிலை வரும் வரை என்றாலும் பெண்கள் தங்களால் ஆண்களின் வேலைகள் அனைத்தையும் திறமாக செய்ய முடியும் என்று காட்டி கொள்ளாது இருப்பது - புத்திசாலித்தனம்....தங்கட நலன் கருதி பெண்கள் தங்கள் ஆதிக்கத்தை பெண்ணாய் இருந்து செலுத்துவது நல்லது.

இல்லாட்டி, "பின்ன நீங்களே எல்லாத்தையும் மாஞ்சு கட்டுங்கோ" என்று போட்டு ஆம்பிளையள் சும்மா காலாட்டி கொண்டு தான் இருப்பினம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூ ............

பிள்ளைத்தாச்சி ஆம்பிளையை பார்க்க சகிக்க முடியவில்லை குட்டி .

Link to comment
Share on other sites

தூ ............

பிள்ளைத்தாச்சி ஆம்பிளையை பார்க்க சகிக்க முடியவில்லை குட்டி .

பிறப்பில பெண்ணாக இருந்து பின் ஆணாக மாறி இரண்டு பிள்ளைகளுகளைப் பெத்துட்டுதுகள்... பிள்ளைகள் தான் பாவம்...!

Link to comment
Share on other sites

தூ வை தவிர்த்து இருக்கலாம். தாய்மை இல்லாட்டி நீரும் நானும் இல்லையப்பா.

இதில என்ன சகிக்க இருக்கு எண்டு எனக்கு விளங்கேலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதேன் எப்ப பார் பெண்களுக்கு ஆண்களில் பிடித்த விடயம் பற்றித்தான்.. அல்லது பெண்களை எப்படி தாஜா பண்ணுறது.. கூஜா பண்ணுறது பற்றித்தான் ஆராய்ச்சி நடத்திக்கிட்டு இருக்கிறாங்க.

ஆண்களுக்கு பெண்களிடம் பிடித்த விடயங்கள்.. பெண்கள் ஆண்களை தாஜா.. கூஜா பண்ணுற விடயங்கள் பற்றி எழுதிறாங்க இல்லை. ஆண்கள் என்றால் என்ன அவ்வளவு சீப்பான ஆக்களா..???! பெண்களைக் கண்ட உடன வழிஞ்சிக்கிட்டு போற கூட்டம் என்றா நினைக்கிறாங்க..???!

புரியல்லையே எனக்கு...! :):lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதேன் எப்ப பார் பெண்களுக்கு ஆண்களில் பிடித்த விடயம் பற்றித்தான்.. அல்லது பெண்களை எப்படி தாஜா பண்ணுறது.. கூஜா பண்ணுறது பற்றித்தான் ஆராய்ச்சி நடத்திக்கிட்டு இருக்கிறாங்க.

ஆண்களுக்கு பெண்களிடம் பிடித்த விடயங்கள்.. பெண்கள் ஆண்களை தாஜா.. கூஜா பண்ணுற விடயங்கள் பற்றி எழுதிறாங்க இல்லை. ஆண்கள் என்றால் என்ன அவ்வளவு சீப்பான ஆக்களா..???! பெண்களைக் கண்ட உடன வழிஞ்சிக்கிட்டு போற கூட்டம் என்றா நினைக்கிறாங்க..???!

புரியல்லையே எனக்கு...! :D:lol::D

:D ராத்திரி அடிச்சது இன்னும் முறியேல்ல போல நெடுக்குக்கு!

"பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்த குணங்கள்" என்ற தலைப்பு - பெண்கள் ஆண்களிடம் எதை பார்த்து மயங்குகிறார்கள்/ வழிகிறார்கள்/ தாஜா- கூஜா :D பண்ணுகிறார்கள் என்று தானே அர்த்தம்?!

அப்படி தானே? இல்லை, எனக்கு தான் முறிய இல்லையா? :lol:

ஆனால் உண்மையில் சொல்ல போனால் இந்த கட்டுரை பொம்பிளையளை தலையில தூக்கி வச்சு ஆடுதே தவிர - தலைப்பிற்கு ஏற்ற கருத்துகள் அதிகம் இல்லை. எதோ சொட்டு மருந்து விட்ட மாதிரி - இரக்க குணம் உள்ள ஆம்பிளையலையும், கவர்ச்சியான ஆம்பிளையலையும் பெண்டுகளுக்கு பிடிக்கும் என்பதை தவிர - தலைப்புக்கு ஏற்ற மாதிரி வேற உருப்படியா இல்லை....

ஆய்வு செய்தவன் ஒரு அசட்டு சாம்பிராணி போல.... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D ராத்திரி அடிச்சது இன்னும் முறியேல்ல போல நெடுக்குக்கு!

"பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்த குணங்கள்" என்ற தலைப்பு - பெண்கள் ஆண்களிடம் எதை பார்த்து மயங்குகிறார்கள்/ வழிகிறார்கள்/ தாஜா- கூஜா :D பண்ணுகிறார்கள் என்று தானே அர்த்தம்?!

அப்படி தானே? இல்லை, எனக்கு தான் முறிய இல்லையா? :lol:

ஆனால் உண்மையில் சொல்ல போனால் இந்த கட்டுரை பொம்பிளையளை தலையில தூக்கி வச்சு ஆடுதே தவிர - தலைப்பிற்கு ஏற்ற கருத்துகள் அதிகம் இல்லை. எதோ சொட்டு மருந்து விட்ட மாதிரி - இரக்க குணம் உள்ள ஆம்பிளையலையும், கவர்ச்சியான ஆம்பிளையலையும் பெண்டுகளுக்கு பிடிக்கும் என்பதை தவிர - தலைப்புக்கு ஏற்ற மாதிரி வேற உருப்படியா இல்லை....

ஆய்வு செய்தவன் ஒரு அசட்டு சாம்பிராணி போல.... :)

இந்தக் கட்டுரை பெண்களை தாஜா கூஜா பண்ண ஆண்கள் எப்படி இருக்கனும் என்று சொல்கிறதே அன்றி.. பெண்கள் எப்படி இருக்கனும் என்று சொல்லவில்லை. இதன் அர்த்தம்.. பெண் எப்படி இருந்தாலும்.. ஆண்.. இழிச்ச வாய் மாதிரி வழிஞ்சுக்கிட்டு நிற்பான் என்பதா..??! :lol:

முதலில் உப்படி கட்டுரை எழுதிறதுகளை பிடிச்சு வைச்சு ஒரு வாங்கு வாங்கனும்...!

நான் ராத்திரிக்கு அடிக்கல்ல. அதனால தெளிவா இருக்கின்றன் என்று நினைக்கிறன்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் கட்டுரை பெண்களை தாஜா கூஜா பண்ண ஆண்கள் எப்படி இருக்கனும் என்று சொல்கிறதே அன்றி.. பெண்கள் எப்படி இருக்கனும் என்று சொல்லவில்லை. இதன் அர்த்தம்.. பெண் எப்படி இருந்தாலும்.. ஆண்.. இழிச்ச வாய் மாதிரி வழிஞ்சுக்கிட்டு நிற்பான் என்பதா..??! :lol:

முதலில் உப்படி கட்டுரை எழுதிறதுகளை பிடிச்சு வைச்சு ஒரு வாங்கு வாங்கனும்...!

நான் ராத்திரிக்கு அடிக்கல்ல. அதனால தெளிவா இருக்கின்றன் என்று நினைக்கிறன்..! :)

:lol:

ஆண்களிடம் பெண்களுக்கு பிடித்தது என்றேக்க - "நீங்கள் எப்படி இருந்தாலும் நாங்கள் விழுந்தேழும்புவம்" என்று சொல்ல மாட்டுதுகள் தானே பொம்பிளையள்...

அதிலும் இந்த தலைப்பின் கீழ் - பொம்பிளையள் எப்படி இருக்க வேண்டும் என்பதை சுட்டு போட்டாலும் சொல்லான்- எழுதினவன்.... அவன் நிச்சயமாக ஒரு ஆணாய் தான் இருக்க வேண்டும் என்பது...அதிலும் ஒரு அசட்டு கேணையன் என்பது எனது கூற்று.

சரி சரி, நேயர் விருப்பத்திற்காக......

கொஞ்சம் பொறுங்கோ.... :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.